Relationship

பெருந்தொற்று கால சவால்… ரிலேஷன்ஷிப்பில் லவ்வை உயிர்ப்போடு வைத்திருக்க 4 டிப்ஸ்!

உலக அளவில் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல நாடுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து வருவதால் பொருளாதார அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த பாதிப்புகள் ரிலேஷன்ஷிப் இடையேயும் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ரிலேஷன்ஷிப்களுக்கு இடையேயான பிரச்னைகளை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்றும் உளவியல் ஆலோசகர்கள் தங்களது ஐடியாக்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், உங்களது ரிலேஷன்ஷிப்பை இந்த பெருந்தொற்று காலத்தில் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான சில டிப்ஸ்களைதான் இந்தக் கட்டுரையின் வழியாக தெரிந்து கொள்ளப்போகிறோம்!

ரிலேஷன்ஷிப்
ரிலேஷன்ஷிப்

* கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒருவர் பதற்றமாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், கொரோனா தொடர்பான ஊரடங்கால் பலரும் வேலையிழப்பை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், நிதி நெருக்கடிகளை சந்திக்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் மரணம் அடைகின்றனர் அல்லது உடல்நலக்குறைவால் பாதிப்படைகின்றனர். வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு இருப்பதால் மன அழுத்தங்கள் அதிகமாகும். வொர்க் ஃபரம் ஹோம் என்பதால் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். இதனால், பதற்றம் ஏற்படும். இப்படி பதற்றமாவதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இப்படியான சூழ்நிலைகளை ஒவ்வொருவரும் கடந்து வந்தே ஆக வேண்டும். எனவே, அப்படியான சூழ்நிலைகளில் உங்களை நீங்களே அமைதிப்படுத்தி பதற்றத்தைக் குறைக்க வேண்டும். நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபர் அதிகமாக பதற்றங்களை அனுபவித்தால் அவரது பதற்றத்தைக் குறைக்க நீங்கள் அவரின் உடன் இருந்து உதவ வேண்டும். நிலைமையை எளிதாகக் கடக்க ஒருவருக்கொருவர் நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆறுதலாக இருக்க வேண்டும். இதற்கு சுவாசப் பயிற்சிகள், யோகா அல்லது தியானம் போன்றவற்றை கடைபிடிக்கலாம்.

* மிகவும் கடினமான இந்தக் காலத்தில் உங்களது மனைவி / கணவன் அல்லது ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபர் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் போராட்டங்களைக் குறித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுடன் என்ன பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து பேசுங்கள். நீங்கள் தவறுதலாகப் பேசும் சிறிய வார்த்தைகள்கூட கடினமான இந்த நேரங்களில் உங்களது ரிலேஷன்ஷிப்பில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செயல்களை மேற்கொள்ளும்போது மிகவும் சென்சிட்டிவாக இருங்கள்.

* ரிலேஷன்ஷிப்பில் மிகவும் ஃப்ளக்ஸிபிளாக இருங்கள். உங்களது கடினமான வேலை நேரங்களிலும் உங்களது இணையுடன் நேரத்தை செலவழிக்கப் பழகிக் கொள்ளுங்கள். உங்களது ரிலேஷன்ஷிப் வாழ்க்கையில் கடுமையான விதிகளைப் போட்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டாம். வாழ்க்கை போகிற போக்கில் உங்களது காதல் வாழ்க்கையையும் நகர்த்திச் செல்லுங்கள். அதேநேரம், கிரியேட்டிவாகவும் உங்களது துணையை அப்ரோச் செய்யுங்கள்.

* உங்களது ரிலேஷன்ஷிப்பில் கடந்த காலங்களில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். கடந்த காலங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட நல்ல பொழுதுகளைப் பற்றி பேசுங்கள். உங்களுக்கு பிடித்த படங்களை ஒன்றாகப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களை ஒன்றாகக் கேளுங்கள். நீங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஏன் முடிவு செய்தீர்கள் அல்லது கணவன் மனைவியாக வாழ முடிவு செய்தீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த விஷயங்கள் எல்லாம் இந்த கடினமான நேரத்தைக் கடந்து வர மிகவும்  உதவி செய்யும் விஷயமாக இருக்கும்.  

Also Read : கே.பாலச்சந்தர்.. 4 கேள்விகள்.. 4 பதில்கள்.. ஒரு சம்பவம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top