அட்லீ. இன்னைக்கு இந்த பேரு இந்தியா முழுக்க உச்சரிக்கப்படுற ஒரு பேரா இருக்கு. 4 வருசத்துக்கு முன்னாடிவரைக்கும் இப்படியொரு சம்பவம் நடக்கும்னு இங்க யாருமே நினைச்சிருக்கமாட்டாங்க ஒருத்தரைத் தவிர. அது அட்லீ. அவரைப் பொறுத்தவரைக்கும் இது நடக்கும்னு அவருக்கு நல்லாவேத் தெரிஞ்சிருக்கும். அந்த கான்ஃபிடெண்ட் லெவல்தான் அட்லீ. அவர்மேல என்னதான் நாம பல விமர்சனங்கள வெச்சாலும் அட்லீயோட சக்ஸஸ் ஸ்பெசல்னு ஆறு விஷயங்கள் இருக்கு. அந்த 6 விஷயங்கள்ல அவர் எப்போதுமே ஜித்துதாங்கிறதை நாம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். அது என்னங்கிறதைதான் இப்போ நாம பாக்கப்போறோம்.
ஃபிளாஷ்பேக்
அட்லீயோட எல்லாப் படங்கள்லயும் ஒரு செம்ம ஸ்டிராங்கான ஃபிளாஷ்பேக் சீக்குவென்ஸ் இருக்கும். பெரும்பாலானா டைரக்டர்ஸ் ஒரு சம்பவம் எப்படி நடந்துச்சுன்னு நியாயப்படுத்தவோ ஒரு கேரக்டர் எப்படிப்பட்டதுன்னு நியாயப்படுத்தவோதான் ஃபிளாஷ்பேக்கை யூஸ் பண்ணிக்கிட்டிருந்தப்போ அட்லீ படங்கள்ல மட்டும் ஃபிளாஷ்பேக் கதையோட ஒரு முக்கிய பகுதியா இருக்கும். தெறியோட ஃபர்ஸ்ட் ஹாஃப்.. மெர்சல் செகண்ட் ஹாஃப், இதுலலாம் பெரும்பாலானா போர்சன்ஸ் ஃபிளாஷ்பேக்லதான் நிறைஞ்சு இருக்கும். இப்படி தன்னோட கதையில ஃபிளாஷ்பேக் பெரும்பங்கு வகிக்கிறதால அட்லீ தன் பட ஃபிளாஷ்பேக்குகளை இன்னும் பார்த்து பார்த்து எழுதுறாரு. அந்த ஃபிளாஷ்பேக்ல வர்ற கதாபாத்திரங்களை படம் முடிஞ்சும் நம்மளால மறக்க முடியாத மாதிரி மாத்துறாரு. அதனாலதான் ராஜா-ராணி ஜெய் – நயன்தாரா போர்சனை தமிழ் சினிமாவோட பெஸ்ட் ஃபிளாஷ்பேக்குகள்ல ஒண்ணா நம்மளால இன்னைக்கும் கொண்டாட முடியுது.
கேஸ்டிங்
இன்னைக்கு தளபதி68-ல விஜய்க்கு ஜோடியா ஜோதிகா நடிக்கப்போறாங்கன்னு நியூஸ் வந்துக்கிட்டிருக்கு. ஆனா இதை தன்னோட மெர்சல் படத்துலயே செயல்படுத்த நினைச்சவருதான் அட்லீ. மெர்சல்ல நித்யா மேனன் ரோலுக்கு முதல்ல அட்லீ கமிட் பண்ணது ஜோதிகாவைதான். சில தனிப்பட்ட காரணங்களால ஜோதிகா அந்தப் படத்துல இருந்து விலகுறமாதிரி ஆச்சு. அதுக்கப்புறம்தான் நித்யா மேனன் வந்தாங்க. அந்த அளவுக்கு படம் அண்டர் புரொடக்சன்ல இருக்கும்போதே இந்தப் படத்துல அவர் நடிக்கிறாராம் இவர் நடிக்கிறாராம்னு மீடியாவுல செய்திகள் பரபரக்கும்படி கேஸ்டிங் பண்றதுல அட்லீ கில்லி. தெறி-ல டைரக்டர் மகேந்திரன், நடிகை மீனாவோட பொண்ணு, மெர்சல்ல எஸ்.ஜே.சூர்யா, பிகில்ல ஜாக்கி ஷெராஃப், ஜவான் விஜய் சேதுபதின்னு அட்லீயோட கேஸ்டிங் நாலேட்ஜ் அவரோட சக்ஸஸுக்கு மிகப்பெரிய பலம்.
Also Read – ஷாருக்கான் பாலிவுட்டுக்கு மட்டுமல்ல… பாக்ஸ் ஆபிஸுக்கும் `பாட்ஷா’தான் ஏன் தெரியுமா?
ஸாங்க்ஸ்
தன்னோட மூணாவது படமான மெர்சலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானை முதன்முதலா மீட் பண்ணப்போன அட்லீ அவர்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா..? ‘சார்.. எனக்கு என்ன மாதிரியான ஸாங்க்ஸ் வேணும்னு உங்களுக்கு நான் ரெஃப்ரன்ஸ் கொடுக்கலாமான்னு கேட்டிருக்காரு. இதை பின்னாடி ஏ.ஆர்.ரஹ்மானே ஒரு இண்டர்வியூவுல சொல்லியிருக்காரு. அந்த அளவுக்கு.. ஆஸ்கர் நாயகனா இருந்தாலும் அவர்கிட்ட தன்னோட படத்துல எந்த இடத்துல என்ன மாதிரியான ஸாங்க்ஸ் வரணும்ங்கிறதை தெளிவா கேட்டு வாங்கத் தெரிஞ்சவருதான் அட்லீ. இதுவரைக்கும் தன்னோட 5 படங்கள்ல 3 மியூசிக் டைரக்டர்ஸ்கூட ஒர்க் பண்ணியிருக்காரு அட்லீ. அது ஜிவி பிரகாஷா இருந்தாலும் சரி, ஏ.ஆர்.ரஹ்மானா இருந்தாலும் சரி அவரால அவர் பட ஆல்பத்தை கண்டிப்பா ஒரு ஹிட் ஆல்பமா மாத்த முடியுது. இது அட்லீயோட முக்கியமான பலம்.
பெண்களை கவரும் அம்சங்கள்
அட்லீயோட முக்கியமான பலமா நான் இதைத்தான் பாக்குறேன். அட்லீ தன்னோட டார்கெட் ஆடியன்ஸ் லிஸ்ட்ல பெண்களைதான் முதல் இடத்துல வெச்சிருக்காரு. அதனாலேயே டபுள் மீனிங்கோ, ஆபாச வர்ணனைகளோ, கிஸ்ஸிங் சீனோ, படுக்கையறைக் காட்சிகளோன்னு பெண்கள் முகம் சுழிக்குற மாதிரியான விஷயங்கள் எதுவும் அவரோட படங்கள்ல இருக்காது. அதுக்குப் பதிலா அவரோட படங்கள்ல வர்ற பெண்களோட மனசுல என்ன இருக்குங்கிறதை அவர் ஸ்டிராங்கா எழுதுறாரு. ராஜா ராணி மாதிரியான ரொமாண்டிக் டிராமா படத்துல நயன்தாரா கேரக்டர் என்ன நினைக்குதுங்கிறதை ஆடியன்ஸுக்கு புரியுற மாதிரி ஸ்ட்ராங்கா எழுதுறார்னா இன்னொரு பக்கம் மெர்சல் மாதிரியான பக்கா கமர்சியல் படத்துலயும் அங்க விஜய்யே இருந்தாலும் ஹாஸ்பிட்டல் கட்டனும்ங்கிற முடிவை நித்யா மேனன் எடுக்குற மாதிரி எழுதுறாரு. பிகில் ‘சிங்கப்பெண்ணே’ ஸாங்க்லாம் வேற லெவல் சம்பவம். இப்படி பெண்களை குறி வெச்சு அட்லீ எழுதும் காட்சிகள் அவரோட மிகப்பெரிய ப்ளஸ்.
டெக்னிக்கல் அறிவு
மூணாவது படம் மெர்சல் விஜய்கூட, மிகப்பெரிய பட்ஜெட்.. டிரிபிள் ஆக்ட்ல விஜய், நிறைய ஷாட்ஸ்ல ஒரே நேரத்துல ரெண்டு விஜய் இருக்கணும் இப்படியான சிச்சுவேசன்ல ஒரு டைரக்டர் என்ன பண்ணுவாரு ஓரு பெரிய கேமராமேனை கூட வெச்சுக்கணும்னுதான நினைப்பாரு. ஆனா அட்லீ அந்தப் படத்துக்கு கேமராமேனா யூஸ் பண்ணது ஜி.கே.விஷ்ணுங்கிற ஒரு புதுமுகத்தை. அதுக்கு காரணம் அந்த அளவுக்கு அட்லீ, டெக்னிக்கல் விஷயத்துல செம்ம ஸ்ட்ராங்கா இருந்ததாலதான். அவரோட எந்தப் படத்துலயும் மேக்கிங்வைஸ் யாருமே எந்த குறையுமே சொல்ல முடியாது. அதேமாதிரி தமிழ் சினிமாவுல சிஜியை மிகச்சரியா, பர்ஃபெக்டா பயன்படுத்துற ஒரு சில டைரக்டர்ஸ்ல அட்லீயும் ஒருத்தர். அதுக்கு காரணம் அவரோட குரு டைரக்டர் ஷங்கர். அவரை மாதிரியே அட்லீயும் சிஜியை ரொம்ப லைவா பண்றதுல எக்ஸ்பர்ட். தனது ரெண்டாவது படமான தெறியில, ஒரு ரோட் ஃபைட் வரும். அது ஆக்சுவலா பாத்தீங்கன்னா செட் போட்டு பேக்ட்ராப்பை சிஜி பண்ணது, அதே மாதிரி பிகில் படத்துல வர்ற ஸ்டேடியம் கிரவுட்லாம் சிஜி, இப்படி அவரோட படத்துல வர்ற பெரும்பாலான சீக்குவென்ஸஸ் சிஜிலதான் இருக்கும். ஆனா அது எதுவுமே சிஜின்னு தெரியாத அளவுக்கு ரியல் லொக்கேசன்ல எடுத்த மாதிரியே பக்கா லைவா இருக்கும். இந்த டெக்னிக்கல் அறிவும் அட்லீயோட இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ்.
டயலாக்ஸ்
தமிழ் சினிமாவுல எதார்த்தமான டயலாக்ஸ் எழுதுற ஜாம்பவான்கள்ல ஒருத்தரான டைரக்டர் மகேந்திரன் ஒரு பேட்டியில, ‘அட்லீயோட டயலாக்ஸுக்கு நான் ரசிகன்னு சொல்லியிருப்பாரு’. அந்த அளவுக்கு அட்லீயோட படங்கள்ல டயலாக்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும். ‘நம்ம நேசிச்சவங்க நம்மள விட்டுட்டுபோயிட்டா நாமளும் இறந்துபோய்டனும்னு அவசியம் இல்ல’, ‘லவ்வ சொல்ல வெட்கப்படுறவன் வாழவே வெட்கப்படனும்’ மாதிரியான கியூட் டயலாக்ஸ் ஒரு பக்கம்னா இன்னொருபக்கம் ‘சாவுக்கு மேல பெரிய தண்டனை கொடுக்கணும்’, ‘அது விஜய்குமார் ஐபிஎஸ்ஸாகூட இருக்கலாம்’, ‘ஒரு தலைவன் வர்றனும்னா ஒரு யுகமே காத்திருக்கனும்’, ‘நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்’ங்கிற மாதிரியான மாஸ் டயலாக்ஸ்லயும் ஸ்கோர் பண்ணுவாரு. ஜவான்லகூட‘நான் வில்லனா வந்தா என்ன எதிர்த்து நிக்க இங்க ஆளே இல்ல..’ ப்பா என்னா மாஸ் டயலாக். சொல்லப்போனா இந்த ஒரு டயலாக்கோட வந்த டீசர்தான் ஜவானோட எதிர்பார்ப்பையே எகிறவெச்சுது. அந்த அளவுக்கு டயலாக் விசயத்துல ரொம்பவே ஸ்ட்ராங்குன்னு அடிச்சு சொல்லலாம்.