தூள் ஏன் மாஸ்… 5 காரணங்கள்!

இயக்குநர் தரணி டைரக்சன்ல விக்ரம் நடிப்புல ஏ.எம் ரத்னம் தயாரிப்புல 2003-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படம்தான் ‘தூள்’. தளபதி விஜய்யை மனசுல வெச்சு எழுதுன இந்த படம், விக்ரமை மனசுல வெச்சு எழுதுன மாதிரி அவ்வளவு பர்ஃபெக்டா அவருக்கு அமைஞ்சுது.  ‘தில்’ பட வெற்றிக்கு அப்புறம் விக்ரம் – தரணி காம்போ இரண்டாவது முறையா இந்தப் படத்துல இணையுறாங்கனு அறிவிப்பு வரும்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பிச்சுது. அந்த வருச பொங்கல் ரேஸ்ல வந்த ‘அன்பே சிவம்’, ‘வசீகரா’, ‘சொக்கத்தங்கம்’னு வந்த எல்லாப் படத்தையும் வீழ்த்தி ‘தூள்’ படம் விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் மிகப்பெரிய சக்ஸஸைப் பார்த்தது. அந்த அளவுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற 5 முக்கியமான காரணங்கள் இருக்கு. அதெல்லாம் என்னன்னு இப்போ பார்க்கப்போறோம்.

விக்ரம்

Vikram
விக்ரம்

இந்தப் படத்தோட மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் விக்ரமும் அப்போ விக்ரமுக்கு இருந்த கரீஷ்மாவும்தான். ‘சேது’, ‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’னு தொடர் வெற்றிகள்ல அவர் இருந்த நேரம் அது. விக்ரம் நின்னா, நடந்தாலே அது சென்சேஷனல் நியூஸ் ஆகிக்கிட்டிருந்த அந்த டைம்ல, முதல்முறையா ஏ, பி, சி மூணு செண்டர்களையும் குறி வெச்சு அவர் நடிச்ச ஒரு முழு நீள மசாலா படம்னா அது ‘தூள்’தான். தன் கையெழுத்தைக்கூட போடத் தெரியாத ஆறுமுகம்ங்கிற ஒரு கிராமத்து மனுசன், சென்னைக்கு வந்து ஒரு மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யத்தையே அடிச்சு நொறுக்குறாங்கறாங்கிற படத்தோட கதைக்கு அவ்வளவு அழகா விக்ரம் ஃபிட் இன் ஆகியிருப்பாரு. இரும்பு உடம்பும், முறுக்கு மீசையும், மடிச்சு கட்டுன வேட்டியும்னு மனுசன் சும்மா பிரிச்சிருப்பாப்ல,  அந்த படத்துல விக்ரம்  தன் கால்ல போட்டிருந்த பேண்ட் கூட  அப்போ டிரெண்ட் ஆச்சு. அப்போ இருந்த யூத்ஸ்லாம் அவரை மாதிரி கால்ல பேண்ட் போட்டு வேட்டிய மடிச்சுகட்டிக்கிட்டு சுத்திக்கிட்டிருந்தாங்க.  

இதுல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா அந்த பேண்ட்க்கு பின்னாடி ஒரு கதை இருக்கு.  தூள் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி விக்ரமுக்கு வேற ஒரு ஷூட்டிங்ல கால்ல அடிபட்டுருந்துச்சு. அதனால அவர் அடுத்த சில மாதங்களுக்கு கால்ல பேண்ட் போட்டே இருக்கணும்னுங்கிறது கட்டாயமா இருந்தது. ஆனா ‘தூள்’ படத்துலயோ நிறைய இடங்கள்ல வேட்டிய மடிச்சுக்கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி சீக்குவென்ஸஸ் இருக்கு, இதுக்காக வேட்டிய, பேண்ட் சர்ட்டா மாத்துனாலோ அல்லது வேட்டிய மடிச்சுக்கட்டாம இறக்கிவிட்டு நடிச்சாலோ அந்த ஆறுமுகம்கிற கேரக்டரேசன் அடிவாங்கும். அதனால யோசிச்ச தரணி, படம் முழுக்க விக்ரம் அந்த பேண்ட்டோடவே வரட்டும். நான் படத்தோட தொடக்கத்துல வர்ற ஃபைட் ஹீரோ கால்ல அடிபடுற மாதிரி லாஜிக் பண்ணிக்கிறேன்னு சொல்லி பிரில்லியண்டா சமாளிச்சிட்டாரு. ஆனா பின்னாடி அது ஒரு டிரெண்டாகவே ஆவும்னு யாருமே எதிர்பாக்கலை,

தரணி ஸ்கீரின்பிளே

இயக்குநர் தரணி
இயக்குநர் தரணி

இயக்குநர் தரணியோட ஸ்கிரீன்ப்ளே எப்பவுமே ஸ்பெசல்தான். அவரோட திரைக்கதைகள் வெறுமனே வழக்கமான ஒரு மசாலா திரைக்கதையா மட்டுமே இல்லாம, அதுக்குள்ள சின்ன சின்ன புத்திசாலித்தனமான ஐடியாக்களை நிறைய அடுக்கி வெச்சு ஸ்க்ரீன்பிளே பண்ணுவார். உதாரணமா அவரோட முந்தைய படமான தில் படத்துல வில்லனோட பைக்ல வர்ற ஹீரோ விக்ரம் ஹெல்மெட்டை கழட்டுனா ஆசிஷ் வித்யார்த்திகிட்ட மாட்டிக்குவோம்ங்கிற சிச்சுவேசன்ல வாக்கி டாக்கியை தள்ளிவிட்டு தப்பிப்பாரு , அதுமாதிரி, தூள் படத்துலயும்,  படத்தோட தொடக்கத்துல டிடியார்கிட்ட டிக்கெட் கரெக்ட் பண்றது தொடங்கி, தன் மேல போட்ட பைத்தியகாரத்தன பட்டத்தை பயன்படுத்தி மனோஜ் கே விஜயன் வில்லனை சுடுறது, குங்குமம் மடிக்க எடுத்த லெட்டர் பேடை வெச்சு மினிஸ்டரை ஷகிலாகூட லிங்க் பண்ணி பதவிக்கு ஆப்பு வைக்கிறதுனு தரணி ஸ்பெசல் ஐடியா பேஸ்டு திரைக்கதை அவ்வளவு விறுவிறுப்பா இருக்கும். வாயாடி பொண்ணு முண்டகண்ணிஸ்வரியா ஜோதிகா, ஊரை விட்டு ஓடிவந்து நாராயணசாமிங்கிற பேரை சுருக்கி நரேன்னு வெச்சுக்கிட்ட விவேக், மாலை போட்டுக்கிட்டு கோபத்தை கண்ட்ரோல் பண்ற இன்ஸ்பெக்டர் மனோஜ் கே விஜயன், கிளாமர் மாடல் ஸ்வப்னாவா ரீமா சென்,  மினிஸ்டர் காளைபாண்டியா ஷாயாஜி ஷிண்டேனு படம் முழுக்க நிறைய அழகான கேரக்டர்கள் கதையை ஸ்மூத்தா நகர்த்திக்கிட்டு போறமாதிரி தரணி அமைச்ச எக்ஸெலண்ட் ஸ்கீரின்ப்ளே நிச்சயம் தூள் படத்தோட வெற்றிக்கு மிகப்பெரிய பலம்னு சொல்லலாம்.

மதுரவீரன்தானே பாட்டு

வித்யாசாகர் இசையில உருவான இந்த பட ஆல்பமே ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் ஹிட் ஆல்பம்தான். என்னதான் வித்யாசகர் இந்த படத்துக்காக ஆசை ஆசை இப்போது, அருவா மீசை கொடுவா பார்வை, இந்தாடி கப்பங்கிழங்கேன்னு, குண்டு குண்டு குண்டுபொண்ணேன்னு வெரைட்டியா பல பாடல்கள் போட்டிருந்தாலும் அறிவுமதி எழுதி பரவை முனியம்மா பாடியிருந்த மதுர வீரன் தானே பாட்டு அப்போ மிகப்பெரிய வைரல் ஆச்சு.  அந்த பீரியட்ல எந்த ஸ்கூல் காலேஜ் கல்ச்சுரல்ஸ் நடந்தாலும் அதுல இந்த பாட்டை போட்டு ஆடாம இருக்கமாட்டாங்க, அவ்வளவு ஏன் அந்த வருசம் வந்த வேர்ல்ட் கப் மேட்சுகளுக்கே சிங்கம்போல நடந்து வர்றான் எங்க பேராண்டின்னு நம்ம சச்சின், கங்குலி, டிராவிட்டுக்குலாம் கிளிப்பிங்க்ஸ் கட் பண்ணாங்க.  தூள் படத்துல அறிமுகமாகி பாடி, நடிச்ச பரவை முனியம்மாவும் அதுக்கப்புறம் ஒரு பெரிய ரவுண்ட் வந்தாங்க

சொர்ணாக்கா

சொர்ணாக்கா
சொர்ணாக்கா

அதுவரை இருந்த தமிழ் சினிமா வழக்கப்படி ஒண்ணு ஆண் வில்லன்னா டேய்னு அருவாள தூக்கிக்கிட்டு கத்திக்கிட்டு சுத்திக்கிட்டிருப்பாங்க, அதுவே வில்லின்னா அவனை கொல்லுங்கடா, அந்த குடும்பத்தை நாசம் பண்ணுங்கடானு ஆட்களை ஏவிவிடுற ஆளா இருப்பாங்க ஆனா முதல்முறையா தூள் படத்துலதான் எதுவா இருந்தாலும் களத்துல இறங்கி, தன் கையால தானே சம்பவம் செய்ற டெரர் பெண் ரவுடியா சொர்ணாக்கா அசத்தியிருப்பாங்க. அந்த கேரக்டருக்கு தெலுங்கு நடிகை தெலங்கானா சகுந்தலாவோட உருவமும் உடல் மொழியும் தெலுங்கு வாடை அடிக்கும் அவரோட தமிழ்ப்பேச்சும் அவ்வளவு பொருத்தமா இருந்துச்சு. இன்னைக்கும் நம்ம ரியல் லைஃப்ல டெரரரான பெண்களை குறிக்கணும்னா அந்தம்மா சரியான சொர்ணாக்காப்பான்னு சொல்ற அளவுக்கு  இன்னும் அந்த கேரக்டரோட தாக்கம் இருக்குங்கிறதுதான் எதார்த்தம். இதுல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா ‘தூள்’ படம் தெலுங்குல ரவி தேஜா நடிச்சு ‘வீடே’ அப்படிங்கிற பேர்ல ரீமேக் ஆச்சு. தெலுங்குலயும் தமிழ்ல நடிச்ச தெலங்கான சகுந்தலா நடிச்சிருக்காங்க ஆனா அதுல வில்லியா இல்ல, தமிழ்ல பரவை முனியம்மா நடிச்ச பாட்டி ரோல்ல நடிச்சிருந்தாங்க.

Also Read – செல்வராகவன் படங்கள்ல நம்மதான் ஹீரோ… ஏன் தெரியுமா?

பசுபதி

சொர்ணாக்கா தம்பி ஆதி கேரக்டர்ல தோற்றத்திலேயே மிரட்டலா பசுபதி மிரட்டியிருப்பார். ‘ஈய்.. இன்னா’ என அவர் அசல் சென்னை மொழி பேசி டெரர் வில்லத்தனம் காட்டியது அப்போதைய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேச்சாக இருந்துச்சு. தூள் தெலுங்கு ரீமேக்லயும் பசுபதியே அந்த ரோல்ல ரீப்ளேஸ் பண்ணி அசத்தியிருந்தார்னா பாத்துக்கோங்களேன்.

இப்படியான பல பெருமைகளைக் கொண்ட ‘தூள்’ படம் வெளியாகி 19 வருசங்கள் ஆச்சு. இன்னைக்கும் இந்தப் படத்தை டிவியில போட்டா டி.ஆர்.பி எகிறிக்கிட்டுதான் இருக்கு. பின்னாடி பல பேட்டிகள்ள விஜய், நான் மிஸ் பண்ணதுக்காக ரொம்ப ஃபீல் பண்ண படம்னு சொல்லியிருக்கார். அவரோட ஃபேன்ஸுக்க்கு மட்டுமில்ல எந்த ஹீரோவோட ஃபேனா இருந்தாலும் அவங்களுக்கு ‘தூள்’ படம் நிச்சயம் பிடிக்கும். அதிலும் குறிப்பா 90’ஸ் கிட்ஸுக்கு ரொம்பவே மனசுக்கு நெருக்கமான படம் இந்த ‘தூள்’.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top