விகேஆர்

VK Ramasamy: வி.கே.ராமசாமியை நாம் மிஸ் பண்ணுவதற்கான 5 காரணங்கள்!

விருதுநகர் கந்தன் ராமசாமி, தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியா கலைஞன். நாடகத் துறையில் 15 ஆண்டுகள், சினிமாவில் சுமார் 35 ஆண்டுகள் என 50 ஆண்டுகள் கலையுலகில் பயணித்த மகா கலைஞன்.18 வயது தொடங்கி தனது இறுதிக் காலம் வரை தமிழ் சினிமாவில் `முதியவர்’ கேரக்டராகவே வாழ்ந்த வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 காரணங்களைத்தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

வி.கே.ஆர்
வி.கே.ஆர்

வசன உச்சரிப்பு

நாடகங்களில், தனது கணீர் குரலால் ரசிகர்களை மகிழ்வித்த வி.கே.ராமசாமி சினிமாவிலும் வசன உச்சரிப்பில் அசத்தினார். தனது 18 வயதில் இயக்குநர் ப.நீலகண்டனின் `தியாக உள்ளம்’ நாடகத்தில் 60 வயது பேங்கரானபிளாக் மார்க்கெட்’ சண்முகம் கேரக்டரில் அசத்தினார் வி.கே.ஆர். அது பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், படங்களிலும் முதியவர் கேரக்டர்களிலேயே அதிகம் நடித்திருக்கிறார். `அதுல பாருங்க தம்பி…’ என இவர் வசனத்தைத் தொடங்கும் முன்னரே, அந்த கேரக்டரின் அழுத்தம் ரசிகனின் மனதில் பிம்பத்தை ஏற்படுத்திவிடும்.

வி.கே.ஆர்
வி.கே.ஆர்

குறும்பு மொழி

விகேஆரின் வசன உச்சரிப்புக்கு முத்தாய்ப்பாக எத்தனையோ படங்கள் அமைந்திருந்தாலும், ஆண்பாவம் படத்தில் அவரின் குறும்புப் பேச்சுக்கு 80ஸ், 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, நிறைய 2கே கிட்ஸ் ரசிகர் வட்டமே இருக்கிறது. மூதேவி என்ற வார்த்தை கூட சிரிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் விகேஆரின் டயலாக் டெலிவரி செய்த மேஜிக். வேலைக்காரன், `ராஸ்கோலு’ தொடங்கி இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முதலாளி, வேலைக்காரன், நாட்டாமை தொடங்கி, தமிழ் சினிமாவில் இவர் ஏற்காத கேரக்டர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால், தனது டயலாக் டெலிவரியால் அந்த கேரக்டருக்கு எனர்ஜி ஏற்றுவார்.

Also Read:

Youtube-ன் TOP 10 Most viewed videos எதெல்லாம் தெரியுமா?

தலைமுறைகள் தாண்டிய நடிப்பு

தமிழ் சினிமாவில் பாகவதர் காலம் தொடங்கி எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் காலம் வரை தனது நடிப்பால் முத்திரை பதித்தவர் விகேஆர். இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் பணக்காரராக நடித்திருப்பார்… கமலஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்திலும் அதே கேரக்டர்தான் விகேஆர் ஏற்றிருப்பார். ஆனால், இந்த இரண்டிலும் அவர் காட்டிய வெரைட்டி அவரைத் தனித்து அடையாளம் காட்டும்

வி.கே.ஆர்
வி.கே.ஆர்

வெரைட்டி விருந்து

1960-கள் தொடங்கி 1990-களின் இறுதி வரை 60 வயது முதியவர் கேரக்ட்ரா… கூப்பிடுங்கப்பா விகேஆரை என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களுக்கும் தேடும் முதல் நபராக இருந்தார். தனது கரியரில் பெரும்பாலான படங்களில் முதியவர் கேரக்டர்தான் என்றாலும், எல்லாவற்றிலும் தனித்துவ முத்திரை பதித்திருப்பார். வில்லத்தனம் செய்யும் வயதான வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன், பணக்கார தாத்தா, `பிளேபாய்’ வயோதிகர் என வெரைட்டி விருந்து படைத்திருப்பார் விகேஆர்.

எவர்கிரீன் கேரக்டர்ஸ்

விகேஆர் நடிப்பில் பெரும்பாலான படங்களில் முத்திரை பதித்திருப்பார். ஆனால், குறிப்பிட்ட சில படங்களில் அவரின் ஏற்றிருந்த கேரக்டர்கள் தமிழ் சினிமாவின் எவர்கிரீனாக நிலைத்துவிட்டன. பராசக்தி’ வில்லன் கேரக்டர், ருத்ரதாண்டவம்சிவன்’, திகம்பர சாமியார் வேலாயுத பிள்ளை’, குமரிக்கோட்டம்சோமு’, வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டப்பன்’, அரங்கேற்ற வேளைநம்பி ராஜன்’, வேலைக்காரன் வளையாபதி’, மௌனராகம் சந்திரக்குமாரின் பாஸ் கேரக்டர், உயர்ந்த உள்ளம்சாமிக்கண்ணு’, ஆண்பாவம் `ராமசாமி’, கல்யாணராமன்கல்யாணம்’, அக்னி நட்சத்திரம் லட்சுமிபதியின் முதலாளி உள்ளிட்டவைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

Also Read – ஏ.வி.எம்-மின் கம்பேக்; ரஜினிக்கு `சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்து – `முரட்டுக்காளை’ படம்… 7 சுவாரஸ்யங்கள்! #41yearsofMurattuKaalai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top