ரஜினி, கமல், விஜய், சூர்யானு டாப் ஸ்டார்ஸுக்குலாம் இடைல நிறைய போட்டிகள் இருக்கும். ஆனால், டாப் ஸ்டாருக்கு போட்டி அவர் மட்டும்தான். அவருக்கு டஃப் கொடுக்க இன்னொருத்தன் பொறந்துதான் வரணுமா? யாராலயும் அவரை தொட முடியாதானு கேட்டா.. அதை நான் சொல்றேன்னு விக்ரம் வருவாரு. யோவ் நீ என்ன இங்கனு கேட்டா.. அதை நான் சொல்றேன்னு அஜித் வருவாரு.. இருங்க உங்களையெல்லாம் மீம் கிரியேட்டர்ஸ் கிட்ட சொல்றேன்னு கிளம்புனா? ஒரே கூத்தா இருக்கும்ல!
எனக்கு தெரிஞ்சு 6 வருஷமா டீசர் விடுற துருவ நட்சத்திரத்தையும்.. தீபாவளி, பொங்கல்னா பரவால்ல ஹோலி, வுமன்ஸ் டேக்குலாம் போஸ்டர் விடுற, போஸ்டர்களை மட்டுமே விடுற நம்ம டாப் ஸ்டார் நடிச்ச அந்தகன் படத்தையும் ரோஸ்ட் பண்ணா?
விக்ரம் படத்துக்கு டீசராவது வருது, பிரஷாந்த அட்லீஸ்ட் போஸ்டராவது கலர்கலரா விடுறாரு.. ஆனால், ஒரு ஸ்டார் படம் நடக்குதா.. இல்லையானு தெரியாமலேயே இருக்குதே.. அதையும் லைட்டா போற போக்குல ச்சு.. சொல்லிட்டு போவோம். காஸா? பணமா? அடிதான.. புதுசா! வாங்குவோம்.
கௌதம் மேனன் – சூர்யா கூட்டணினு சொன்னாலே கொய்யால மேஜிக் தான். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம்லாம் காலம் கடந்து நிற்கும் கௌதம் காப்பியங்க.. இந்த லிஸ்ட்ல மூணாவது சேர வேண்டிய படம்தான் துருவ நட்சத்திரம் அப்டினுதான நினைக்கிறீங்க.. அதான் இல்லை. சென்னையில் ஒரு மழைக்காலம் படம்தான் இவங்க மூணாவதா சேர வேண்டிய படம். அந்தப் படத்துக்கு பூஜைலாம் போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங்லாம் போய், எட்டு மாசம் சூர்யா வெயிட் பண்ணி, சரி.. இந்த ஆளை நம்புனா வேலைக்கு ஆவாதுனு வெளிய வந்து அடுத்த படத்துக்கு போய்ட்டாரு. சென்னையில் மழைக்காலம் வர்றதே சோதனை காலம்தான். அதையே டைட்டிலா வைச்சா எப்படி? சோதனைகள் வரத்தான செய்யும். அப்படி சென்னையில் ஒரு மழைக்காலம் படம் சென்னை வெள்ளத்துல மூழ்கிடுச்சு. அப்புறம் வந்த அப்டேட்.. என்னடா டிகாப்ரியோ.. கிறிஸ்டோபர் நோலன்.. ஜி.வி.எம் – சூர்யா கூட்டணி தெரியுமானு ஃபயர் விடுற அளவுக்கு ஹாலிவுட்டு ஸ்டைல்ல சும்மா வேறமாறி சம்பவம் பண்ணப்போறேன்னு தரமா துருவ நட்சத்திரம் படம் அனைன்ஸ்மெண்ட் வந்துச்சு. படம்லா நடக்குது, சீக்கிரம் அப்டேட் வரும்னு, ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்குனு சிங்கம் 2 படத்துக்கு அப்புறம் ரெண்டு தரப்பு ரசிகர்களும் வெயிட் பண்ணாங்க.
கனவு படமான துருவ நட்சத்திரம் அப்டேட்டோட வருவாங்கனு பார்த்தா, படத்தை புதைச்சு அஸ்தி எடுத்துட்டு வந்தாங்க, படம் ட்ராப் ஆனப்போ சூர்யா – ஜி.வி.எம் ஃபேன்ஸுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமா இருந்துச்சு. 2012-ல சூர்யாகிட்ட போய் பாதி கதை சொல்லி, சூர்யா.. மீதி எங்க ஜி.வி.எம்னு கேட்க ஏங்க காக்க காக்க, வாரணம் ஆயிரம்லாம் முழுசா கேட்டுட்டா வந்து நடிச்சீங்க? இந்த படத்துலயும் அதேமாதிரி வந்து நடிங்க முதல் பாதி ஷுட்டிங் முடியுறதுக்குள்ள மீதி கதையை நான் சொல்லிட்றேன்னு சொல்லிருக்காரு. அதெல்லாம் முடியாது.. முழுக்கதை வந்தாதான் நடிப்பேன்னு சூர்யா அடம்பிடிச்சு ஆறு மாசம் வெயிட் பண்ண, ஜி.வி.எம் ஆறுதலா பேசி அட்டகாசமா கதை எழுதிட்டு வறேன்னு போக.. கடைசி வர பாயின்ட் வராமல். ரஜினி படத்துக்கு வேணுனா முழுக்கதை சொல்லுவேன், நீங்க வந்தா உங்க நடிப்பை பொறுத்துதான் கதை மாறும்னு சொல்ல பஞ்சாயத்து பெருசாகி, சூர்யா கடுப்பாகி, துருவ நட்சத்திரம் மிஸ்ஸாகி, மியாசாகி கைக்கு எட்டாமல் போச்சு. இனிமேல் அவர் படத்துல நான் நடிக்க மாட்டேன், எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வந்துச்சுனு சூர்யா ஸ்ட்ராங்கா செம போல்டா அறிக்கை விட்டு அலப்பறை பண்ண, கௌதமும் இதை அவர் பேசி தீர்த்துக்கலாம் அறிக்கை விட்டு ஏன் இப்படி பண்றாரு தெரியல.. இனிமேல், அவர்கிட்ட போகும்போது முழுக்கதையையும் எடுத்துட்டுதா போவேன்னு சொல்லி சமரச சன்மார்க்க சுத்த மார்க்கமா பேட்டிகள்ல குறிப்பிட்டாரு.
எனக்கு என்ன டவுட்டுனா அப்போ.. மாஸ், தானா சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம், என்.ஜி.கே, காப்பான், எதற்கும் துணிந்தவன்லாம் கதை கேட்டுமா நடிச்சீங்கன்றதுதான். ரைட்டு..!
சூர்யா இல்லைனா என்ன.. நான் விக்ரம் வைச்சு எடுக்கப்போறேன்னு ஜி.வி.எம் அனைஸ்மெண்ட்லாம் விட்டு மாஸ் பண்ணிட்டு இருந்தாரு. 2015-ல இதை சொன்னாரு. 2017-ல செம மாஸா, உண்மையா ஹாலிவுட் ரேஞ்சுல டீசர் ஒண்ணை ரிலீஸ் பண்ணாரு. அதுவரைக்கும் வந்த டீசர்ல அதுதான் நீளமான டீசர்னு சொன்னாங்க. கெட்ட வார்த்தையெல்லாம் மாஸா மாத்தி வைச்சது அவர்தான். தமிழ்ல பேசலாமா ஜான், இங்கிலீஷ் எனக்கு கொஞ்சம் பிரச்னைனு வில்லன் சொல்ல.. நானும் உனக்கு பிரச்னைதான்னு விக்ரம் சொல்ல இதெல்லாம் முடிஞ்சு உன்னை பார்க்கும்போது அல்லு உட்ரும் உனக்குனு சொல்லுவாரு. அப்படியே உயிருள்ள வேடன்.. ரணகள வீரன்னு.. ஹாரிஸ் மாம்ஸ் மியூசிக் வேற சும்மா பட்டாசா இருந்துச்சு. அப்போபும் ரிலீஸ் தேதி சொல்லல. விக்ரம் பிறந்தநாளுக்கு திரும்பவும் ரெண்டாவது டீசர் வெளியிட்டாங்க, பிளேன்ல இருந்து இறங்கி கோர்ட்ல பட்டன் கழட்டிட்டு வருவாரு. அப்பவும் ரிலீஸ் தேதி சொல்லல. படத்தை ரிலீஸ் பண்ணுவீங்களா, மாட்டீங்களா? படம் நடக்குதா? நடக்கலையா?னு டென்சன் ஆக.. மூணாவது டீசர் வெளியிட்டாங்க. இன்னும் 2 டீசர் வெளியிட்டா தியேட்டர் செலவு மிச்சம்.. படத்தை ட்ரெய்லர்லயே பார்த்துப்போம்னு கலாய்க்க. என்னடா கலாய்க்கிறீங்க? இப்ப பாருனு ஸ்பெஷல் அயிட்டமான சிங்கிள் ஒண்ணு ரிலீஸ் பண்ணாரு. இது நல்லாருக்கு. ஹாரிஸ் மாம்ஸ் பேக்னு, கொஞ்சம் திரும்புனாங்க. அப்படியொரு மெலடி ஹாரிஸ் – கௌதம் – தாமரை கூட்டணில. இன்னும் ஒரு வாரத்துல ட்ரெய்லர், சீக்கிரம் ரிலீஸ், 2-வது சிங்கிள்னு சொல்லியிருக்காங்க. பேசிகிட்டே இருக்கீங்களே தவிர பாம்பை வெளியவிட மாட்றீங்களேனு எல்லாரோட மைண்டும் மாறிடுச்சு.
உங்க அநியாயத்தையும் அக்ரமத்தையும் தட்டி கேக்க ஒருத்தன் வருவான்டானு நினைக்க. அந்தகன் போஸ்டர் வந்துச்சு. டாப் ஸ்டார் பேக்னு சொன்னாங்க. ஆனால், போஸ்டர் மட்டும்தான் வந்துட்டு இருக்குது.
Also Read – திரை தீப்பிடிக்கும்..ஸ்கிரீன்லாம் கிழியும் – இந்தப் படங்களை ரீ-ரிலீஸ் பண்ணா!
இந்தில ஸ்ரீராம் ராகவன் டைரக்ஷன்ல 2018-ல அந்தாதூன்னு படம் ரிலீஸாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டாச்சு. அவரே மூணு வருஷத்துக்கு ஒருதடவைதான் படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவாரு. இப்போ அவரோட அடுத்த படமே ரிலீஸ் ஆக போகுது. அதாங்க கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி நடிக்கிற மேரி கிறிஸ்துமஸ் இவர் படம்தான். அந்தாதூன் படத்தை நிறைய பேர் பார்த்துட்டாங்க. இருந்தாலும் மலையாளம், தமிழ்னு பல மொழிகள்ல ரீமேக் ஆக ஆரம்பிச்சுது. மலையாளத்துல பிரித்வி நடிச்சு பிரம்மம் பேர்ல ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றுச்சு. ரொம்ப நாளா கம்பேக் கொடுக்க கம்பு சுத்திட்டு இருக்குற பிரஷாத்துக்கு நல்ல கம்பேக்கா இருக்கும்னு இந்த படத்தை அவரோட அப்பா தியாகராஜன் வாங்கி பிரபல இயக்குநர்கள்கிட்ட கொடுத்து ரீமேக் பண்ண முயற்சி பண்ண, அவங்க முடியாதுனு சொல்ல. கடைசில ஜே ஜே ஃபிரட்ரிக் இயக்கு அக்சப்ட் பண்ணாரு. ஒருகட்டத்துல அவர் டென்சனாகி வெளிய போக, என் மகன் படத்தை நானே டைரக்ட பண்றேன்டா, எவனும் வேணாம்னு தியாகராஜனே களத்துல இறங்கி டைரக்ட் பண்ணாரு. ஆனால், இன்னைக்கு வரைக்கும் படம் ரிலீஸாகலை. ஒருத்தர் என்னனா, டீசர்.. பாட்டுலாம் ரிலீஸ் பண்ண படம் எடுத்துருக்காரு. இன்னொருத்தர் என்னனா.. எல்லா நிகழ்ச்சிக்கும் பண்டிகைக்கும் போஸ்டர்ஸ் ரிலீஸ் பண்ண படம் எடுத்துருக்காரு. இந்தியில் மாபெரும் வெற்றி அடைந்த படம், தமிழில் வரலாறு படைக்க வருகிறதுனு போஸ்டர் போட்டாங்க. படத்தைவிட போஸ்டர்ஸ்லாம் இப்போ வரலாறு படைச்சிட்டு இருக்கும்.
நியூ இயர், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குலாம் போஸ்டர்ஸ் விட்டா பரவால்ல தலைவன் மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டேக்குலாம் போஸ்டர் ரிலீஸ் பண்றாப்புல. சரி, அதுவும் எமோஷனலான விஷயம்னு விட்ருவோம். 2021-ல போஸ்டர் ரிலீஸ் பண்ண தொடங்கி 2023 வந்துடுச்சு. இப்பவும் வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டுனு போஸ்டர் போட்னு இருக்காங்க. இடைல மீம்ஸ் வேற.. ஹலோ.. பிரசாந்த் சாரா.. வீட்ல சின்ன விசேஷம்.. போஸ்டர் ஒண்ணு ரிலீஸ் பண்ண எவ்வளவு செலவாகும்னு செய்கை வேற. எதுவுமே இல்ல வைங்க.. அந்தகன் நியூ போஸ்டர்னு அவங்களே ஒண்ணு ரிலீஸ் பண்றாங்க. தூங்கும்போதுகூட காலாட்டனும் இல்லைனா பொணம்னு அடக்கம் பண்ணிடுவாங்கனு சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் அந்தகன் படமும் தன்னோட இருப்பை காட்டிட்டே இருக்கு. ஆனால், விடாமுயற்சினு ஒருத்தர் இறங்குனாரு. புராஜெக்ட் என்ன ஆச்சு? ஷூட்டிங் நடக்குதா? இல்லையா? ஒண்ணும் தெரியல. விட்டா டாப் ஸ்டார் இடத்தை அல்டிமேட் ஸ்டார் நிரப்புவாரு போல இருக்கு.
டேய், சமூகத்துல எவ்வளவு பிரச்னை இருக்கு அதெல்லாம் பத்தி பேசாமல், இதை பேசுறியேனு நீங்க கேக்குறது புரியுது. லைஃப்ல என்டர்டெயின்மெண்ட் முக்கியம் பாஸு.