வெள்ளித் திரை டூ சின்னத் திரைக்கு வந்து கலக்கிய நட்சத்திரங்கள்!

நம்ம தமிழ் ஹீரோயின்ஸ் பொதுவா வெள்ளித் திரை-யில் ஒரு ரவுண்ட் வந்துட்டு அப்புறமா சீரியல்ல என்ட்ரி கொடுக்கிறது வழக்கம் தான். ஆனா, அதுலயும் ரெண்டு கேட்டகிரி இருக்கு. சினிமா வாய்ப்புகள் இல்லாம வர்றது ஒரு ரகம, இரண்டாவது ரகம் சினிமாவுல ஜொலிக்கிறப்ப சீரியல்கள்ல நடிக்கிறது. 80’ஸ்ல இருந்த நடிகைகள் தொடங்கி இப்போ இருக்க நடிகைகள் வரை பலர் சின்னத்திரையில் அவங்களுக்கான இடத்தை பிடிச்சு இருக்காங்க. அந்த ஸ்டார் நடிகைகள் சீரியலுக்குள் வரும்போது அது இன்னும் அதிகமா ஜொலிச்சதுன்னே சொல்லலாம். ஆனா அப்படி வந்த எல்லோரும் சக்ஸஸா ஆனாங்களா? அப்படின்னா, இல்லைங்குறதுதான் பதிலா இருக்கும். அப்படி நம்ப தமிழ் ஹீரோயின்ஸ் யார், யார் என்னென்ன சீரியல் நடிச்சு இருக்காங்க? அதுல எந்தெந்த சீரியல் ஹிட் அடிச்சுதுன்னு இந்த வீடியோல பார்ப்போம்.

ராதிகா
ராதிகா

இந்த வரிசையில முதல்ல நமக்கு நியாபகம் வர்றது வேற யாரா இருக்கும், நம்ம நடிகை ராதிகாதான். ஒரு குடும்பத்துக்கு பெண்கள் எப்படி பக்கபலமா இருக்காங்கங்குறது இவங்க வந்த பின்னால இன்னும் ஸ்ட்ராங்க் ஆச்சுன்னு கூட சொல்லலாம்.
சித்தி ராதிகாவில் ஆரம்பமாகி இப்போ இருக்க டெல்னா டேவிஸ் வரை அப்படியான ரோல்களில் தான் நடிச்சுட்டு இருக்காங்க. இப்படி ஒரு நட்சத்திரம் நடிக்குறாங்க அப்படின்னா கண்டிப்பா அந்த சீரியலில் அவங்களுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அந்த கேரக்டர் தான் சீரியலில் முக்கியமான ஒரு ரோலில் இருக்கும். அதுக்கு சரியா பொருந்திப்போனாங்க ராதிகா.

முதல்ல ராதிகா, சன் டிவியில வந்த சித்தி தொடங்கி வாணி ராணி வரை எல்லாமே ஹிட் தான். ஆனா 90’ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சீரியல் சித்தி தான். இது இல்லாம அரசி, பொன்னி c/o ராணி, மறுபிறவி, செல்லம், செல்வி-னு பல சீரியலில் ராதிகா நடிச்சு இருக்காங்க. திரும்ப சித்தி 2-ல ஒரு Come back கொடுத்தாங்க. அந்த சீரியலில் சித்தி ராதிகாவுக்கு தான் பவர் அதிகம். ஒரு மிகப்பெரிய பொறுப்பு அவங்ககிட்ட இருந்துச்சு. ஆனா சித்தி2-லையும் சில காலங்கள் நடிச்சுட்டு பின்னர் விலகிட்டாங்க. இருந்தும் சீரியலில் நமக்கு மறக்கவே முடியாத ஒரு சீரியலா சித்தி இருந்துச்சு சொல்லலாம்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன், வெள்ளித் திரை-யில் நீலாம்பரியாவே பார்த்த காலாமெல்லாம் மாறி பொறுப்புள்ள ஒரு பொண்ணா சீரியல்ல வலம் வந்தாங்க. முதல் முதலா கலசம் அப்படிங்குற சீரியல்லதான் அறிமுகம் ஆனாங்க. அதுலயே டபுள் ஆக்ட். பிச்சு உதறியிருப்பாங்க. இதுல இவங்க கேரெக்டர்களோட பெயர் நீலாம்பரி, ரஞ்சனி. அதுக்கப்புறம் தங்கம் சீரியல் மூலமா இன்னும் தன்னோட பாதத்தை அழுத்தமா பதிச்சாங்க. தொடர்ந்து ராஜகுமாரி, வம்சம்னு சீரியல்கள்ல நடிச்சார். இதுல எல்லோரோட ஃபேவரெட் தங்கம் சீரியல்தான். நடிகர் விஜயகுமாரும் இந்த சீரியலில் ரம்யாகிருஷ்ணன் கூட சேர்ந்து நடிச்சு இருப்பாரு. ரொம்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாங்க ரம்யா கிருஷ்ணன். இது எல்லாமே ரம்யாகிருஷ்ணன் சினிமாவுல பிசியா நடிச்சுக்கிட்டிருந்த காலங்கள்ல நடிச்சதுங்குறதுதான் ஆச்சர்யமான விஷயம்.

தேவயானி
தேவயானி

என்னடா முக்கியமான ஆளை விட்டுட்டன்னு நீங்க நினைக்கிறது கேட்குது. கோலங்கள்னு ஒரு சீரியல். கிராமம் முதல் நகரம் வரைக்கும் பரபரக்க வச்ச சீரியல் அது. சுமார் 1,500 எபிசோட்களுக்கு மேல ஓடுன சீரியல் ஸ்டார்ட்டிங்ல இருந்த அதே பரபரப்பு, முடியுற வரைக்கும் இருந்தது. இதை மெயிண்டைன் பண்ண ஒரே காரணம் நடிகை தேவையானி. தேவையானி சீரியலுக்கு வர்றப்போ அவங்களும் பீக்ல இருந்த காலக்கட்டம்தான். அப்புறமா மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள், செம்பருத்தினு அடுக்கிட்டே போனாங்க. ஆனா, இன்னைக்கும் தேவையானி சீரியல்னா அது கோலங்களைத்தான் நியாபகப்படுத்தும். அபியாவே வாழ்ந்திருந்தாங்க தேவையானி. சுமார் 250 நடிகர்களுக்கு மேல் நடிச்ச பிரம்மாண்டமான சீரியல்னு கூட கோலங்களைச் சொல்லலாம்.

குஷ்பு
குஷ்பு

ஜெயா டிவியில் குஷ்பு நடிச்ச கல்கி சீரியல் பல இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியல்.
ஆனா, முதன்முதலா அறிமுகம் ஆனது 1995-ல சன் டிவியில வெளியான சின்ன சின்ன ஆசை சீரியல்லதான். வெள்ளித் திரை-யில் நாட்டாமை மாதிரியான படங்கள்ல கொடிகட்டி பறந்த காலக்கட்டம் அது. அப்போ அவங்க டிரை பண்ணது போலடான அட்டெம்ப்ட். சில எபிசோட்களை அவங்க இயக்கவும் செய்திருந்தாங்க. அப்புறமா அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம்னு ஆரம்பிச்சு, இப்போ மீரா வரைக்கும் மொத்தமா 17 சீரியல்கள்ல நடிச்சிருக்காங்க. குஷ்பு-வையும் சின்னத்திரையில் பார்த்தது, அவங்க ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாத்தான் இருந்துச்சுன்னே சொல்லலாம்.

Also Read – இங்கிலீஷ் நியூஸ் ரீடர் டூ சீரியல் நடிகை – `பாக்கியலக்ஷ்மி’ ரேஷ்மா ஜர்னி!

அடுத்ததா, பூர்ணிமா பாக்கியராஜ் இவங்க செரியலுக்கு வந்த டைம் கொஞ்சம் லேட் தான், இருந்தும் சன் டிவியில் வர கண்மணி சீரியலில் அசத்தி இருப்பாங்க.சூரியவம்சம், பூவே உனக்காக, எங்க வீட்டு மீனாட்சினு 4 சீரியல்கள் நடிச்சு இருக்காங்க.

பூர்ணிமா பாக்யராஜ்
பூர்ணிமா பாக்யராஜ்

இப்போ ட்ரெண்ட்ல இருக்க நடிகைகள் யார் யார் சீரியலில் நடிச்சுட்டு இருக்காங்கன்னு பார்த்த அன்பே வா டெல்னா டேவிஸ், ரெட்டை ரோஜா சந்தினி. இந்த 2 சீரியலுமே ஹிட்டான சீரியல்கள் தான். இவங்க இல்லாம தாமரை சீரியலில் நடித்த நிரோஷா, எதிர் நீச்சலில் நடித்து வரும் கனிகா- னு எல்லாருமே சக்ஸஸான சீரியல்களில் தான் நடிச்சுட்டு இருக்காங்க. பூவே உனக்காக சீரியலில் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி முக்கியமான கேரக்டரில் நடிச்சு இருப்பாரு. இதுல எல்லாருமே மெகா சீரியலில் பல எபிசோட் கண்ட கண்ட நடிகர்கள் தான். இவங்க இல்லாம இன்னும் பலர் நம்ப சின்னத்திரையில் கலக்கிட்டு இருக்காங்க, மிஸ்ஸான உங்களுக்கு பிடிச்ச நட்சத்திரங்கள், நான் சொன்ன லிஸ்ட்ல இருக்க நட்சத்திரங்கள் யாரை ரொம்ப பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top