மனிதர்களை விட திறமைசாலிகள் மட்டுமல்ல, இந்த விஷயத்திலும் AI-கள் கெத்துதான்!

மனிதர்களை விட மிக வேகமாக கணக்குகளைப் போடும், சிக்கல்களைத் தீர்க்கும், புதிய புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும், அவற்றை உரிய இடத்தில் பயன்படுத்தவும் செய்யும், மனித மூளை சிந்திக்க திணறுவதைக் கூட சர்வசாதாரணமாக சிந்திக்கும், என AI(செயற்கை நுண்ணறிவு)-களின் திறனை பலவாறாக வியந்துகொண்டிருக்கும் போது, இன்னொரு புதிய திறமையையும் காட்டி பலரையும் ஆச்சர்யப்படுத்தும் படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் கொல்ராடா மாகாணத்தின் Fair fine arts competition-ல் Jason Allen என்பவர் “Digital Arts / Digitally-Manipulated Photography” என்ற பிரிவின் கீழ் ஒரு படத்தைப் போட்டிக்காக சமர்பித்திருக்கிறார். அந்தப் படத்தை நீங்கள் ஒரு முறை பார்த்து அது எப்படி இருக்கிறது என சொல்லுங்கள்.

Art work by an AI

அருமையா இருக்குல்ல. இந்தப் படம் தான் அந்தப் போட்டியில் முதல் பரிசையும் வென்றது. அதற்கடுத்த சில நாள்களில் ட்விட்டரில் ஒரு சர்ச்சை வெடித்தது. இந்தப் படத்திற்கு எப்படி பரிசு வழங்கலாம்? இதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்ச்சைகள் வெடித்தன. அந்த சர்ச்சையைப் பார்ப்பதற்கு முன் வேறு ஒரு கதையைப் பர்ப்போம்.

எளிமையான ஆங்கிலத்தில் நீங்கள் சொல்லும் ஒரு வாக்கியத்தை வைத்து படங்களை உருவாக்கும் AI என்ஜின்கள் சமீப மாதங்களில் அதிகமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. Dall-E, Imagen, Midjourney போன்றவை சில AI மாடல்கள்.

இணையத்தில் இப்போது நீங்கள் சுலபமாகவே சில AI மாடல்களைப் பயன்படுத்தி இத்தகைய படங்களை உருவாக்க முடியும். உதாரணமாக Dall-E மாடலின் திறன் குறைந்த mini Dall-E அடிப்படையில் இயங்கும் craiyon மூலம் நீங்களுமே இத்தகைய படங்களை உருவாக்கலாம்.

  • Statue of Liberty in Madurai
  • Rajinikanth in Gladiator arena
  • Minions roaming in chennai temples
AI created image

என உங்கள் கற்பனையை சிதறவிடுங்கள்…

இப்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த மாடல்களில் நாம் உருவாக்கும் படங்கள் தெளிவற்றவையாகவும் கொஞ்சம் கற்பனை வறட்சியுடனும் இருக்கின்றன. இந்தக் குறைகள் இல்லாமல் சிறந்த படங்களை உருவாக்கும் AI மாடல்கள் அதிகமான Processing power தேவைப்படும் மாடல்களாக இருக்கின்றன.

Also Read : Drop Box, Cloud Storage-லாம் பழங்கால டெக்னாலஜி… புதுசு என்ன தெரியுமா..?

இப்போது, முதலில் சொன்ன கதைக்கு வருவோம். Fair fine arts competition போட்டிக்கு Jason Allen மேலே சொன்ன AI மாடல்களில் ஒன்றான Mid Journey மூலமாக உருவாக்கிய படத்தை மெருகேற்றி தான் சமர்ப்பித்திருக்கிறார். விதிமுறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது மெருகேற்றப்பட்ட கலைப் படைப்பை சமர்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, ஆலன் விதிமீறலில் ஈடுபட்டார் எனவும் கூற முடியாது. சமர்ப்பிக்கும் போதே ” I created them via Midjourney” என குறிப்பிட்டிருந்தார், ஆலன். போட்டியின் நடுவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போக படத்தின் கலைநயத்தில் மயங்கி நடுவர்களும் முதல் பரிசை அறிவித்துவிட்டார்கள்.

அதன்பிறகு இணைய உலகமே இரண்டாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது. “நம் கண்களின் முன்னாலேயே கலைநயம் மடிவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” என ஒரு தரப்பு வாதிட்டுக்கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்போ, “இது மனிதர்களின் கலை நயத்தை இன்னும் மேம்படுத்தவே செய்யும்” என வாதிடுகிறது.

Text to Image AI generatorகள் அறிமுகமாகத் தொடங்கி இருக்கும் ஆரம்ப காலத்திலேயே இப்படி ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது, போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது. இவை முழுமையாக வளர்ந்து நிற்கும் போது ‘ஓனர்னா ஓரமா போடா’ என்ற ரேஞ்சில் தான் வருங்கால வான்கோக்களையும் பிக்காசோக்களையும் டாவின்சிக்களையும் நடத்துவோம் எனத் தெளிவாகத் தெரிகிறது.

1 thought on “மனிதர்களை விட திறமைசாலிகள் மட்டுமல்ல, இந்த விஷயத்திலும் AI-கள் கெத்துதான்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top