சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களில் 92.14% பேர் வளாக நேர்காணல் எனப்படும் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடந்தது.
சத்தியபாமா பல்கலைக்கழகம்
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ‘Achievers Day’ கொண்டாட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன், தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணைத் தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி ஆகியோர் விழாவுக்குத் தலைமையேற்று, மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் காஃக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரமேஷ் தனக்கோட்டி கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
92.14% மாணவர்கள்
சத்தியபாமா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களில் 92.14% மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று சூழலிலும் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது சத்தியபாமா பல்கலைக்கழகம். Cisco, Cognizant, Wipro, Capgemini, HCL உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்பட 363 நிறுவனங்கள் வளாக நேர்காணலில் மாணவர்களைத் தேர்வு செய்திருக்கின்றன. இவற்றில், Silicon Labs, OpenText, Mirketa உள்ளிட்ட 84 நிறுவனங்கள் முதல்முறையாக கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியபாமா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களில் 2004 பேர், ஆண்டு ஊதியம் அதிகபட்சமாக ரூ.31 லட்சம் முதல் குறைந்தட்சமாக ரூ.4.75 லட்சம் வரையில் ஊதியம் பெறும் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் தொழில்நிறுவனங்களோடு நல்லுறவைப் பேணும் திட்டம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. Center of Excellence மூலம் HCL, Capegemini உள்ளிட்ட நிறுவனங்களில் 300-க்கும் மேற்பட்டோர் பணி நியமனம் பெற்றனர். அதேபோல், Cognizant நிறுவனத்தின் ’The Digital Nurture program’ மாணவர்களின் வேலைவாய்ப்புப் பெறும் திறனை ஊக்குவிப்பதில் கைகொடுத்தது.