ஷீரடி சாய்பாபா

ShirdiSaibaba: ஷீரடி சாய்பாபா ஆலயம் – 7 தகவல்கள்!

மதம், மொழி, இனம் கடந்து உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஷீரடி சாய்பாபா ஆலயம் பற்றிய 7 அரிய தகவல்கள்.

ஷீரடி சாய்பாபா ஆலயம்

மனித அவதாரம் எடுத்த கடவுளாகப் போற்றப்படுபவர் மகான் சாய்பாபா. மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு பேரருள் வழங்கியவர். அவர் வாழ்ந்த ஷீரடியில் பிரமாண்ட ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஷீரடி சாய்பாபா
ஷீரடி சாய்பாபா

ஷீரடி சாய்பாபா ஆலயம் – 7 தகவல்கள்

  • சாய்பாபா ஸித்தியான நாள் 1918-ம் ஆண்டு அக்டோபர் 15. அவர் மறைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு அவரின் தீவிர பக்தரான நாக்பூர் ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவர் ஷீரடியில் ஆலயம் எழுப்ப உதவினார். ஆலயம் இப்போது ஸ்ரீசாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது.
  • சாய்பாபாவை அவரது பக்தர்கள் `சாய்’ என்று அழைக்கிறார்கள். கடவுள் என்பதைக் குறிக்கும் வகையிலான சாட்ஷாத் ஈஸ்வர் (Sakshaat Ishwar) என்பதன் சுருக்கமே சாய்.
  • ஷீரடியில் இருக்கும் ஆலயம் குரு ஸ்தன் என்றழைக்கப்படுகிறது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் கழித்ததாக நம்பப்படும் வேப்பமரம் ஒன்றின் கீழ் இது அமைந்திருக்கிறது.
  • ஆலயத்தில் இருக்கும் வேப்ப மரத்தின் கனிகளும் இலையும் இனிப்பு சுவை நிறைந்ததாக இருக்கிறது.
ஷீரடி சாய்பாபா
ஷீரடி சாய்பாபா
  • எல்லோரையும் ஆள்பவன் ஒரே கடவுள் என்பது பாபாவின் வாக்கு. ஷீரடி ஆலயத்தில் பாபாவின் சமாதியும் துவாரகாமாய் மசூதியும் அமைந்திருக்கின்றன. பாபா ஏற்றியதாக நம்பப்படும் அணையா விளக்கையும் கோயில் வளாகத்தில் இருக்கும் பூங்காவில் பக்தர்கள் தரிசிக்கலாம்.
  • ஷீரடி ஆலயத்துக்கு தினசரி சராசரியாக 60,000 பக்தர்கள் வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயிலாக ஷீரடி ஆலயம் இருக்கிறது.
  • முதல்முறையாக சாய்பாபா, தனது இளம்வயதில் ஷீரடிக்கு சாய்பாபா வந்ததாகச் சொல்கிறார்கள் சாய்பாபாவின் உண்மையான பெயர் அல்லது அவரது பூர்வீகம் பற்றிய தெளிவான குறிப்புகள் எங்கும் இல்லை. முதல்முறையாக அவரை `சாய்’ என்று கோயில் பூசாரி அழைத்ததாக நம்பப்படுகிறது.

Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top