மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று விருச்சிக ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
விருச்சிக ராசி
விசாகம் நான்காம் பாதம், அனுஷம், கோட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்கார்கள் ஆவர். ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நீர் ராசியான இதன் குறியீடு தேள். விருச்சிக ராசிக்காரர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டால் சகல செல்வங்களும் பெறுவர். குடும்பத்தோடு காமாட்சியை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால், வாழ்வில் வளம் பெற்று எல்லாத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம்
புரதானமிக்க காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம். காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆலயங்களிலும் இந்த ஆலயத்தில் மட்டுமே காமாட்சி அம்பாள் மூலவர் அம்பாளாக விளங்குகிறார். இதனால், இங்குள்ள சிவாலயங்களில் அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். இந்தத் தலத்தில் இருக்கும் அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்தார். அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீசக்கரம் கருவறையினுள் மூலவரான காமாட்சி அம்மனுக்கு எதிரில் அமைந்திருக்கிறது. இதனாலேயே இந்தத் தலம் ஸ்ரீசக்கர பீடத்தலம் என்றழைக்கப்படுவதுண்டு.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் ரொம்பவே விசேஷமானது. அதேபோல், புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் அவதார உற்சவம் போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள் அம்பாளுக்கு நடக்கும். அம்மனை வணங்குவோருக்கு வளமான வாழ்வும் மனநிம்மதியும் கிட்டும் என்பது ஐதீகம். மக்களைக் குழந்தைகளைப் போல் காத்தருளும் அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் நேரில் சென்று வழிபட்டால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் பெறுவர்.
Also Read – Rasi Temples: மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வம்… வழிபட வேண்டிய கோயில் எது?
எப்படிப் போகலாம்?
காஞ்சிபுரம் நகரின் இதயப் பகுதியில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, ரயில் போக்குவரத்து வசதி இருக்கிறது. சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு ஒருநாள் சுற்றுலா செல்ல பல நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் 75 கி.மீ தொலைவில் இருக்கிறது. மின்சார ரயில் வசதியும் இருக்கிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை கார் வசதியும் இருக்கிறது.
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
- கைலாசநாதர் கோயில்
- ஏகாம்பரநாதர் கோயில்
- ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில்
- வைகுண்ட பெருமாள் கோயில்
I like this site it’s a master piece! Glad I discovered this ohttps://69v.topn google.Expand blog