டபுள் ஹீரோ சப்ஜெக்ட்

சும்மா அதிரும்… தமிழ் சினிமாவில் பின்னிப் பெடலெடுத்த டபுள் ஹீரோ படங்கள்!

தமிழ்சினிமாவில் அந்த காலத்தில் இருந்தே டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகமாவே வந்திருக்கு. ஆனா, பெயரளவுல வராம நிஜமாவே ரெண்டு பேருக்குமே வெயிட் கொடுத்த படங்கள்னா அதுல சொல்ற அளவுக்கான படங்கள்னு சில படங்கள் இருக்கும். அதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி தான் எல்லோருக்கும் தெரிஞ்ச முதல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். அதுக்குப் பின்னால, ரஜினியும் கமலும் நிறைய படங்கள்ல டபுள்ஹீரோ சப்ஜெக்ட். அதுக்குப் பின்னால ரஜினி-கமல், சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக்னு பல காம்போக்கள் இணைஞ்சிருக்கு. அப்படி டபுள் ஹீரோ இணைஞ்சு கொடுத்த சர்ப்ரைஸ்களும் ஏராளம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்

இளமை ஊஞ்சலாடுகிறது

இளமை ஊஞ்சலாடுகிறது
இளமை ஊஞ்சலாடுகிறது

1978ல வெளியான இந்தப் படத்தை ஸ்ரீதர் இயக்கினார். கமல், ரஜினி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சந்தானபாரதி பலர் நடிச்சிருந்தாங்க. இளையராஜா இசையில பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில ரொம்ப நல்லா கொண்டாடப்பட்ட படங்கள்ல ஒன்னு. என்னடி மீனாட்சி, ஒரே நாள் உன்னை நான், கிண்ணத்தில் தேன் வடித்து, நீ கேட்டால் நான், தண்ணி கருத்திருச்சு பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிச்சு. ரஜினியும் கமலும் உச்சத்துக்கு போய் விளையாடின படம்னுகூட சொல்லலாம். அதேபோல நினைத்தாலே இனிக்கும் படமும் ரஜினி-கமல் காம்போவுக்கு பக்கா கியாரண்டி கொடுத்த படங்கள்.

குருதிப்புனல்

குருதிப்புனல்
குருதிப்புனல்
கமல்கிட்ட ஒரு நல்ல விஷயம் என்னன்னா, எப்பவுமே டபுள்ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயங்கினதே இல்ல. ரஜினி சோலோவா பயணப்பட்டுக்கிட்டு இருந்தப்போ பிரபுதேவா, அர்ஜூன்னு பல நடிகர்களோட சேர்ந்து டபுள்ஹீரோவாவும் பயணப்பட்டார். அப்படி ஒருபடம்தான் குருதிப்புனல். படத்துல இருக்கிற ரெண்டுஹீரோவுக்கும் முக்கியமான வெயிட்டேஜ் கொடுத்த படங்கள்ல முக்கியமானது. அந்தநேரத்துல கமல் அளவுக்கு அர்ஜூன் பெரிய நடிகரா இல்ல. ஆனாலும் குருதிப்புனல்ல அர்ஜூன்க்கு ரொம்ப முக்கியத்துவம் இருந்தது. ஆப்பரேஷன் தனுஷ்க்காக ரெண்டுபோலீஸ் ஆபீசர்ஸ்க்குள்ள நடக்குற கதையை ஈக்வலா பேலன்ஸ் பண்ணி எடுத்திருப்பார், பி.சி ஶ்ரீராம். அதும் நாசர் முன்னாடி கமலும், அர்ஜூனும் உட்கார்ந்து பேசுற இடம் இன்னைக்கும் எபிக் சீன்.

குருசிஷ்யன்

குருசிஷ்யன்
குருசிஷ்யன்


1987 ல் வெளியான ”இன்சாப் கி புகார்”ங்குற இந்தி படத்தின் ரீமேக்தான் குருசிஷ்யன். ரஜினிகாந்த், பிரபு, சீதா மற்றும் கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் பாண்டியன், சோ ராமசாமி, ரவிச்சந்திரன், ராதா ரவி, செந்தாமரை, வினு சக்ரவர்த்தி, மனோரமானு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிச்சிருந்தது. குருவாக ரஜினி-சிஷ்யனாக பிரபு நடிச்சிருந்தாங்க. ரெண்டுபேருக்கும் ஈக்வல் வெயிட்டேஜ் கொடுத்து இயக்கிய்திருந்தார், இயக்குநர் எஸ்.பி முத்துராமன். இதுக்கப்புறம் தர்மத்தின் தலைவன் படத்துலயும் காம்போ மாஸாவே இருக்கும்.

இணைந்த கைகள்

இணைந்த கைகள்
இணைந்த கைகள்

என்னடா பெரிய பெரிய காம்போவா சொல்லிட்டு இதெல்லாம் காம்போவானு நினைக்க தோணலாம். அப்படித்தான் இந்தபடம் வர்ற வரைக்கும் எல்லோரும் நினைச்சிட்டிருந்தாங்க. அப்பவே பயங்கரமான எதிர்பார்ப்போட வெளியான சினிமாதான் இணைந்த கைகள். ஆபாவாணன் தயாரிப்புல, வெளியான பிரம்மாண்ட படம். எம்.ஜி.ஆர் – சிவாஜிக்குப் பின்னால வெளிநாட்டில் தமிழ்படங்கள் நேரடியா ரிலீஸ் ஆனதே இல்ல. அதை உடைத்தார் ஆபாவாணன். உலக்மெங்கும் வெளியாகிறதுனு தியேட்டர்கள் பெயரோட அறிவிப்பு கொடுத்தார். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, மும்பை டிரைவ் இன் தியேட்டர்ல டிக்கெட் கிடைக்கலைனு ரசிகர்கள் தியேட்டரை அடிச்சு உடைச்சாங்க. அப்படி ஒரு எதிர்பார்ப்போட ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படம். அருண்பாண்டியன்- ராம்கி காம்போ இணைஞ்சு பட்டையைக் கிளப்ப, பெரிய மருது படத்தோட இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் இயக்கினார். அந்த படத்தின் முக்கியமான இடம் இண்டர்வெல் பிளாக். ஒரு பெரிய பாலத்தைக் கடக்கும் முயற்சியில கயிறு அறுந்து ராம்கி நதியில் விழப்போற சமயத்தில் அருண்பாண்டியன் ஓடோடி வந்து கயிறோட இன்னொரு முனையைப் பிடிச்சு காப்பாற்றுவார். இந்த இன்டர்வெல் காட்சிக்கு அப்போ பார்வையாளர்கள் ரொம்ப மகிழ்ச்சியோட கைகளைத் தட்டி ஆர்ப்பரிச்சதெல்லாம் வரலாறு. அத்தனை விறுவிறுப்பான முறையில் இது படமாக்கப்பட்டிருந்தது. இன்னைக்கும் தமிழ் சினிமாவோட சிறந்த ‘இடைவேளை’க் காட்சியைக் கணக்கில் எடுத்தால் அதுல ‘இணைந்த கைகள்’ படத்துக்கு நிச்சயமான இடம் உண்டு.

தளபதி

தளபதி
தளபதி

1991ல மணிரத்னம் இயக்கத்துல வெளியான படம். இளையராஜா இசையில பாடல்கள் அனைத்தும் மெய்மறக்க வைக்கும் ராகங்கள். ரஜினிகாந்த் – மம்முட்டி காம்போ முதல்முதலா இணைஞ்சு மாஸ் காட்டிய படம். யமுனை ஆற்றிலே, ராக்கம்மா கையத்தட்டு, சுந்தரி கண்ணால், காட்டுக்குயிலு, ஏகப்பட்ட பாடல்கள் இருந்தது. ரஜினிக்கு எவ்ளோ முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவு மம்முட்டிக்கும் இருந்தது. மம்முட்டியை பார்த்து ஏன்னா நான் உன் நண்பன்னு ரஜினி சொல்ற இடமாகட்டும், எல்லாத்தையும் நிறுத்தணும்னு கலெக்டர் சொல்ற இடத்துல முடியாதுனு கெத்து காட்டுற மம்முட்டியா இருக்கட்டும், ரெண்டுபேருமே செம மாஸ் காட்டியிருப்பாங்க. இந்த படத்துல ரொம்பவே முக்கியமானது கலெக்டர் ஆபீஸ் பஞ்சாயத்து சீன். ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, நாகேஷ்னு எல்லோருமே ஒண்ணா உட்கார்ந்து பேசுற அந்த இடம் இன்னைக்கும் தமிழ் சினிமாவுல பேசப்பட்டுகிட்டிருக்கிற சீன். அதுக்கு மணிரத்னம்ங்குற மேஜிக்கும் முக்கிய காரணம்.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

அந்தகால பி அண்ட் சியைக் கைக்குள்ள வச்சிருந்த கார்த்திக்கும் பிரபுவும் கூட்டணி அமைச்சு நடிச்ச படம் இன்னைக்கும் சரியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் லிஸ்ட்ல முக்கியமான இடத்துல அக்னி-நட்சத்திரம் இருக்கு.1988ல் வெளியான இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கினார். பிரபு-கார்த்திக்னு ரெண்டுபேரும் ரிவஞ்ச் எடுக்கிற இடமும் ரெண்டுபேரும் ஒண்ணு சேர்ற இடமும் அவ்ளோ மாஸா இருக்கும். அதேபோல பிசி ஶ்ரீராம் ஒளிப்பதிவாளர்ங்குற முறையில படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுபோயிருந்தார்னே சொல்லலாம். படத்தோட லைட்டிங்லாம் அதுவரைக்கும் தமிழ்சினிமா கண்டிராத லைட்டிங். இதுவரைக்கும் இதெல்லாம் லைட்டிங் தவறுகள்னு சொல்லிட்டிருந்தாங்களோ, அதை வச்சே முழு படத்தையும் ஒளிப்பதிவு செஞ்சார். கார்த்திக் வீட்ல கல்லெரிஞ்சு ரிவஞ்ச் எடுக்கிறது, பிரபு அரெஸ்ட் பண்ணி ரிவெஞ்ச் எடுக்கிறதுனு ரெண்டுபேரும் அவங்களோட எக்ஸ்ட்ரீமுக்கு போய் விளையாடியிருப்பாங்க. இளையராஜா இசையில நின்னுக்கோரி வர்ணம், ராஜாதி ராஜா, தூங்காத விழிகள், வா வா அன்பே பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம்.

சின்னத்தம்பி பெரிய தம்பி

சின்னத்தம்பி பெரிய தம்பி
சின்னத்தம்பி பெரிய தம்பி

1987-ல வெளியான இந்தப் படத்தை மணிவண்ணன் இயக்கினார். பிரபு- சத்யராஜ், கூட்டணியில நதியா, நிழல்கள் ரவி, காந்திமதி உள்பட பலர் நடிச்சிருந்தாங்க. கங்கை அமரன் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். ஒரு பொண்ணுக்காக அண்ணன் தம்பிக்குள்ள நடக்கிற போட்டிதான் கதை. அதை சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியிருந்தார் மணிவண்ணன். அதேபோல ஹோட்டல்ல ரெண்டுபேரும் சண்டைபோட்டு காமெடி பண்ற இடமும், ரெண்டுபேரும் மாமன் மகளுக்காக சண்டை போடுற காட்சிகளாகட்டும், பல இடங்கள்ல ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம பேலன்ஸ் பண்ணியிருப்பாங்க. விதவை திருமணம் செய்யணும்ங்குற கருத்தையும் சொன்ன விதத்துல ஷோசியலி ரெஸ்பான்சிபிள் படமாவும் சின்னத்தம்பி பெரியதம்பி வந்திருக்கும்.

பிதாமகன்

பிதாமகன்
பிதாமகன்

பாலாவின் முதல் படம் நடிகர் விக்ரமுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்தது. இரண்டாம் படம் சூர்யாவைத் தனித்துக் கவனிக்க வைத்தது. மூன்றாம் படம் அபாரத் திறமை, அசாத்திய உழைப்பு, விடா முயற்சி மூனையும் ஒன்னா வச்சிருந்த இந்த இரண்டு நடிகர்களும் ஒரே படத்துல இணைஞ்சு நடிச்சாங்க. இந்தப் படம் வெளியாகுறப்போ இரண்டுபேரும் நட்சத்திர அந்தஸ்தை அடைஞ்சிட்டாங்க. அந்த வகையில தமிழ் சினிமாவோட பெரிய மல்ட்டி ஸ்டாரர் படங்கள்ல முக்கியமான ஒன்னாவும் ‘பிதாமகன்’ அமைஞ்சது. பேசத்தெரியாதவரா விக்ரமும், பேச்சுலயே பொழைப்பு நடத்துற சூர்யாவும் ஒருபுள்ளியில இணையுறப்போ அவங்க வாழ்க்கைக்குள்ள என்ன நடக்குதுங்குறதுதான் கதை. ஒருபக்கம் கேரெக்டரா விக்ரம் ஸ்கோர் பண்ணா, அதை நடிப்புல அசால்ட்டா சூர்யா ஹேண்டில் பண்ணியிருப்பார். ஒருபக்கம் விக்ரம் நடிப்பை பார்த்து மிரண்ட கோலிவுட், அதுவரை சற்று இறுக்கமான முகமாக பார்த்த சூர்யாவை அபாரமான நகைச்சுவைக்கு சொந்தக்காரனாக பார்த்ததை கண்டு வியந்து போனது. சமகால போட்டியாளர்கள் இருவரும் எந்த ஈகோவும் இல்லாமல் சேர்ந்து நடித்த படம். இது பாலாவின் சாமர்த்தியமும்கூட.

பட்டியல்

பட்டியல்
பட்டியல்

சமூகத்தின் பெரிய திமிங்கிலங்களுக்கு அப்பப்போ தேவைப்படுற சில்லறை வெட்டு, குத்து விவகாரங்களுக்கான வேலைகளை முடித்துத் தரும் சிறிய மீன்களின் கதை. ஆர்யா-பரத் கூட்டணியில விஷ்ணுவர்தன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்யாவும் பரத்தும் ஒண்ணுசேர்த்து செய்யுற சம்பவங்களும், அவங்களை செய்யறதும்தான் படம். ஆர்யா-பரத் காம்போவுக்கு இது முக்கியமான படமும் கூட. எந்நேரமும் குடிகாரன் ஆர்யா, காது கேட்காத, வாய் பேசாத பரத் ரெண்டுபேரும் அவங்களோட கேரெக்டருக்கு ஏற்ற நியாயம் பண்ணியிருந்தாங்க. ஒரு கொலை செய்யப்போற இடத்துல ஒரு எக்ஸ்ட்ரா கொலை செய்யுறப்போ பரத்தும், ஆர்யாவும் பண்ற ரகளை வேற ரகமா இருக்கும். டபுள்ஹீரோ சப்ஜெக்ட்ல இந்தப்படத்துக்கும் முக்கியமான இடம் இருக்கு.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா
விக்ரம் வேதா

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இதுல மாதவன் போலீஸ் அதிகாரியாவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடிச்சிருந்தாங்க. இந்த படம் கதை சொல்லல்ங்குற விதத்தை பயன்படுத்தி கிரைம் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர்ல வந்திருந்துச்சு. படத்துல விக்ரமாக மாதவன், வேதாவாக விஜய்சேதுபதி ரெண்டுபேருக்குமான ஈக்வல் வெயிட்டேஜ் கொடுத்தபடம். மாதவனுக்கு ரொமான்ஸ், ஆக்‌ஷன் ரெண்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து, விஜய் சேதுபதிக்கு ஆக்‌ஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம்னு தனித்தனியா வெயிட் கொடுத்து பிரிச்சுவிட்டிருந்தாங்கனுதான் சொல்லணும்.

Also Read – ஹாலிவுட்டுக்கே சவால்… கேமரா மேன் நீரவ் ஷா சம்பவங்கள்!

விக்ரம்

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் லிஸ்ட், மல்டி ஸ்டாரர் பட லிஸ்ட்னு என்னவேனா விக்ரமை வச்சுக்கலாம். படத்துல மூணு பெரிய ஸ்டார், மூணுபேருக்குமே ஈக்வல் வெயிட்டேஜ் அதுவும் கமல் இருந்தும். கமல் படத்துல விசேக்கும், ஃபஹத்க்கும் அவ்ளோ முக்கியத்துவம் இருந்தது. இந்தபடம் பத்தின தகவல், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். அதனால அரைச்ச மாவை அரைக்க விரும்பல...
விக்ரம்
விக்ரம்

இந்த வரிசையில செந்தூரப்பூவே, உல்லாசம், காதலா காதலா, தெனாலி, உன்னைப்போல் ஒருவன், தோழா மாஸ்டர்னு பல படங்கள் இருக்கு. உங்களோட ஃபேவரெட் படம் எதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top