Horoscope

`மேஷம் முதல் மீனம்…’ வார ராசிபலன் மே 24 முதல் 30-ம் தேதி வரை..!

மேஷம் முதல் மீனம் வரை இந்த வார ராசிபலன் எப்படி இருக்கும்? எந்த ராசிக்கு என்ன பலன்?

மேஷம்

பாஸிட்டிவிட்டி பரப்பு மேஷ ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ரொம்பவே ஃபன்னா இருக்கப்போற வாரம். பணவரவு ஜெகஜோதியா இருக்குற இந்த வாரத்துல நீங்க பேச்சைக் குறைச்சிக்குறது உங்களுக்கும் உங்களைச் சுத்தி இருக்கவங்களுக்கும் ரொம்பவே நல்லது. ஹெல்த நல்லப்படியா கவனிச்சுக்கங்க. மாத சம்பளம் வாங்குறவங்களுக்கான வொர்க் லோட ஈஸியா மேனேஜ் பண்ணக் கூடிய வாரம். மொத்தத்துல இந்த வாரம் உங்களுக்கானது. என்சாய் மக்களே!

ரிஷபம்

டென்ஷனை ஃபீல் பண்ணும் ரிஷப ராசி நண்பர்களே, நீங்க இந்த வாரம் முழுக்கவே கவனமா இருக்க வேண்டியது அவசியம். திருமண உறவுகளில் முன்னெச்சரிக்கையா இருக்கணும் நீங்க. பிஸினஸ் பண்றவங்கள் கொஞ்சம் கூடுதலாவே எஃபோர்ட் போட வேண்டியதிருக்கும். ஒருவழியா நீங்க கொடுத்த கடன் இந்த வாரத்துல திரும்பக் கிடைக்க வாய்ப்பிருக்கு. பெண் கொடுத்து, பெண் எடுத்தோர் வழியில் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். பத்திரம் மக்கா!

மிதுனம்

பணவரவால் ரிலாக்ஸாக இருக்கும் மிதுன ராசி நண்பர்களே, உங்களுக்கான வாரம் இது. வேலைரீதியாக ரொம்பவே புரடக்டிவ்வா இருக்கப்போகுது உங்களுக்கு இந்த வாரம். பிஸினஸில் இருப்போர் சாதனைகள் படைக்க வாய்ப்புகள் கைகூடி வரும். உடல், மனரீதியா கொஞ்சூண்டு பிரச்னைகளையும் நீங்க சந்திக்க வேண்டி வரும். உடல் நலனில் ரொம்பவே கேர்ஃபுல்லா இருந்தீங்கன்னா இந்த வாரத்துல நீங்க ஜொலிக்கலாம்!

Horoscope

கடகம்

வேலை பார்க்கும் இடத்தில் கொஞ்சம் பிரச்னைகளை எதிர்க்கொள்ளும் கடக ராசி நண்பர்களே, நீங்க சமாதானக் கொடியைப் பறக்கவிட வேண்டிய வாரம். நண்பர்கள், கொலீக்ஸ்கூட ஒற்றுமையாவும் நல்ல இணக்கத்தோடவும் இருந்தா அதை உங்களால ஈஸியா சமாளிச்சுட முடியும். வாரத்தோட தொடக்கத்துல நெகட்டிவிட்டி உங்களைத் தொந்தரவு பண்ணாலும், அடுத்தடுத்த நாட்களில் பாஸிட்டிவிட்டி உங்களை அணைச்சுக்கும். உங்க லைஃப் பாட்னரோட பல விஷயங்கள்ல கருத்து முரண் ஏற்படவும் அவங்க ஹெல்த் பத்தியும் கவலை ஏற்படலாம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே பணவரவு ஏற்படலாம். மொத்தத்துல நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டிய வாரம்!

சிம்மம்

பாராட்டு மழைல நனையப்போற சிம்ம ராசி நண்பர்களே, நீங்க செஞ்ச வேலைக்காக உங்களுக்கு அங்கீகாரம் தானா வந்து சேரப்போற வாரம் இது. பணம் சம்பந்தமான பிரச்னைகளில் உங்களுக்கு சில சாதகமான மூவ்கள் நடக்கும். வேலை பாக்குற இடத்துல உங்களுக்கு சாதகமான நிலை இருக்கும். உங்க லைஃப் பாட்னரோட நல்ல சிங்க்ல இருப்பீங்க. அவங்களோட ஒத்துழைப்பால இந்த வாரம் ஸ்மூத்தாப் போகும். வாரத்தோட கடைசில சில தலைவலிகளால் நீங்கள் பாதிக்கப்படலாம் உஷார்!

கன்னி

குடும்பத்தினரோடு இணக்கமாக இருக்கும் கன்னி ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்கள் பேச்சுத்திறனால் சுற்றியிருப்பவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். பெண்டிங் இருக்கும் வேலைகளில் கவனக்குறைவாக இருந்தால், அது பிரச்னையாக மாறக்கூடும். வேலைரீதியாக சில மாற்றங்கள் நேரலாம். மாணவர்கள் ரிலாக்ஸாகவும் அவர்கள் படிப்பு விஷயத்தில் கவனக் குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு. இந்த வாரத்தில் உங்களுக்குப் பணப்பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கேற்ப உங்கள் திட்டமிடல் இருக்கட்டும்!

Horoscope

துலாம்

எல்லாவகையிலும் அனுகூலம் பெறப்போகும் துலாம் ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்களுக்கான பாஸிட்டிவிட்டியை அள்ளித்தெளிக்கப் போகிறது. உங்க ராசிபலன் படி சில முக்கியமான தகவல்கள் உங்கள் கான்ஃபிடன்ஸை வேற லெவலுக்குக் கொண்டுபோகும். வாரத்தின் மத்தியில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. யாருடன் பேசினாலும் கொஞ்சம் கவனமாகப் பேசுவது நல்லது. உங்க ராசியால் இந்த வாரம் உங்களோட லைஃப் பாட்னருக்கும் பலன் கிடைக்கும். உங்களோட திருமண வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாம ஸ்மூத்தாப் போகும். என்ன இருந்தாலும் அவநம்பிக்கையை மட்டும் உங்க மூடை மாத்த அனுமதிக்காதீங்க!

விருச்சிகம்

பண விஷயத்தில் ஸ்டெடியாக இருக்கும் விருச்சிக ராசி நண்பர்களே, இந்த வாரத்தின் தொடக்கத்தில் உங்களுக்கு வொர்க் லோட் அதிகமாக இருந்தாலும் பின்னர் அது சரியாகிவிடும். செலவுகள் அதிகரித்தாலும் பண வரவால் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரத்தில் உங்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும் என்கிறது ராசிபலன். பிஸினஸில் இருப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். உங்கள் பிஸினஸ் நண்பர்களோடு நல்லிணக்கத்தைக் கடைபிடியுங்கள். திருமண பந்தம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையில்லாத ஸ்ட்ரெஸ்ஸை ஏத்திக்காதீங்க!

தனுசு

பணவரவால் பலன் பெறப்போகும் தனுசு ராசி நேயர்களே, இந்த வாரத்தில் புது இடத்துக்கு மாற வாய்ப்பு ஏற்படலாம். உங்கள் பிஸினஸ் டீல் புது வடிவம் பெறலாம். வார மத்தியில் சோகமும் வருத்தமும் ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதுதான். உங்க லைஃப் பாட்னருக்கு உங்க ராசிபலன் காரணமாக பலன்கள் கிட்டும். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கலாம். திருமண வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பேச்சை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டீங்கனா பல பிரச்னைகளை முன்கூட்டியே தவிர்க்கலாம்.

மகரம்

புதிய பிஸினஸ் பிளான், ஐடியாக்கள் கொண்டிருக்கும் மகர ராசி நண்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு பணவரவு இருக்கும். மாத ஊதியம் வாங்குபவர்களுக்கு சீனியர்கள், உடல் வேலைபார்ப்போர் சப்போர்ட் முழுமையாகக் கிட்டும். உங்கள் தாய், மனைவி உடல்நலனில் கவனமாக இருங்கள். இந்த வாரம் பயணத்துக்கு வாய்ப்பிருக்கிறது. உங்கள் காதல் விவகாரத்தில் ஈகோ இல்லாமல் டவுன் டு எர்த்தாக நடந்துகொள்ளுங்கள்!

கும்பம்

லக் உச்சத்தில் இருக்கும் கும்ப ராசி நண்பர்களே, பண விஷயத்தில் குறிப்பிடத்தக்க வரவு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, அதன்மூலம் மன அமைதி கிட்டலாம். பணியிடத்தில் எல்லாமே நார்மலாக இருக்கும். அதேநேரம், உங்க சீனியர் ஆபிஸர்கள்கிட்ட நல்லிணக்கத்தோட நடந்துக்காட்டி, அந்த சூழல் மாற வாய்ப்பிருக். உடல்நலனைப் பார்த்துக்கிட்டு, ஸ்ட்ரெஸ்ஸை அண்டவிடாம பார்த்துக்கங்க!

மீனம்

நல்ல செய்தி கிடைக்கப்பெறும் மீன ராசி நண்பர்களே, இந்த வாரத்தை நீங்க கொஞ்சம் கவனமாக் கடக்கணும். உடல் மற்றும் மனரீதியாக சில பிரச்னைகள் ஏற்படலாம். எச்சரிக்கையா இருந்தா அதைக் கடந்துடலாம். யாருடனும் ரொம்ப ஆவேசமா விவாதம், ஆர்க்யூமெண்ட் பண்றதைத் தவிர்த்திடுங்க. உங்க லைஃப் பாட்னரோட உறவு ஹெல்த்தியா இருக்கும். உங்க ரெண்டு பேர் இடையில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. கோபமாவும் ஆணவமாவும் இருக்கறதை விட்டுட்டு ஸ்மூத்தா எல்லா விஷயங்களையும் ஹேண்டில் பண்ணுங்க லைஃப் ஜாலிதான்!

Also Read – இந்த அறிகுறிகள் இருந்தா பிரேக்கப் ஆகப்போதுனு அர்த்தம்… செக் பண்ணிக்கோங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top