அவர் மகனா கடத்திருவாங்கடி… அரசியல்வாதிகளின் காதல் அட்ராசிட்டீஸ்!

ஒரேயொரு செங்கலை எடுத்துட்டு வந்து எதிர்கட்சிகளை அலறவிடுற எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், தலை மேல கைய தூக்கி நெட்டி முறிச்சு ‘நீ சொல்றதை ஏன் நான் கேக்கணும்’னு எதிர்கட்சிகளை கதற வைக்கிற நிதியமைச்சர் பி.டி.ஆர், என் கைல சிக்குன மொவனே நீ செத்தனு உணர்ச்சிவசப்பட்டு, கோவப்பட்டு கத்துற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மிக முக்கியமான, அதிக ஃபாலோயர்ஸ் இருக்குற அரசியல்வாதிகளா இவங்க இருக்காங்க. இவங்களோட டெரர் பக்கங்கள், இல்லைனா, தக்லைஃப் கொடுத்த சம்பவங்கள்தான் நமக்கு பெரும்பாலும் தெரியும். இவங்களோட ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகள் தெரியுமா?

Udhayanidhi - Kiruthiga
Udhayanidhi – Kiruthiga

உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா, ஸ்டோரி ஸ்கூல் டேஸ்ல இருந்து தொடங்கிச்சுனு சொல்லலாம். கிருத்திகா 12-வது படிக்கும்போது உதயநிதி காலேஜ் இரண்டாவது வருஷம் படிச்சுட்டு இருந்துருக்காரு. அப்போ, லியோ கிளப்னு கல்சுரல் ஈவண்ட்ஸ் நடத்துற கிளப்ல உதயநிதி பிரசிடன்டா இருந்துருக்காரு. கிருத்திகா, மெம்பரா இருந்துருக்காங்க. ஒருநாள் அந்த கிளப்ல சர்டிஃபிகேட்ஸ்லாம் கிருத்திகா எடுத்து வைச்சிட்டு இருக்கும்போது, டக்னு உதயநிதி போய், கிருத்திகா கைல இருக்குற சர்டிஃபிகெட்டை வாங்கி அதுல பிரசிடென்ட்னு இருந்த இடத்துல சைன் போட்டு திரும்ப கொடுத்துட்டு போய்ருக்காரு. “யாரு இவரு? நான் எதோ ஆட்டோகிராஃப் கேட்ட மாதிரி சைன் போட்டுட்டு போறாரு?”னு கலாய்ச்சிருக்காங்க. அதுக்கப்புறம் கல்சுரல்ஸ்ல பயங்கரமா வேலை பார்க்குறதை பார்த்துருக்காங்க. ரெண்டு பேரையும் தெரிஞ்ச காமன் ஃப்ரெண்ட், ரெண்டு பேரையும் இண்ட்ரோ பண்ணி வைச்சிருக்காங்க. அடிக்கடி உதய் அவங்க ஸ்கூல்க்குலாம் போறதைப் பார்த்துட்டு, கிரு ஃப்ரெண்ட்ஸ்லாம் வார்ன் பண்ணிருக்காங்க. ஏய், அரசியல்வாதி பையன். தூக்கிட்டுப் போய் எதாவது பண்ணிடுவான். பார்த்துக்கோ, இப்படிலாம் சொல்லிருக்காங்க. அதனாலேயே, கிருத்திகா முதல்ல பயந்து போய் இருந்துருக்காங்க. அப்புறம் ஃப்ரெண்ட்ஸா பழக ஆரம்பிச்சதும், என்ன இவ்வளவு பாவமா இருக்காருனு ஃபீல் பண்ணிருக்காங்க.

கிருத்திகாகிட்ட ஒருநாள் உதய் புரொபோஸ் பண்ணிருக்காரு. அப்போ, நான் ஸ்கூல்தான் படிக்கிறேன். கல்யாணம், காதல்லாம் பெரிய விஷயம். அதுக்கு இன்னும் நான் வளரணும், நாம ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. ஆனால், உதயநிதி “அதெல்லாம் இல்லை. இருந்தா லவ்வர்ஸா இருக்கலாம். இல்லைனா, இந்த ரிலேஷன்ஷிப்பே வேணாம்”னுதான் பேசி அடம் புடிச்சிருக்காரு. அப்புறம் கிருத்திகாவும் அவர் காதலை அக்சப்ட் பண்ணிட்டாங்க. இவங்களுக்கு இடைல சண்டை வரும்போதுலாம் அதைப் போய் தீர்த்து வைக்கிறது அன்பில் மகேஷ்தானாம். கிருத்திகா, காலேஜ் போறதுக்குள்ள இவங்க காதல் கதை தெரிஞ்சுடுச்சு. அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணதால, பெருசா எதிர்ப்பு எதுவும் வரலை. உதயநிதி அக்காவுக்கு தொடக்கத்துலயே தெரியுமாம். அக்கா ஃப்ரெண்டாலாம் அவங்க வீட்டுக்கு போய்ருக்காங்க. ஒருதடவை ரெண்டு பேருக்கு செம சண்டையாம். இது சரிவராது பிரிஞ்சரலாம்னு நினைக்கும்போது, அந்த டைம்ல உதயநிதி வீட்டுக்கும் தெரிஞ்சுருக்கு. “எந்தப் பொண்ணு என் பையன வேண்டாம்”னு சொன்னானு உதயநிதி அம்மா கோவம்லாம் பட்டாங்களாம். அப்புறம், பேசி சுமூகமா போய் கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. எதோ, சத்தியம்லாம் வாங்கியிருக்காங்க. ஆனால், அதெல்லாம் மீறிட்டாராம். அனேகமா அது அரசியல் ஆசையாதான் இருக்கும்ணு நினைக்கிறேன்.

PTR Palanivel Thiagarajan
PTR Palanivel Thiagarajan

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கதையும் சுவாரஸ்யமானதுதான். கௌதம் வாசுதேவ் மேனன் கொஞ்சம் டீட்டெய்லா கேட்டா, படமாவே எடுக்க வாய்ப்பு இருக்கு. பி.டி.ஆர் டாக்டரேட் பண்ண அமெரிக்காவுக்குப் போய்ருக்காரு. அங்கதான் அவரோட மனைவி மார்கரேட்டை முதல் முறை சந்திக்கிறாரு. நியூயார்க் பக்கம் உள்ள கிராமத்துல இருந்து நியூயார்க் யூனிவர்சிட்டிக்கு அவங்க படிக்க வந்துருக்காங்க. ஆரம்பத்துல நல்ல ஃப்ரெண்ட்ஸா பழகி வந்துருக்காங்க. மார்கரெட்டோட குணம்லாம் பி.டி.ஆர்க்கு ரொம்பவே புடிக்க ஆரம்பிச்சிருக்கு. ஒருநாள் சரி, இன்னைக்கு காதலை சொல்லிடலாம்னு முடிவு பண்ணு மார்கரெட்கிட்ட பி.டி.ஆர் சொல்லிருக்காரு. அப்போதாம் அவங்களும் லவ் பண்ணதை சொல்லிருக்காங்க. வீட்டுல தங்களோட காதலைப் பத்தி சொல்லிருக்காரு. அவங்க எந்த ரெஸ்பான்ஸும் பண்ணலை. இவரும் விட்டுட்டாரு. தன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது இவங்களையும் கூட்டிட்டு வந்துருக்காரு. அங்க மார்கரெட்ட அவங்க அப்பாம்மாவுக்கு புடிச்சுப் போய்ருக்கு. உடனே, காதலுக்கு சம்மதம் தெரிவிச்சிருக்காங்க. 2003-ல கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. பி.டி.ஆரே நம்ம இன்டர்வியூல, “என்னைவிட என் மனைவிக்கு அதிகமா என் தொகுதில வாக்களிப்பாங்க”னு சொல்லிருப்பாரு. அவங்க ஏரியால அவங்களுக்கு நல்ல பெயர்.

Seeman - KayalVizhi
Seeman – KayalVizhi

சீமான் காதல் கதைதான் இப்போ டிரெண்டிங். அண்ணன் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு பிள்ளைய காதலிச்சிருக்காரு. பத்தாம் வகுப்பு வரைக்கும் அந்தப் பொண்ணுகூட படிச்சிருக்காரு. ஆனால், காதலை சொல்லவே இல்லையாம். இப்போ, அந்த பொண்ணுக்கு சீமான் காதலிச்சது தெரியுமாம். அந்தக் காதல் நிறைவேறாதுனு தெரியுமாம். பருவகால உணர்ச்சி அது. எல்லா மனிதருக்கும் காதல் வரும். மேகம் மாதிரி காதல். காத்துல போற மாதிரி வரும்னு சொல்லுவாரு. தம்பிகள் இதை வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸா வைச்சு, காதல் மோட்டிவேஷன்னு சுத்துவாங்க. சரி, அண்ணனோட இப்போதைய காதல் கதை என்ன தெரியுமா? பொதுவாழ்க்கைக்கு வந்தாலே கல்யாணம் வேண்டாம்னு நிறைய பேர் முடிவு பண்ணிடுவாங்க. சீமானும் அப்படிதான் இருந்துருக்காரு. பழ.நெடுமாறன்ல இருந்து எல்லாருமே ஃபோர்ஸ் பண்ணும்போதுதான் அவர் அந்த முடிவுக்கு வராறு. சீமானின் மனைவிக்கு சீமானை அவங்க அண்ணன் வழியாதான் தெரியுமாம். இப்பொடியொருத்தர் பேசுறாரு, பாருனு சொன்னதும். அவங்க பார்த்துட்டு சீமானை தொடர்புகொண்டு பேசிருக்காங்க. உடனே, அவரும் சந்திக்கலாம்னு சொல்லியிருக்காரு.

முதல் தடவை பார்த்ததும், புரட்சி வெல்லட்டும்னுலாம் சொல்லியிருக்காரு. அப்புறம் அவங்களோட நட்பு வளர ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சிருக்கு. சீமான்தான் முதல்ல தன்னோட காதலை கயல்விழிகிட்ட தெரிவிச்சிருக்காரு. கயல்விழிக்கும் அவரை ரொம்ப புடிச்சிருந்ததுனால அக்சப்ட் பண்ணிருக்காங்க. ஆரம்பத்துல கயல்விழி வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சு, அமைதியாதான் இருந்துருக்காங்க. அவங்க காளிமுத்துவோட மகள் வேற. மணிவண்ணன்லாம் போய் பேசி கல்யாணத்துக்கு அக்சப்ட் பண்ணிக்க வைச்சிருக்காங்க. அப்புறம் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. அவங்க காதலிக்கும்போதுல இருந்தே ரொமான்ஸா பேசிக்கிறதைவிட அரசியல் ரீதியாதான் நிறைய பேசிப்பாங்களாம்.

Also Read – வெள்ளை சட்டை போட்ட டான்.. விக்ரமனின் தரமான சம்பவங்கள்!

அரசியல்ல இருக்குறவங்க எப்பவுமே கரடு முரடா பேசுவாங்க, பொலிட்டிகலா தான் இருப்பாங்க அப்டினு சொல்லுவாங்க. ஆனால், அவங்களையும் சோர்வடையாமல் இயக்குறது வெளிய தெரியாத இந்த மாதிரியான குட்டி காதல்கள்தான். அவங்களுக்கு காதல் தேவைப்படுது. நீங்களும் போய் லவ் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top