நமது குழந்தை, இளமைப் பருவத்தில் பெரும்பாலான நேரத்தை தாய், தந்தையருடன் செலவழிப்பதை விட பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுடன்தான் செலவிடுகிறோம். ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான இடம் ஆசிரியர்களுக்கே வழங்கப்படுகிறது.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு வருடமும் நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் சினிமாவில் ஆசிரியராக நடித்து இன்று வரை பேசப்பட்டு வரும் பெஸ்ட் கதாபாத்திரங்களைப் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
’சாட்டை’ தயா
ஆசிரியர் என்ற வார்த்தை கேட்ட கணமே நம் அனைவரின் நினைவில் முதலில் வந்து நிற்பவர், சாட்டை படத்தின் தயா சாராக நடித்து கலக்கிய சமுத்திரகனிதான். தனியார் பள்ளியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தின் மத்தியில் ஆசிரியர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் தயா கேரக்டரில் கலக்கியிருப்பார். மாணவர்களை தன் எல்லைக்குள் கட்டி வைத்து இதைத்தான் செய்ய வேண்டும் என கட்டளையிட்டு அவர்களை ஆசிரியரின் கட்டுக்குள் கொண்டுவருவது தவறு என ஆசிரியர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்தும் காட்டியிருப்பார் ’சாட்டை’ தயா. மாணவர்களின் திறமைக்கு வழிகாட்டியாக இருப்பவரே ஆசிரியர் என வித்தியாசமான நடிப்பின் மூலம் மாணவர்களின் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றிருந்தார் தயா.
’வாகைசூடவா’ வேலுத்தம்பி
வாத்தியார் வேலுத்தம்பியாக வாகைசூடவா மூலம் விமல் இதுவரை பார்த்திடாத வித்தியாசமான நடிப்பில் களமாடியிருந்தார். கதையின் ஆரம்பத்தில் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தந்தையின் அறிவுறுத்தலால் கல்வி அறிவில் பின்தங்கிய கிராமத்துக்கு ஆசிரியராகச் சென்றிருப்பார். செங்கல்சூளை வேலையையே முழு நேரப் பணியாகக் கொண்டிருப்பவர்களின் மனதில் கல்வியை பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை அறியாமையில் இருந்து மீட்டெடுத்திருப்பார் வாத்தியார் வேலுத்தம்பி. விமல், அவருடைய தோற்றத்தில் இருந்து பேசும் வார்த்தைகள் வரை அந்த காலகட்டத்தில் இருந்த ஆசிரியராகவே படம் முழுவதும் வாழ்ந்திருப்பார்.
’நம்மவர்’ செல்வம்
பேராசிரியர் செல்வம் கேரக்டரில் கமல்ஹாசன் நடிச்ச படம்தான் நம்மவர். இந்த படத்தின் செல்வம் கேரக்டரோட சாயலை சாட்டை தயாவிலும் நம்மால் பார்க்க முடியும். 1994-ல் வெளிவந்த இந்த படத்தின் புரஃபசர் செல்வம் அந்த காலகட்ட மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். செல்வம், மாணவர்களிடையே ஃபிரண்ட்லீயாக நடந்துகொள்வதில் தொடங்கி அவருடைய செயல்கள் அனைத்துமே அந்த காலகட்டத்தில் இருந்த கல்லூரி மாணவர்களை வெகுவாக ஈர்த்தது.
’மாஸ்டர்’ ஜே.டி
மாஸ்டர் படத்தின் புரஃபசர் ஜே.டி, கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக இருந்தாலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்குமே ஆதர்ஸமான ஒருத்தர். ஜே.டி-யின் வித்தியாசமான மேனரிசத்தில் தொடங்கி, ரிங் டோன்ல இருந்து வடிவேலு மாதிரி பாட்டு பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவது, அவருடைய கடந்த காலம் பற்றி கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு படத்தின் கதையை எடுத்து விடுவது என்று மாஸ் புரஃபசராக மாஸ்டர் ஜே.டி கேரக்டரில் விஜய் அசத்தியிருப்பார். சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் மாணவர்களை மீட்டெடுத்து அங்கிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆடியன்ஸுக்கும் பிடித்தமான ஒரு புரஃபசராக ஜொலிப்பவர்தான் மாஸ்டர் ஜே.டி.
’ராட்சசி’ கீதா ராணி
ராட்சசி கீதா ராணி தலைமை ஆசிரியர். ஆசிரியர்களுக்கு ஸ்ரிக்டாகவும், மாணவர்களுக்கு பிரண்ட்லியாகவும் கெத்தான பெண் தலைமை ஆசிரியராக ஜோதிகாவின் நடிப்பு பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்ப்பிக்காமல் ஓப்பி அடிக்கும் ஆசிரியர்களை தன்னுடைய கேள்விகள் மூலமே தலைதெறிக்க ஓட விட்டிருப்பார். தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கும் மாணவர்களையும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் வழிகாட்டியாகவும் இருந்து அனைவருடைய மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் ஆசிரியர் கீதா ராணி.
’நண்பன்’ விருமாண்டி சந்தானம்
நண்பன் பிரின்சிபால் விருமாண்டி சந்தானம். இந்த பிரின்சிபாலைப் பிடிக்காத ஆட்களும் இருக்க முடியாது, பர்த்து பயம் ஏற்படாத ஆட்களும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ரொம்பவே ஸ்ரிக்டான பிரின்சிபால்தான் நம்ம வைரஸ். அதே சமயம் ஹீரோ மற்றும் அவரது நண்பர்களால் கலாய் வாங்கும் போதும் ஸ்ரீவத்சனால் ஸ்டேஜ்ல் படாதபாடு படும்போதும் அவருடைய நடிப்பு பயங்கரமாக இருக்கும். என்னதான் வைரஸ், ஹீரோ மற்றும் அவருடைய நண்பர்களைத் திட்டி தீர்த்தாலும் ஆசிரியர்கள் எப்பொழுதும் மாணவர்களை கெட்டு போக விடமாட்டார்கள் என்பதை போல வைரஸ் கேரக்டரில் மாஸ் காட்டி இருப்பார் சத்யராஜ்.
’டான்’ பூமிநாதன்
டான் ப்ரஃபசர் பூமிநாதன்,, கல்லூரியையே நடுங்க வைக்கும் டெரர் பீஸ் ப்ரஃபசர் தான் பூமி நாதன். படம் முழுதும் ஹீரோவுக்கும் நம்ப புரஃபசருக்கும் தகராறாகவே இருந்தாலும் கிளைமாக்ஸில் டீச்சர்னாலே ஸ்டூடன்ஸ் பேவரைட்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருப்பார்.
இந்த லிஸ்ட்ல விட்டுப்போன அல்லது உங்க ஃபேவரைட்டான தமிழ் சினிமா டீச்சர்ஸ் பத்தி கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!