சாய் பல்லவி செய்த தரமான 4 சம்பவங்கள்!

பிரேமம் படம் வந்து கிட்டத்தட்ட ஏழு வருஷம் ஆச்சு. இன்னும் அந்தப் படத்தை மக்கள் கொண்டாடிட்டுதான் இருக்காங்க. அதுக்கு முக்கிய காரணம், அதுல வந்த கேரக்டர்ஸ், கதைல இருந்த நாஸ்டால்ஜியா டச். ஆனால், இதுல ஒண்ணு கவனிச்சீங்களா? பிரேமம் படத்துல வந்த மற்ற கேரக்டர்களைவிட சாய் பல்லவி இன்னைக்கும் அதிகளவில் சவுத் இந்தியா முழுவதும் பேசப்பட்டுட்டுதான் இருக்காங்க. மலர் டீச்சரா, பானுமதியா, ஆனந்தியா, கீதா குமாரியா, ரோஸியா இன்னைக்கும் பலரோட மனசுல இருக்காங்க. இதுக்கு படம் மட்டுமே காரணம் இல்லைனு நினைக்கிறேன். சாய் பல்லவி ஆஃப் ஸ்கிரீன்ல பேசுற விஷயங்களும் காரணம்னு சொல்லலாம். சமீபத்துல காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு எதிரா சாய் பல்லவி பேசி பா.ஜ.க-வை வைச்சு செய்த வீடியோகூட செம ட்ரெண்டிங்கா சோஷியல் மீடியால போய்ட்டு இருக்கு. அப்படி அவங்க என்ன பேசுனாங்க? வேற என்ன தரமான சம்பவங்கள் எல்லாம் சாய் பல்லவி பண்ணியிருக்காங்க. அதைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

காஷ்மீர் ஃபைல்ஸ் விமர்சனம்!

ராணா டகுபதி, சாய் பல்லவி சேர்ந்து நடிச்ச ‘விரடா பர்வம்’ அப்டின்ற படம் ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்காக புரோமஷன் வேலைகள்ல அந்த டீம் வேலை பார்த்துட்டு இருக்காங்க. சாய் பல்லவியும் இண்டர்வியூலாம் கொடுத்துட்டு வறாங்க. அப்படி ஒரு இண்டர்வியூல சாய் பல்லவிக்கிட்ட “நீங்க இடதுசாரி சிந்தனைகளால ஈர்க்கப்பட்டவரா?”னு கேள்வி கேட்டாங்க. அதுக்கு சாய் பல்லவி பதில் சொல்லும்போது, “நான் மிடில் கிளாஸ் குடும்பத்துலதான் பிறந்து வளர்ந்தேன். நல்ல மனிதரா இருக்கணும்னு எனக்கு கத்துக்கொடுத்துருக்காங்க. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விபட்டிருக்கேன். ஆனால், எது சரி, எது தவறுனு எப்பவும் நம்மளால ஒரு முடிவுக்கு வர முடியாது.

சமீபத்துல ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்தேன். அதுல பண்டிட்டுகள் எப்படி கொல்லப்படுறாங்கனு காட்டுறாங்க. ஆனால், சமீபத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. பசுவை வண்டில கொண்டுபோன ஒருத்தரை இஸ்லாமியர்னு கருதி கும்பலா சேர்ந்து அவரை அடிக்கிறாங்க. அப்புறம் ‘ஜெய் ஸ்ரீராம்’னு முழக்கமிடுறாங்க. காஷ்மீர்ல அன்னைக்கு நடந்ததுக்கும் இன்னைக்கு நடந்துட்டு இருக்குறதுக்கும் என்ன வித்தியாசம்? நீங்க நல்லவரா இல்லைனா வலது சாரியா இருந்தாலும் இடது சாரியா இருந்தாலும் எந்த பயனும் இல்லை. நான் எப்பவும் நடுநிலையானவள்தான். மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி மக்களை தாக்குவது தவறு. சரிசமமாக இருக்குறவங்களுக்கு இடையில்தான் போட்டு இருக்கணும்”னு பேசியிருப்பாங்க.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்தியாவில் பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் பசுக்களை எடுத்துச் செல்பவர்களை இஸ்லாமியர்கள் எனக்கருதி அடித்து கொல்லும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் பசுவதை தடுப்புச்சட்டம்கூட அமலில் இருக்குது. அதுமட்டுமல்ல, மற்றொரு பக்கம், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. உத்திரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, குஜராத்னு பல மாநிலங்கள்ல இந்தப் படத்தைப் பார்க்குறதுக்கு வரிவிலக்கு கொடுத்துருக்காங்க. மத்தியப் பிரதேசத்துல இந்தப் படத்தை போலீஸ்காரங்க பார்க்க ஒருநாள் லீவ்லாம் கொடுத்தாங்க. இப்படியான சூழல் இருக்கும்போது பசுவின் பெயரை சொல்லி தாக்குறதுக்கு எதிராகவும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்க்கு எதிராகவும் சாய் பல்லவி பேசிய கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனினும், அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கருத்துகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

எல்லாரும் அழகுதான் எப்பவும்!

சாய் பல்லவி எப்பவும் எல்லாருமே அழகுதான்னு சொல்ற ஒரு ஆள். அந்த முடிவுக்கு அவங்க வர்றதுக்கு முன்னாடி சந்திச்ச அவமானங்கள் அதிகம்னு சொல்லலாம். சாய் பல்லவி ஒரு இண்டர்வியூல பேசும்போது, “நான் வீட்டைவிட்டு வெளிய வந்து யாரையாவது பார்க்கப்போனா அவங்க என்னோட கண்ணைப் பார்த்து பேசமாட்டாங்க. என் முகத்துல இருக்குற பிம்பிள்ஸ்தான் பார்ப்பாங்க. அதனால, வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன்”னு சொல்லியிருப்பாங்க. ஆனால், ஒருகட்டத்துல அதை அவங்க அக்ஸப்ட் பண்ணிக்கிட்டாங்க. இதுதான் இயற்கை. நம்மோட நேச்சர் இதுனு புரிஞ்சிக்கிட்டாங்க. மக்கள் அவங்களை அப்படியே ஏத்துக்கிட்டதுக்கும் அவங்க அவங்களாவே முகத்துல இருக்குற பருக்களோட நடிச்சதுதான் காரணம். சாய் பல்லவி வந்ததுக்கு அப்புறம் உண்மையிலேயே பருக்கள்ல்லாம் அழகுதான், இயற்கைதான்னு நிறைய பேர் உணர்ந்து கான்ஃபிடன்ட்சோட வெளிய வர தொடங்குனாங்க. முகத்துல கிரீம் போடுறதுக்கு எதிராலாம் சோஷியல் மீடியால நிறைய பேசுனாங்க.

ஜார்ஜியால அவங்க படிக்கும்போது கூட படிக்கிறவங்க எல்லாருமே ரொம்ப அழகா வொயிட்டா இருப்பாங்களாம். இவங்க முகத்துல பருக்களோட இருக்குறதுனால தாழ்வு மனப்பான்மையோட இருந்துருக்காங்க. இந்தியாவுக்கு வந்ததும் பிரேமம் படத்துல நடிக்க அல்போன்ஸ் அவரை செலக்ட் பண்ணியிருக்காரு. ரொம்பவே ஹேப்பியா ஃபீல் பண்ணியிருக்காங்க. “பிரேமம்க்கு முன்னாடி நிறைய கிரீம்ஸ் நான் பட்யன்படுத்தியிருக்கேன். படம் ரிலீஸ் ஆகும்போது சிம்ரன் மாதிரியோ, திரிஷா மாதிரியோ நான் இல்லைனு கிண்டல் பண்ணுவாங்கனு நினைச்சேன். ஆனால், ட்வீட்ஸ்லாம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என்மேல எனக்கே கான்ஃபிடண்ட் வந்துச்சு. படங்கள்ல நடிக்கும்போதுகூட அதிகமா மேக்கப் போடாமல்தான் நடிப்பேன். எல்லாருமே அவங்க எப்படி இருக்காங்களோ அந்த வகையில் அவங்க அழகுதான். அடுத்தவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுங்க”னு சாய் பல்லவி சொல்லுவாங்க. ஒருவேளை சாய் பல்லவி பிரேமம் படம் மூலமா அதுவரைக்கும் இருந்த அழகு பத்தின விஷயங்களை உடைக்கலைனா  இன்னைக்கும் நிறைய பேர் அந்த இன்செக்யூரிட்டியால வெளிய வராமல்கூட இருந்துருக்கலாம்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

ஷ்யாம் சிங்கா ராய் படம் வந்தப்ப சாய் பல்லவியை பத்தி ஷோஷியல் மீடியால ஒருத்தர், “சாய் பல்லவியோட உதடு சரியில்லை. மூக்குப் பெருசா இருக்கு. ஒரு நடிகைக்கான எந்த அம்பசமும் சாய் பல்லவிக்கிட்ட இல்லை”னு ரொம்பவும் தரைக்குறைவா விமர்சனம் எழுதியிருந்தாரு. இதுக்கு சாய் பல்லவி பக்கத்துல இருந்து பெருசா எந்த எதிர்வினையும் வரலை. அமைதியா கடந்து போய்ட்டாங்க. ஆனால், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இதுக்கு உருக்கமா ஒரு பதிலடி கொடுத்தாங்க. “என்னையும் உருவ கேலி பண்ணி பயங்கரமா கிண்டல் பண்ணியிருக்காங்க. நான் அதை துணிச்சலோட எதிர்கொண்டேன். உருவ கேலியால மனசு எவ்வளவு காயமடையும்னு எனக்கு தெரியும். அதை உழைப்பாலும் திறமையாலும் ஆற்றினேன். பெண்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத சமூகம், அவர்கள் வேகத்தை இந்த மாதிரி கிண்டல் பண்ணி தடுக்குறாங்க. அப்படியானதுதான் சாய் பல்லிவி மீதான உருவகேலியும்”னு செமயான பதிலடி கொடுத்தாங்க.

விளம்பரங்களுக்கு நோ

படங்கள்ல மேக்கப்புக்கு நோ சொல்ற மாதிரி ஃபேர்னஸ் விளம்பரங்களுக்கும் சாய் பல்லவி நோதான் சொல்லுவாங்க. ஏன் அப்படின் அவங்கக்கிட்ட கேட்டா, “எனக்கு தெரிஞ்ச சர்க்கிள் என்னோட ஃபேமிலிதான். பூஜாக்கு, பல்லவி என்னைவிட அழகா இருக்கானு ஒரு காம்ப்ளெக்ஸ் எப்பவும் இருக்கும். கண்ணாடி முன்னாடி நாங்க ரெண்டு பேரும் நின்னா என்னையும் அவளையும் கம்பேர் பண்ணுவா. பூஜா நீ வெள்ளையாகணும்னா விஜிட்டபிள்ஸ், ஃப்ரூட்ஸ் சாப்பிடுனு சொன்னேன். அவ சாப்பிட்டா. ஆனால், அவளுக்கு அது புடிக்காது. எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. என்னைவிட 5 வயசு சின்ன பொண்ணுக்கு எவ்வளவு இம்பேக்ட் கிரியேட் பண்ணுவோம்னு தோணிச்சு. விளம்பரங்கள்ல இருந்து வர்ற பணத்தால மூணு சப்பாத்தி இல்லைனா கொஞ்சம் ரைஸ் சாப்பிடுவேன். கார்ல சுத்துவேன். அவ்வளவுதான். ஆனால், என்னை சுத்தி இருக்குறவங்கள சந்தோஷமா வைச்சிருக்குறது எனக்கு முக்கியம். ஒவ்வொரு நாட்டுலயும் வெவ்வேறு கலர்ல இருக்காங்க. அதையெல்லாம் நாம குறை சொல்ல முடியாது. அதனாலதான் வேணாம்னு சொன்னேன்”னு சொல்லுவாங்க.

நீட் எதுக்கு பாஸ்?

இந்தியால நீட் தேர்வு கொண்டு வந்ததுல இருந்து மாணவர்களின் தற்கொலைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்துட்டு வருது. இதற்கு எதிரா திரைத்துறைல இருந்து பெரிய குரல்கள் வெளியே வரலை. ஆனால், சாய் பல்லவி இதுதொடர்பா குரல் கொடுத்தாங்க. “மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்க வைக்கும். பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். நீட் தேர்வால் எனது குடும்பத்திலும் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனக்கும் மாணவர்களின் வலி புரியும்”னு நீட் தேர்வுக்கு எதிரா கருத்து சொல்லியிருப்பாங்க. இதுக்கு எதிராகவும் சாய் பல்லவி பயங்கரமா விமர்சிக்கப்பட்டாங்க.

சாய் பல்லவி
சாய் பல்லவி

சாய் பல்லவி வெறும் நடிகைகள்ல ஒருத்தரா மட்டும் இருந்து கடந்து போகாமல், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றியும் பேசுவது ரொம்பவே மகிழ்ச்சியானது. தொடர்ந்து அவரின் குரல் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்கணும் என்பதே ஆசை.

Also Read: கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top