கீழபுடி, குந்தாணி, வாலவாடி.. இப்படிலாமா ஊர் பேரு வைப்பீங்க?

கீழபுடி, கொக்கரகுண்டி, குந்தாணி – என்னடா கெட்டவார்த்தைலாம் பேச ஆரம்பிச்சட்டனு தான நினைக்கிறீங்க. பதட்டப்படாத்தீங்க, இதெல்லாம் கெட்டவார்த்தை இல்ல, நான் சொல்றதுலாம் ஊர்களோட . யாராவது நம்ம ஊர் பேரைக் கேட்டா, பெருமையோட சொல்லுவோம். ஆனால், சிலரை எவ்வளவு அடிச்சுக் கேட்டாலும் ஊர் பேரை சொல்லமாட்டாங்க. ஏன்னா, பேரு அப்படி. நான் சொன்ன ஊர்லாம் எங்க இருக்கு?, இந்த மாதிரி வேற என்ன ஊர்லாம் இருக்குனுதான், பார்க்கப்போறோம். 

வித்தியாச ஊர் பேர் மீம்

குந்தாணி பாளையம் – வடிவேலு படங்கள்ல யாராவது திட்டணும்னா இந்த வார்த்தையை பயன்படுத்துவாரு. அப்படிதான் நமக்கு இந்த பேர் பரிட்சயம். ஆனால், கரூர் பக்கத்துல இப்படி ஊர் ஒண்ணு இருக்கு. அப்படியே, குந்தாணினா என்னனு தேடிப்பார்த்தா, வாய் அகன்ற பாத்திரம், உரல்னு அர்த்தமாம். கரூர்ல இருந்து நேரா கும்பக்கோணம் பக்கம் வந்தா, அங்கயும் இந்த மாதிரி சில ஊர் பெயர்களை வைச்சிருக்காங்க. கொட்டையூர் அப்டினு அங்க ஊர் இருக்கு. அதுலயும் ரெண்டு இருக்கு. மேலகொட்டையூர், கீழகொட்டையூர். ஆமணக்கு செடி இங்க அதிகமா வளர்ந்துருக்கு. அதுக்கு கொட்டை முத்துனு பெயர் ஒண்ணு இருந்துருக்கு. அங்க இருக்குற கோயில்ல ஆமணக்கு எண்ணெய் வைச்சுதான் அதிகமாக விளக்குலாம் போடுவாங்களாம். அதைப் பார்த்து திருநாவுக்கரசு பாடல்லாம் பாடியிருக்காரு. அவர் பாடல்ல இந்த ஊரை கொட்டையூர்னு சொல்லியிருக்காரு. அப்படியே பெயர் வந்ததாகச் சொல்லப்படுது. திருப்பூர்ல இருந்து பண்ணாரி போற வழில கொக்கரகுண்டினு ஊர் ஒண்ணு இருக்கு. எப்படி இந்தப் பெயர் வந்துச்சுனு தேடிப் பார்த்தேன். சொல்ற அளவுக்கு டீசண்டா எதுவும் இல்லை. இந்த ஊர்களைப் பத்தி சோஷியல் மீடியால போஸ்ட் போட்ட எல்லாருமே, அடேய், எப்படிடா இந்த ஊருக்கு கண்டெக்டர்கிட்ட டிக்கெட் எடுப்பீங்கனுலாம் கதறி வைச்சிருக்காங்க. அதனால, உங்களுக்கு வரலாறு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க. வீடியோ முழுக்கவே கிடைச்ச, தெரிஞ்ச வரலாறை மட்டும் சொல்றேன். நான் விட்டதை நீங்களே கமெண்ட்ல சொல்லுங்க. 

மேட்டூர் பக்கத்துல இருக்க பேருலாம் அல்டிமேட். பண்ணவாடி, பூலாம்பட்டினுலா பெயர் வைச்சிருக்காங்க. பூலாம்பட்டியை லோக்கல்ல ‘குட்டி ஆழப்புழா’னு சொல்லுவாங்க. பூலாச்செடிகள் அதிகமாக இருந்ததால் அதை பூலாம்பட்டி சொல்றாங்களாம். அதே மாதிரி பண்ணவாடி ஊர் பறவை காதலர்களுக்கு பெயர் போன ஊராம். அதே மேட்டூர்ல கண்ணாம் பூச்சினும் ஊர் இருக்கு. குஞ்சாண்டியூர்னும் அந்தப் பக்கம் பெயர் இருக்கு. அப்படியே கோயம்புத்தூர் பக்கம் வந்தோம்னா பெரியபூலாம்பட்டினு இன்னொரு ஊரு இருக்கு. எத்தனைடா? உடுமலைல வாளவாடினு பெயர் இருக்கு. ஆனால், அந்த ஊரோட முதல் பெயர் அம்மணசமுத்திரம். அங்க இருந்த கோவில் கடவுள் பெயரை பெயரா வைச்சிருக்காங்க. அப்புறம் நாளடைவில் இந்த ஊரை ரெண்டா பிரிச்சு பெரிய வாளவாடி, சின்ன வாளவாடினு பிரிச்சிருக்காங்க. கெட்டவாடினு அந்தப்பக்கம் இன்னொரு ஊரு இருக்கு. சர்ப்ரைஸ் என்னனா, பூளவாடினும் அந்தப் பகுதில ஊர் பெயர் ஒண்ணு இருக்கு. உடுமலை பக்கத்துலயே ஜிலேபி நாயக்கன் பாளையம்னும் பெயர் கொண்ட ஊர் ஒண்ணு இருக்கு. திண்டுக்கல்ல தங்கச்சி அம்மா பட்டினு கிராமம் ஒண்ணு இருக்கு. ரொம்பவே ஃபேமஸான் ஏரியா இது. ஆந்திரால கீழபுடி அப்டினு பெயர் இருக்கு. அந்த ஊரைவிட ஊரோட போர்டு ரொம்ப ஃபேமஸ். அந்த வழியா டிராவல் பண்ற எல்லாருமே, ஒண்ணு போர்டு கம்பிக்கு கீழ புடிச்சு ஃபோட்டோ போடுவாங்க. இல்லைனா, சென்ஸார்ல கட் பண்ற மாதிரி ஃபோட்டோ எடுத்து போடுவாங்க. இதென்ன பிரமாதம் வாடி, போடினுலாம்கூட ஊர்கள் இருக்கு.  

Also Read : இந்த ஊர்களையெல்லாம் தெரியுமா… தமிழகத்தின் 8 விநோத கிராமங்கள்!

மாட்டுத்தாவணி எல்லாருக்கும் தெரிஞ்ச பெயர்தான். ஆனால், வெயிட் வாட்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்து அதுவும் ஃபன்னாதான் இருக்கும். மாடுகளை இங்க முன்னாடிலாம் விற்பனை செய்வாங்களாம். அந்த சந்தையை தாவளம்னு சொல்லுவாங்களாம். அதுதான் காலப்போக்குல மருவி மாட்டுத்தாவ்ணி ஆயிடுச்சுனு சொல்றாங்க. திருவண்ணாமலையைச் சுற்றியும் நிறைய வினோதமான பெயர்கள் கொண்ட கிராமங்கள் இருக்கு. ஆணாய் பிறந்தான், திடீர் குப்பம், நல்லான் பிள்ளை பெற்றான், வெங்காய வேலூர் இதெல்லாம் அங்க உள்ள ஊர் பெயர்கள்தான். தூத்துக்குடி எப்போதும் வென்றான்னு ஒரு ஊர் இருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் அந்த ஊர்ல நடந்த எல்லா சேவல் சண்டைலயும் வெற்றி பெற்றதால, அவர்  நினைவா அந்தப் பெயரை வைச்சிட்டாங்கனு சொல்றாங்க. அதேமாதிரி, மூவரை வென்றான்னும் ஊர் ஒண்ணு அந்தப் பகுதில இருக்கு. யாராவது மூணு பேரை அங்க ஆட்சி செய்த மன்னன் வென்றதால இந்தப் பெயரை வைச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். நீங்களும் அப்படிதான் நினைக்கிறீங்க? கன்னியாகுமரில எக்கச்சக்கமா காமெடியான ஊர் பெயர்கள் இருக்கு. குமரில நிறைய விளைகள் இருக்கு. அதாவது தோப்பு. கோயம்புத்தூர் பக்கம்லாம் பாளையம்னு முடியுற மாதிரி, கன்னியாகுமரி விளைனு நிறைய ஊர்கள் முடியும். குஞ்சன் விளை, கண்டார விளை, பண்டார விளை, அம்மாண்டி விளை, களியக்காவிளை இப்படி ஏகப்பட்ட விளைகள் அங்க இருக்கு. அதேமாதிரி எறும்புக்காடு, அழகிய மண்டபம், சிதறால், வேப்பமூடு, பத்துக்காணி, பூதப்பாண்டி, பெருஞ்சாணி, இப்படியும் நிறைய வினோதமான பெயர்கள் இருக்கு.

கோயம்புத்தூர்ல சர்க்கிள்லதான் அள்ள அள்ள வந்துட்டே இருக்கு. மரம்புடுங்கிகவுண்டன்புதூர்னு கிராமம் இருக்கு. ரொம்ப வித்தியாசமான பெயரா இந்த லிஸ்ட்ல இருந்துச்சு. திருவாரூர்ல நாளில் ஒன்றுனு கிராமம் ஒண்ணு இருக்கு. கிருஷ்ணகிரி பகுதில உலகம்னு கிராமம் இருக்கு. புதினா, கொத்தமல்லிலாம் அதிகளவில் இங்க கிடைக்குது. கோவில்பட்டில மானங்காத்தான்னு ஊர் இருக்கு. அந்தப் பெயர்ல சாமி ஒண்ணு இருக்கு. அதே அந்த ஊரோட பெயராகூட மாறியிருக்கலாம். மதுரைல திருப்பரங்குன்றம் பக்கத்துல கூத்தியார்குண்டுனு ஊர் இருக்கு. இந்தப் பெயர் ஏன் வந்திருக்கும்னு எல்லாராலயும் கெஸ் பண்ண முடியும். ஆனால், நீங்கலாம் நினைக்கிறது உண்மையானு பெயர் வைச்சவருக்குதா தெரியும். நீலகிரில காட்டேரினு ஒரு ஏரியா ஃபேமஸ். அங்க இருக்குற அருவிதான் ஹைலைட். சோழவரம் பக்கத்துல பழைய எருமை வெட்டி பாளையம், புதிய எருமைவெட்டி பாளையம்னு ரெண்டு ஊர் இருக்கு. திருவள்ளூர்ல சேலைனு கிராமம் இருக்கு. திருவாரூர்ல கண் கொடுத்த வனிதம்னு ஊர் இருக்கு. குழந்தைக்கு இறைவன் அருளால கண் கிடைக்குது, அதுக்கு தாய் தன்னோட கண்ணை காணிக்கையா கொடுக்கும்போது இறைவன் தடுத்து காட்சியளிச்சதால அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்ததா சொல்லப்படுது. திருநெல்வேலில பிச்சைத் தலைவன் பட்டினு ஒரு ஊரே இருக்கு. கோட்டை, பட்டி, பாளையம், விளை, பட்டுனு முடியுற நிறைய ஊர் பெயர்கள் வினோதமாகதான் இருக்கும். இந்த லிஸ்ட்டை சொல்ல ஆரம்பிச்சா சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம். கடல் மாதிரி அவ்வளவு இருக்கு. 

நம்மளோட சோஷியல் மீடியா பேஜ்ல “நீங்க கேள்விபட்ட வித்தியாசமான ஊர் பெயர்களை கமெண்டில் சொல்லுங்க”னு கொஞ்சம் நாள் முன்னாடி கேட்ருந்தோம். அதுக்கு எக்கச்சக்கமான கமெண்ட்ஸ் வந்தது. அதுல இண்ட்ரஸ்டிங்கா இருந்த ஊர்களோட பெயர்களை செலக்ட் பண்ணிதான் சொல்லிருக்கேன். இந்த லிஸ்ட்ல இதையும் சேர்த்து நீ சொல்லிருக்கலாம்பானு நீங்க ஃபீல் பண்ற பெயர்களையும் அதற்கான காரணத்தையும் மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top