தமிழ் சினிமாவின் `Evergreen Movie’ `தில்லு முல்லு’… 4 காரணங்கள்!

கே.பாலச்சந்தர் – ரஜினி கூட்டணியில் 1981-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் `தில்லு முல்லு’. தமிழ் சினிமாவில் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்த பாலச்சந்தர், தில்லு முல்லு மூலம் அதுவரை ரசிகர்கள் பார்க்காத ரஜினியின் இன்னொரு முகத்தைக் காட்டியிருப்பார். ரஜினியோட கரியர்லயே ரொம்ப முக்கியமான படமான தில்லு முல்லு என்னிக்குமே எவர்கிரீன் படம்தான்… அதுக்கான 4 காரணங்களைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

கோபமான இளைஞனாக, நீதிக்குப் போராடும் நாயகனாகவே அதுவரை திரையில் தோன்றி வந்த ரஜினியிடம், உன்னை வைத்து காமெடி படம் எடுக்கப் போகிறேன் என கே.பாலச்சந்தர் சொன்னப்ப அவரோட ரியாக்‌ஷன் என்ன தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க… ரஜினி என்ன சொன்னாருங்கிறதை நானே சொல்றேன்.

தில்லு முல்லு 1981-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடிச்சது. படத்துல ரஜினியோட காமெடி செமையா வொர்க் அவுட் ஆகியிருந்தது. தேங்காய் சீனிவாசன் படத்தோட ரெண்டாவது ஹீரோனே சொல்லலாம். சரி தில்லு முல்லு படம் ஏன் எவர்கிரீன் படம்?

Thillu Mullu
Thillu Mullu

Perfect ஃபீல்குட் மூவி

ஃபீல் குட் மூவி எல்லாருக்குமே புடிக்கும்தானே… ஃபீல் குட் மூவிக்கான ஃபார்முலா ஒரு Unsolved Puzzle மாதிரிதான். ஆனால், சில எலெமெண்ட்ஸ் எல்லாமே கண்டிப்பா இருக்கணும். அதுல ஃபர்ஸ்ட் பாயிண்ட் காமெடி. அப்படியே கொஞ்சம் ரொமான்ஸ், ரியாலிட்டி டச்னு சில எலமெண்ட்ஸ் இருந்தே ஆகணும். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா தில்லு முல்லு படத்துல இது எல்லாமே இருக்கும். கதை ரொம்ப சிம்பிள்தான்… வேலைக்காக பொய் சொல்லும் ஒரு இளைஞன், அந்தப் பொய்யைக் காப்பாற்ற எப்படியெல்லாம் அடுத்தடுத்து பொய் சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படுகிறது. அந்த நெருக்கடியான நிலைகளை எப்படியெல்லாம் சமாளித்தார் என்பதுதான் கதை. அதை அருமையாகச் செய்து நம்மை சிரிப்பூட்டியிருப்பார் சூப்பர் ஸ்டார்.

இன்றும் பொருந்தும் சூழல்

தில்லு முல்லு படம் ரிலீஸானது 1981ம் ஆண்டில்… நாற்பது ஆண்டுகள் கடந்தும் படத்தில் பேசப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற விஷயங்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியவை. கஷ்டப்பட்டு ஒரு வேலையில் நீங்கள் சேர்ந்துவிட்டாலும், உங்கள் Boss-ஐ சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்; மனசுக்குப் பிடிச்ச ஃபுட்பால் மேட்ச் பாக்க எப்படியெல்லாம் பொய் சொல்லி சமாளிக்க வேண்டும் என்று அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரனாக ரஜினி பெர்ஃபாமன்ஸ்ல மிரட்டியிருப்பார். உங்களோட லவ்வர் நீங்க ஸ்டைலிஷான ஆளா இருக்கணும்னு நினைக்க, உங்க மொதலாளியோ உங்களை ஓல்டு ஸ்கூல் ஸ்டைல்ல இருக்கணும்னு நினைப்பார். இப்படி, இருதலைக் கொள்ளி எறும்பா இந்திரன் – சந்திரன்னு ரெண்டு சைடும் ஒரே நேரத்துல நின்னு கெத்து காட்டியிருப்பார். ரஜினி மீசையை எடுத்துட்டு நடிச்ச முதல் படம் இதுதான். அத்தோடு டைட்டில் கார்டுக்கு முன்னாடியே ரஜினி கொடுக்குற இன்ட்ரோ அவ்வளவு ஆஸமா இருக்கும். எல்லாத்துக்கும் மேல Humorously yours-னு கே.பாலச்சந்தர் பேர் போடும்போதே நம்மளை ஒரு சிரிப்பு ரோலர் கோஸ்டர் ரைடுக்குத் தயார் பண்ணிடுவாங்க.

நடிப்பும் டைமிங் டயலாக்குகளும்

1979ல வெளியான கோல்மால்-ங்குற பாலிவுட் படத்தோட ரீமேக்தான் தில்லு முல்லு. ஆனா, அதுல தன்னோட ஸ்டைல்ல ஸ்கிரீன்பிளேல சின்ன சின்ன மேஜிக் பண்ணிருப்பார் விசு. அதேமாதிரி, டயலாக்லயும் தெறிக்க விட்டிருப்பார் விசு. இதுக்கு ஸ்டார்ட்டிங்ல வர்ற அந்த இன்டர்வியூ சீனை பெஸ்ட் எக்ஸாம்பிளா சொல்லலாம். `ழனவும் வராது, ஷானாவும் வராது.. பேர் மட்டும் சுப்ரமணிய பாரதி’… `சட்டைல என்ன பொம்ம… பூனை சார்… அதுல என்ன பெருமை’னு டைமிங்கா காமெடி வந்து விழுந்துட்டே இருக்கும். அதுவும், வர்ற Candidate ஒருத்தரை மேனேஜரை இண்டர்வியூ எடுக்கச் சொன்னதும், அவர் கேக்குற கேள்விகள் எல்லாமே அடடே ரகம். இதெல்லாம் கேள்வியானு தேங்காய் சீனிவாசன் கேட்டதும் மேனேஜர் சொல்ற பதிலும் அல்டிங்க. ரஜினி, தேங்காய் சீனிவாசன், மாதவி, பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி, பைரவினு சின்ன கேஸ்டிங்தான்னாலும் அவங்க எல்லாருமே நடிப்புல பின்னியெடுத்திருப்பாங்க. அந்த இண்டர்வியூ சீன்லாம் தமிழ் சினிமாவோட எவர்கிரீன் சம்பவம். அதேமாதிரிதான், ரஜினி மீசையை எடுக்குற சீனும்… ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களும் வயிறு வலிக்க சிரிச்ச சீனா அது இருக்கும்.

ரெஃப்ரெஷ்ஷிங்கான மியூஸிக்

படத்தோட இன்னொரு முக்கியமான பலம்னா அது மியூஸிக்தான். அந்த அளவுக்கு பேக்ரவுண்ட் மியூசிக்லயும் பாடல்கள்லயும் எம்.எஸ்.வி மிரட்டியிருப்பாரு… டைட்டில் கார்டே தில்லு முல்லு பாட்டோட பேக்ரவுண்ட்லதான் வரும். அதுவும் தில்லு முல்லு தீம் மியூசிக்லாம் வேற லெவல்ல இருக்கும். ரொம்ப துள்ளலா பல இடங்கள்ல பேக்ரவுண்ட்ல மியூசிக் நம்ம எனர்ஜியைத் தூண்டிட்டே இருக்கும். நீங்க டல்லா இருந்தாலும் தில்லு முல்லு மியூசிக் உங்க மூடையே மாத்திடும். இன்னொரு பக்கம் பார்த்தா ராகங்கள் பதினாறு… உருவான வரலாறு பாடல் மியூசிக் லவ்வர்களோட ஆல்டைம் ஃபேவரைட். அந்தப் பாட்டை எப்போ கேட்டாலும் அவ்ளோ ரெஃப்ரெஷ்ஷிங்கா இருக்கும். அதுதான் எம்.எஸ்.வியோட மேஜிக்.

1975ல அபூர்வ ராகங்கள் மூலமா ரஜினியை கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்துனாரு. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கோபக்கார இளைஞராகவே பல கேரக்டர்களில் நடிச்சுட்டு வந்த ரஜினிக்கு ஒருநாள் கே.பி சார் போன் பண்ணிருக்காரு. “ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒண்ணு ரீசண்டா பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ. இது ஒரு காமெடி சப்ஜெக்ட். அடுத்த வாரம் ஷூட்டிங். ரெடியா இரு’ என்று சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு எதிர்முனையில் இருந்த ரஜினி கொஞ்சம் பதறிட்டாராம். “சார், என்னை வச்சு காமெடி படமா? எனக்கு காமெடியெல்லாம் வராது சார்’னு பதில் சொல்லியிருக்கார். அதற்கு பாலச்சந்தர் சற்று கோபமாகவே,“யோவ், நீ மொதல்ல ஷூட்டிங் வாயா. உனக்கு காமெடி வருமா வராதான்னு நான் சொல்றேன்’னு சொல்லிட்டு போனை வைச்சுட்டாராம். அப்படி ரஜினிக்கே நம்பிக்கை இல்லாமல் ஷூட்டிங் வந்து, டைரக்டர் சொல்வது போல் நடித்து, பின்பு தனக்கும் காமெடி வரும் என்று அந்த படத்தின் மிக பெரிய வெற்றியை பார்த்து தெரிந்து கொண்டார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top