மாரி செல்வராஜ்

RJ பாலாஜி சரி… மாரி செல்வராஜ் தப்பா..?

சார், காமடிக்கு தங்கம் தென்னரசு தான் இருக்காரு, சரியா work out ஆகல
வடிவேலுவ வர சொல்லுங்க,
உருக உருக பாட்டு எழுதனும், வைரமுத்துவை வர சொல்லுங்க,
Back ground music போடனும், அப்படியே ஏ.ஆர்.ரகுமானையும் வர சொல்லுங்க,
எல்லாத்தவிட முக்கியம், உடனே கீர்த்தி சுரேஷை வர சொல்லுங்க urgent

இந்த மாதிரி மாரி செல்வராஜை கலாய்ச்சு மீம்கள் சோசியல் மீடியாக்கள்ல சுத்திட்டிருக்கு. இதுல சோகம் என்னன்னா, மூத்த பத்திரிக்கையாளர் வகையறாக்கள்லாம் கூட மாரி செல்வராஜ் என்ன அரசியல் பண்றாரா, அமைச்சரா? விளம்பரம் தேடுறாரானு பேசவும் எழுதவும் ஆரம்பிச்சாங்க. இதுல சோகம் என்னனா?, வலது சாரிகளுக்கு ஆதரவா வலு சேர்க்கிற மாதிரித்தான் இந்த விமர்சனங்களை பார்க்க வேண்டியிருக்கு. இதுக்குள்ள ஆர்.ஜே பாலாஜி எங்க வந்தார், அவர் பண்ணா சரி, மாரி பண்ணா தப்பானுதான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

  பொதுவா ஒரு ஊர்ல இயற்கை பேரிடர் நடக்குறப்போ, அதைப் பார்வையிட அமைச்சர், கலெக்டர்லாம் போறது வழக்கம். ஆனா மாரி செல்வராஜ் ஏன் போனார்?… ஏன்னா அவரோட ஊரே வெள்ளத்துல மூழ்கியிருக்கு. அவர் சென்னையில இருந்தப்போவே அரசுக்கு கோரிக்கை வைக்க ஆரம்பிச்சதுல இருந்து கைலியை கட்டிட்டு களத்துக்குப் போய் இறங்குனது வரைக்கும் களத்துல செயல்படுறார். இப்போ உதயநிதி அந்த ஏரியாவுக்கு போனப்போ அவர் அவங்க ஏரியாவை பத்தி விளக்கி சொல்லியிருக்கார். இப்போ ஒரு கிராமம் பாதிக்கப்படுறப்போ, அந்த கிராம பிரதிநிதியா ஒருத்தர் வந்து அங்க பேசுவாங்க. அப்படிக் கூட மாரி செல்வராஜ் பேசியிருக்கலாம். இப்போ மாரி செல்வராஜ் அங்க இல்லைன்னா, அடுத்து இவங்கள்லாம் சொந்த ஊர் பாதிக்கப்பட்டிருக்கு, மாரி செல்வராஜ் எங்கனு பேசியிருப்பாங்க.

மாரி செல்வராஜ்க்கு ஆப்போசிட்டா பேசுறவங்க வைக்கிற வாதம் என்னன்னா? அவர் சென்னையில இருந்த ஏரியாவுக்குனு ஏதும் பண்ணலியே. மொத்த சென்னையே தண்ணிக்குள்ள இருந்தப்போ, அவர் குடும்பத்தைக் காப்பாத்துறதே பெரிய விஷயமா இருந்திருக்கும். இப்போ குடும்பத்தை சேஃபான இடத்துல விட்டுட்டு, ஊர் மக்களுக்காக களத்துல இறங்கியிருக்கார். அங்க போய்ட்டு குழந்தையைக் காப்பாத்துற நாடக வீடியோவும் எடுக்கலை, தண்ணியில்லாத இடத்துல நடந்துபோயும் போட்டோ எடுக்கலை. எந்த மீடியாவுக்கும் நான் வந்திருக்கேன் வந்து கவர் பண்ணிக்கோங்கனும் சொல்லலை. ஆனா நாம் தமிழர் சார்புல ஒரு போஸ்ட் போட்டு வெள்ளத்தைப் பார்வையிட அண்ணன் சீமான் வர்றார். அதனால டிரெண்ட் முன்னறிவிப்பு ஹேஸ்டேக்கை டிரெண்ட் பண்ணுங்கனு பப்ளிக்காவே பப்ளிசிட்டி தேடுற வேலைலாம் நடந்துகிட்டிருக்கு. இதுபோக குழந்தை காப்பாத்துற மாதிரி ஷூட்லாம் நடக்குற அட்ராசிட்டியெல்லாம் அவங்க பார்வைக்கே வராது போல.

மாரி செல்வராஜ் வரலைன்னா ஏன்ப்பா உன் ஊரே தத்தளிக்குதே, நீ எங்கய்யா இருக்க, வர மாட்டியா, காப்பாத்த மாட்டியா.. சமூக நீதி பேசுற, உன் மக்களுக்காக கூட வர மாட்டியானுதான் பேசியிருக்கணும். ஆனா உதவி செய்யப்போனவரை ஏன் வந்த?னு கேட்பது என்ன மதிரி கருத்துனு தெரியலை.

இது எல்லாத்துக்கும் மேல கட்சியில இருக்கார, அமைச்சரா இருக்காரானு கேள்வி கேட்குறவங்களுக்கு ஒரே கேள்வி இதெல்லாம் இருந்தாத்தான் மக்களுக்கு உதவி செய்யணும்னு ஏதாவது விதி இருக்கா?.. இல்ல சினிமாக்காரன் உதவி செய்யக் கூடாதுனு ஏதும் விதி இருக்கா?, காஞ்ச மாடு கம்பங் கொள்ளையில புகுந்த மாதிரி எதையாவது எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறவங்களுக்கு, மாரி செல்வராஜ் போட்டோ சிக்க, அவரை வைச்சு விவாதத்தை கிளப்புறாங்க. கருத்து சுதந்திரம் அவசியமானதுதான், ஆனா அதுக்கு சரியான கருத்தை முன்வைச்சு பேசணும்.

2015-ம் வருஷத்துல சென்னை வெள்ளத்துல ஆர்.ஜே பாலாஜி, சித்தார்த்ல ஆரம்பிச்சு நிறைய பேர் களத்துக்கு வந்து மக்களுக்கு உதவி பண்ணாங்க. அப்போ அந்த ஏரியாவுல சினிமாக்காரங்க ஏன் விளம்பரம் தேடுறாங்கனு யாரும் சொல்லலை. பேரிடர் வர்றப்போ இவங்கெல்லாம் உதவி பண்றது அவங்களோட மனிதாபிமானத்தைக் காட்டுது. இந்த விஷயத்துல மொத்த வலதுசாரிகளும், கருத்துப் புலிகளும் மாரிசெல்வராஜ்க்கு ஆப்போசிட்டா நிற்கிறதும் ஒரு அரசியலுக்காகத்தான்ங்குறதுதான் நிஜம். இத்தனை நாட்களாக பாதுகாத்து வந்த தேவேந்திர குல வேளாளர் ஓட்டுக்கள்லாம் தி.மு.கவுக்கு போயிடுமோனு அப்படிங்குற எண்ணம்தான் இத்தனை வன்மத்துக்கும் காரணமா இருக்குமோனு நினைக்கத்தோணுது.

Also Read – மொக்கை படங்களும் ஹிட்டாகும்… மேலூர் கணேஷ் தியேட்டரின் ‘ஜில்ஜில்’ சீக்ரெட்!

ஒரு போட்டோவுல உதயநிதி பக்கத்துல மாரிசெல்வராஜ் நின்னுட்டிருந்ததைக் கேள்வி கேட்டவங்க, ஏன் ஜெயலலிதாவோட எல்லோ போட்டோவுலயும் சசிகலா நிற்கிறாங்கனு கேள்விகளும் சமூகவலைத்தளங்கள்ல முன்வைக்கப்படுது. நாம இப்போ அவ்ளோலாம் போக வேணாம். மாரி செல்வராஜ் ஒரு சினிமாக்காரனா எங்கயுமே முன்னுரிமை எடுத்து வேலை செய்யலை. அவர் ஊருக்கு அமைச்சர்ர வந்தப்போ பேசியிருக்கார். தன்மீது பொழிந்த வன்ம மழைக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி ட்வீட் ஒன்னு போட்டதுதான் ஹேட்டர்ஸ்க்கு கொடுத்த நெத்தியடினு கூட சொல்லலாம்.

“என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” இதன்மூலமா, மாரி செல்வராஜ் களத்துல நின்னு தான் யார்னு காட்டிட்டார். அதேபோல வன்ம மழை பொழிஞ்சவங்களையும் யார்னு காட்டியிருக்கார்.

மாரி செல்வராஜ் மக்களுக்கு உதவி செஞ்சது பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top