நாடோடிகள் பாணியில் நடந்த பார்த்திபன் – சீதா திருமணம்!

முன்னாள் தம்பதிகள் நடிகர் பார்த்திபன் – சீதா அவங்களோட கல்யாணத்தைப் பத்தி இண்டஸ்ட்ரியில கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். சீதாவுக்கு கல்யாணம்ங்குறது சீதாவுக்கே அன்னைக்கு காலையில்தான் தெரியும்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா?.. சீதா அப்பாவுக்கு பார்த்திபனைப் பிடிக்கலை, சீதாவுக்கு பாடிகார்ட்களை அப்பா நியமிச்சது, பார்த்திபனும் சீதாவும் சந்திச்சுக்கவே கூடாதுனு அவங்களோட அப்பா நினைச்சது, நண்பர்கள் ஒன்றுகூடி பார்த்திபன் கல்யாணத்தை நடத்தி வச்சதுனு ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தது. குறிப்பிட்டு சொல்லணும்னா, பார்த்திபன் சீதா கல்யாணம்ங்குறது ஒரு பரபரப்பான சினிமா கதை போலவே இருக்கும். அந்த சம்பவங்களோட தொகுப்பைத்தான் இந்த வீடியோவுல நாம பார்க்க போறோம்.

புதிய பாதையும், காதல் பாதையும்!

புதிய பாதை’ படத்துல பல நடிகைகளிடம் கதை சொல்லி கடைசியாக சீதாவிடமும் புதிய பாதை கதையை சொல்லியிருக்கிறார், பார்த்திபன். அப்போது அறிமுக இயக்குநர்ங்குறதால தன் அப்பாகிட்டஅந்தப் படத்துல நடிக்க விருப்பமில்லை’னு அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. சீதாவோட அப்பாதான் `நல்ல கதை.. இந்தப் படம் உனக்குப் பெரிய புகழைக் கொடுக்கும்’னு சொல்லி நடிக்க வெச்சார். ஆனா, இயக்குநரா, நடிகரா பார்த்திபனோட திறமையைப் பார்த்து, அறிமுக இயக்குநர்னு குறைச்சு மதிப்பிட்டது தப்புன்னு பின்னால உணர்ந்திருக்காங்க சீதா. படம் நல்லபடியா வளர்ந்தது, அதோட காதலும் சேர்ந்தே வளர்ந்தது. பாதி படம் முடிஞ்சப்போவே ரெண்டுபேருக்கும் காதல் மலர ஆரம்பிச்சது. ரெண்டுபேர் மனசுக்குள்ளயும் காதல் இருந்த நேரத்தில் முக்கியமான ஒரு சம்பவம் நடந்தது.

புதிய பாதை
புதிய பாதை

போன்காலால் வந்த பிரச்னை!

 ரெண்டுபேருக்கும் காதல் மலர்ந்திருந்த நேரம்.. பார்த்திபன் சீதாவிடம் "அந்த மூணு வார்த்தையை சொல்லிடுங்க"னு விடாம கேட்க, ஒரு பத்து நாள் கழிச்சு, "ஐ லவ் யூ"நு பார்த்திபன்கிட்ட போன்ல சொல்றாங்க சீதா. அங்கதான் ஒரு சின்ன விஷயத்தை சீதா மறந்துட்டாங்க. வீட்டுக்கு ஒரே போன்லைன் மட்டும்தான். ஒரு லைன்லயே ரெண்டுபோன்கள் இருந்தது. அப்போ இவங்க பார்த்திபன்கிட்ட ஐ லவ் யூ சொன்னதை அப்பா கேட்டுகிட்டு இருந்திருக்கார். சீதா போன் பேசி  முடிச்ச உடனேயே வீட்ல பயங்கரமான சண்டை ஆரம்பிச்சிருக்கு.

நல்ல கதைன்னு படத்துல நடிக்க மட்டும்தானே சொன்னேன். உன்னை யார் லவ் பண்ண சொன்னா?’ன்னு அவங்க அப்பா சீதாவை திட்டியிருக்கார்.முதல்லயே நான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன்ல. என் பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்போ இந்தப் பிரச்னை வந்திருக்குமா?’ன்னு பதிலுக்கு சண்டை போட்டிருக்காங்க சீதா. புதிய பாதை தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பார்த்திபனுக்கு வாங்கிக் கொடுத்தது.

திடீர் கடிதத்தால் பரபரப்பான பார்த்திபன்!

பார்த்திபன் நினைப்பிலிருந்து சீதா கவனத்தைத் திசை திருப்பணும்னு, அவங்கப்பா நிறைய படங்களில் நடிக்க கமிட் பண்ணினார். ஆனாலும் படத்துல முழுசா கவனம் செலுத்த முடியாம கஷ்டப்பட்டாங்க சீதா. அதனால சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஒரு கடிதம் எழுதுறாங்க. அந்தக் கடிதத்தில் இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. “என்னை பெத்தவங்ககிட்ட பலமுறை பேசிட்டீங்க. இனிமேல் பேசுறதுல அர்த்தம் இல்லை. ஒரு நாளைக்கு 3 படங்களுக்கு மேல் கமிட் பண்ணி என் விருப்பம் இல்லாமல் நடிக்க வைக்கின்ற கொடுமை நடக்கிறது. இந்த விஷயத்தை இனியும் நீங்கள் தள்ளிப்போட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” இப்படிக்கு அம்முலு. இதைப் படிச்ச உடனே பரபரப்பானார் பார்த்திபன்.

ஆனால், சீதாவுக்கோ பயங்கரமான கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தது. சீதா எங்கே போனாலும் அங்கே நான்கு பேர் காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்தான் பார்த்திபன் எப்படியாவது சீதாவை திருமணம் செய்துவிட வேண்டும் என முடிவு செய்தார்.

1989-ம் ஆண்டு 10-ம் தேதி முழுக்க பார்த்திபன் வீட்டில் மிகப்பெரிய பரபரப்பான சூழல் நிலவியது. பல இளைஞர்கள் உள்ளே போவதும், வெளியே போவதுமாக இருந்தனர். அப்போது நாளை காலை சீதாவை திருமணம் செய்வது என பார்த்திபன் முடிவு எடுத்து திட்டங்களை வகுக்கிறார். ஆனால், இவர் முடிவு எடுத்துவிட்டாரே தவிர, சீதாவுக்கு அது கடைசி வரைக்கும் தெரிவிக்க முடியலை. சீதாவுக்கு எப்படி சொல்றதுனு எல்லோரும் யோசிச்சுக்கிட்டிருந்தப்போ, சீதாவின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருத்தர் பார்த்திபன் வீட்டுக்கு வர்றார். அவரைப் பார்த்த உடனே பார்த்திபனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். பார்த்திபன் அவரிடம் “சீதாவோட வீட்டுக்கு போன் பண்ணி சீதாவைப் பத்தி விசாரிங்க. அவங்க புரோகிராமை தெரிஞ்சுக்கங்க”னு கேட்க அவரும் போன் பண்ணி விசாரிக்க, சீதா வெளியில் சென்றுள்ளார், திரும்பி வர 10 மணி ஆகும் என்று பதில் கிடைத்திருக்கிறது. மறுநாள் காலை திருமணம் நடந்தாக வேண்டும். இல்லையெனில் அன்று மாலை அவர் தெலுங்கு சினிமாவின் படப்பிடிப்புக்காக ஹைதாராபாத் போயிடுவார்.

இப்போது கூட இருந்த நண்பர், “மறுநாள் காலை ARS கார்டனில் சீதா ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்” எனத் தகவல் தெரிவிக்க, சரி அங்கேயே போய் சீதாவிடம் பேசி கல்யாணத்துக்கு அழைத்து வந்துவிடலாம் என ஒருமனதாக முடிவெடுக்கிறார் பார்த்திபன். அப்போது குறுக்கிட்ட நண்பர், “ஷூட்டிங் பப்ளிக் ப்ளேஸ். அங்க ஏதாவது பிரச்னை ஆகிட்டா, ஊருக்கே தெரிஞ்சிடும். அது நல்லா இருக்காது. அதனால் வேறு ஏதாவது திட்டம் போடலாம்” என்றார். அதுவும் சரியெனபட கதை டிஸ்கஷன் போல எல்லோரும் மறுபடியும் ஆலோசனை நடத்தினர். அப்போது இன்னொரு நண்பர் மூலம் முக்கியமான தகவல் கிடைத்தது. மறுநாள் காலை 6 மணிமுதல் 9 மணி வரைக்கும் சீதா தெலுங்கு சினிமா ஒன்றில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் கிடைத்தது. இப்போது இன்னொரு நண்பர், “எப்படியும் 6 மணிக்கு ஷூட்டிங், 5.30 மணிக்கெல்லாம் சீதா கிளம்பிடுவாங்க. அப்போ அவங்க வீட்டுப் பக்கத்துலயே வச்சு சீதாவை கார்ல கூட்டிட்டு வந்துடலாம்” என்றார். எல்லோருக்கும் சரியெனபட நண்பர்களிடம் “முதல்ல சீதா வீட்டுப்பக்கம் இருக்குற நிலவரத்தைப் பார்த்துட்டு வாங்க” எனச் சொல்லி அனுப்பி வைக்கிறார். நண்பர்களும் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த சீதாவின் வீட்டை பார்வையிட்டு நிலவரத்தை தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் பார்த்திபனிடம், “வீட்டைச் சுற்றி நிறைய கார்கள் இருக்கின்றன. அதனால் நம் கார்கள் நிறுத்தினால் யாருக்கும் சந்தாகம் வராது” என்று சொல்ல, காலையில் சீதாவை அழைத்து வர முடிவானது.

நாடோடிகள் பாணியில் திருமணம்!

இடம் – சிந்தாதிரிப்பேட்டை காலை 4.30 மணி.. நடிகை சீதா சினிமா சூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே மூன்று கார்களில் பார்த்திபன் நண்பர்கள் தயாராக இருக்கின்றனர். நண்பர்கள் விஷயத்தைச் சொல்லி சீதாவைக் காருக்குள் ஏற்றிக் கொள்ள வண்டி வேகமெடுத்தது. அதே நேரம் திருமண வீட்டில் பார்த்திபன் வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கிறார். மணி 6 ஆச்சு, 6.30 மணி ஆச்சு ஆனால் சீதா வரவில்லை. இப்போது பரபரப்பு தொற்றிக் கொள்ள, பார்த்திபனுக்கு ஏக டென்சன். அப்போது சீதா வந்தாச்சு என்ற குரல் கேட்க வீட்டுக்குள் வந்தார் சீதா. படப்பிடிப்புக்கு கிளம்பியதால் சுடிதாரில் வந்த சீதா பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு மணமகளானார். நண்பர்கள் புடைசூழ திருமணம் இனிதாக நடந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்கே போனார் சீதாவின் அப்பா. பார்த்திபனின் நண்பனிடம் போன் செய்து “உன் நண்பன் மிக விபரீதமான முடிவுகள்லாம் சந்திக்க வேண்டி இருக்கும். ஜாக்கிரதையாக இருக்க சொல்லு” என்று மிரட்டல்விடுத்தார், அவர். இப்படித்தான் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் திருமணம் நடந்தது. அன்னைக்கு காலக்கட்டத்துல பார்த்திபன் – சீதா திருமணம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படி உங்க நியாபகத்துக்கு வர்ற சினிமா தம்பதிகளோட பெயர்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top