தமிழ் சீரியல்களில் டாப் 10 ஹீரோயின்ஸ் இவங்கதான்!

டாப் சீரியல் ஹீரோயின்ஸ்ல சோசியல் மீடியால ஆக்டிவா இருக்கிறவங்களை அனலைஸ் பண்ணோம். எங்க டேட்டா அனலிஸ்ட் அவங்களை ரேங்கிங் பண்றதுக்கு ஒரு லாஜிக் யூஸ் பண்ணாரு. ஒருத்தருக்கு இருக்கிற ஃபாலோயர்ஸ்… அவங்களோட போஸ்ட்களுக்கு வர்ற ரெஸ்பான்ஸ், வீடியோ வியூஸ் இதெல்லாம் வைச்சு அந்த ரேங்கிங் எடுத்திருக்காரு. அந்த டாப் 10 ரேங்கிங்கைத்தான் நான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

முதல்ல பத்தாவது இடத்துல இருக்கிறது யார்னு பார்ப்போம்….

டெல்னா டேவிஸ்

Delna Davis
Delna Davis

வரிசையில் கடைசியாக இருப்பது புது வரவு அன்பே வா டெல்னா டேவிஸ் – குரங்கு பொம்மை படம் மூலம் அறிமுகமாகி இப்போ அன்பே வா சீரியலோட ராணியா இருக்காங்க. சன் குடும்பம் நடத்திய விருது விழாவில் பெஸ்ட் மருமகள் அவார்ட் மற்றும் Romantic Couple அவார்ட் வாங்கி இருந்தாங்க.

யாரடி நீ மோகினி நக்ஷத்திரா

Nakshathra
Nakshathra

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி 1,200 எபிசோட்களை கடந்த யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற நட்சத்திரா இப்போ கலர்ஸ் டிவியில் வரும் வள்ளி திருமணம் சீரியலில் பிஸியா இருக்காங்க. இவங்களுக்கு ரிசன்டாதான் கல்யாணமும் ஆச்சு. நட்சத்திரா அப்படியே பார்க்க நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரிதான் இருப்பாங்க, அவங்களே இதை சொல்லியும் இருக்காங்க.

செம்பருத்தி ஷபானா

Shabana
Shabana

நிறைய காதலர்களும், கணவன் – மனைவியும் ரசிச்சு பார்த்த செம்பருத்தி சீரியலில் ஃபேமஸ் ஆனா ஷபானா, பசங்க மனசுலையும் நின்னுடாங்க. எப்போடா கல்யாணம் ஆகும்னு எதிர்பார்த்துட்டு இருந்த சமயத்துல திடீரென்று ஒருநாள் வீடியோ போட்டு எனக்கு கல்யாணம்னு சொன்னதும், அவங்க ரசிகர்கள் எல்லாருக்கும் பெரிய ஷாக்கே அடிச்சுதுன்னு சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

Hema
Hema

ஹேமாஸ் டைரி-னு ஒரு யூ டியூப் சேனல்ல இவங்க பண்ற அத்தனை அலப்பறையும் போஸ்ட் பண்ணிடுவாங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அப்படினாதான் இவங்க ரசிகர்களுக்கு அடையாளமே தெரியும், அந்த அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஃபேமஸ். ஹேமா இப்போ ஒரு VJ-வாவும் விஜய் டிவியில் அசத்திட்டு வர்றாங்க.

பாரதி கண்ணம்மா ஃபாரினா

Farina
Farina

சீரியலில் வர கதாநாயகியாக இல்லாம ஒரு வெறித்தனமா வில்லியா பாரதி கண்ணம்மா சீரியலில் பயம் காட்டி இருப்பாங்க. அந்த அளவுக்கு எரிச்சல் மூட்டும் ஒரு கேரக்டர்தான் வெண்பா. ஃபேமிலி, சீரியல்னு பிஸியா இருக்க ஃபாரினா அவங்க பையனோட முதல் பிறந்தநாளை துபாயில் கொண்டாடி இருக்காங்க.

கயல் சைத்ரா ரெட்டி

Chaitra Reddy
Chaitra Reddy

ரொம்ப சவாலாக இருக்கும் இந்த போட்டியில் சன் டிவி சீரியலில் பிடிக்க முடியாத இடத்தில் நின்னுடாங்க. இதுக்காக சன் டிவி-யில் நடக்கும் அவார்ட் ஷோவில் பெஸ்ட் ஹீரோயின் அவர்டும் வாங்கியாச்சு, வேற என்ன வேணும் இதை விட கயலுக்கு. இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர் பட்டாளத்தை வெச்சு சும்மா தெறிக்க விட்டுட்டு இருக்காங்க. தல அஜித்தோட வலிமை படத்திலும் வாய்ப்பு கிடைச்சு நடிச்சாச்சு. ஆகா சைத்ராதான் டாப் ஹீரோயின்னு அவங்க வேலைகளிலே காமிச்சுடாங்க.

பாக்கியலட்சுமி ரேஷ்மா

Reshma
Reshma

இன்ஸ்டாகிராமில் இவங்களுக்கு 1 மில்லியன் Followers இருக்காங்க. தமிழ் ஹீரோயின்ஸ்-க்கு கூட இவ்ளோ இருக்காது போல. லேட்டஸ்ட் ரீல் வீடியோ, அதிரடி போட்டோ ஷூட், பிட்னஸ்னு கலக்கிட்டு இருக்காங்க. அடிக்கடி இவங்க பையனை பத்தியும் பேசுவாங்க. ஏன்னா ரேஷ்மாக்கு விவாகரத்து ஆகி இப்போ அவங்க பையனோட தனியா தான் இருக்காங்க. ஒரு ஸ்ட்ராங் அம்மாவும் கூட.

முல்லை காவியா

Kavya
Kavya

VJ சித்து-க்கு சரிசமமா ஒரு கேரக்டரை சீரியலுக்குள்ள கொண்டு வரணும்னு முடிவு பண்ணி நம்ப காவ்யாவை முல்லையாக நடிக்க வெச்சாங்க. ஆனா இப்போ காவ்யா-வும் சீரியலை விட்டு விலகிட்டாங்க, பரத் நடிக்கும் மிரள் படத்தில் நடிச்சு தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து இருக்காங்க, ரிசெண்ட்டா தான் காவ்யா அவங்க Architect ஆகிட்டேன்னு எல்லாருக்கும் ஒரு surprise கொடுத்தாங்க.

ஈரமான ரோஜா கேபி

விஜய் டிவி ஜோடி ஷோவின் செல்லப்பிள்ளை கேபி, சில தமிழ் படங்களில் நடிச்சுட்டு திரும்ப ஒரு கேப் எடுத்து இப்போ ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு அழகான ரோல் பிளே பண்ணிட்டு இருக்காங்க. என்ன தான் நடிக்க வந்தாலும் அப்போ அப்போ டான்ஸ் ஆடுறதையும் நிறுத்தாம ரீல் வீடியோவா போட்டு மிரட்டுறாங்க.

ஆல்யா மனசா

Alya manasa

இந்த லிஸ்ட்ல யாரு நம்பர் ஒன்னுன்னு பார்த்த ராஜா ராணி ஆல்யா மனசா. ஆல்யா எல்லாருக்கும் ராஜா ராணி சீரியல் மூலம் ஃபேவரைட் கேரக்டராக அறிமுகமாகி இப்போ ஒரு க்யூட் அம்மாவா அவங்க யூடியூப் சேனல்ல வேற லெவல் பண்ணிட்டு இருக்காங்க. மொத்தமா யூடியூப்ல இவங்களுக்கு 1 மில்லியன் Subscribers இருக்காங்க, Fan base அதிகம் இருக்க ஆல்யா எது போட்டாலும் அங்க டிரெண்ட் தான்.

இத்தோட நமக்கும் டாப்10-ல யார்யார் இருக்காங்கணு ஒரு பட்டியல் கிடைச்சுருக்கு. வம்பு தும்பு பண்ணாம இப்போ சொன்னதுலயே யாரை உங்களுக்கு பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

https://fb.watch/h8dBdCmLJe/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top