ஒரு பாட்டு சீக்கிரமே உங்களுக்கு போர் அடிக்குதா; இதான் காரணம்!

ஒரு நல்ல பாடலின் ஆயுள்காலம் என சில ஆண்டுகளுக்குள் அதை அடக்க முடியாது. எத்தனையோ பாடல்கள் காலங்கள் தாண்டி, தலைமுறைகள் தாண்டி இன்றும் நம் காதுகளிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்திய நல்ல பாடல்கள் எல்லாம் ஒரு சில நாள்களிலேயோ, வாரங்களிலேயோ நமக்கு போர் அடித்துவிடுவதைப் பார்க்க முடிகிறது. அதற்கு என்ன காரணங்கள் என யோசிக்கும் போது தோற்றியதுதான் இவைகள்.

ஒளியும் ஒலியும் துவங்கி மியூசிக் சேனல்களுக்கு போன் செய்து பாடல்கள் கேட்ட காலகட்டம் வரைக்கும், நமக்கு பிடித்த பாடல்களைப் பார்ப்பதற்காகவே நாம் நேரம் ஒதுக்கினோம். அந்த சமயங்களில் ஒரு நாளில் ஒரு முறை நமக்கு பிடித்தப் பாடல்களை பார்ப்பதே கடினமாகவே இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் டிஜிட்டல் யுகத்தில் நாம் எப்போது நினைத்தாலும் அந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் முடியும் என்பதால் ஒரு நாளில் பல முறைகள் நமக்கு பிடித்தப் பாடல்களை லூப்பில் கேட்பதுதான், அந்தப் பாடல் நமக்கு சீக்கிரம் போர் அடிப்பதற்கான முதன்மை காரணம்.

விஜய்யின் புதுப்பட பாடல் ஒன்று ரிலீஸானால் அதற்கு அஜித் வெர்ஷன் என்று ஒரு வீடியோ, அஜித்தின் பாடலுக்கு விஜய் வெர்ஷன் என்று ஒரு வீடியோ, எந்த ஹீரோவின் பாடல் என்றாலும் அதற்கு வடிவேலு வெர்ஷன் என்று ஒரு வீடியோ என நம் மீம் கிரியேட்டர்கள் புதிதாக வரும் பாடலை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து வீடியோ வெளியிடுகிறார்கள். நமக்கு பிடித்த பாடலை மியூசிக் ஆப்ஸில் கேட்பதையும், யூடியூப்பில் பார்ப்பதையும் சேர்த்து இந்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் என நம் கண்கள் எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பாடல்களையே பார்க்கிறது. இது போதாது என டிக் டாக் வெறியர்கள் தற்போது இன்ஸ்டா ரீல்ஸை குத்தகைக்கு எடுத்ததால், அந்தப் பக்கமும் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து மேலும் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க; பாடல்களும் சரியான இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. சினிமா பாடல்கள் ஒருபுறம் தொடர்ந்து ரிலீஸாக; ‘என்ஜாய் எஞ்சாமி’, ‘குட்டி பட்டாஸ்’, ‘அஸ்கு மாரோ’ என இண்டிபெண்டண்ட் ஆல்பம் பாடல்கள் ஒரு புறம் என தொடர்ந்து பாடல்கள் வெளியாவதும், நமது ஃபேவரைட் பாடல்கள் மாறிக்கொண்டே இருப்பதற்கான காரணம்தான்.

Also Read – சந்தோஷ் நாராயணன் ரசிகர்களே… நீங்க அவருக்கு எவ்ளோ பெரிய ஃபேன்னு கண்டுபிடிக்கலாமா!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top