`உன்னைப் பார்த்த பின்பு முதல் ஓ சோனா வரை..!’ – அஜித்தின் 9 எவர்கிரீன் 90ஸ் லவ் சாங்ஸ்..!

தமிழ் சினிமாவில் 1990-களில் சாக்லேட் பாய் ஹீரோனா அஜித்துக்கு முன்வரிசைல முக்கியமான இடம் இருக்கும். அவரோட சாக்லேட் ஹீரோ இமேஜுக்கு அவர் படங்கள்ல இடம்பெற்றிருந்த லவ் சாங்ஸ் பெரிய பங்களிப்பைச் செய்தன என்றே சொல்லலாம். அப்படி அஜித் நடித்த 90ஸ் படங்களில் இடம்பெற்றிருந்த 9 எவர்கிரீன் லவ் சாங்ஸைத்தான் பார்க்கப் போறோம்.

உன்னைப் பார்த்த பின்பு நான் – காதல் மன்னன்

சாக்லெட் பாயாக அஜித் நடித்திருந்த காதல் மன்னன் படம் அவரது கரியரில் முக்கியமான படம். பரத்வாஜ் இசையில் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த, `உன்னைப் பார்த்த பின்பு நான்…’ பாடலுக்கு இன்றும் அஜித் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்டில் நிச்சயம் ஒரு இடம் இருக்கும்.

மீனம்மா – ஆசை

அஜித்துக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் ஆசை. வசந்த் இயக்கிய இந்தப் படத்தின் மீனம்மா பாடல் பலரின் ஃபேவரைட் பாடல். பனி படந்த இமயமலைச் சாரலில் சுவலட்சுமியிடம் அஜித் செய்யும் குறும்பு பெரிதாகப் பேசப்பட்டது. கானா புகழ் இசையமைப்பாளர் தேவா, அஜித்துக்காக மியூசிக்கில் வெரைட்டி விருந்து படைத்திருப்பார்.

காதல் என்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா – அவள் வருவாளா

அவள் வருவாளா படத்தின் காதல் என்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா பாடல் அஜித் – இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் காம்போவில் தெறி ஹிட்டடித்த மெலடி. பாடல் முழுவதுமே சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் அஜித்தும் சிம்ரனும் வெரைட்டி காட்டியிருப்பார்கள். தாலாட்டும் இந்தப் பாடல் நிச்சயம் உங்கள் இரவு நேரங்களை இனிமையாக்கும்.

ஏப்ரல் மாதத்தில் – வாலி

அஜித்துக்காக மியூசிக் டைரக்டர் தேவா கொடுத்த பெப்பியான லவ் சாங் இது. நல்ல பேஸ் சவுண்ட் சிஸ்டத்தில் இந்தப் பாடலை இன்று கேட்டாலும், தேவா எனும் மேஜிக் மேனை உங்களால் புது மாதிரியாக உணர முடியும். எப்போது கேட்டாலும் எனர்ஜி ஏற்றும் இந்தப் பாடலுக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கு பாஸ்..!

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே – உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

அஜித் கேமியோ ரோலில் கலக்கியிருந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் ஃபில் குட் உணர்வு கொடுக்கும் வல்லமை படைத்தது. எஸ்.ஏ.ராஜ்குமார், தனது இசையால் நமது மனங்களை வருடியிருப்பார்.

நிலவைக் கொண்டு வா – வாலி

வாலி படத்தில் தேவா இசையில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு ஹிட் சாங் இது. பாடலின் மெல்லிசை காதுகளுக்கு மட்டுமல்லாது; முன்னிரவில் ஷூட் செய்த லொக்கேஷன்களும் கண்களுக்கு விருந்து படைக்கும்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு – அமர்க்களம்

ஆன் – ஸ்கிரீன் ஜோடியான அஜித் – ஷாலினி நிஜ வாழ்விலும் ஜோடியாகக் காரணமாக அமைந்த படம் சரணின் அமர்க்களம் படம். அதனாலேயே இந்தப் படம் அஜித் – ஷாலினி லைஃபில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. பரத்வாஜ் இசையில் சாக்ஸபோன் இசையோடு தொடங்கும் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு பாடலில் விசில் ஓசை, புல்லாங்குழல், மிருதங்கம் என வெரைட்டி காட்டி அசத்தியிருப்பார் பரத்வாஜ்.

திலோத்தமா – ஆசை

அஜித் – சுவலட்சுமி காம்போவில் ஹிட்டடித்த ஆசை படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. தேவா இசையில் எஸ்.பி.பி – சொர்ணலதா குரலில் இந்தப் பாடல் வெளியான போது இளைஞர் பட்டாளத்தில் ஆல்டைம் பேவரைட் லிஸ்டில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. அதுவும்… எஸ்.பி.பி – சொர்ணலதா குரலில் ஹைபிட்ச்சில் ஒலிக்கும் ஓ….ஓ…ஓ… கோரஸும், கடைசியில் வரும் ஹம்மிங்கும் வேற லெவல் எக்ஸ்பிரீயன்ஸைக் கொடுக்கும்.

ஓ சோனா – வாலி

ஆரம்ப நாட்களில் ஜோதிகாவுக்குத் தமிழ் சினிமாவில் அடையாளம் கொடுத்த பாடல் இது. தேவா, மவுத் ஆர்கனை வைத்து வித்தை காட்டிய பெருமைமிக்கது இந்தப் பாடல். பாடலின் நடுவே வரும் அஜித் – சிம்ரன் கான்வோவும் அதைத் தொடர்ந்து பின்னணியில் ஒலிக்கும் மவுத் ஆர்கன் இசையும் பாட்டோட மிகப்பெரிய ஹைலைட்.

90ஸ் அஜித்தோட எவர் கிரீன் லவ் சாங்ஸ் எதையாவது நாங்க மிஸ் பண்ணிருந்தா கமெண்டில் சொல்லுங்க மக்களே… அதோட உங்களோட ஃபேவரைட் சாங் எதுன்றதையும் மறக்காம பதிவு பண்ணுங்க…!

Also Read – `ஆனந்தம்’ படம் 21 ஆண்டுகளுக்குப் பின்னும் ஏன் கொண்டாடப்படுது… 6 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top