எஸ்.பி.பி

எஸ்.பி.பி வாய்ஸ் யாருக்கு செமயா செட் ஆச்சு?… நம்பர் 1 யாரு?

ரஜினி, கமலுக்கு எஸ்.பி.பி வாய்ஸ்ல பாடல்கள் கச்சிதமா பொருந்திப் போறது தெரிந்த விஷயம்தான். அவங்க இல்லாம எந்தெந்த நடிகர்கள், எஸ்.பி.பி வாய்ஸுக்கு நியாயம் செஞ்சிருக்காங்க? யாருக்கெல்லாம் ரொம்ப பெர்ஃபக்டா பொருந்துற அளவுக்கு அவரோட பாடல்கள் அமைஞ்சிருக்கு? அதுக்கான காரணங்கள் என்னென்ன? – இதெல்லாம்தான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்.

ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னாடி டிடி-க்காக எடுத்த பேட்டி ஒண்ணுல எஸ்.பி.பி கிட்ட மாலா மணியன் ஒரு கேள்வி கேட்டிருப்பாங்க. “எப்படி உங்களோட வாய்ஸ் எல்லா நடிகர்களுக்குமே கச்சிதமா பொருந்திப் போகுது? அதுக்காக தனியா மெனக்கெடுவீங்களா?”-ன்னு அவங்க கேட்டிருப்பாங்க. அதுக்கு எஸ்பிபி சொன்ன பதிலே அவர் ஒரு லெஜண்ட் மட்டுமில்லை… ஒரு நேர்மையான கலைஞன்றதையும் ப்ரூவ் பண்ணியிருப்பாரு.

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

உண்மையிலேயே தான் அப்படியெல்லாம் மெனக்கெட்டேன்… இப்படியெல்லாம் ஹோம் ஒர்க் பண்ணேன்னு சொல்லியிருந்தா கூட நாம நம்பித்தான் ஆகணும். அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் இரண்டறக் கலந்து செட் ஆகியிருக்கு. ஆனா, அவர் அப்படியெல்லாம் சொல்லலை.

“ஒரு பாடலை வடிவமைக்கிறது முழுக்க முழுக்க இசையமைப்பாளர்தான். அவர் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே கொண்டு வர்றதுதான் பாடகரான என்னோட வேலையா இருக்கும். அதேநேரத்துல, அந்தப் பாடலுக்கு மெருகேத்த சில விஷயங்களை ட்ரை பண்ணலாமான்னு சொல்வேன். இசையமைப்பாளர் ஒத்துகிட்டா மட்டும் அதை செய்வேன். மத்தபடி, ஒரு பாடலின் வரிகள் என்ன? அந்தப் பாடல் சினிமாவில் இடம்பெறும் சிச்சுவேஷன் என்னன்றதை முழுமைய உள்வாங்கிட்டு, கேமரா முன்னாடி நான் அந்தப் பாடலுக்கு நடிச்சா எப்படி இருக்குமோனு கற்பனை பண்ணிகிட்டே அந்தப் பாடலைப் பாடுவேன். எல்லா பாடலும் இப்படித்தான் பாடுவேன். நான் பாடின அந்தப் பாடலை நடிகர்கள் தங்களோட திறமையான நடிப்பின் மூலமா தாங்களே பாடின ஃபீலை ஸ்க்ரீன்ல கொண்டு வருவாங்க. அப்படியான சிறந்த கூட்டு முயற்சியாலதான் இது அமையுது”-ன்னு கிரெடிட்டை மனசார ஷேர் பண்ணுவாரு அந்த மகத்தான கலைஞன்.

அந்த அற்புதமான பாடலுக்கு நிறைய நடிகர்கள் – ஹீரோக்கள் நியாயம் செஞ்சிருக்காங்க. அவங்க யாரெல்லாம்ன்றதை வரிசையா பார்ப்போம்.

மோகன்… எஸ்பிபி பாடல்கள்னு சொன்னாலே டிஃபால்டாவே நம்ம நினைவுக்கு வர்ற நடிகர்னா, அது மோகன்தான். ரெண்டு பேருக்குமே நூறு சதவீதம் பக்காவா சிங்க் ஆகும்.

மெல்லத் திறந்தது கதவு – தேடும் கண் பார்வை…, இதய கோயில் – நான் பாடும் மெளன ராகம்…, உதய கீதம் – சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்-னு இந்த காம்போ ப்ளே லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெருசு.

மோகனை பொறுத்தவரைக்கும் அவரோட சாஃப்ட் நேச்சர், தோற்றம், பாடி லேங்குவேஜ் எல்லாமே ரொம்ப ரொம்ப மென்மையான மனிதராதான் தன்னை வெளிப்படுத்துவார். அதனாலயே ரொம்ப இயல்பாவே எஸ்பிபியின் மெலடி வாய்ஸுக்கு பெர்ஃபக்டா செட் ஆச்சு. அதுவும் மனுஷன் மைக் முன்னாடி பாடும்போது பண்ற பெர்ஃபார்மன்ஸ், முக பாகவனைகள் எல்லாமே அவரே பாடுற ஃபீல் கொண்டு வரும். நூறு சதவீதத்துக்கும் மேலதான் இந்த காம்பினேஷனுக்கு ரேட்டிங் தரணும்.

எந்த அளவுக்கு எஸ்பிபி வாய்ஸும் மோகன் பெர்ஃபார்மன்ஸும் இரண்டறக் கலந்து இருக்கும்னு கேட்டா… மெளன ராகம் படத்துல வர்ற நிலாவே வா பாடலுக்கு மோகன் வாயசைச்சிருப்பார். ஆனால், மன்றம் வந்த தென்றலுக்கு மான்டேஜ் சாங். ஆனா, மன்றம் வந்த தென்றலுக்கு பாட்டுக்கும் மோகன் வாயசைக்கிற ஃபீல் நமக்கு டீஃபால்டாவே எற்படும் கவனிச்சிருக்கிங்களா?

அடுத்து விஜயகாந்த். இப்ப இருக்குற ஜெனரேஷனுக்கு விஜயகாந்த் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாவும், மாஸ் டயலாக் பேசுற ஹீரோவாவும்தான் தெரியும். ஆனா, 80ஸ், 90ஸ்ல அவர் ஆக்‌ஷனை தாண்டி, அவரோட படங்கள்ல ரொமான்ஸ் செம்மயா இருக்கும். அவர் நடிச்ச பல ரொமான்டிக் பாடல்கள் எஸ்பிபி பாடியவை.

ரொம்ப ரொம்ப சிம்பிளான எக்ஸ்பிரஷன், கண்கள்ல அவ்ளோ சாந்தமா காட்டுற விதம், பாடல்களுக்கு ஏத்தா மாதிரி பெர்ஃபக்டான பாடி லேங்வேஜும், உதட்டசைவும் ரொம்ப கச்சிதமா எஸ்பிபி ரொமான்ட்டிக் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார். குறிப்பாக, கிராமத்து பேக்ரவுண்ட்ல வரக் கூடிய அந்தக் காதல் பாடல்கள் பெர்ஃபெக்டா மேட்ச் ஆகியிருக்கும்.

அம்மன் கோயில் கிழக்காலே – சின்னமணி குயிலே…,  சின்னக் கவுண்டர் – முத்து மணி மாலை…, கோயில் காளை – பள்ளிக் கூடம் போகலாமா…, என் ஆசை மச்சான் – சோறு கொண்டு போறவளே… இப்படி பெரிய பட்டியலே தயாரிக்கலாம். அதே மாதிரி, விஜயகாந்த் ரொமான்ட்டிக் பாடல் காட்சிகளை விட, அவர் சோகமான முக பாவனைகளை வெச்சுகிட்டு எஸ்பிபி வாய்ஸ்ல பாடுற பாடல்கள் அவ்ளோ அற்புதமான அனுபவமா இருக்கும். அதுக்கு, ‘பூந்தோட்டக் காவல்காரன்’ படத்துல வர்ற ‘பாடாத தெம்மாங்கு’ பாடல்தான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எஸ்.பி.பி

நெக்ஸ்ட் பிரபு. தன்னோட படத்துக்கு எஸ்.பி.பி ரெக்கார்டிங்ல பாடும்போது நேர்ல போய் பார்த்து பிரபு நோட்ஸ் எடுப்பாரோன்ற டவுட் வர்ற அளவுக்கு எக்ஸாக்டா எஸ்பிபி வாய்ஸோட ஸ்க்ரீன்ல மேட்ச் பண்ணுவாரு. குறிப்பாக, ஜாலியான – துள்ளலான ரொமான்ட்டிங் சாங்ஸை சிரிச்சிட்டே பாடுறது எஸ்பிபி வழக்கம். அந்த மாதிரி பாடின பாடல்களை முகம் முழுக்க சிரிப்பை வெளிப்படுத்தி, செம்மயான மூட்-ஐ கிரியேட் பண்ணிடுவார் பிரபு. ராஜகுமாரன் படத்துல வர்ற ‘என்னவென்று சொல்வதம்மா…’ பாட்டுதான் இதுக்கு பர்ஃபெக்ட் எக்ஸாம்பிள்.

செந்தமிழ்ப் பாட்டு – சின்னச் சின்ன தூறல் என்ன…, கிழக்குகரை – எனக்கென்ன பிறந்தவ றெக்க கட்டி பறந்தவ..,  சின்னத்தம்பில வர்ற தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கேவும், போவோமா ஊர்கோலமும் ரெண்டு பேரும் சேர்ந்து நமக்கு கொடுத்த எவர்லாஸ்டிங் சாங்ஸ்.

`உழவன்’ படத்துல வர்ற ‘பெண்ணல்ல பெண்ணல்ல’ பாடல் வீடியோவுல முதல் இரண்டரை நிமிஷம் மட்டும் மீண்டும் ஒரு தடவை பாருங்க. பிரபுவோட ஆன்மாவில் எஸ்பிபி கலந்த மாதிரி அவ்ளோ பக்காவான எக்ஸ்பிரஷன் இருக்கும்.

அடுத்து, டிஃபால்டா கார்த்திக்தான் மைண்ட்ல வர்றார். எஸ்பிபி பாடல்களை எஃபர்ட்லெஸ்ஸா தான் பாடுற மாதிரியே பக்காவா ஸ்க்ரீன்ல தெரியக் கூடியவர் கார்த்திக். அது துள்ளல் பாடலா இருந்தாலும் சரி… ரொமான்ட்டிக் மெலடியா இருந்தாலும் சரி… சோகப் பாடலா இருந்தாலும் சரி… அவ்ளோ பெர்ஃபக்டா இருக்கும். பிரபு மாதிரியே கார்த்திக் கூடயும் எஸ்பிபிக்கு தனி அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமோன்னு டவுட் வர்ற அளவுக்கு இந்த காம்போ ஆகச் சிறப்பாவே இருக்கும்.

பாண்டி நாட்டு தங்கம் படத்துல வந்த ‘ஏலேலே குயிலே’ பாட்டு எல்லாம் அப்போ அதிரிபுதிரி ஹிட்டு. அதுவும் அந்த ‘பொன்னுமணி’ படத்துல வர்ற ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு…’, கிழக்கு வாசல் பட்டத்துல வர்ற ‘பச்சமலை பூவு’ எல்லாம் மேட் ஃபார் ஈச் அதர்தான். இப்ப மட்டும் இல்ல எப்பவுமே அந்தப் பாடல்களுக்கு அழிவே இல்லைனு உறுதியா சொல்ல முடியும்.

எஸ்.பி.பி

இளையராஜா காலத்தில் காதலித்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்… ரஹ்மான், யுவன் காலத்தில் காதலித்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டர்னு எல்லாம் சொல்வாங்க இல்லையா… அந்த லிஸ்ட்ல எஸ்பிபி – கார்த்திக் காலத்தில் லவ் பண்ணவங்க ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்னே சொல்லலாம். அதுக்கு ஒரே ஒரு உதாரணம் போதும்… இதய தாமரை படத்துல ‘வர்ற ஒரு காதல் தேவதை’ பாடலைப் பாருங்க.

Also Read – ரோட்ல சிரிச்சுட்டு போறவங்களைப் பார்த்து அழுதுருக்கேன்- நடிகர் ஜெயபிரகாஷ் கதை!

கார்த்திக்கிற்கு அப்புறம் முரளியும் எஸ்பிபிக்கு ரொம்பவே நியாயம் செஞ்சிருப்பார். எஸ்பிபி பாடிய மெலடிகளை அப்படியே உள்வாங்கி, அந்த ஆன்மாவைக் கொஞ்சமும் பிசிறு இல்லாம திரை மூலம் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார் முரளி. ‘இதயம்’ படத்துல வர்ற ‘இதயமே இதயமே’ ஒரு பாடல் போதும், இதை நிஜம்னு சொல்ல.

சரி, இவங்க பீரியடுக்கு அப்புறம்… கொஞ்சம் யூத்தா இருந்த நடிகர்களில் எஸ்பிபி வாய்ஸுக்கு நியாயம் செஞ்ச நடிகர் யாரு தெரியுமா? கொஞ்சம் சர்ப்ரைஸான சாய்ஸாதான் இருக்கும். ஆனா, பெர்ஃபர்க்ட்னு உறுதியா சொல்ல முடியும்…

அவர்தான் வினீத்.

நல்ல நடிகர். ஆனா, அவரோட ஒர்த்துக்கு ஈடான பாப்புலாரிட்டி இல்லை. நான் இங்கே மூணு பாடல் மட்டும் ரெஃபர் பண்றேன். போய்ப் பாருங்க. எவ்ளோ அட்டாகமான ஆக்டர்னு மட்டுமில்லை… எஸ்பிபிக்கும் ரொம்பவே நியாயம் செஞ்சவர்னு தெரிஞ்சிக்கலாம். ஒண்ணு… ‘ஆவாரம்பூ’ படத்துல வர்ற ‘சாமி கிட்ட சொல்லி வச்சு’ சாங். ரெண்டாவது ‘காதல் தேசம்’ படத்துல வர்ற ‘எனைக் காணவில்லையே நேற்றோடு’, மூணாவது ‘மே மாதம்’ படத்துல வர்ற ‘மின்னலே நீ வந்ததேனடி’ பாடல்.

இந்தப் பட்டியல்ல நான் நிறைய பேரை மிஸ் பண்ணியிருக்கலாம். நிறைய பாடல்களை மிஸ் பண்ணியிருக்கலாம். அதையெல்லாம் கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க. நாங்க தெரிஞ்சிரிக்கிறோம்.

1 thought on “எஸ்.பி.பி வாய்ஸ் யாருக்கு செமயா செட் ஆச்சு?… நம்பர் 1 யாரு?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top