டிஸ்கவரி சேனல், நம்மளோட ஃபேவரைட். அதுலகூட மிருகங்களை கொஞ்சம் தூரமாக தான் காமிப்பாங்க. ஆனால், நம்ம யூடியூபர் தமிழ் ட்ரக்கர் இருக்காருல சிங்கத்துக்கூட செல்ஃபி எடுக்குறாரு, உலகத்துலயே ரொம்ப ஆபத்தான பழங்குடி மக்களை அசால்ட்டா போய் சந்திச்சு அவங்ககூட சகஜமா பேசி வீடியோலாம் எடுக்குறாரு, நடு ராத்திரி பழங்குடி மக்கள்கூட போய் குரங்கு வேட்டையாடுறாரு, ஆபத்தான கழுதைப்புலிக்கு வாயால உணவு ஊட்டி விடுறாரு, நிறைய திருடர்கள் வாழும் ஏரியாக்கு போய்ட்டு வறாரு. பேர் கிறில்ஸ் ரேஞ்ச்க்கு வாழ்ற யார் இந்த தமிழ் ட்ரக்கர்? இந்த வீடியோல பார்க்கலாம்.
தமிழ் யூ டியூப் உலகையே ஆச்சரியப்பட வைச்ச வீடியோ, தமிழ் ட்ரக்கரோட ஆப்பிரிக்க பயணம்தான். அங்க போய் புதர் மனிதர்களைப் பத்தி ஒரு சீரீஸ் பண்ணிருப்பாரு. புதர் மனிதர்கள் யாருனா?னு கேள்வி வருதுல. ஆப்பிரிக்கால நிறைய பகுதிகள்ல புதர் மனிதர்கள் வாழ்றாங்க. இவங்களுக்குனு தனியா, நிரந்தமான இடங்கள் கிடையாது. உணவுகள் கிடைக்கிற இடத்தைத் தேடி போய், இருப்பிடத்தை மாத்திட்டே இருப்பாங்க. புதர்கள், பெரிய மரங்கள்ல இருக்குற பொந்துகள்லயெல்லாம்தான் வாழ்வாங்க. தான்சானியா நாட்டுல இருந்த ஹஸாபே அப்டின்ற இந்த பழங்குடி மக்களை தேடிப்போய் அவங்கக்கூட சுமார் 72 மணி நேரம் ஸ்பென்ட் பண்ணி அடர்ந்த காட்டுக்கள்ள வேட்டைக்குலாம் போய் சரியான வீடியோ போட்ருந்தாரு. இந்தியாவிலேயே முதல்ல இப்படி வீடியோ போட்டது தமிழ் ட்ரக்கர்தான்.
ஹஸாபே மக்கள் காட்டுக்குள்ள போகும்போது அவங்க முன்னாடி எதாவது ஒரு உயிரினம் ஓடுச்சுனா, அவ்வளவு ஷார்ப்பா அடிப்பாங்களாம். அவங்கக்கூட குரங்கு வேட்டைக்கு மனுஷன் போய்ருப்பாரு. சரியா பிளான் பண்ணி நைட் டைம்லதான் வேட்டையாடுவாங்க. பபூன்களை ஒரு பக்கம் வரவைக்க அவங்க போடுற பிளான், அதுக்கு அவங்க பயன்படுத்துற அம்புகள், காத்துட்டு இருக்குற நிமிஷங்கள், இருட்டுல மட்டுமே நடந்து போறதுனு எல்லாமே செமயா இருக்கும். அப்படியே திக் திக்னு பார்க்குற நமக்கே இருக்கும். அவர் வாழ்க்கைலயே பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸா இந்த குரங்கு வேட்டை இருந்துருக்கும். நைட்டு அம்புலாம் விட்டு குரங்கு வேட்டை நடத்தி, நிறைய குரங்குகளை பை மாதிரி கட்டி அந்த குரங்குகளை தூக்கிட்டு வீட்டு நோக்கி நடக்க ஆரம்பிப்பாங்க. எனக்கு தெரிஞ்சு இப்படி ஒரு வீடியோவை வேற யாராலயும் கொடுத்திருக்க முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த வீடியோவை எடுத்துருக்காரு.
குரங்கு வேட்டை மாதிரி ஒரு வீடியோ போட்டதுக்கு அப்புறம் அவரோட சேனல் வேறலெவல் ரீச்சுக்கு போச்சு. அதுக்கு முன்னாடிலாம் சாதாரண டிராவல் யூடியூபா இருந்தது, வேற லெவல்ல மாறூது. நிறைய பேரோட பெர்சனல் ஃபேவரைட் சேனலா தமிழ் ட்ரக்கர் ஆச்சுது. நம்ம தமிழ் ட்ரக்கர் சேனல் வைச்சிருக்குறவரு பேரு, புவனிதரன். தஞ்சாவூர்தான் இவரோட சொந்த ஊர், ஆச்சரியமான விஷயம் என்னனா, 9-வது வரைதான் படிச்சிருக்காரு. சின்ன வயசுல இருந்தே டிராவல்னா ரொம்ப புடிக்கும். தமிழ்நாட்டுக்குள்ளயே தனியா நிறைய இடங்களுக்கு சுத்த ஆரம்பிச்சிருக்காரு. அப்புறம் வெளியூர் போனா என்னனு தோணி, முதல் தடவை மணாலிக்கு போறாரு. அங்க ஒரு வாரம் இருக்கலாம்னுதான் போய்ருக்காரு. போகும்போது தன்னோட டிராவலை வீடியோவாப் போடலாம்னு முடிவு பண்ணி 2019-ல யூடியூப் சேனலும் ஸ்டார்ட் பண்றாரு. முதல் வீடியோ எல்லாருக்கும் போலதான் பெருசா வரவேற்புலாம் கிடைக்கல.
மணாலிக்கு போனவரு தொடர்ந்து அங்க இருந்து வேற வேற இடங்களுக்கு லிஃப்ட் கேட்டு பயணிக்க ஆரம்பிக்கிறாரு. கிட்டத்தட்ட 21 வயசுல டிராவல் பண்ண ஆரம்பிக்கிறாரு. மணாலிக்கு ஒரு வாரம் பிளான் பண்ணி போனது, கிட்டத்தட்ட 60 நாள் ட்ரிப்பா மாறிச்சு. அந்த எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு ரொம்ப புடிக்குது. கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையை மாத்துன டிராவல் மணாலி ட்ரிப்தான். அங்க இருந்து நிறைய மாநிலம் டிராவல் பண்ண ஆரம்பிச்சிருக்காரு. கடைசியா ராஜஸ்தான்ல இருக்கும்போது ஹிட்சாக்கிங்க் பண்ணியே போகலாம்னு முடிவு பண்ணி 12 நாள் கழிச்சு சென்னை வந்துருக்காரு. கொரோனா வரைக்கும் அப்படிதான் டிராவல் பண்ணாரு. அப்புறம் வீட்டுலயே இருந்தாரு. அதுக்கப்புறம்தான் ஆப்பிரிக்கா போய்ருக்காரு. குறிப்பிட்ட நாள்கள் பிளான் பண்னி கிளம்புனாருனா, பல மாதங்கள் வீட்டுப்பக்கமே வரமாட்டாராம். புவனி தரன்கிட்ட இருக்குற பிளஸ் பாயிண்டே அவர் மக்கள்கிட்ட பழகுற விதமும் அந்த மக்களை யதார்த்தமா காட்டுற ஸ்டைலும்தான்.
பழங்குடி மக்களின் வாழ்க்கையை அதிகமா பதிவு பண்ண தமிழ் யூடியூபர் புவனிதான். அதுவும் ரொம்பவே இண்டரஸ்டிங்கா. ஆப்பிரிக்காவின் உகாண்டால இருக்குற பழங்குடி மக்கள் பத்திதான் முதல்ல வீடியோ பண்ணாருனு நினைக்கிறேன். அதுவே ரொம்ப பழங்காலத்துக்கு போனது மாதிரி ஃபீல் கொடுத்துச்சு. குடிசைகள், அவங்க வாழ்வியல் முறை எல்லாமே அப்படித்தான் இருந்துது. அந்த ஊர்ல இருக்குற வித்தியாசமான பழக்கம் என்னனா, ரெண்டு பேரை கல்யாணம் பண்ணிக்கலாம். ஒரு ஆளு. ஆனால், ஒரே வீட்டுல வாழ முடியாது. தனித்தனி வீட்டுல வாழலாம். அங்க இருக்குற மக்கள் தங்கம் எடுக்குறது, பல்லாங்குழி விளைடாடுறதுலாம் காமிச்சிருந்தாரு. செமயா இருந்துச்சு. அப்புறம் கென்யாவுக்கு டிராவல் பண்ணியிருந்தாரு. அங்க இருக்குற ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்களுக்கு விலை உயர்ந்த பொருள், மாடுதானாம். நமக்கு பேங்க் அக்கௌண்ட் மாதிரி, அவங்களுக்கு மாடு எண்ணிக்கை. செமல்ல. அங்க இருந்து அப்டியே எத்தியோப்பியா.
எத்தியோப்பியால ரொம்பவே அக்ரஸிவான பழங்குடி மக்களை சந்திச்சுருக்காரு. அரசு சார்பா அவங்களை பார்க்கப்போகும்போது ஒரு ஆளகூடவே அனுப்பி விட்ருக்காங்க. மத்த பழங்குடி மக்களுக்கும் அவங்களுக்கும் அடிக்கடி சண்டைலாம் நடக்குமாம். ரொம்ப அக்ரஸிவா நடந்துப்பாங்களாம். அவங்க வாயில பிளேட் வைச்சிப்பாங்க. அதுதான் அவங்க அழகா பார்க்குறாங்க. ஆனால், இவரை ரொம்பவே ஃப்ரெண்ட்லியாதான் நடத்தியிருக்காங்க. ஆனால், உள்ளுக்குள்ள பயந்துட்டேதான் இருந்துருக்காரு. ஒருசில மணி நேரம்தான் அவங்கக்கூட டைம் ஸ்பென்ட் பண்ணியிருக்காரு. அங்கயே பழங்குடி மக்கள்கூட சேர்ந்து நைட் டிராவல் பண்னுவாரு. உலகத்துல ரொம்ப மோசமான விலங்குல ஒண்ணு ஹைனா. அதுக்கு வாய்ல குச்சியை வைச்சு ஊட்டி விடுவாரு. ஈ மொய்க்கிற மாதிரி அவரை சுத்தி இருக்கும். பயந்துபோய் உட்கார்ந்து ஊட்டி விடுவாரு. பார்க்குற நமக்கே யோவ் கடிச்சிற போகுது சீக்கிரம் கிளம்புயானு சொல்லத்தோணும். இப்படி நிறைய குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயங்களை சொல்லிட்டே போகலாம். நிறைய மக்கள் ஆச்சரியப்படுத்துனாங்க. இன்னும் ஆரம்பநிலை, அதாவது விவாசயத்தையே என்னனு இப்போதான் தெரிஞ்சுக்குற மக்களையெல்லாம் ஆவணப்படுத்தி அட்டகாசம் பண்ணியிருப்பாரு.
ஆப்பிரிக்கால பழங்குடி மக்களோட வாழ்க்கையை மட்டுமில்லாமல், சாதாரண எலைட் மக்கள் இல்லாத ஒரு வாழ்க்கையையும் பதிவு பண்ணியிருப்பாரு. நைரோபின்ற இடத்துக்குப் போய்ருப்பாரு. மணி ஹெய்ஸ்ட் நியாபகம் வருதுல? இந்த இடமும் அப்படித்தான். ரொம்ப டேஞ்சரான ஒரு ஏரியா. அந்த இடத்துக்கு அவருக்கு பாதுகாப்புக்காகவே 7 பேர் வந்துருக்காங்க. அதாவது கேங்ஸ்டர்ஸ் இருக்குற இடம். கென்யாலயே ரொம்ப மோசமான இடம்னா அதுதானாம். போலீஸ்கூட அங்க போறதுக்கு பயப்படுவாங்களாம். யாரயாவது கொல்லணும்னாகூட அங்கதான் தூக்கிட்டுப் போவாங்களாம். புவனி சொல்றதுலாம் பார்த்தா நமக்கே பக் பக்னு இருக்கும். அப்புறம் திறந்த காடு ஒண்ணு இருக்கும். அதுல போய் சிங்கத்துக்கூட செல்ஃபிலாம் எடுத்துட்டு இருப்பாரு. இதெல்லாம் அப்படியே டிஸ்கவரி சேனல் மாதிரி இருக்கும். அப்பிரிக்கால போய் புவனி பண்ண ஒவ்வொரு வீடியோவும் தரமா இருக்கும். சோமாலியா, சிரியா போன்ற நாடுகளுக்கும் போய் வீடியாலம் போட்ருக்காரு. அங்க நிலவுற வறுமை, போர் பாதிப்புலாம் இவர் வீடியோல இருக்கும். கண்ணு கலங்க வைக்கும்.
Also Read – மனநிலை மல்லாக்க கிடக்குதா… `காக்கா கதை’ வைசாக் பாட்டுலாம் கேளுங்க!
புவனிதரன் சாப்பிட்ட வித்தியாசமான உணவுகள் என்னலாம்னு கேட்டாலே நீங்க ஷாக் ஆயிடுவீங்க. ராவா மாட்டு ரத்தம் எடுத்து குடிச்சிருக்காரு. அப்புறம் அதை பால்ல கலந்தும் குடிச்சிருக்காரு. எத்தியோப்பியா பயணத்துல ஹோட்டல்லயே பட்டையா அல்வா மாதிரி வெட்டி வைச்சு கறி விப்பாங்க. அதை அப்படியே சாப்பிடுவாரு. அப்புறம் குதிரை பிரியாணி சாப்பிட்ருக்காரு. அது உஸ்பெஸ்கிஸ்தான்ல ட்ரை பண்ணி பார்த்துருப்பாரு. தவளை, எறும்பு சாதம்லா சாப்பிட்ருக்காரு மனுஷன்.
உலகத்துல 197 நாடுகள் இருக்கா? அதுல இதுவரைக்கும் 20 நாடுகள் சுத்திட்டாரு. எல்லா நாட்டுக்கும் போய்டணும்ன்றதுதான் அவரோட எய்ம். இன்னைக்கு அவரோட யூடியூப்க்கு போனாலே எதாவது வித்தியாசமான ஒரு வாழ்க்கையை தெரிஞ்சுக்கலாம். மனுஷன் வாழ்றாரு.