தெய்வத்திருமகள் கோர்ட் சீன்
அப்பாக்கிட்ட இருந்து பொண்ணை பிரிச்சு கண்ணுலகூட காமிக்காமல் வைச்சிருப்பாங்க. கிரிஷ்ணா கோர்லஆஜர் ஆகும்போது, நிலா நிக்கிறதை பார்ப்பாரு. ரெண்டு பேராலயும் ஓடி போய் கட்டிப்புடிக்கிற தூரத்துல நின்னும் எதுவும் செய்ய முடியாது. அப்போ, செய்கையாலயே பேசிப்பாங்க. பார்த்த உடனே கண்ணுல தண்ணி வந்துரும். அவ்வளவு எமோஷனலான சீன். கோர்ட்டே அவங்க பண்றதை வேடிக்கை பார்க்கும். கட்டிப்புடிக்கிற மாதிரி ஆக்ஷன் பண்ணுவாங்க. உடம்புலாம் சிலிர்த்துடும்.
சூரரைப் போற்று ஸ்டேஷன் சீன்
மாறன் ஏர் ஃபோர்ஸ்ல வேலை பார்க்கும்போது அவங்கப்பாக்கு உடம்பு சரியில்லாமல் போய்டும். ஃப்ளைட்ல போய்டலாம்னு 6000 ரூபாய் எடுத்துட்டுவந்தா, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்தான் இருக்கு. அந்த டிக்கெட் 11,200 ரூபாய் விலைன்றுவாங்க. ஒவ்வொருத்தட்கிட்டயா போய், எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை.. கொஞ்சம் உதவி பண்ணுங்கனு கெஞ்சுவாரு, கால்ல விழுந்து அழுவாரு. ஒரு பையலும் ஹெல்ப் பண்ண மாட்டான். கடைசில எப்படியோ ஊர் வந்து சேர்ந்தா அப்பா இறந்துருப்பாரு. எல்லாம் முடிஞ்ச பிறகு, எதுக்குடா வந்தனு அவங்கம்மா கேட்கும்போது காலை புடிச்சு அழுவாரும் கண்ணுல இருந்து தண்ணியா வரும்.
கும்கி கிளைமாக்ஸ் சீன்
கொம்பன், பொம்மனை அடிச்சு தள்ளிவிட்டு, மிதிக்கப்போகும்போது, மாணிக்கம் சங்கிலியை அவுத்துட்டு வந்து கொம்பனை இடிச்சு பயங்கரமா சண்டை போடும். பார்க்குறப்ப நமக்கே இதயம் நடுங்கும். போட்டு மாறி மாறி பொளந்துட்டு இருப்பாங்க. கடைசில கொம்பனை தள்ளிவிட்டு கொன்றும். சூப்பர்லனு தோணும் போதுதான் ட்விஸ்ட்டு.. பொம்மன் ஓடிப்போய் மாணிக்கம் முன்னாடி நிக்கும்போது.. அப்படியே சரிஞ்சு கீழ விழும். ரத்தமா வரும். மாமாவை கூப்பிடுவான்.. கரிஞ்சு போய் கிடப்பாரு. உண்டியல்னு கூட இருந்தவனும் இறந்துருப்பான். எல்லாரையும் விட்டுட்டு பொம்மன் போகும்போது நம்மளால தாங்கவே முடியாது.
96 ஏர்போர்ட் சீன்
ஸ்கூல், காலேஜ்.. ஏன், வாழ்க்கைல காதலிச்ச எல்லாருமே இந்தப் படத்தைப் பார்த்து கண்டிப்பா ஃபீல் பண்ணியிருப்பாங்க. நிறைய இடங்கள்ல அழுதுருப்பாங்க. ஆனால், எல்லாம் முடிஞ்சு கடைசில கிளம்பும் போது ஒரு ஃபீல் இருக்குல, அதைப் பார்க்கும்போது வெடிச்சு அழுற மொமண்ட் ஒண்ணு கிரியேட் ஆகும். இரவிங்கு தீவாய் நமைச் சூழுதேனு பாட்டு ஒரு பக்கம்.. ஜானு கிளம்பி போகப்போறாங்களேன்ற நினைப்பு ஒருபக்கம்.. நம்ம காதல் பிரிவு ஒருபக்கம்னு அந்த சில நிமிட காட்சிகள் நம்மள எங்கலாமோ கொண்டு போய்.. கொண்டு வரும். கண்ணை மூடி ஜானு அழும்போது, கண்ணீர் நம்ம கண்ணுல நிரம்பியிருக்கும்.
ஜெய்பீம் விசாரணை சீன்
படம் பார்த்து முடிச்சதும் கனமான உணர்வு வரும்ல.. அந்த உணர்வு ஒவ்வொரு சீன்லயுமே இருக்கும். ஜெய் பீம்ல கிளைமாக்ஸ்க்கு முன்னாடி அவங்களை எப்படி விசாரிச்சாங்கனு காமிப்பாங்க. ராஜாக்கண்ணுவ அடிச்சு, அந்தக் காயத்துல பச்சை மிளகா அரைச்சு வைப்பாங்க, பெருவிரலை கட்டி மொசக்குட்டிடை கட்டி தூக்கிருவாங்க. அவங்க செத்துட்டாங்களானு பார்க்க கண்ணுல மிளகாப்பொடி போடுவாங்க. கண்டிப்பா மன தைரியம் உள்ள எவனாலயும் அந்த சீனை கடந்து வர்ற முடியாது.
டாடா அம்மா – பையன் சீன்
மணிகண்டன் ஆஃபீஸ்க்கு பையன கூட்டிட்டு போய்ருப்பான். அங்க சிந்துவை பையன் பார்ப்பான். பார்த்து உன் பேரு என்னனு கேப்பாங்க. ஆதித்யானு சொன்னதும்.. சிந்து முகம் கொஞ்சம் கொஞ்சமா மாறும். அப்பா பெயர் என்னனு கேட்டு, மணிகண்டன்னு சொன்னதும் சிந்த அவுட். அப்பாக்கு ஃபோன் பண்ணி கேட்டா, என்னை மன்னிச்சுடுனு கதறி அழுவாரு. சிந்து ஒருபக்கம் வெடிச்சு அழுவாங்க. வா வா என்னுயிரேனு பாட்டு வேற அந்த உணர்வை அதிகமா தூக்கிவிடும். அப்புறம் இவங்க பேசி முடிச்சு, பையன்கூட அம்மா பேசிட்டு இருக்கும்போது, மணிகண்டன் தூரமா நின்னு பார்த்து அழுவான். எல்லாம் சேர்ந்து நம்மள போட்டு தாக்கும்.
வெயில் பசுபதி ரிட்டர்ன்
முருகேசன் ஊரை விட்டு ஓடிப்போய், அங்க அவனோட வாழ்க்கை, காதல்னு எல்லாமே தோத்துப்போய் ஊருக்கே திரும்ப வருவான். அங்க வரும்போது கதிர், அவரோட தம்பியை பார்ப்பான். அவன் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருப்பான். முருகேசன் அதாவது பசுபதி அவர்கிட்ட போய், கதிர்தானனு கேட்டுட்டு திரும்ப வந்துடுவாரு. கசாப்புக்கடைக்காரர் பையன்தானனு கேட்டுட்டு மறுபடியும் ஒண்ணும் சொல்லாமல் வந்து நிப்பாரு. யாருனே நீங்க.. எதாவது உதவி வேணுமானு பரத் வந்து கேட்டதும்.. அண்ணன்டானு தயங்கி தயங்கி அழுதுட்டே சொல்லுவாரு. பார்த்த உடனே நெஞ்சம் இறுகி கண்ணுல தண்ணி கெட்டிரும்.
Also Read – என்னங்க சொல்றீங்க.. யாருங்க இவரு.. சுரேஷ் பீட்டர்ஸ் பாடுனதா இதெல்லாம்?
மதராசப்பட்டினம் துரையம்மா சீன்
பரிதியை தேடி துறையம்மா ஊரெல்லாம் அலைவாங்க. எங்கயும் கிடைக்கமாட்டாரு. கடைசில ஒரு டாக்ஸில ஏறி, உனக்கு துரையம்மா ட்ரஸ்ட் தெரியுமானு கேட்டுட்டு அங்க போவாங்க. அந்த டிரைவர் துரையம்மா பெயர்ல என்னலாம் இருக்குனு சொல்லிட்டே போவாரு. கடைசில அந்த ட்ரஸ்ட் பில்டிங்க்கு போய் பரிதியோட கல்லறைல உட்கார்ந்து பழசெல்லாம் நினைச்சுப் பார்ப்பாங்க. கைல பரிதி கொடுத்த தாலி இருக்கும். வாழ்வோ.. சாவோ.. உனக்கு இந்த மண்லதான்னு சொன்னத நினைச்சுப் பார்ப்பாங்க. அப்படியே இறந்துடுவாங்க. அந்தப் பிரிவு அவ்வளவு எமோஷனலா இருக்கும்.
அறம் கிளைமாக்ஸ் சீன்
ஆழ்துளை கிணறு குழிக்குள்ள விழுந்த குழந்தையை காப்பாத்த குழந்தையோட அண்ணனையே உள்ள இறக்குவாங்க. நெஞ்சு துடிக்கிறதை காதுல கேக்குற அளவுக்கு அந்த சீன் நம்மளை ஃபீல் பண்ண வைக்கும். நாள் முழுக்க இருட்டுல இருக்குற உன் தங்கச்சியைப் பத்தி யோசினு சொல்லிட்டு கலெக்டர் திரும்ப உள்ள இறக்குவாங்க. கயிறை தூக்குவாங்க, மாட்டுன குழந்தையோட வெளிய வருவான். ஒட்டுமொத்த தியேட்டரும் அந்த சீனுக்கு உட்கார்ந்து அழுதுட்டு இருந்துச்சு. நயன்தாரா அழும்போதுலாம் யாரும் அவங்க கண்ட்ரோல்ல இல்லைனே சொல்லலாம். அவ்வளவு வலியை அந்த சீன் கொடுத்துச்சு.
இன்னும் எக்கச்சக்கமா இந்த லிஸ்ட்டை சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம். அவ்வளவு எமோஷனல் சீன்ஸ இவங்க எடுத்து வைச்சுருக்காங்க. நீங்க பார்த்து அழுத சீன் என்னன்றதை கமெண்ட்ல சொல்லுங்க.