மக்களுக்கு வசதியான, இடையூறு இல்லாத சேவைகளை வழங்கும்பொருட்டு ஆதார் அட்டை அடிப்படையில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள 18 சேவைகளுக்காக மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. இதன்மூலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மக்கள் கூட்டம் குறையும் என்றும், அந்த அலுவலகங்களின் சேவையின் தரமும் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
[zombify_post]