Prabhu: இந்த 9 கேரக்டர்கள் பிரபுவால் மட்டுமே சாத்தியம்..!

பிரபு – இப்போ வர்ற படங்கள்ல பிரபுவைப் பார்த்தா 2கே கிட்ஸ்க்கு அப்பா கேரக்டர்ல வர்ற அங்கிளாத்தான் தெரியும். ஆனா 80ஸ், 90ஸ்ல பிரபுவுக்குனு ஒரு மாஸ் இருந்துச்சு. இளைய திலகம்னு ஒரு பட்டம் இருந்துச்சு. அவரால் மட்டும்தான் பண்ண முடியும்னு சில கேரக்டர்கள் இருந்துச்சு. அப்படி பிரபுவால் மட்டுமே சாத்தியமான 9 கேரக்டர்களைத்தான் நாம பார்க்கப்போறோம்.

சின்னத்தம்பி!

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

`தூளியிலே ஆட வந்த… ஆழியிலே கண்டெடுத்த’னு கருத்தா கவித்துவமா பாடத் தெரிஞ்சவனுக்கு தாலினா என்னன்னே தெரியாதுனு சொன்னா யார்னா நம்புவாங்களா? ‘யம்மா… கல்யாணம்னா இந்த மேளம்லாம் வச்சு சோறுலாம் போடுவாங்களே அதான’ என்று சொல்லி வெள்ளந்தியாக சிரித்த பிரபுவை எல்லாரும் நம்பினார்கள். அந்த நம்பிக்கைதான் சின்னத்தம்பியை வெற்றியடைய வைத்தது. அந்த நம்பிக்கைதான் Born with Silver spoon பிரபுவை கிராமங்கள் கொண்டாடும் நாயகன் வரிசையில் கொண்டுபோய் சேர்த்தது.

குரு சிஷ்யன்!

குரு சிஷ்யன்
குரு சிஷ்யன்

‘குரு…’ என்று பிரபு ரஜினியை அழைத்த தொனியே எனர்ஜி ஏத்தும். ரஜினியும் பிரபுவும் விணு சக்ரவர்த்தியுடன் சேர்ந்து அடிக்கும் அதகள லூட்டி ஒரு பக்கம். தன் அப்பாவைக் கொன்றது ரஜினியின் அப்பா என்று தெரிந்தபிறகு பிரபு காட்டும் சீரியஸ் முகம் என கமர்ஷியல் படத்தில் வெரைட்டி காட்டிய கேரக்டர் பிரபுவுக்கு. அப்போதே ரஜினி – கௌதமி கெமிஸ்ட்ரியைவிட ரஜினி – பிரபு கெமிஸ்ட்ரிதான்ப்பா டாப்பு என்று பக்கத்து டேபிளில் பேசிக்கிட்டாங்க. அந்த மேஜிக் வொர்க் அவுட் ஆனதால் அதே வருடத்தில் தர்மத்தின் தலைவனில் மீண்டும் இணைந்தனர். 17 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி வரை தொடர்ந்தது.

அக்னி நட்சத்திரம்!

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

காதல், காமெடினு கலகலனு நடிச்சுட்டு இருந்த பிரபு, கார்த்தி ரெண்டு பேருமே உர்ர்ர்னு சீரியஸ் ஃபேஸ் காட்டுன படம் அக்னி நட்சத்திரம். “Arrest him Now, licence இல்லாம வண்டி ஓட்டுறான்-னு கார்த்திக்கை கார்னர் செய்யும்போது பிரபுவின் வில்லத்தனம் கொஞ்சம் எட்டிப் பார்க்கும். இரண்டு பேருக்குமான ஈகோதான் கதை. கார்த்திக்கு இணையாக ஈடுகொடுக்கும் போலீஸ் கேரக்டரில் மிரட்டியிருப்பார், பிரபு.

சிறைச்சாலை!

சிறைச்சாலை
சிறைச்சாலை

நான் innocence மட்டும் இல்லை. நல்ல கேரக்டரும் பண்ணத் தெரியும் என தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய படம் சிறைச்சாலை. மாவோயிஸ்ட் சாயலான கேரக்டர். சாகும் தருவாயில், ‘சுதந்திர இந்தியாவில் சந்திப்போம்’ என பேசும் கடைசி வசனத்தில் தியேட்டரில் மக்களின் கண்ணீரால் அப்ளாஸ் அள்ளியிருப்பார், பிரபு. உண்மையான சுதந்திரப் போராட்ட வீரன் இப்படித்தான் இருந்திருப்பார் என்று கண்முன்னே நிறுத்தியிருந்தார் பிரபு.

பசும்பொன்

பசும்பொன்
பசும்பொன்

அம்மாவின் பாசத்துக்காக ஏங்கும் மகனாக நடிப்பின் உச்சம் தொட்டிருப்பார், நடிகர் பிரபு. ‘என் ஆத்தா என்கூட இல்லியே’ என பசும்பொன்ல உருகுன பிரபுவை தமிழ்சினிமா எப்போவுமே மறக்காது. அண்ணன் தம்பிகளுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தில் ஒரு அண்ணன் எப்படி நடக்கணும்னு நூல் பிடிச்சு நடிச்சிருப்பார், பிரபு. இந்த படத்துக்கு கதையும் வசனமும் நம்ம அண்ணன் சீமான்தான்.

பட்ஜெட் பத்மநாபன்!

பட்ஜெட் பத்மநாபன்
பட்ஜெட் பத்மநாபன்

அப்பா கட்டிய வீடு அடமானத்துக்கு போகும் சூழல்ல, அதை மீட்கப் போராடுகிற ஒரு மிடில்கிளாஸ் மகன் கேரக்டர். தன்னோட கல்யாணத்துக்குக்கூட பட்ஜெட் போடும் அசத்தல் நடிப்பு பிரபுவால் மட்டுமே சாத்தியம். பாராளுமன்றத்துக்கே பட்ஜெட் இப்படிப் போடலாம் என்று பத்மநாபனைப் பார்த்து கற்றுக் கொள்ளும அளவுக்கு கேரக்டருடன் கச்சிதமாக பொருந்திருந்தார், பிரபு. அதுக்காக பாராளுமன்றமே பயந்துபோகும் பட்ஜெட்னு பாட்டு வச்சது கொஞ்சம் ஓவர் ப்ரோ..! ஒரு கமர்சியல் சினிமாவில் பட்ஜெட்டைப் புகுத்தி ட்ரென்ட்செட்டராக மாறினார், பிரபு.

மைடியர் மார்த்தாண்டன்

மைடியர் மார்த்தாண்டன்
மைடியர் மார்த்தாண்டன்

சின்னத்தம்பியில் தாலி பற்றி தெரியாதவருக்கு, இந்த படத்தில் பணத்தின் மதிப்பு தெரியாத கதாபாத்திரத்திரம். காமெடியில் கவுண்டமணியுடன் சேர்ந்து அதகளம் செய்திருப்பார், பிரபு.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்!

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

கிட்டத்தட்ட குருசிஷ்யன் கேரக்டர் போலத்தான். எதைச் சொன்னாலும் ஏன்?, எதற்கு எனக் கேட்காமல் செய்யும் வட்டி கேரக்டரில் கமலின் வலதுகரமாக நடித்திருப்பார், பிரபு. ரெளடியாக இருந்தாலும் எதையும் விளையாட்டுத்தனமாகவே செய்யும் கேரெக்டரில் புகுந்து விளையாடியிருப்பார். இதிலும் கமல்- பிரபு கெமிஸ்ட்ரி திரையில் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். அதுலயும் அந்த சீனா தானா டான்ஸ்… க்யூட்டு க்யூட்டு!

தாமிரபரணி!

தாமிரபரணி
தாமிரபரணி

மருமகனுக்காக சுதந்திரம் கொடுக்கும் நிலை, அதே மருமகன் தவறு செய்யும்போது பார்வையால் கண்டிப்பது, அதே மருமகனுக்காக கோபத்தில் பொங்கி எழுவது என குலையன் கரிசல் சரவண பெருமாளாகவே வாழ்ந்திருப்பார்,நம்ம இளையதிலகம்.

அயன்!

அயன்
அயன்

“கோடி ரூவா கொடுத்தாலும் சில விசயம் செய்ய மாட்டேன்” என்று கிரைமிலும் ரூல்ஸ் வைத்திருக்கும் ஸ்மக்ளர் கேரக்டர். அந்த கேரக்டருக்குப் பிரபுவைத் தாண்டி வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அத்தனை தொல்லைகள் தரும் வில்லனிடம்கூட நிதானத்துடன் கூடிய பாசத்தை அயன் தாஸைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது.

1980 காலக்கட்டத்தில் அதிரடியான ஹீரோக்கள், காதலை மட்டும் செய்யும் ஹீரோக்கள் என்று தனித்தனியாக இருந்த நிலையில், innocence கேரக்டருடன அத்தனையும் கலந்த நான் இருக்கிறேன் என்று தன் இருப்பை வெளிப்படுத்தியவர். innocence கேரக்டரை தமிழ் சினிமாவில் பிரபுவுக்குப் பிறகு யாரும் முயற்சிக்கவில்லை, இனி முயற்சி செய்யப்போவதும் இல்லை.

Also Read – `நவரச நாயகன்’ கார்த்திக் ஏன் கொண்டாடப்படுகிறார்… ஐந்து காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top