ஓய்வூதியம் பெறுவோர் `Life Certificate’ டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது எப்படி?

மத்திய/மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுபவர்கள் Life Certificate ஆண்டுக்கொரு முறை சமர்ப்பிப்பது அவசியம். அதை டிஜிட்டல் முறையில் வீட்டிலிருந்தே செய்ய முடியும்.. எப்படி?

Life Certificate

ஓய்வூதியம் பெறுபவர்கள், தொடர்ந்து தங்கள் வங்கிக் கணக்குகளில் தடையின்றி ஓய்வூதியத்தைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை Life Certificate தாக்கல்/சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு வரை அதற்கென இருக்கும் அரசு அலுவலகங்கள், கருவூலங்களில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டி இருந்தது. ஆனால், தற்போது, இந்த சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பதற்காகவே மத்திய அரசு unique face recognition தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம், தேசிய தகவல் மையம் மற்றும் ஆதார் ஆணையத்தோடு இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.

Jeevan Pramaan Face Application
Jeevan Pramaan Face Application

டிஜிட்டலாக Life Certificate-ஐ சமர்ப்பிப்பது எப்படி?

 • உங்கள் மொபைலில் ’Jeevan Pramaan Face Application’-ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 • ஆண்ட்ராய்டு செயலிக்காக ’Client Installation Document’-ஐ கிளிக் செய்யவும்.
 • தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்தவுடன், டவுன்லோட் லிங்க் உங்களின் பதிவு செய்யப்பட்ட இ-மெயிலில் அனுப்பப்படும்.
 • மெயிலில் கிடைத்த லிங்கை கிளிக் செய்து செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்.
 • உங்கள் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் வெரிஃபிகேஷனுக்காக Operator Authentication-ஐ செய்து முடியுங்கள்.
 • இதற்காக உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவு செய்யுங்கள்.
 • செயலியில் உள்ள கேமராவை கிளிக் செய்து `Operator’ என்கிற வகையில், உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் முகம் சரிபார்க்கப்பட்ட பின்னர், ‘Client Registration Successful’ என்ற மெசேஜ் உங்களுக்குத் திரையில் காட்டப்படும்.
 • அதன்பின்னர், ஓய்வூதியதாரர் சரிபார்ப்புப் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.
 • அந்தத் திரையில், உங்களது பெயர், ஓய்வூதியம் அளிக்கும் துறை, PPO நம்பர், பென்சன் அக்கவுண்ட் நம்பர் ஆகியவற்றோடு Self-declaration-ஐயும் முடியுங்கள்.
 • கன்ஃபர்மேஷன் மெசேஜை கிளிக் செய்து, திரையில் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யுங்கள்.
 • ‘Guide Face Authentication’ ஆப்ஷனை கிளிக் செய்து ‘Proceed’ பட்டனைத் தட்டுங்கள்.
 • அதன்பிறகு, ஓய்வூதியதாரர்கள், தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் ‘digital life certificate’-ஐ டவுன்லோட் செய்வதற்கான லிங்கைப் பெறுவீர்கள்.

Also Read – Cash Transactions – தினசரி லிமிட், ஐ.டி விதிப்படி அபராதம் எவ்வளவு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top