மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷான் இன்று, தனது 24-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பீகாரில் பிறந்த இஷான், கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராகக் களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டம், சர்வதேச கிரிக்கெட்டில் இவருக்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. கடந்த 2021 மார்ச்சில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் இவர் களமிறங்கினார்.
ஐபிஎல் தொடரில் இஷான் கிஷானின் டாப் 5 இன்னிங்ஸ்களைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.
99 Vs RCB,2020
2020 சீசனில் தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே இஷான் கிஷான் பண்ண சம்பவம் இது. ஆர்.சி.பி நிர்ணயிச்ச 201 டார்கெட்டை நோக்கி விளையாடிய மும்பைக்கு 58 பந்துகளில் 99 ரன்கள் அடிச்சு வலுவான அடித்தளம் அமைச்சுக் கொடுத்தார். இதுல 9 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். ஸ்கோர் டை ஆன நிலையில், ஒரு ஓவர் எலிமினேட்டரில் ஆர்.சி.பி அந்த மேட்ச்ல ஜெயிக்கும். ஐபிஎல்லைப் பொறுத்தவரை இஷானோட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
72* Vs DC, 2020
லோ ஸ்கோரிங் மேட்சான இதில் இஷானோட மெஜஸ்டிக்கான 72*, மும்பை அணிக்கு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்துச்சு. துபாய்ல நடந்த 2020 சீசனோட 51-வது மேட்சில் முதலில் பேட் செய்த டெல்லி, 110 ரன் மட்டும்தான் அடிக்கும். இந்த ஸ்கோரை மும்பை டீம் 14.2 ஓவர்கள்ல சேஸ் பண்ணுவாங்க. இஷான் கிஷான், 47 பந்துகளில் 72 ரன்களோட ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பார்.
84 Vs SRH, 2021
2021 சீசன்ல இஷான் மாஸ் கிளப்புன மொமண்ட் இது. ஹைதராபாத் டீமுக்கு எதிரான போட்டில முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்கள்ல அதிரடியாக 235 ரன் குவித்தது. 32 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களோட இஷான், 84 ரன் எடுத்திருப்பார். மும்பை டீம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிச்ச இந்த மேட்ச்ல பிளேயர் ஆஃப் தி மேட்ச் நம்ம இஷான்தான்.
62 Vs KKR, 2018
2018 சீசனோட தொடக்கம் இஷானுக்கு மோசமா இருந்தாலும், இந்த மேட்ச்ல ஃபார்முக்குத் திரும்பியிருப்பார். கொல்கத்தாவுல நடந்த இந்தப் போட்டியில மிடில் ஆர்டர்ல களமிறங்குன இஷான், 21 பந்துகள்ல 62 ரன் அடிச்சு மிரட்டியிருப்பார். இதுல, 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். மும்பை 210 ரன் அடிச்ச இந்தப் போட்டியில், கொல்கத்தா 108 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாகத் தோற்கும்.
61 Vs SRH, 2017
இஷான், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் டீம்ல இருந்தப்போ பண்ண சம்பவம் இது. 2017 சீசன்ல ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் டிவைன் ஸ்மித்தோட இணைஞ்சு முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்ப்பார் இஷான். இதுல அவரோட பங்கு 40 பந்துகள்ல 61 ரன்கள். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொதப்பவே, அந்த மேட்ச்ல குஜராத் டீம் 154 ரன்கள் மட்டும்தான் எடுக்கும். இதுல ஹைதராபாத் டீம் 8 விக்கெட் வித்தியாசத்துல ஜெயிச்சிருப்பாங்க.
Also Read – கேரளாவின் விஜய் சேதுபதி… மலையாள சினிமாவில் ஜெயித்த ஜோஜு ஜார்ஜ் கதை!