தோனி

MS Dhoni: `சென்னையில்தான் கடைசி போட்டி’ – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு குறித்து தோனி சூசகம்

ஓய்வு குறித்து அறிவிக்க ஆகஸ்ட் 15-ம் தேதியைத் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே கேப்டனுமான எம்.எஸ்.தோனி பதிலளித்திருக்கிறார்.

எம்.எஸ்.தோனி

தோனி - சி.எஸ்.கே
தோனி – சி.எஸ்.கே

இந்திய கிரிக்கெட் அணியின் சக்சஸ்ஃபுல் கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் அவர் தவித்து வந்தாலும், இந்த ஆண்டு சி.எஸ்.கே வெற்றிகரமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் ஆளாகத் தகுதிபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக சி.எஸ்.கே வெளியேறியபோது தோனி ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கேவின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் தோனி, தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ஒரு ரசிகர், ஓய்வுபெறுவதற்கு ஆகஸ்ட் 15-ம் தேதியைத் தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், தோனியை வழியனுப்பி வைக்கும் வகையில், அவரது ஃபேர்வெல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்காதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

தோனி
தோனி

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த தோனி, “ஓய்வை அறிவிக்க அதைவிட சிறந்த நாள் எதுவும் இல்லை. ஃபேர்வெல் போட்டி என்று எடுத்துக்கொண்டால், நான் சி.எஸ்.கே-வுக்காக விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும். என்னுடைய ஃபேர்வெல் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இன்னும் இருக்கிறது. சென்னையில் மீண்டும் போட்டிகள் நடத்தப்படும்; அங்கு எனது கடைசி போட்டியில் விளையாடி, ரசிகர்களை சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தாம் விளையாடுவதை தோனி உறுதி செய்திருக்கிறார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Also Read – இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் – மத்திய அரசின் புதிய திட்டம்!

2 thoughts on “MS Dhoni: `சென்னையில்தான் கடைசி போட்டி’ – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு குறித்து தோனி சூசகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top