இமான் - ஸ்ரேயா கோஷல்

‘மைனா முதல் அண்ணாத்த’ வரை – ‘இமான் – ஸ்ரேயா கோஷல்’ காம்போவின் ஸ்பெஷல் 10 பாடல்கள்!

‘இமான் – ஸ்ரேயா கோஷல்’. இந்த ஸ்பெசல் காம்போவினை ரசித்திடாத இசை ரசிகர்களே இருக்க முடியாது. இந்த காம்போ மூலம் நமக்கு கிடைத்த மனதுக்கு மிக நெருக்கமான பத்து பாடல்களைப் பற்றிப் பார்க்கலாம். (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)

இமான் மற்றும் ஸ்ரேயா கோஷல்
இமான் மற்றும் ஸ்ரேயா கோஷல்

நீயும் நானும்’ – மைனா

முன்னதாக இமான் இசையில் மூன்று, நான்கு பாடல்களை ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தாலும் இந்தப் பாடல்தான் அந்த காம்போவின் முதல்  ஹிட் என சொல்லலாம். அந்த வகையில் இந்தப் பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்தான். மேலும் அதன்பிறகு அடுத்தடுத்து இந்த காம்போ பயணிக்கத் தொடங்கிய ஸ்டைலில் இல்லாமல் இந்தப் பாடல் வெஸ்டர்ன் தாக்கத்தில் வேறு ஒரு ஸ்டைலில் அழகாக இருக்கும்.  

‘சகாயனே’ – சாட்டை 

இந்தக் கூட்டணி பாடல்களில் ஒரு டெம்ப்ளேட் ஸ்டைல் இருக்கும் இல்லையா, அந்த ஸ்டைலில் முதன்முறையாக உருவான பாடல் இது. யுகபாரதி வரிகளில் தனது காதலனை நினைத்து ஏங்கும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளுக்கு தனது குரலால் ஸ்ரேயா கோஷல் உயிரூட்டியது தமிழிசை ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

இமான் - ஸ்ரேயா கோஷல்
இமான் – ஸ்ரேயா கோஷல்

‘சொல்லிட்டாளே அவ காதல’ – கும்கி

மிகப்பெரிய மியூச்சிக்கல் ஹிட் ஆல்பமாக அமைந்த ‘கும்கி’ படத்தில் பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து ஸ்ரேயா பாடிய இந்த டூயட் பாடல் அனைவரையும் முணுமுணுக்கவைத்து அந்த ஆண்டின் மிகப்பெரிய வைரல் ஹிட் பாடலாக மாறிப்போனது. 

‘அம்மாடி அம்மாடி’ – தேசிங்குராஜா

‘இமான் மியூசிக்ல ஸ்ரேயா பாடியிருந்தா அது நல்லா பாட்டாதான் இருக்கும்பா’ என ரசிகர்களை தீர்ப்பு எழுதவைத்த பாடல் இது. காதல் உணர்வுகளை இவ்வளவு தூரம் தன் குரலால் வெளிப்படுத்த முடியுமா என ரசிகர்களை கிறங்கவைத்தார் ஸ்ரேயா கோஷல். இன்னும் சொல்லப்போனால் ‘இமான் – ஸ்ரேயா கோஷல்’ காம்போ பாடல்களிலிருந்து டாப் 3 என பட்டியலிட்டால் இந்தப் பாடலுக்கு அதில் நிச்சயம் இடமிருக்கும்.

இமான் - ஸ்ரேயா கோஷல்
இமான் – ஸ்ரேயா கோஷல்

‘பிடிக்குதே’ –  சிகரம் தொடு

மற்றுமொரு காதல் பாடல்தான் என்றாலும் இது ஸ்ரேயாவின் குரலால் தனித்த அடையாளத்தைப் பெற்றிருக்கும். மற்ற பாடல்களைப் போல இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடலாக மாறவில்லையென்றாலும் இந்தப் பாடலைப் பிடித்தவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய போதை வஸ்துவாக இருந்துவருகிறது என்பதுதான் நிஜம்.

‘என் ஆள பார்க்கப்போறேன்’ – கயல், 

இமான் இசையில் ஸ்ரேயா, தான் அதிகம் இணைந்து பாடிய பாடகர் ரஞ்சித்துடன் இணைந்து பாடிய மற்றுமோர் பாடல் இது. மிக அழகான இந்த மெலடியில்,’நானே..’ எனத் தொடங்கும் ஹை-பிட்ச் வரிகளை அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார் ஸ்ரேயா கோஷல். 

Also Read: Ajith-SPB: அஜித் – எஸ்.பி.பி காம்போவின் பெஸ்ட் பாடல்கள்!

இமான் மற்றும் ஸ்ரேயா கோஷல்
இமான் மற்றும் ஸ்ரேயா கோஷல்

‘கானா கானா’ – பத்து எண்றதுக்குள்ள

‘ஏன் ஸ்ரேயா கோஷல்னா மெலடிதான் தரணுமா..?’ என இமான் யோசித்திருப்பார் போல. அதன் விளைவாகத்தான் அதிரடியான இந்தக் குத்துப் பாடலை அவருக்கு வழங்கியிருப்பார் இமான். ஆனாலும் அந்தப் பாடலுக்குள்ளும் ஒரு மெலடி பாடலின் தன்மைகளை ஆங்காங்கே ஒளித்துவைத்து அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரேயா.

‘மிருதா.. மிருதா’ – மிருதன்

வழக்கமான இந்த காம்போ பாடலாக இல்லாமல் ஒரு வித்தியாசமான இசையமைப்பைக் கொண்ட பாடலாக இது இருக்கும். படத்தின் இக்கட்டான சூழ்நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலில்.. கதைக்குத் தேவையான உணர்வை தன் குரலில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரேயா கோஷல்.

ஸ்ரேயா கோஷல்
ஸ்ரேயா கோஷல்

‘வானே.. வானே..’ – விஸ்வாசம்

இந்த காம்போவின் டிபிக்கல் பாடல்தான் என்றாலும் இந்தப் பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ‘இனியவனே’ எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் தனது இசை ஆளுமையைக் காட்டி அசரடித்திருப்பார் ஸ்ரேயா கோஷல்.

‘சார..சாரக்காற்றே’ – அண்ணாத்த

தான் முதன்முறையாக ரஜினிக்கு இசையமைக்கும் படத்தில், தன்னுடைய ஃபேவரிட் பாடகரைப் பயன்படுத்தாமலா இருப்பார் இமான். தற்போதுவரை ஒரு அண்டர்ரேட்டட் பாடலாக இருந்துவரும் இந்தப் பாடலும் இந்த காம்போவில் உருவான ஒரு அட்டகாசமான பாடல்தான்.

இதுல உங்களோட ஃபேவரைட் பாடல்களை கமெண்ட் பண்ணுங்க!

Also Read: `வாத்தி ரெய்டு முதல் வாய்ஸ் ஆஃப் யூனிட்டி வரை…’ 2021-ல் வெளியான படங்களின் பவர்ஃபுல் பாடல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top