`ஆனந்தம்’ படம் 21 ஆண்டுகளுக்குப் பின்னும் ஏன் கொண்டாடப்படுது… 6 காரணங்கள்!

ஓ.டி.டி என்ட்ரி ஆகி சினிமாக்கள் வர்ற காலக்கட்டம் இது. ஆனா, இன்னைக்கும் டி.வியில சில படங்கள் ஓடும்போது மொத்தக் குடும்பத்தையும் கட்டிப் போட்டு விடும். அப்படி போன வாரம் ஞாயிற்றுக்கிழமை வீட்ல ஒரு படத்தை அம்மா பார்த்துகிட்டிருந்தாங்க. அடுத்த 10 நிமிஷத்துல எல்லோருமே டி.வி முன்னால ஆஜராகிட்டாங்க. பார்க்கவே ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த படம் பேரு ஆனந்தம். `என்னடா கிரிஞ்சுக் குவியலா இருக்கே. இதையாடா கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு பார்த்துக்கிட்டிருக்கீங்க’னு யோசிச்சேன். அப்போதான் இந்த படம் ஏன் 21 வருஷம் கழிச்சும் மக்களுக்கு பிடிச்சிருக்குனு 6 விஷயங்கள் கிடைச்சது. அது என்னனு வாங்க பார்க்கலாம்.

இயல்பான நடிப்பு!

ஆனந்தம்
ஆனந்தம்

இதுக்கு முன்னால வந்த அண்ணன், தம்பி- குடும்ப சென்டிமென்ட் கதைதான் ஆனந்தம். ஆனா, படம் முழுக்க எந்த இடத்துலயும் நாடகத் தன்மை இருக்கவே இருக்காது. ஒவ்வொரு கேரெக்டரும் இயல்பாவே நடிச்சிருக்கும். ஆனந்தம்ல அண்ணன்-தம்பி செண்டிமெண்ட், தாய் பாசம், கூட்டுக் குடும்ப சச்சரவுகள், காதல்னு எல்லாத்துலயும் செண்ட்டிமெண்ட் கதையோட்டத்துல இயல்பாவே இருக்கும். எதுவுமே அளவுக்கு மீறி திணிக்கப்பட்டிருக்காது.

லிங்குசாமியின் மெனக்கெடல்!

ஆனந்தம்
ஆனந்தம்

சுமார் 5 வருஷ காலமா கதையை ரெடி பண்ணிட்டு, சுமார் 1,000 பேர்கிட்டயாவது இந்த கதையை சொல்லியிருந்தார் லிங்கு. நல்ல ப்ரொடியூசர் தேடிக்கிட்டு இருந்த நேரம் மம்முட்டியிடம் கதையைச் சொல்லி மம்முட்டிக்குப் பிடிச்சுப்போக, மம்முட்டியும் ப்ரொடியூசர் தேட ஆரம்பிச்சார், ஒரு வழியா ஆர்.பி.செளத்ரி கிட்ட வந்து கதையை ஓ கே சொல்லி ஆரம்பிச்சார் லிங்குசாமி. ‘சொன்னா தாங்க மாட்டிங்கடா’னு மம்முட்டி பேசுற டப்பிங்கை ஒரு 20 தடவையாவது பேச வச்சிருப்பார், லிங்குசாமி. அந்த அளவுக்கு பர்பெக்‌ஷனா ஆனந்தம் படத்தை செதுக்கியிருந்தார். மம்முட்டி டென்சனாகி ‘லிங்குசாமியை வெளிய போகச் சொல்லுங்க, நான் டப்பிங் பேசி முடிச்சதும் வரச் சொல்லுங்க’னு கோவமா சொல்ற அளவுக்கு லிங்குசாமி மம்முட்டியை வேலை வாங்கியிருந்தார். அதற்கு கைமேல் பலனாக ஒரு வாரப்பத்திரிக்கையில ஆனந்தம் சினிமா விமர்சனத்துல ‘தமிழ் நடிகர்கள் எப்படி டப்பிங் பேசணும்னு மம்முட்டிகிட்ட கத்துக்கணும்’னு எழுதினாங்க. அதுவும் சொன்னா தாங்க மாட்டிங்கடாங்குற அந்த வரியை மென்சன் பண்ணி எழுதியிருந்தாங்க. இதை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார் மம்முட்டி. அந்த அளவுக்கு லிங்குசாமியின் மெனக்கெடல் இருந்தது.

கதாபாத்திரம்!

அப்பாஸ் - சினேகா
அப்பாஸ் – சினேகா

ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணம் கொண்டதா இருக்கும். எந்த ஒரு கேரெக்டரும் இன்னொரு கேரெக்டர் மாதிரி இருக்காது. கதை மொத்தமாவே 10 முதல் 15 கேரெக்டருக்குள்ளதான் ட்ராவலாகும். ஆனா, எந்த இடத்திலேயும் சலிப்பு தட்டவே தட்டாது. மம்முட்டி கேரெக்டர்ல முதல்ல நடிக்க இருந்தது, முரளிதான். அப்பாஸ் கேரெக்டர்ல அஜித்தும், கடைசி தம்பி கேரெக்டர்ல சூர்யாவும் நடிக்க கேட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால், ரெண்டுபேருமே ஆக்‌ஷன் ஜானர்க்கு மாறின நேரம்ங்குறதால அவங்களால நடிக்க முடியல. அதுக்கப்புறம்தான் அப்பாஸ் உள்ள வந்தார். இப்படி ஒவ்வொரு கேரெக்டரையும் தேர்வு செஞ்சதுலயே படம் பாதி சக்சஸ்.

குறைவான டயலாக்!

ஆனந்தம்
ஆனந்தம்

படத்தை நல்லா உத்து கவனிச்சதுல ஒரு விஷயம் தெரிஞ்சது. படம் மொத்தமா 2.30 மணி நேரம்னா டயலாக்குகள் 1.30 மணி நேரம்தான் இருக்கும். குறைவான டயலாக்குகள்தான் படத்தோட மிகப்பெரிய பலம்னும் சொல்லலாம். அதே மாதிரி குறைவான டயலாக்குகள் கூட ரொம்ப நீளத்துக்கு இருக்காது. எல்லாமே சொல்ல வந்த விஷயத்தை காட்சியாவே எமோஷனல் சேர்த்து படம் கன்வே பண்ணியிருந்தது. உதாரணமா ‘ஆளாளுக்கு பீரோல கை வைக்காதீங்க’னு சொல்ற டயலாக் முடிஞ்சு ஒரு நிமிஷம் கழிச்சுதான் அடுத்த டயலாக்கே வரும்.

இசை!

படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் மிகப்பெரிய பலம். அந்தக் காலக்கட்ட குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு இசையமைப்பது எஸ்.ஏ.ராஜ்குமாருக்குக் கைவந்த கலை. இந்த படம் முழுக்கவே பின்னணியில் ஒரு மெல்லிய இசை ஓடிக் கொண்டே இருக்கும். இதில் வந்த பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாட்டு பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பி சினேகாங்குற நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைச்சாங்க. அதுக்கு இந்த பாட்டும் ஒரு காரணம்னும் சொல்லலாம். எமோஷனல் சீன்ல வர்ற பி.ஜி.எம் இந்த படத்தோட பெரிய பலம்னே சொல்லலாம்.

நோ நெகட்டிவிட்டி!

படத்துல நெகட்டிவிட்டிங்குறது ரெண்டு மூணு சீன்ல மட்டும்தான் இருக்கும். மத்தபடி ஹீரோ குடும்பத்தை அழிக்க நினைக்கும் வில்லன் டைப் டெம்ப்ளேட்டுக்கு அப்படியே opposit-ஆ இருக்கும். படத்துல சின்ன சண்டை வர்ற இடத்துல கூட மம்முட்டி தன்னோட கையை கிழிச்சுத்தான் ரத்தத்தை காட்டி மிரட்டுவார். திருட வந்தவனுக்கு வீட்லயே வேலை போட்டு கொடுப்பதெல்லாம் பாஸிடிவிட்டியோட உச்சம்னே சொல்லலாம்.

Also Read – `தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை’ கோவை சரளா – 5 சுவாரஸ்யங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top