ஸ்கேம் சம்பவங்கள்

என்னடா இப்படிலாம் திருடுறீங்க.. வெரைட்டி ஸ்கேம் சம்பவங்கள்!

எம்.எல்.எம், டபுள் என்ஜின் மண்ணுளி பாம்பு, தீபாவளி சீட்டு, நகைச் சீட்டு, ஃபேஸ்புக் பேர்ல காசு அனுப்புங்க, கார்டு மேல இருக்க 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கன்றதுலாம் கற்கால மோசடிகள். இப்போ புதுசு புதுசா தினுசு தினுசா எக்கச்சக்க ஸ்கேம் சம்பவங்கள் நடந்துகிட்டிருக்கு. லட்சக்கணக்குல பணத்தைப் பலர் இழந்துகிட்டிருக்காங்க. அப்படியான சில மோசடிகளையும், நீங்க உஷாரா இல்லைன்னா, என்ன நடக்கும்ன்றதையும் இந்த வீடியோல பாப்போம்.  சூதுகவ்வும் சுருட்டர்கள், சதுரங்க வேட்டை சண்டியர்கள், மங்கத்தா மன்னர்கள் என எக்கச்சக்கமான கேங்க் சுத்திகிட்டு இருக்கு. இவங்களுக்கே அல்வா கொடுத்த பங்காளி ஒருத்தன் நம்ம ஊர்ல இருக்கான், அவனை பத்தியும் சொல்றேன். வெயிட் கரோ!

ஸ்கேம் சம்பவங்கள்

“தினமும் ஒரு மணி நேரம் வேலை பார்த்தா போதும், மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம். குடும்பத் தலைவிகளுக்கான வரப்பிரசாதம்.” இப்படி ஒரு விளம்பரம் வந்தா, எல்லாருக்கும் ஒரு சபலம் வரத்தானே செய்யும்… அப்படி என்ன வேலைன்னு பார்த்தா, கட்டு கட்டா பென்சில் உங்களுக்கு அனுப்புவாங்க, கூடவே பத்து பத்து பென்சில்களா அடுக்கி வைக்குற அட்டைப்பெட்டிகளும் தருவாங்க. அந்த அட்டைப்பெட்டிகளில் நீங்க அடுக்கி கொரியர்ல அனுப்பினா போதும், நீங்க முடிக்குற பென்சில்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப உங்களுக்கான வருமானம் வரும். இந்த அற்புதமான திட்டத்துல சேர்வதற்கு நீங்க 600 ரூபாய் டெப்பாசிட் செய்யனும், உங்களை நம்பி அவங்க பென்சில் அனுப்புறாங்களே அதுக்காக அந்த டெபாசிட் கூட கொடுக்க மாட்டீங்களான்னு நீங்க யோசிக்குறமாதிரி பேசுவாங்க… அதுவும் முதல் மாத பேமெண்ட்ல உங்களுக்கு அந்த 600 ரூபாய் திருப்பிக் கொடுத்துருவாங்க. இப்படித்தான் வலை விரிப்பாங்க… நீங்க டெப்பாசிட் அனுப்பின பிறகு ‘பிம்பிலாக்கி பிலாப்பி’ தான். உங்களுக்கு நஷ்டம் 600 ரூபாய்… இவங்க சூது கவ்வும் திருடர்கள் கொஞ்சம் கொஞ்சமா அடிச்சா போதும்னு நினைக்குறவங்க… இன்னொரு குரூப் இருக்கு… அது ‘சதுரங்கவேட்டை’ குரூப்…

உங்களுக்கு சொந்தமா 500 சதுரடி இடம் மொட்டைமாடி இருக்கா, 3G tower வைக்கலாம், 2000 சதுரடி காலி இடம் இருக்கா உங்களுக்கு அப்போ 5G tower வைக்கலாம். அடேய் இன்னும் 5G வரலையேடா… நீங்க வச்சதும் உங்க ஏரியாக்கு 5G பாய்ஞ்சோடி வரும்ங்க… அப்படின்னு உங்களுக்கு பில்டப்பை ஏத்தி, 3ஜி டவருக்கு மாச வாடகை 90,000 ரூபாய், அட்வான்சா 9 லட்சம் தருவோம், 5ஜி டவருக்கு மாச வாடகை 1,50,000 ரூபாய் அட்வான்ஸ் 15 லட்சம் தருவோம்னு ஆசையைத் தூண்டுவாங்க… உங்க இடம் டவர் வைக்க ஏத்ததான்னு தெரிஞ்சுக்க ஃபீல்ட் ஆஃபிசர்ஸ் வருவாங்க அதுக்கான செலவுக்காக நீங்க 10,000 ரூபாய் எங்க அக்கவுண்ட்டுக்குப் போட்டா போதும், முதல் மாசம் வாடகைல அந்தக் காசு உங்களுக்கு வந்துரும்னு உங்க ஆசையைத் தூண்டி கொஞ்சம் பெருசா அடிப்பாங்க. ஊர்ல ஒரு பங்காளி சொன்னேன்ல, இந்த குரூப்பைத்தான் வச்சி செஞ்சாரு… அதை வீடியோ கடைசியில பாப்போம்.

நாம பாக்கப்போற அடுத்த குரூப், ‘மங்காத்தாடா…’, 500, 1000 அடிக்குறதுலாம் பொருட்டே இல்லை… லட்சக்கணக்குல லவட்டுறதுதான் இவங்க ஸ்டைல்… உங்களுக்கான மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர், எங்கள் ஆப் பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்தா தங்கத்தோட விலையை விட மூன்று மடங்கு லாபம் பார்க்கலாம், முதல் தவனை உங்களுக்கு இலவசம், ஜாயினிங் போனஸ் 8000 ரூபாய்னு விதவிதமா தினுசு தினுசா SMS, Mail எல்லாம் வரும் அந்த லிங்கை உங்களுடைய மொபைல் போன் மூலமா க்ளிக் செய்தாலே, உங்களுடைய பேங்கிங் தகவல்களைத் திருடக்கூடிய தொழில்நுட்ப அறிவோடத்தான் இந்த கும்பல் களமிறங்குது. உங்களுடைய வங்கியின் இணையதளத்தைப் போலவே அதே மாதிரி வடிவமைத்து icicibank.com என்பதற்குப் பதிலாக lcicibank.com என டொமைன் நேம் வைத்து உங்களை ஏமாற்றி விடுவார்கள். பிரபலங்களில் இருந்து சாமானியர்கள் வரைக்கும் லட்ச லட்சமாக இழந்திருக்கிறார்கள். காவல்துறையே தலையிலடித்துக்கொண்டு “கையை வச்சுகிட்டு சும்மா இரு…”னு கெஞ்சுமளவுக்கு நம்ம மக்கள் லட்சங்களில் இழந்திருக்கிறார்கள்.

Also Read – எல்லாமே ரோலக்ஸ் மாதிரி பவர்ஃபுல்.. சின்ன ரோல். ஆனால், பெரிய இம்பாக்ட்!

‘கிட்ணி திருட கூப்பிடுற’ குரூப் ஒன்னு இருக்கு… ஐபோன் வெறும் எட்டாயிரம் ரூபாய்தான். ஆப்பிள் வாட்ச் வெறும் 499 ரூபாய்தான். இப்படி நம்பவே முடியாத ஆஃபர்கள் உங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல விளம்பரமா வரும், க்ளிக் பண்ணா ஒரு ecommerce website வரும், அதுல இதே ஆஃபர் அப்படியே இருக்கும். உங்க ஆசையைத் தூண்டி அந்தப் பொருளை வாங்க வச்சிருவாங்க… Cash on delievery-யும் இருக்காது. காசு கட்டியே ஆகனும். நீங்க காசைக் கட்டின பிறகு பொருள் வரும் வரும்னு “வைதேகி காந்திருந்தாள்” விஜயகாந்த் கணக்கா காத்துகிட்டிருப்பீங்க… நாலு நாள் கழிச்சு டிராக் பண்ணலாம்னு பார்த்தா அந்த சைட்டே இருக்காது… வேற ஒரு பேர்ல வேற ஒரு சைட்டைப் போட்டு வேற ஒருத்தனை ஏமாத்திட்டுப் போயிருவாங்க…

ஸ்கேம் சம்பவங்கள்

ஆன்லைன் ரம்மி, தங்க நகை சீட்டு, ஆருத்ரா, கோயம்புத்தூரை மய்யப்படுத்தி வர சீட்டு, பைனான்ஸ் போங்குகளைப் பேசனும்னாலே தனி வீடியோ போடனும்… அதனால, அதையெல்லாம் டீல்ல விட்டாச்சு… ஒரே வார்த்தைதான்… அந்தப் பக்கம் போகாதீங்க… கிட்ணி திருடத்தான் கூப்பிடுறாங்க.

இதுபோக, OLX-ல போலியா விக்குறது, Cash On Delievery-ல ஏமாத்துறதுன்னு சின்னதும் பெருசுமா இன்னும் பல மோசடிகள் சுத்திகிட்டிருக்கு… இந்த எல்லாம் மோசடிகளிலும் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிகள் இருக்கு…

  • அவசரப்படாம பொறுமையா அந்த மெசேஜ் யார்கிட்ட இருந்து வந்திருக்கு, அந்த சைட் சரியா இருக்கா, அதுல சரியான முகவரி, தொடர்பு விவரங்கள், எவ்வளவு நாள்களாக அந்த தளம் இயங்குதுன்னு பல விஷயங்களையும் கவணிச்சுப் பாருங்க 95% ஏமாற்றுப் பேர்வழிகளை இதுலயே கண்டுபுடிச்சிரலாம்.
  • பேசவும், கேள்வி கேட்கவும் கூச்சப்படாதீங்க… இந்த மாதிரி ஏமாற்றுப்பேர்வழிகளை எதிர்கொள்ளும் போது, எக்கச்சக்கமான கேள்விகளையும் சந்தேகங்களையும் கேளுங்க… ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு நீங்க உஷாரா இருக்கீங்கன்னு புரிஞ்சாலே உங்க பக்கம் தலையை வச்சுப் படுக்க மாட்டாங்க.
  • ஏமாற்று பேர்வழிகளோட முதல் ஆயுதமே, உங்களோட ஆசையைத் தூண்டி விடுறதுதான்… அவர்கள் சொல்ற மாதிரியான எக்கச்சக்க சலுகைகளை எல்லாம் யாராலும் தர முடியாது… ஆசையையும் பேராசையையும் விட்டாலே தப்பிக்கலாம்.

அப்புறம் முதல்ல சொன்னேனே, ஊர்ல ஒரு பங்காளி, டவர் வைக்க ஏமாத்த டிரை பண்னவங்களையே அலைய விட்டாரு அவரு. நம்ம தலைவனுக்கு அவன் மண்டைல காலியா கெடக்குற கொஞ்ச இடத்தைத் தவிர சொந்தமா கானி நிலம் கூட கிடையாது. ஆனா, வாடகைக்கு இருந்த வீட்டு மொட்டை மாடியை உள்வாடகைக்கு விட்ருவோம்னு பிளான் பண்ணிட்டாப்ள. ஒரு கட்டத்துல, அவங்க டெபாஸிட் கட்ட சொன்னதும், பணத்தையே அனுப்பாம, அனுப்பிட்டேனே உங்களுக்கு வரலையான்னு கட்டையைப் போட்டிருக்காரு… அவங்களும் வரலையேன்னு சொல்ல, இருங்க என் பேங்க் மேனேஜர் கிட்ட பேசிட்டு வரேன்… உங்க அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க… ஏங்க காசு வந்துருச்சாங்க… கஷ்டப்பட்டு சம்பாதிச்சதுங்க… இப்படியே நச நசன்னு பேசி அந்த ஏமாத்துக்கும்பலையே வெறுப்பேத்தி விட்டுட்டாரு…

உங்களுக்கு இப்படி யாரும் ஏமாத்த வலை விரிச்சிருக்காங்களா..? ஏதும் சிக்கி சேதாரம் ஆகிருக்கா… விதவிதமா உங்களை ஏமாத்த டிரை பண்ன சம்பவங்களை கமெண்ட்ல சொல்லுங்க. இப்படி ஏமாந்த உங்க ஃபிரண்ட்ஸை கமெண்ட்ல டேக் பண்ணி 😂 இந்த எமோஜியைப் போட்டு விடுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top