உதயநிதி ஸ்டாலின்

“ஸ்மைலிக்கெல்லாம் அக்கப்போரா…. உதயநிதி தக்லைஃப் மொமண்ட்ஸ்!”

உதயநிதி தலையைச் சீவுபவர்களுக்குப் 10 கோடி அறிவித்த உ.பி சாமியாரின் கமெண்டுக்கு, `என் தலையைச் சீவ எதுக்கு பத்து கோடி? ஒரு பத்து ரூபாய் சீப்பைக் கொடுத்தா நானே சீவிட்டுப் போய்டுவேன்’னு கொடுத்த கவுண்டர் நார்த் வரைக்கும் வயலண்டா எதிரொலிச்சது. `நீ சாமியார்தானே… உன்கிட்ட எப்படி 10 கோடி இருக்கும். நீ உண்மையான சாமியாரா.. இல்ல டூப்ளிகேட் சாமியாரா.. எனக்கு உன்மேலயும் டவுட் இருக்கு இப்போ’னு இவர் சொன்னதை தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலையும், `அமைச்சர் உதயநிதி தலைக்கு உ.பி சாமியார் பரிசுத்தொகை அறிவிச்சது தவறு. அப்படி ஒருத்தரோட தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார்னா அவர் சனாதனத்தை பின்பற்றலைனு அர்த்தம்’னு சொல்லி ஆமோதிச்சிருக்கார். பொதுவா சினிமா இண்டர்வியூக்கள்லயும் சரி ஃபங்ஷன்கள்லயும் சரி உதயநிதி பேசுறதைக் கேக்குறதுக்கே தனி ஆடியன்ஸ் பேஸ் இருக்கு… ஆனா, 2019ல ஆக்டிவ் அரசியலுக்கு வந்ததுக்குப் பிறகு அரசியல் மேடைகள் தொடங்கி, பிரஸ்மீட், ஏன் சோசியல் மீடியாக்கள்லயும் சில பல தரமான தக்லைஃப் சம்பவங்களை அவர் பண்ணியிருக்கார். அப்படியான சில சமீபத்திய சம்பவங்களைத்தான் நாம பார்க்கப்போறோம்.

உதயநிதி Vs எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் இருந்து வேகவேகமா வெளிய பரபரப்பா வந்த எடப்பாடி ஒரு கார்ல போய் ஏறுறாரு. கூட வந்தவங்க அய்யா பொறுங்க அது உதயநிதி கார்னு சொல்றாங்க… அப்புறம் சுதாரிச்சு சாரினு சொல்லிட்டுப் போனார்… அப்படியே கட் பண்ணா சட்டப்பேரவைல உதயநிதி, “நீங்க மட்டுமில்ல மூணு நாளைக்கு முன்னாடி நானும் உங்க காரில் போய்டேன். அடுத்த முறை தாராளமாக என் காரை எடுத்துட்டுப் போங்க. ஆனால், தயவு செஞ்சு கமலாலயம் மட்டும் போய்டாதீங்க” அப்படின்னு கவுண்டர் போடுறார். இதத்தவிர உதயதி – இ.பி.எஸ் இடையே லேட்டஸ்டா இன்னொரு பஞ்சாயத்தும் போய்ட்டு இருக்கு. சனாதன சர்சைக்குப் பிறகு அவர் வெளியிட்டிருந்த அறிக்கைல, `சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’னு சொல்லிருந்தார். இதனால உதயநிதிக்கு எதிரா இ.பி.எஸ். அவதூறு வழக்கே போட்டிருக்கார். இதப்பத்தின கேள்விக்கு, `அவரைப் பத்தி நான் எதுவும் தரக்குறைவா பேசல. ஒருவேளை சனாதானத்தை எதிர்த்து பத்தி பேசுனதுனால அவருக்கு மனசு கஷ்டமாயிடுச்சுனு நினைக்கிறேன்’னு உதயநிதி தக்லைஃப் பண்ணிருப்பார்.

சனாதன சர்ச்சை

சனாதனத்தை ஒழிச்சே ஆகணும்ங்கிற அவரோட ஸ்டேட்மெண்ட்டுக்கு அமித் ஷா மாதிரி பிஜேபி பெரிய தலைகளே ரியாக்‌ஷன் காட்டுன டைம்ல, அதை ரொம்ப கேஷூவலா கடந்து போய்ட்டு இருக்கார். உதயநிதியும் சேகர் பாபுவும் பதவி விலகணும்னு பிஜேபி போராட்டம் நடத்துன அதே நாள்ல ட்விட்டர்ல ஒரே ஒரு கொசுவர்த்தி போட்டோவைப் போட்டு மாஸ் காட்டுனார். அதப்பத்துன டாக்ஸ் டிரெண்ட் ஆச்சு. அந்த ட்வீட்லயே ஒரு பிஜேபி ஆதரவாளர், `உங்க பேண்ட்டுக்குள் நடக்குறதை ஏன் போட்டோ போட்டு பதிவு பண்றீங்க. நீங்க வாயைத் திறக்குறப்போ அது வித்தியாசமா தெரியுது’னு கமெண்ட் பண்ணிருந்தார். அவருக்கு, `என் பேண்ட்டுக்குள் நடக்குறதை நீங்க ஏன் எட்டிப் பாக்குறீங்க. அது நல்ல பழக்கம் கிடையாது’னு ரிப்ளை ஃபயர் விட்டிருப்பார். அதேமாதிரி, அவரோட ஃபோட்டோவை கால் மிதியா பயன்படுத்துனது, செருப்பால தாக்குற மாதிரியான பதிவுகளுக்கும் அவர் கொடுத்த ரிப்ளை தெறி ரகம். கால் மேல கால் போட்டு உக்கார்ந்திருக்க போட்டோ, சின்னதா ஒரு ஸ்மைலினு அசால்ட் காட்டியிருப்பாரு. ன்னொருத்தரோ, இந்தில அவரைத் திட்டின வீடியோவை க்வோட் பண்ணி `How’s the josh’னு கேட்க, `இந்தி தெரியாது போடா’னு சொல்லிருப்பார்.

Also Read – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஏன் அவசியம்… 3 முக்கிய காரணங்கள்! #TNEmpowersWomen

இதெல்லாம் விட ஒரு ஸ்பெஷல் அயிட்டம் ஒண்ணு இருக்குங்குற மாதிரி, உதயோட ஸ்மைலி எமோஜி பத்தி ஆராய்ச்சி பண்ணி பிஜேபியோட அஸ்வத்தாமன் பதிவு பண்ணிருந்தார். `Ray Bull-ஓட Criminal Psychology புக்படி நடுராத்திரி 1 மணிக்கு ஒருத்தர் ஸ்மைலி எமோஜி போடுறார்னா அவர் பயத்துல இருக்கார்னு அர்த்தம்’னு ட்வீட் பண்ணிருந்தார். 2011ல வந்த எமோஜிக்கு 2006ல வந்த புக்கை ஒருத்தர் கோட் பண்றாரேனு தெரிஞ்சதாலவோ என்னவோ, அந்த ட்வீட்டுக்கு 2 ஸ்மைலி எமோஜியைப் பறக்கவிட்டிருப்பாரு உதயநிதி. சாத்தூர் பிரசாரத்தப்போ முதல்முறையா எய்ம்ஸை கையோட எடுத்துட்டு வந்திருக்கேன்னு சொல்லி செங்கலைத் தூக்கி பிரசாரம் பண்ண ஆரம்பிச்சது. சனாதன ஒழிப்பு மாநாட்டுல அவர் பேசுனது. ரெண்டுமே நேஷனல் லெவல்ல இவர் யாருப்பானு அதிர்வலைகளை ஏற்படுத்துன போட்டோஸ். இன்னுமே அவரோட பக்கெட்ல நிறைய தக்லைஃப் மொமண்ட்ஸ் இருக்கு. அவரோட பெஸ்ட் தக்லைஃப்னா இதுதான்பானு நீங்க நினைக்குற மொமண்ட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

11 thoughts on ““ஸ்மைலிக்கெல்லாம் அக்கப்போரா…. உதயநிதி தக்லைஃப் மொமண்ட்ஸ்!””

  1. I am sure this piece of writing has touched all the internet people, its really
    really fastidious piece of writing on building up new web site.

    Here is my web page; nordvpn coupons inspiresensation (tinyurl.com)

  2. Link exchange is nothing else except it is simply placing the
    other person’s webpage link on your page at proper place
    and other person will also do same for you.

    Feel free to visit my web page; vpn

  3. Hi! I’m at work surfing around your blog from my new
    iphone! Just wanted to say I love reading your blog and look forward to all your posts!
    Carry on the fantastic work!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top