கோவாக்ஸினை அடுத்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இரண்டாவது தடுப்பூசியான ZyCoV-D தடுப்பூசி இந்தியாவில் 7 மாநிலங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசியான இதில் என்ன ஸ்பெஷல்?
ZyCoV-D தடுப்பூசி
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Zydus Cadila நிறுவனத்தின் தயாரிப்பான ZyCoV-D தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஆகஸ்டில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. முதற்கட்டமாக இந்தியாவில் தடுப்பூசி போடுபவர்கள் விகிதம் குறைவாக உள்ள 7 மாநிலங்களின் மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அங்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
டி.என்.ஏ தடுப்பூசி
சைகோவ்-டி தடுப்பு மருந்து உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பு மருந்தாகும். தடுப்பூசிகளைப் பொறுத்தவரை டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள் அதிக அளவு பாதுகாப்புக் கொடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மனித உடலைத் தாக்கும் வைரஸ்கள் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ என இரண்டு வகையானதாகப் பிரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ வைரஸாகும். மனித செல்களில் இருக்கும் டி.என்.ஏ இரட்டை இழைகளால் ஆனது. ஆர்.என்.ஏ ஒற்றை இழையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ-வை ஆர்.என்.ஏவாக மாற்ற அதன் நகலை உருவாக்கி, பின்னர் டி.என்.ஏ-வாக அவை வடிவமைக்கப்படுகின்றன. தடுப்பூசி வகைகளில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுபவை டி.என்.ஏ வகையிலான தடுப்பூசிகள். தட்டம்மை, மஞ்சள் காமாலை, போலியோ உள்ளிட்ட பலவகையான தடுப்பூசிகள் டி.என்.ஏ தடுப்பூசிகளாகும்.
செயல்திறன்
சைகோவ் – டி தடுப்பூசியைப் பொறுத்தவரை 12-18 வயதுக்குட்பட்டவர்களும் போடலாம் என்பது பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது 50 இடங்களில் 28,000 தன்னார்வலர்களிடம் பரிசோதிக்கப்பட்டதாக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தடுப்பூசி கொரோனாவின் டெல்டா திரிபுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுவதாகவும், மருத்துவரீதியான பரிசோதனையில் 66.66% செயல்திறனைக் கொண்டிருப்பதும் தெரியவந்திருப்பதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவப் பரிசோதனையில் 12-18 வயதுக்குட்பட்டோரும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முதல் ஊசியில்லா தடுப்பு மருந்து!
சைகோவ்-டி தடுப்பு மருந்து இந்தியாவின் முதல் ஊசியில்லா தடுப்பு மருந்தாகும். வழக்கமாக சிரிஞ்ச்கள் மூலம் செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு மத்தியில் இது வேறுபட்டது. தடுப்பு மருந்தோடு வரும் ஸ்பிரிக் வைத்த கருவி மூலம் நேரடியாக தோலுக்கு அடியில் செலுத்த முடியும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் தலா இரண்டு டோஸ்களைக் கொண்டிருக்கும்போது, சைகோவ்-டி தடுப்பூசி மூன்று டோஸ்களாக செலுத்தப்படுகிறது. தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் தலா 4 வார இடைவெளியில் செலுத்த வேண்டும். அதாவது, முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின்னர், 28, 56-வது நாட்களில் அடுத்தடுத்த டோஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.
விலை எவ்வளவு?
தேசிய அளவில் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பூசி முகாம்களில் இவை இதுவரை பயன்படுத்தப்படவில்லை. விரைவில் சேர்க்கப்படலாம் என்கிறார்கள். அரசுக்கு இந்தத் தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலை ரூ.376 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று டோஸ்களையும் சேர்த்து ரூ.1,128 ஆகும்.
Also Read – Omicron: ஒமிக்ரான் திரிபு – கவலையளிக்கும் விஷயம் என உலக சுகாதார அமைப்பு சொல்வது ஏன்?