டெல்லி கணேஷ்

`இனிமே எந்த அவார்டும் வேண்டாம்; இதுதான் ஒன் அண்ட் ஒன்லி’ – டெல்லி கணேஷ்

கறுப்பு வெள்ளை தொடங்கி ஓடிடி காலம் வரை திரையில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சகலகலா வல்லவன் நம்ம டெல்லி கணேஷ்… நவரசத்தையும் முகத்திலேயே கடத்தி விடும் இந்த காமெடி லெஜண்டை Tamilnadu Now Golden carpet விருது கொடுத்து கௌரவித்தது.

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ், இயக்குநர் சிகரம் பாலசந்தரின் பட்டறையில் தீட்டப்பட்ட வைரம். இந்திய விமானப்படையில் இருந்த இவரை கலைத்தாய் கைபிடித்து சினிமாவிற்கு அழைத்து வந்தது சினிமாவிற்கு கிடைத்த வரம்.

பாச அண்ணனாக, பகை வில்லனாக, கலகல காமெடியனாக என 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட படங்களில், வெரைட்டி முத்திரை பதித்துக் கொண்டே இருக்கிறார் இந்த திருநெல்வேலிக்காரர்.

ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து ஓடிடி காலம் வரை அசத்தும் டெல்லி கணேஷுக்கு சிவப்புக் கம்பளம் அல்ல தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards.

Also Read – கரகர குரல்… முரட்டு வில்லன்… தத்ரூப நடிப்பு… வியக்க வைக்கும் மகாநதி சங்கர்!

டெல்லி கணேஷுக்கான விருதை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்து அவரைக் கௌரவித்தார். டெல்லி கணேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், `ஆசைப்பட்டு அவர் எனக்கு எதிரி-னு ஒரு வாய்ப்பைக் கூப்பிட்டுக் கொடுத்தார். அந்தப் படம் எனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. `பார்த்தீங்களா… இதுக்காகத்தான் உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தேன்’னு சொன்னார். அதேபோல், தெனாலி, அவ்வை ஷண்முகினு நிறைய வாய்ப்புகள் கொடுத்தார். எப்பவுமே என்மேல பிரியம் உண்டு. அவர் எந்த ஊர்ல ஷூட்டிங் போனாலும் சாப்பிடும்போது, வேற யாரைக் கூப்பிடுறாரோ இல்லையோ, `டெல்லி அண்ணனைக் கூப்பிடுங்கப்பா’னு கூப்பிட்டு விடுவார். நான் வந்தபிறகுதான் சாப்பிடவே தொடங்குவார். இதெல்லாம் இயக்குநர் – நடிகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு நாங்கள் பழகிய பழக்கம்தான்.

டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ்

அவரு இத்தனை படத்தில என்னை நடிக்க வைச்சு பேரும் புகழும் எல்லாம் வாங்கிக் கொடுத்ததை எல்லாம் விட Super thing இந்த விருதுதான். ஏன்னா பொதுவா எந்த அவார்டுக்கும் என்னை யாரும் கூப்பிட்டது கிடையாது. நான் மேடையில போய் எந்த அவார்டும் வாங்குனது இல்லை. ஏன்னா, தமிழ்நாட்டுல குணச்சித்திர நடிகர்களை அவங்க மதிக்குறது இல்லை. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். மலையாளத்தில் நெடுமுடி வேணுவாகட்டும், திலகனாகட்டும் அவங்களைக் கூப்பிட்டு மரியாதை பண்ணுவாங்க. இங்க அவார்டும் கொடுக்குறதில்லை; அவார்டு நிகழ்ச்சிக்குக் கூப்பிடுறதும் இல்லை. இவங்களுக்கெல்லாம் அவார்டு கொடுத்திருக்காங்கனு நியூஸ் பார்த்துதான் தெரிஞ்சுப்பேன். இதையெல்லாம் உடைச்சு எனக்கு ஒரு அவார்டு கொடுத்தீங்க பாருங்க… இது ஒண்ணு போதும். இனிமே கூப்பிட்டாலும் எந்தவொரு அவார்டையும் வாங்க நான் தயாரா இல்லை.. இதுதான் நான் வாங்குன ஒரே அவார்டுனு இருந்துட்டுப் போகட்டும்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். டெல்லி கணேஷின் உணர்ச்சிமயமான மொமண்ட்ஸ் மற்றும் அவரைப் பத்தியும் அவ்வை ஷண்முகி எக்ஸ்பிரீயன்ஸ் பத்தியும் கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களை Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet அவார்டு எபிசோடைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top