TN police

போலீஸ் டி.ஜி.பி, சி.ஓ.பி… யாராக இருந்தாலும், இவருக்குக் கீழ்தான்!

திமுக-வின் புதிய ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்துறை உயர் பதவிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புதிய ஆட்சியில் புதிய டி.ஜி.பி யார் என்பதும், அந்தப் பதவிக்கு இணையாக அதிகாரம் பெற்ற சென்னை காவல்துறை ஆணையர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தற்போதைய டி.ஜி.பி திரிபாதி, ஜூன் மாதத்துடன் ஒய்வு பெறுகிறார். அதன்பிறகு, அந்த பதவிக்கு சைலேந்திர பாபு வருவார் என்று பெரியளவில் பேசப்படுகிறது. சென்னை காவல்துறை ஆணையர் பதவிக்கு, தற்போது ஏடி.ஜி.பியாக உள்ள ரவி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்தப் பதவிக்கு யார் வந்தாலும், திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த  காவல்துறையின் கட்டுப்பாடும், தமிழச்சி தங்கப் பாண்டியனின் கணவர் சந்திரசேகரிடம் இருக்கும் என்பதே உண்மை என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

pathi

முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சபாநாயகர், டி.ஜி.பி பதவிகளைப் போல், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்புகளில் யார் நியமிக்கப்படுவார்கள் என்பதும், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அட்வகேட் ஜெனரல் என்று சொல்லப்படும் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு சண்முக சுந்தரமும், கவர்மென்ட் பிளீடர் என்று சொல்லப்படும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்புக்கு  மூத்த வழக்கறிஞர் நீலகண்டன் பெயரும் முன்னணியில் உள்ளது. இவர்கள் தவிர்த்து, மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, பி.எஸ்.ராமன் உள்ளிட்டவர்களின் பெயரும் இந்தப் பரிசீலனையில் இருந்தாலும், தலைமை வழக்கறிஞர் பதவிப் போட்டியில், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம்தான் முன்னிலையில் இருக்கிறார்.

Also Read – தி.மு.க சுகாதாரத் துறை அமைச்சர்.. ரேஸில் இருவர்.. முந்துவது யார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top