சிங்கத்துக்கு வாலா.. எலிக்கு தலையா..? ஆர்.ஜே. பாலாஜி ஜெயிச்ச கதை 

ஆர்.ஜே பாலாஜி சின்ன வயசுல இருந்து ஒரு மிகப்பெரிய ரஜினி ஃபேன். ஆனா தன்னோட வாழ்க்கைல ரஜினிகூட போட்டோ எடுக்கக்கூடாதுனு நினைச்சிட்டு இருந்தாரு. அதுக்கு ஒரு காரணம் இருந்தது. பல வருசம் கழிச்சு ஒரு விழாவுல ரஜினியை நேருக்கு நேர் சந்திக்குற வாய்ப்பு கிடைக்குது. அப்போ நடந்த ஒரு சம்பவம் ஆர்.ஜே பாலாஜியோட வாழ்க்கைல மறக்க முடியாததா மாறுது. அது என்ன சம்பவம்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி… யார் இந்த ஆர்.ஜே பாலாஜி? இன்னைக்கு யூ-டியூப்ல ட்ரெண்டிங்கா இருக்குற பல விஷயங்களை ரேடியோ காலத்துலயே பண்ணிருக்காரு பாலாஜி. அது என்ன? அதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறீங்க!

RJ Balaji
RJ Balaji

சென்னைல பிறந்த ஆர்.பாலாஜியோட குடும்பமே சினிமா ரசிகர்கள்தான். எக்ஸாம் கிளம்பிட்டு இருக்குற பையனை கட் அடிச்சுட்டு வா விருமாண்டி படத்துக்கு போகலாம்னு சொன்னது அவரோட ஃப்ரெண்ட்ஸ் இல்ல. ஆர்.ஜே பாலாஜியோட அம்மா. அந்தளவுக்கு சினிமா ரசிகர் ஃபேமிலி. இதனாலயோ என்னமோ 12 வது ஃபெயிலாகிடுறாரு. கூட படிச்ச ஃப்ரென்ட்ஸ்லாம் காலேஜ்க்கு போயிட்டதால இவரோட செட்டு யாரா இருந்தாங்கன்னா அந்த ஏரியாவுல இருந்த கார்பெண்டர், டெய்லர் இவங்கதான். ஒரு காலேஜூக்கு ஃப்ரெண்டோட சேர்ந்து ஏதோ வேலைக்கு போயிருந்தப்போ சுத்தி இவரோட வயசுல இருந்த பொண்ணுங்க காலேஜ் படிச்சுட்டு இருந்ததை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டிருக்காரு. காலேஜ் படிச்சாகணும்னு சொல்லி 12வது எழுதி பாஸ் ஆகி, யூ.ஜி, பி.ஜினு படிக்குறாரு.

ஃபைனல் இயர் படிக்கும்போது ரேடியோ மிர்ச்சி சேனல்ல ஆடிசன் வருது. அப்ளை பண்றாரு. அதுக்கு வந்த Auto-reply மெயிலை வச்சே செலக்ட் ஆனதா நினைச்சுக்குறாரு. காலேஜ்லயும் ஆர்.ஜே ஆகிட்டேனு சொல்லிட்டாரு. ஆடிசன்ல இவரை இண்டர்வியூ எடுத்தது சரவணன்-மீனாட்சி செந்தில், இவர் சேர்ந்த அதே நாள்ல சேர்ந்தவர் மா.கா.பா ஆனந்த். கோயம்புத்தூர் ரேடியோ மிர்ச்சில வேலைக்கு சேருறாரு. மாதம் 10 ஆயிரம் சம்பளம் அண்ணா சாலையை விலைக்கு வாங்கலாம்னு நினைச்சுட்டு இருந்தவருக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்துல கல்யாணம் நடக்குது. இவரோட மனைவி காலேஜ் டைம்ல இருந்து ஃப்ரெண்டா இருந்தவங்க. மனைவி சென்னைல வேலை பார்த்துட்டு இருந்ததால இவரும் சென்னைக்கு வர்றாரு. இங்க ரெண்டு எஃப்.எம்ல வேலை கிடைக்குது. ஒண்ணு 60 ஆயிரம் சம்பளம். இன்னொன்னு பிக் எஃப்.எம்ல 30 ஆயிரம் சம்பளம். இவரு சம்பளம் பாதியா இருந்தாலும் பரவாயில்லைனு பிக் எஃப்.எம்ல சேருறாரு. அங்க அவர் பண்ண ஒரு விஷயம்தான் ஒரே நாள்ல இண்டர்நெட் சென்சேஷன் ஆகுது. ஒரே நாள்ல வைரல் ஆகுறாரு.

RJ Balaji
RJ Balaji

இன்னைக்கு எவ்வளவோ சேனல்ஸ் பிராங்க் பண்ணலாம். ஆனா அதுக்கெல்லாம் முன்னோடி ஆர்.ஜே.பாலாஜி பண்ணின க்ராஸ்டாக். யாருக்காவது கால் பண்ணி பிராங்க் கால் பண்ற இந்த ஷோ அப்போ எஃப்.எம்ல பரபரப்பா போகுது. அந்த டீம்ல இருந்த யாரோ ஒருத்தர் ஒரு ஐடியா சொல்றாங்க. இதெல்லாம் நெட்ல போடுங்க. சவுண்ட் க்ளவுடுனு ஒண்ணு இருக்கு, அதுல போட்டு ஃபேஸ்புக்ல போட்டா நிறைய பேர் கேட்பாங்கனு ஐடியா கொடுக்குறாங்க. ஆர்.ஜே.பாலாஜியும் அதை ட்ரை பண்றாரு. போட்ட கொஞ்ச நேரத்துலயே 1000 பேர் கேக்குறாங்க. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் வியூஸ் கூடிட்டே போகுது. மறுநாள் காலைக்குள்ள 10 ஆயிரம் வியூஸ் வந்தா எல்லாருக்கும் ட்ரீட் வைக்கிறேனு பாலாஜி சொல்றாரு. பார்த்தா ஒரே நாள்ல 40 ஆயிரம் பேர் கேக்குறாங்க. ஒரு லட்சம், 5 லட்சம்னு ஒவ்வொரு எபிசோடுக்கும் வியூஸ் குவிஞ்சு வைரல் ஆகுறாரு ஆர்.ஜே பாலாஜி. கிராஸ்டாக் ஹிட்டுக்கப்பறம் இன்னொரு ஷோ பண்றாரு. அதுவும் வைரல் ஆகுது. ஆனா அது வேற சில பிரச்னைகளையும் இழுத்துட்டு வருது.

ப்ளூ சட்டை மாறன், இட்ஸ் பிராசாந்த்துக்கும் முன்னோடி பாலாஜிதான். அப்போவே 120 ரூவானு ஒரு ஷோ பண்ணி சினிமா விமர்சனம் பண்றாரு. கடல், முகமூடி மாதிரி படங்களை நல்லா இல்லைனா நல்லா இல்லைனு அடிச்சு சொன்ன அந்த விமர்சனத்தை மக்கள் ரசிச்சாலும் சினிமா சர்க்கிள்ல இருந்து பயங்கரமான எதிர்ப்பு வருது. விஷால்ல இருந்து ஜீவா வரைக்கும் ஆக்டர்ஸ்லாம் இதை பண்ணாதீங்கனு ட்வீட் பண்றாங்க.  தயாரிப்பாளர்கள் தரப்புல இருந்து போன் பண்ணி எங்க படத்தை விமர்சிக்காதீங்கனு ரெக்ஸ்வஸ்ட் பண்றாங்க. சமயங்கள்ல மிரட்டலும் வருது. ஒரு கட்டத்துக்கு அப்பறம் இது நிறைய பிரச்னைகளை ரேடியோவுக்கும் இவருக்கும் கொடுக்க அந்த ஷோவை நிறுத்துறாரு. அப்போதான் இயக்குநர் சுந்தர் சி கிட்ட இருந்து ஒரு கால் வருது. அந்த கால் இவரை அடுத்த இடத்துக்கு எடுத்துட்டு போகுது.

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தோட கதையை எழுதி முடிச்ச சுந்தர் சி அது எப்படி இருக்குனு படிச்சு பார்த்து ஓபினியன் சொல்றதுக்கு பாலாஜியை கூப்பிடுறாரு. இவரும் படிச்சுட்டு இவரோட சஜசனை சொல்றாரு. அப்போ சுந்தர் சிக்கு ஒரு ஐடியா வந்து அந்த படத்துல பாலாஜியை நடிக்கச் சொல்றாரு. ரேடியோல 2 வருசம் வேலை பாக்குற சம்பளம் சினிமால 10 நாள்ல கிடைக்குதேனு ஓகே சொல்றாரு. ஆனா முதல் நாள் ஷூட்டிங்ல பதட்டமாவே இருக்காரு. செமயா சொதப்புறாரு. நமக்கு நடிக்குறது செட் ஆகாதோனு வருத்தப்படுறாரு. அப்போ இன்னொரு சீனியர் நடிகர் திக்கித் திணறி நடிச்சிட்டு இருந்ததைப் பார்த்துட்டு இவங்கள்லாம் நடிக்குறாங்க நம்மாள நடிக்க முடியாதானு தைரியமா நடிக்க ஆரம்பிக்குறாரு. முதல்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சு அப்படியே ஹீரோவாகி, டைரக்டரான வரலாறெல்லாம் நமக்கே தெரியும்.

சினிமால மட்டும் கருத்து சொல்லாம ஜல்லிக்கட்டு மாதிரி சமூகத்துல நடக்குற பிரச்னைகளுக்கும் கருத்து சொல்ல ஆரம்பிக்குறாரு குறிப்பா கிரண்பேடிகூட அவர் பண்ணின விவாதம் வைரல் ஆகுது. இது அவருக்கு வேற விதமான பாப்புலாரிட்டியைக் கொடுக்குது. வாழ்க்கைலயே மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும் கொடுக்குது.

RJ Balaji
RJ Balaji

சின்ன வயசுல இருந்து ஆர்.ஜே பாலாஜி ரஜினி ஃபேன். மீடியாவுக்கு வந்தப்பறம் ஒரு முடிவு பண்றாரு. ஒரு நார்மல் ஃபேன் மாதிரி ரஜினியை போய் பார்க்குறதோ அவரோட ஒரு போட்டோ எடுத்துக்குறதோ பண்ணக்கூடாது. நான் ரஜினியோ போட்டோ எடுக்குறப்போ அவருக்கு ஆர்.ஜே. பாலாஜினா யாருனு தெரிஞ்சிருக்கணும். அப்படி ஒரு உயரத்துக்கு போயிட்டுதான் போட்டோ எடுக்கணும்னு நினைக்கிறாரு. சில வருசங்களுக்கு முன்னாடி ஒரு அவார்டு மேடைல ரஜினியை சந்திக்குற வாய்ப்பு கிடைக்குது. அப்போ இவரைப் பார்த்த ரஜினியே ‘அடடே ஆர்.ஜே பாலாஜி எப்படி இருக்கீங்க.. கிரண்பேடிகிட்ட சூப்பரா பேசுனீங்க’ என்று பாராட்டி கை கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி அந்த தருணத்தில ரஜினியோட போட்டோ எடுத்துக்குறாரு. இதைத் தன்னோட வாழ்க்கைல மறக்க முடியாத நிகழ்வா சொல்றாரு ஆர்.ஜே. பாலாஜி.

12-வது பெயிலாகி, ஆர்.ஜேவா ஆரம்பிச்சு, நடிகராகி, டைரக்டராகி, இன்னைக்கு அவர் சொன்னா நிறைய பசங்க கேட்குறாங்கன்றளவுக்கு சமூகத்துல நல்ல பெயரை  சம்பாதிச்சிருக்காரு ஆர்.ஜே பாலாஜி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? விக்ரம், இந்தியன் 2 இரண்டு கமல் படத்துலயும் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனா மாட்டேன்னு சொல்லிட்டாரு. பல வருசத்துக்கு முன்னாடி 60 ஆயிரம் சம்பளம் வேணாம்னு 30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தப்போ சொன்ன அதே காரணம்தான் கமல் படம் வேணாம்னு சொன்னதுக்கும் சொல்றாரு. அது என்னன்னா அங்கிள், ஆன்ட்டி, டேய் பச்ச சட்டை.. எல்லாருக்கும் ஆர்.ஜே பாலாஜி சொல்றது இதுதான்.

‘சிங்கத்துக்கு வாலா இருக்குறதைவிட எலிக்கு தலையா இருக்கணும்’

Also Read – ரஹ்மானின் நம்பிக்கைக்குத் தேசிய விருதைப் பரிசளித்த நரேஷ் ஐயர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top