வாடிவாசல்

வாடிவாசல் படத்தின் மாஸ் சீன்.. ஓப்பனிங் சீன்.. இண்டர்வெல் சீன்.. இப்படித்தான் இருக்கும்!

என்னோட லென்த் ஷாட்ல ஒரு காளை மூச்சுவிடுது.. அங்க இருந்து புழுதி பறக்குது… இது எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பாருங்க’னு பாலுமகேந்திரா சார் அடிக்கடி சொல்லுவார். அப்படி விஷூவலைஸ் பண்ணுவார். இதையெல்லாம் கேட்டு கேட்டுதான் நாங்க வளர்ந்தோம். வாடிவாசல் நாவலைப் படமா எடுக்கணும்ங்குறது அவரோட 60 வருஷ கனவு.. அதை நனவாக்கனும்னு நான் நினைக்கிறேன்’ இயக்குநர் வெற்றிமாறன் சொன்னது இது… இது ஒண்ணே போதும் அவரோட வாடிவாசல் படம் எப்படி வரும்னு அதப்பத்தி வேற எதுவும் நான் சொல்லத் தேவையில்லை. தன்னோட குருநாதரோட கனவுப் படத்தை இழைச்சு இழைச்சு செதுக்கிட்டு இருக்கார் வெற்றிமாறன். சூர்யாவோட உழைப்பும் சேர்ந்தா படம் வேற லெவல்ல வரும்.. சரி வாடிவாசல் நாவல் சொல்ற கதை என்ன… படமா வர்றப்போ எப்படியெல்லாம் வரலாம்… அதுல இருக்க மாஸ் மொமண்ட்ஸ்லாம் என்னென்னுதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

தன்னோட அப்பாவான அம்புலியைக் கொன்ன காரிங்குற காளையை எப்படியும் அடக்கியே தீரணும்ங்குற வெறியோட செல்லாயி அம்மன் கோயில் வாடிவாசலுக்கு மச்சான் மருதனோட வர்ற பிச்சி, அந்த காளையை அடக்குனாரா… அதுக்கு முன்னாடியும் பின்னாடியும் என்ன நடந்துச்சுனு ஜல்லிக்கட்டு நுணுக்கங்களோட சொல்ற கதைதான் சி.சு.செல்லப்பாவோட வாடிவாசல்.

வாடிவாசல் - சூர்யா
வாடிவாசல் – சூர்யா

இன்ட்ரோ சீன்

பொதுவா வெற்றிமாறனோட படங்கள்ல அவரோட வாய்ஸ் நேரஷனோடதான் தொடங்கும். ஒரு சின்ன இன்ட்ரோ கொடுத்துட்டு ஜி.வி.பியோட இசை பின்னணியில் ஒலிக்க மெல்ல மெல்ல செல்லாயி அம்மன் கோயில் வாடிவாசலை நமக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பிருக்கு. செல்லாயி அம்மன் கோயில் வாடிவாசல்தான் கதை நிகழ்ற களம். அநேகமா வாடிவாசல்ல இருந்துதான் படத்தோட கதையும் ஆரம்பிக்கும். வாடிவாசல்ல திறந்துவிடப்படுற மாடு, அதுக்குப் பின்னாடி இருக்க மனிதர்கள் பத்தி பேசிட்டு மெல்ல பிச்சி, மருதன், அப்புறம் அவங்ககூட அடிக்கடி வாக்குடுக்குற கிழவனோட டயலாக்குகள் மூலம் திரைக்கதை சூடுபிடிக்கும். ஆரம்பத்துல பிச்சி, அவனோட மச்சான் மருதனிடம் வம்பிழுக்கும் கிழவன் ஒரு கட்டத்தில் அவர்கள் யாரென அடையாளம் கண்டுகொள்வார். அதன்பிறகு அவர்களுக்குத் தனது அனுபவத்தில் இருந்து உதவி வழிகாட்டுவார். கிழவனோட வழிகாட்டுதல்கள் படி பில்லை மற்றும் கொரால் காளைகளை பிச்சி வெற்றிகரமாக அணைந்துவிடுவார். காளைகளின் நிறம், அதன் திமில், கொம்புகளுக்கிடையேயான தூரம் இப்படி காளைகளை எப்படியெல்லாம் அனுமானிக்க வேண்டும் என்பதைக் கிழவன் வாயிலாக சிறிது சிறிதாகக் கற்றுக்கொள்கிறான் வாலிபனான பிச்சி. வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்ல கழுத்தில் தாயத்தோடு இருக்க மாதிரி சூர்யாவோட போட்டோ இருக்கும். அப்படிப் பார்த்தா அது பிச்சியாக இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கு.

இன்டர்வெல் பிளாக்

புது உத்திகளோடு காளைகளை அடக்கும் பிச்சிக்கு ஆதரவு கூடவே, காரி காளையின் ஓனரான ஜமீன்தார் அவனை மேடைக்கு அழைத்து பரிசு கொடுக்கிறார். தனக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அம்புலியின் மகன்தான் பிச்சினு தெரிஞ்சதும் அவருக்கு தூக்கி வாரிப்போடுகிறது. தன்னோட காளையை எந்தக் கொம்பனும் அடக்கிடக் கூடாதுனு காளையோட உரிமையாளர்கள் நினைக்குறதும்… எந்தக் காளையா இருந்தாலும் என்னால அடக்கிட முடியும்னு மாடுபிடி வீரர்கள் நினைக்குறதும் உண்டு. அதுதான் அவங்களுக்குப் பெருமை, தன்மானம் எல்லாமே. இந்த மனப்போராட்டங்களோட காளைக்கும் மனிதனுக்கும் களத்தில் நடக்குற போராட்டமும்தான் ஜல்லிக்கட்டை வீரவிளையாட்டுனு சொல்ல வைக்குது. அப்படி சுத்துவட்டாரத்துல யாராலையும் அடக்க முடியாத காரி காளையோட ஓனரா இருக்கதுதான் ஜமீன்தாரோட பெருமை. ஆனால், அம்புலிக்குப் பிறகு இப்போ வந்துருக்க பிச்சி, காரிக்கு டஃப் பைட் கொடுப்பானோங்குற சந்தேகம் ஜமீனுக்கு வர்ற சீன் மிக்ஸ்டு எமோஷன்களைக் கொடுக்கும். இந்த இடத்துல இன்டர்வெல் பிளாக் அமைய நிறையவே வாய்ப்பிருக்கு.

Also Read – ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!

கிளைமேக்ஸ்

அதுக்குப் பிறகு காரிக்காளையை அடக்க முடியுமானு அவர் சவால் விடுறது அதுக்கு பிச்சி அடக்கமா அதேநேரம் வீரமா சொல்ற பதில்.. அவனோட அப்பா அம்புலிங்குறவர் யாரு… அவரு பண்ண விஷயங்கள் எல்லாம் ஃபிளாஷ்பேக்காக விரியலாம். அம்புலி கேரக்டராவும் சூர்யாவே நடிக்க வாய்ப்பிருப்பதா சொல்றாங்க.
இப்படி ஒரு டிராக்கை செட் பண்ணிட்டு கடைசியா காரியும் பிச்சியும் மோதுற சீன் கிளைமேக்ஸ் பரபரப்பைப் பற்றவைக்கும். காரிக்கும் பிச்சிக்கும் நடக்குற போட்டில, தன்னோட அப்பாவோட மரணத்துக்காக வஞ்சம் தீர்க்க வந்துருக்க பிச்சி மிருகமா மாறணும், அதேமாதிரி மனுஷனோட வஞ்சத்தைப் புரிஞ்சுக்க காரி மனுஷனா மாறணும். காரி காளை கழுத்துல இருக்க மாலை, பரிசுகளை எடுத்து பிச்சி தன்னோட வஞ்சத்தைத் தீர்த்துக்கிட்டு மிருக குணத்துல இருந்து வெளில வருவான். என்னோட பெருமையை நீ காயப்படுத்திட்ட என்பதைப் போல அவனோட கால்ல ஒரு காயத்தை ஏற்படுத்தி காரி காளையும் திருப்தியடையுற மாதிரி கதை போகும். ஆனால், சம்மந்தமே இல்லாம மூணாவது ஆளான ஜமீன் மிருக குணத்துக்குப் போறது மாதிரி கதை முடியும்…

வாடிவாசல் -  வெற்றிமாறன்
வாடிவாசல் – வெற்றிமாறன்

வாடிவாசல் மாஸ் மொமண்டுகள்

வெற்றிமாறன் படங்களுக்கே உரித்த மாஸ் மொமண்டுகள் நிறைய நாம பார்த்திருக்கோம். வாடிவாசல் நாவலைப் பொறுத்தவரை சி.சு.செல்லப்பா பல Goosebumb மொமண்ட்ஸ் கொடுத்திருப்பார்.

  • வாடிவாசலோட ஹீரோ நம்ம காரி காளைதான். நிச்சயம் அந்த காளையோட இண்ட்ரோ செம மாஸா பிளான் பண்ணிருப்பாங்கனு நினைக்கிறேன். பொதுவா வெற்றிமாறன் படங்கள் இருட்டுல இருந்துதான் ஆரம்பிக்கும். அந்தமாதிரி, இந்த தடவை வாடிவாசல் இருட்டுல இருந்து தொடங்கலாம்.
  • அதேமாதிரி, உசிலனூர் அம்புலி அந்த சுத்துவட்டாரத்துலயே மிகப்பெரிய மாடுபிடி வீரர். அவரைப் பத்தின பிளாஷ்ஃபேக் செகண்ட் ஹாஃப்ல வரும்போது அவர் அடக்குன மாடுகள், அங்க நடக்குற சீக்வென்ஸுனு அதுவுமே மிரட்டலா இருக்க வாய்ப்பிருக்கு.
  • அப்பா அம்புலியைப் பழிவாங்குன காரி காளைக்கு முன்னாடி பிச்சி இன்னும் இரண்டு காளைகளை அடக்குவார். அந்த இரண்டு காளைகளும் காரி அளவுக்கு இல்லைனாலும் சாதாரண காளைகள் கிடையாது. அந்தக் காளைகளை அடக்குற சீன் வேற லெவல்ல இருக்கலாம்னு நிச்சயமா சொல்லலாம்.
  • காரி காளையோட ஓனரான பண்ணையார் இரண்டு காளைகளை அடக்குன பிச்சிக்கு பரிசு கொடுப்பார். அப்போதான் அம்புலியோட மகன்தான் பிச்சிங்குற விஷயமே அவருக்குத் தெரிய வரும். இதனால, தன்னோட காரி காளையை அடக்கிடுவானோங்குற ஒரு எண்ணமும், நிச்சயம் இருக்காதுங்குற எண்ணமும் ஒரே நேரத்துல அவருக்கு வந்துபோகும். அந்த மொமண்ட் நாவலோட ஹைலைட்டான மொமண்டுகளில் ஒண்ணு. நிச்சயம் இது படத்துலயும் மாஸா இருக்கும்.
  • படத்தோட அடிநாத கதைக்கு ஒரு டெம்போ ஏத்துற சீனுன்னா அம்புலி, காரி காளையை எதிர்க்கொள்ற சீன். அதுக்கு முன்னாடி எத்தனையோ காளைகளை அடக்கியிருந்தாலும் காரியை அம்புலியால அடக்க முடியாம போய்டும். காயமடைஞ்சு உயிர் இழக்குற தறுவாயிலும் இதைப் புலம்பிக்கொண்டே அவர் சொல்வார். அப்படி, அம்புலியும் காரியும் மீட் பண்ற சீனும் நிச்சயம் ஒரு ஹை மொமண்டா இருக்கும்.
  • வாடிவாசல்ல இருந்து துள்ளிக்கிட்டு வர்ற காளைகளை எந்த எடத்துல எப்படி நின்னு எதிர்க்கொள்ளணும், காளையோட ஒவ்வொரு அசைவையும் எப்படி கண்டுக்கணும்னு பெரிய ஆம்பளையான அந்தக் கிழவர் சொல்ற சீன்கள் ஒவ்வொண்ணும் மாஸ் மாண்டேஜ் ஷாட்ஸா நகரும்னு நம்பலாம்.
  • இறுதியா நம்ம இரண்டு நாயகர்கள் காரியும் பிச்சியும் நேருக்கு நேர் மோதுற சீன், கிளைமேக்ஸ் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும்னே சொல்லலாம். `மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!’ – இப்படிதான் வாடிவாசல் நாவலை சி.சு.செல்லப்பா முடிச்சிருப்பார். யாரோட ரோசம் எப்படி ஜெயிச்சதுனு அவர் சொல்ற விதத்தை வெற்றிமாறன் விஷூவல்ல பார்க்க உங்களை மாதிரியே நாங்களும் மரண வெயிட்டிங் பாஸ்…

வாடிவாசல் நாவல் படிச்சிருக்கீங்களா… அதுல பெரிய மாஸ் மொமண்டுனா நீங்க எதைச் சொல்வீங்க? மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top