ஜெமினி சர்க்கஸ்

62 சிங்கங்கள்… 40 புலிகள்.. ஒரு நாள்! – ஜெமினி சர்க்கஸ் சரிந்த கதை

இந்த மனிதருக்கு 100 வயசாகுது. இவர்தான் சின்ன வயசுல நம்ம எல்லாரையுமே சந்தோசப்படுத்துன ஒருத்தர். நம்ம பார்த்த முதல் ஆச்சர்யம் இவராலதான் நடந்தது. இன்னைக்கு நாம இவரைப் பத்திதான் தெரிஞ்சுக்கப்போறோம். இவரோட பேரு ஜெமினி சங்கரன். சின்ன வயசுல நாம எஞ்சாய் பண்ணி ரசிச்ச ஜெமினி சர்க்கஸை உருவாக்குனவர். இந்த ஜெமினி சர்க்கஸ் எப்படி ஆரம்பிச்சது? வெறும் 6000 ரூபாய்ல தொடங்குன ஜெமினி சர்க்கஸ் 1,000 சாகசவீரர்கள் கொண்ட பெரிய டீமா எப்படி ஆனது? இந்த ஜெமினி சர்க்கஸ்க்கு ஒரு பிரச்னை வந்தப்போ பிரதமர் இந்திரா காந்தியே தலையிட்டதும் நடந்துச்சு.. ஒரே நாள்ல இவர்கிட்ட இருந்த 62 சிங்கங்களையும் 40 புலிகளையும் அரசாங்கம் பறிமுதல் பண்ணதும் நடந்துச்சு.. 8 வயசுல சர்க்கஸ் மேல ஆசைப்பட்ட ஒரு பையன், எப்படி இந்தியா முழுக்க பிரபலமான சர்க்கஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்குனாரு.. அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஜெமினி சங்கரன்
ஜெமினி சங்கரன்

1930ல கேரளா மாநிலம் தலச்சேரில ஒரு சர்க்கஸ் நடக்குது. அந்த சர்க்கஸை நாலாவது படிச்சிட்டு இருந்த ஒரு சின்ன பையன் பார்க்குறான். அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருது. நம்ம எல்லாருமே சின்ன வயசுல சர்க்கஸ் பார்த்துட்டு வந்தா வீட்டுல எதாச்சும் குட்டி கரணம் அடிச்சு சேட்டை பண்ணுவோம்ல.. அந்த மாதிரி இந்த பையனும் ட்ரை பண்றான். ஆனா அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. பொதுவாவே இந்தியா முழுக்க பிரபலமா இருந்த நிறைய சர்க்கஸ் கம்பெனிகளை உருவாக்குனவங்க மலையாளிகளாதான் இருப்பாங்க. அதுலயும் குறிப்பா தலச்சேரி ஊர் களறிக்கு ரொம்ப ஃபேமஸான ஊர். அந்த ஊர்ல நிறைய பசங்க சின்ன வயசுல இருந்தே களறி கத்துக்குவாங்க. அப்படித்தான் இந்தப் பையனும் களறி கத்துக்குறான். ஒரு கட்டத்துல ஏழாவதோட படிப்பை நிறுத்திட்டு முழு நேரமும் களறியும் சின்ன சின்ன சர்க்கஸ் சாகசங்களும் பண்ண ஆரம்பிக்குறான்.

அந்த டைம்ல இரண்டாம் உலகப்போர் திவீரமா நடந்திட்டு இருந்தது. அப்போ நிறைய பேரை ராணுவத்துக்காக ஆள் எடுக்குறாங்க. இந்தப் பையனும் ராணுவத்துல செலக்ட் ஆகுறான். வயர்லெஸ் கம்யூனிகசன் கோர்ஸ் முடிச்சுட்டு ஆர்மில வயர்லெஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை கிடைக்குது. 18 ரூபாய் சம்பளத்துக்காக அந்த வேலை பார்க்குறான். ஆனாலும் அவனுக்கு சர்க்கஸ் மேலதான் ஆர்வம் அதிகமா இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடியுது. இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைக்குது. ராணுவத்துல இருந்து திரும்பி வந்ததும் நேரா சர்க்கஸ்ல போய் ஜாயின் பண்ண அந்த பையன் பேரு சங்கரன்.

கேரளால சர்க்கஸ் கத்துக்கிட்ட சங்கரன், கொல்காத்தால போஸ் லயன் சர்க்கஸ் கம்பெனில சேர்ந்து கொஞ்சம் வருசம் வேலை பார்க்குறாரு. அப்போ அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம். அந்த டைம்ல கவர்மெண்ட் வேலை பார்க்குறவங்களுக்கே 100 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கும். சர்க்கஸ்ல பெரிய வித்தைக்காரர் ஆகுறாரு சங்கரன். ஒரு கட்டத்துல நமக்கே ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்த முடியும்னு ஒரு கான்ஃபிடன்ஸ் வந்துருக்கு.

ஜெமினி சங்கரன்
ஜெமினி சங்கரன்

1951ல மஹாராஸ்டிரால விஜயா சர்க்கஸ் அப்படிங்குற கம்பெனி விலைக்கு வந்தது. சங்கரனும் அவரோட ஃப்ரெண்டு ஒருத்தரும் சேர்ந்து 6000 ரூபாய்க்கு அந்த விஜயா சர்க்கஸை விலைக்கு வாங்குறாங்க. அதை ஜெமினி சர்க்கஸ்னு பேரு மாத்துறாங்க. அந்த 6000 ரூபாய்க்கு என்னென்ன கிடைச்சது தெரியுமா? இரண்டு சிங்கம்,ஒரு யானை, ஒரு கூடாரம், கொஞ்சம் சர்க்கஸ் உபகரணங்கள். இதெல்லாம் வந்தது. அந்த சர்க்கஸ்ல வேலை பார்த்த 50 பேர் புது ஓனர்கிட்ட கண்டினியூ பண்றாங்க. இவங்க ஃபாரீன்ல இருந்து உராங்குட்டான், சிம்பன்சி, ஒட்டகச்சிவிங்கிலாம் வாங்கி சர்க்கஸ் பண்ண ஆரம்பிக்குறாங்க. அவர் மிதுன ராசிக்காரர் அதனாலதான் ஜெமினினு பேர் வைக்கிறாரு. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி குஜராத்ல முதல் சர்க்கஸை அரங்கேற்றம் பண்றாங்க. படிப்படியா வளர்ந்து ஒரு கட்டத்துல இந்தியாவுலயே ஃபேமஸான சர்க்கஸா ஜெமினி சர்க்கஸ் மாறுது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, குடியரத்தலைவர் ராதாகிருஷ்ணன், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி எல்லாருமே இவங்க சர்க்கஸை வந்து பார்க்குறாங்க. ஒரு வாட்டி பீகார்ல சர்க்கஸ் நடத்துறதுக்கு அனுமதி கிடைக்கல. அப்போ இந்திரா காந்தியே தலையிட்டு அனுமதி வாங்கிக் கொடுத்தாங்களாம். 1977-ல இன்னொரு சர்க்கஸ் ட்ரூப் ஆரம்பிக்குறாரு சங்கரன். அதுதான் ஜம்போ சர்க்கஸ். ரெண்டுமே நல்லா வளருது. ஜெமினி சர்க்கஸ்ல 600 கலைஞர்கள், ஜம்போ சர்க்கஸ்ல 400 கலைஞர்கள்னு ஆயிரம் பேர் வச்சு சர்க்கஸ் நடத்துனவர் சங்கரன். இந்தியா முழுக்க இவங்க சர்க்கஸ் பிரபலமாகுற டைம்ல இடி மாதிரி ஒரு சம்பவம் நடக்குது.

Also Read – நிஜத்திலும் சண்டக்கோழி.. நடிகர் லால் மெர்சல் பின்னணி!

சர்க்கஸ்ல காட்டு விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்குது அரசாங்கம். இவங்ககிட்ட இருந்த 62 சிங்கம், 40 புலி, சிம்பன்சி, கரடி, பிளாக் பேந்தர் அப்படினு எல்லாத்தையும் அரசு பறிமுதல் பண்ணிடுறாங்க. இதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா சர்க்கஸ் மேல மக்களுக்கு ஆர்வம் குறைய ஆரம்பிக்குது. இப்போ இவங்ககிட்ட கொஞ்சம் யானை, சின்ன சின்ன விலங்குகள்னு கம்மியான செட்டப்தான் இருக்கு. இந்த ஜெமினி சங்கரனுக்கு இப்போ 100 வயசாகுது. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல ஜெமினி சர்க்கஸ் இயங்கிட்டு இருக்கு. இப்போ அவரோட பசங்க அசோக் சங்கரன், அஜய் சங்கரன் ரெண்டு பேரும் இதை நடத்திட்டு இருக்காங்க.

இன்னைக்கு சர்க்கஸ் தொழில் மொத்தமாவே அழிஞ்சுட்டு வருது. ஒரு சர்க்கஸ் ஆர்டிஸ்ட்ட டிரெய்ன் பண்றதுக்கு நிறைய டைம் தேவைப்படும். கொரானா லாக்டவுன் டைம்ல பிராக்டிஸ் பண்ணாததால திரும்ப ஃபார்முக்கு வர பல மாதங்கள் ஆனதாம். சின்ன பசங்க முன்ன மாதிரி இப்போ சர்க்கஸ்க்கு வர்றதில்ல. அது ஒரு நல்ல விஷயம்தான். இப்போ இவங்களோட சர்க்கஸ்ல இருக்குற நிறைய ஆர்டிஸ்ட் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவங்கதான். இந்த நிறுவனத்தை மெயிண்டெய்ன் பண்றதுக்குஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற சர்க்கஸ் போர்சன் எல்லாமே ஜெமினி சர்க்கஸ்ல எடுத்ததுதான்.

ஜெமினி சர்க்கஸ்
ஜெமினி சர்க்கஸ்

8 வயசுல சர்க்கஸ்ல ஆர்வம் காட்டத் தொடங்கின சங்கரன் அவர்களுக்கு இப்போ 100 வயசு. ‘சர்க்கஸ்னா என்ன?’ அப்படினு கேட்டதுக்கு சங்கரன் ஒரு பதில் சொன்னாரு,

“ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னாடி நடக்குற ரியாலிட்டி ஷோ. ஆனா நீங்க டிவில பார்க்கிற மாதிரி ரியாலிட்டி ஷோ கிடையாது இது. இங்க எடிட்டிங், டூப் எதுவும் கிடையாது. நடக்கிற எல்லாமே ரியல். சாதி, மதம் எதுவுமே இல்லாத ஒரு இடம் சர்க்கஸ்தான். எவ்வளவோ பேர் இங்க கலப்புத் திருமணம் பண்ணிருக்காங்க. அதே போல இங்க ஆண், பெண் வித்தியாசங்களும் கிடையாது. இத்தனை வயசுலயும் நான் ஆக்டிவா இருக்கக் காரணம் நான் என் உடலை அப்படி டிரெய்ன் பண்ணிருக்கேன். நீங்க உங்க உடலை காதலிச்சா அது உங்களை நல்லா பாத்துக்கும்.”

இனி வரப்போற ஜெனரேசனுக்கு சர்க்கஸ்லாம் பிடிக்குமானு தெரியல. ஏன்னா அதைவிட கோமாளித்தனங்களையெல்லாம் அவங்க மொபைல்லயே பார்த்துடுறாங்க. நீங்க சின்ன வயசுல பார்த்த சர்க்கஸ் அனுபவங்களை ஷேர் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top