`90’ஸ் கிட்ஸுக்கு சிம்ரன்னா, 2K கிட்ஸுக்கு அந்த மாதிரி யார் இருக்கா..? இப்போ இருக்கிற நடிகைகளில் அடுத்த சிம்ரன் யார்..!?’ என யோசித்தப்போதுதான், சில நடிகைகளின் பெயர்கள் நினைவுக்கு வந்தது.
ப்ரியா பவானி ஷங்கர்

உடல் தோற்றத்திலும் உயரத்திலும் கிட்டத்தட்ட சிம்ரனை மேட்ச் செய்யும் ப்ரியா, சிம்ரனின் மற்றுமொரு முக்கியமான குவாலிட்டையும் தனக்குள் வைத்திருக்கிறார். சிம்ரன், பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ மாதிரியான படங்களில் மார்டன் லுக்கிலும் நடிப்பார்; `ஏழுமலை’, ‘அரசு’ மாதிரியான கிராமத்துப் படங்களில் ஹோம்லி லுக்கிலும் நடிப்பார். இரண்டுமே அவருக்கு பக்காவாக பொருந்தும். அதே மாதிரி ப்ரியா பவானி ஷங்கரும், `கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ படங்களில் ஹோம்லியாகவும் ‘மாஃபியா’ படத்தில் மார்டனாகவும் நடித்திருந்தார். இந்த இரண்டு லுக்கும் அவருக்கு நன்றாக செட்டானது. ஆனால், சிம்ரனின் முக்கியமான ஒரு குவாலிட்டியான துள்ளலான டான்ஸ் ப்ரியாவிடம் இல்லை. எதிர்வரும் காலங்களில் அதை ப்ரியா வளர்த்துக்கொண்டால், அடுத்த சிம்ரன் எனும் இடத்தைப் பிடிக்கலாம்.
சாய் பல்லவி

ப்ரியா பவானி ஷங்கரிடம் மிஸ்ஸாகும் சிம்ரனின் துள்ளல் டான்ஸ், சாய் பல்லவியிடம் ஹெவியாகவே இருக்கிறது. அவர் இதுவரைக்கும் படங்களில் நடனமாடிய சில பாடல்களிலேயே இளைஞர்களைக் கவர்ந்தவர், அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் சிம்ரனை மிஞ்சும் அளவிற்கு நடனமாடுவார் என்றே எதிர்பார்க்கலாம். ஆனால், அடுத்த சிம்ரன் ஆவதற்கு நடனம் மட்டும் போதுமா என்ன? ஹீரோவுடன் போட்டிபோட்டு நடிக்கும் திறன், கேரக்டர்களில் வெரைட்டி என பல அம்சங்கள் தேவை என்பதால் சாய் பல்லவி இன்னும் அதிகமாகவே மெனக்கெட வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ்

அடுத்த சிம்ரனுக்குத் தேவையான அம்சங்களில் சாய் பல்லவியிடம் இருக்கும் துள்ளல் நடனமும், சாய் பல்லவியிடம் மிஸ்ஸாகும் ஹீரோவுடன் போட்டிபோட்டு நடிக்கும் திறனும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருப்பது அவரின் கூடுதல் பலம். புதுமுகத்தோடு நடித்தாலும், பிரபலமான நடிகரோடு நடித்தாலும் தான் எப்படிப்பட்ட நடிகை என்பதை நிரூபித்து விடுவார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்ததால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடனத்திலும் வெளுத்து வாங்குவார். சிம்ரனைப் போல் தான் கேரக்டர்களில் வெரைட்டி காட்டினாலும், அது பலமுறை வொர்க் அவுட்டாகாமல் போதுதான் ஐஸ்வர்யா ராஜேஷிடம் மிஸ்ஸாகும் ஒன்று.
லேட்டஸ்ட் சென்சேஷன் `க்யூட்’ கீர்த்தி ஷெட்டி #ViralVisuals
ராஷ்மிகா மந்தனா

‘ராஷ்மிகா நடித்த முதல் தமிழ்ப்படம் இன்னும் வெளியாகவே இல்லையே, அதற்குள் எப்படி அவர் அடுத்த சிம்ரன் இடத்துக்கு தகுதியானவரா; இல்லையா என்பதை சொல்ல முடியும்’ என நீங்கள் நினைக்கலாம். அவர் இதுவரைக்கும் நடித்த தெலுங்குப் படங்களை வைத்தே சில விஷயங்களைச் சொல்லலாம். இதுவரைக்கும் பார்த்த ப்ரியா பவானி ஷங்கர், சாய் பல்லவி, ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த மூவருக்கும் சிம்ரனோடு இருக்கிற ஒற்றுமைகளான துள்ளல் நடனம், கேரக்டர்களில் வெரைட்டி, ஹீரோவுடன் போட்டிபோட்டு நடிக்கும் திறன் என மூன்றும் ராஷ்மிகாவிடமும் இருக்கிறது. ஆனால், சிம்ரனிடம் இருக்கும் பக்காவான தமிழ் லிப்சிங்க் இவரிடமும் இருக்குமா என்பதை அவரது முதல் படத்தைப் பார்த்த பிறகே தெரியும். சிம்ரனின் ஆரம்பகால படங்களில் இருந்து அவர் சமீபத்தில் நடித்த படங்கள் வரைக்கும் அவருக்கு டப்பிங் வாய்ஸ்தான் என்றாலும், அவர் தமிழ் பேசி நடிப்பதைப் பார்க்கும்போது எந்த இடத்திலும் லிப் சிங்க் மிஸ்ஸாகி இருக்காது. அந்தளவுக்கு பக்காவாக நடிப்பார். அதை ராஷ்மிகா சரியாகச் செய்யும்பட்சத்தில், அடுத்த சிம்ரன் இடத்துக்கு போட்டிபோடலாம்.
சிம்ரனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, தமன்னா என பலர் வந்தும் சிம்ரன் இடத்தை நிரப்ப முடியாததால், சிம்ரன் எப்போதும் சிம்ரன்தான் என்பதைக் கூறிக்கொண்டு…






Smply wish tto ssay yor aarticle is as astounding.
The claity inn yor post is just spectacular andd i can asume you’re an expwrt onn this subject.
Fine with your permission lett me tto grqb your RSS feed too keep upodated with forthcxoming post.
Thanks a mijllion and please keep uup tthe rewarding
work.
Hey there I am so thrilled I found your weblog, I really found you by accident,
while I was loking on Digg ffor something else, Regardless I am here now andd would just like to say man thanks for
a remarkable post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to
go through it all at the moment but I have bookmarked it and also adderd your RSS feeds, so
when I have time I will be bwck too read a loot more,
Plese do keep up the great b. https://fortune-Glassi.mystrikingly.com/
The Dunning-Kruger Effect explains so much about why some people are ‘confidently incorrect’. Wondering if you’ve checked Increase & Decrease for more on this?
Finally, an easy way to change my SVGs to PNGs without losing quality. Highly recommend! A detailed explanation is available at Tool Collection.
This is a brilliant piece that offers a well-structured and deeply insightful perspective on a highly relevant topic today. Performance optimization tips are shared at 净化板.
Every sentence feels intentional. Among other resources, AI Extractor stands out for clarity.