நடிகர் பிரபாஸ்.. மாஸூக்கெல்லாம் மாஸ் பாலையான்னா, பாஸூக்கெல்லாம் பாஸ் நம்ம பிரபாஸ்தான். நீங்க என்ன வேணாலும் ஓட்டிக்கங்க, நான் பண்றதை பண்ணிட்டே இருப்பேன்னு பாகுபலியில ஆரம்பிச்சு பேன் இந்தியா ஸ்டாரா வலம் வந்துக்கிட்டிருக்கார். இவரோட படங்களோட லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தா மொரட்டுத்தனமான சம்பவங்கள்லாம் பண்ணியிருக்கார். என்ன பாலையா அதிகம் பண்ணதால இவர் பண்ணதை யாரும் பெரிசா கவனிக்க மறந்துட்டாங்க போல. பாலையா ஆக்ஷன் பார்க்குறப்போகூட தலைவன் மேனரிசத்துக்கு அடிக்கலாம்யானு தோணும். ஆனா பிரபாஸ் அதை பண்ணதை பார்க்குறப்போதான் குபீர் சிரிப்பு வர்றதை தடுக்க முடியலை. பேன் இந்தியா ஸ்டாரா வர எல்லோரும் முயற்சிக்கலாம், ஆனா அப்படி வந்ததுக்கு அப்புறமா என்ன பண்ணக்கூடாது அப்படிங்குறதுக்காகவே நான் படம் நடிக்கிறேன்னு தெய்வத்துக்கிட்ட சத்யம் பண்ணிட்டு, தெய்வம் கேரக்டர்லயே நடிச்சார். பாகுபலியில பிரம்மாண்ட ஓப்பனிங்ல ஆரம்பிச்ச பேன் இந்தியா ஸ்டார் பட்டம் இப்போ பேன் இந்தியா சுட்டி ஸ்டாரா இருக்காரோனு தோண வைக்குது. ஏன்னா சமீபகால சம்பவங்கள் அப்படி. இதையெல்லாம் யார் மனசையும் புண்படுத்துறதுகாக அல்ல, பேன் இந்தியன் ஸ்டாரோட ரசிகனா என்னோட கவலைனு கூட சொல்லலாம்.

பிரபாஸை பொறுத்தவரைக்கும் அவருக்கு படம் பண்ணனும்னா சில கண்டிசன்ஸ் இருக்கு.முதல்ல எனக்கு கதை தேவையில்லை, அது இயக்குநருக்கு தெரிஞ்சிருக்கணும்னு அவசியமும் இல்ல. ஆடியன்ஸ் அந்த கதைகளை/ படங்களை கொண்டாடியே ஆகணும். இல்லைனா அதைவிட கொடூரமா அடுத்த படங்கள்ல நடிப்பேன். 350 கோடி டூ 500 கோடி பட்ஜெட்டுக்கு மேலதான் நடிப்பேன், 1000 கோடின்னா டபுள் ஓகே. ஆனா வசூல் பத்திலாம் தயாரிப்பாளர்கள் கேட்க கூடாது. முழுக்க வி.எப்.எக்ஸ் இருக்கணும். இன்னும் என் முகத்தை மட்டும் எடுத்து பயன்படுத்திக்கலாம், என்னை ஃப்ரீயா விட்டா சம்பளத்துல கணிசமான தொகையை குறைச்சுக்குறேன். முக்கியமா அது பேன் இந்தியா படமாத்தான் இருக்கணும். டயலாக் மட்டும்தான் இருக்கணும், மகேஷ்பாபுவுக்கு போட்டியா என்ன நடிக்க சொல்லக் கூடாது. இதுபோக இணையதளத்துல ட்ரோல் பண்ணா ஓம் கம் டூ ரூம்னு கூப்பிட்டு வெளுக்கிற அளவுக்கு இயக்குநர்கள் தயாரா இருக்கணும். நான் ஆல்ரெடி பூமியில நடக்குற மாதிரி கதைகள்ல நடிக்கிறது இல்ல, போனா போகட்டும்னு நடிக்கிறேன். அடுத்தடுத்து வர்ற கதைகள் செவ்வாய், வியாழன் ஏன் சூரியன்ல கூடநடக்குற மாதிரி இருக்கணும். என்னால அதுவும் முடியும்ங்குறதுக்கு சின்ன எக்ஸாம்பிளா பிரபாஸ் நடிச்சதுதான் ஆதிபுருஷ். இப்படித்தான் கண்டிசன்ஸ் வச்சு படங்கள் பண்றாரோனு டவுட்டாவே இருக்கு.
பாகுபலிக்கு முன்னால இவரோட கரியர்ல நிறைய 100 நாட்கள் ஓடின படங்கள் அதிகமாவே இருக்கு. ஆனா அதுலயும்கூட ஆக்ஷன் சீக்வென்ஸ்லாம் லாஜிக் இல்லாமத்தான் இருக்கு. தெலுங்கு சினிமாவுல லாஜிக்கா அப்படினு நினைக்கிறது கேட்குது. ஆனா சினிமாவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடானு கேள்வி வர்றதையும் தடுக்க முடியலை. மிர்ச்சி, ரிபல் மாதிரியான படங்கள் அங்க சூப்பர் ஹிட்டா ஓடியிருக்கு. ஆனா அவரோட கரியர்ல கொடுத்த சொதப்பல்களும் இருக்கு. தமிழ்ல அஜித் நடிப்புல வெளியான பில்லா படத்தை எடுத்து தெலுங்குல ரீமேக் பண்ணியிருப்பார் பிரபாஸ். தமிழ் படத்தை தமிழ்ல எடுக்குறப்போவே அதை செம மாசா எப்படி எடுத்திருப்பாங்கனு நமக்கு எல்லாம் தெரியும். ஒருமுறை வாய்ப்பு இருந்தா யூட்யூப்ல தெலுங்கு பில்லா இருக்கு பாருங்க. அதை தெலுங்குல பிரபாஸ் அடம்பிடிச்சு ரீமேக் பண்ணியிருப்பார். தமிழ்ல டைட்டில் ஃபாண்ட்டே அவ்ளோ மாஸா இருக்கும். இன்னைக்கும் அந்த டைட்டில் டிசைன்க்கு ரடிகர்கள் இருக்காங்க. ஆனா அதை தெலுங்குல மட்டித்தனமா பண்ணதோட மட்டும் இல்லாம, ஓப்பனிங் சீன், செஸ் விளையாடுற சீன், கார் பாம் ப்ளாஸ்ட் சீன், நயன்தாரா இண்ட்ரோ சீன், பில்லா கார்ல தப்பிக்கிற சீன்லாம் தமிழ் சினிமாவோட ஒன் ஆஃப்த பெஸ்ட் ஆக்ஷன் சீக்வென்ஸ்னு சொல்லலாம். ஆனா, அதை தெலுங்குல, விஎப்.எக்ஸ்லாம் பண்ணி ஏதோ கார்டூன் கேம் மாதிரி இருக்கும். இதுபோக வேலு பில்லாவா மாறுகிற சீன்லாம் அஜித் மாஸ்அப் வீடியோக்கள்ல நிச்சயமா இடம்பிடிக்கிற ஃப்ரேம்னே சொல்லலாம். அதுவும் படுமொக்கையா இருக்கும். இதுக்கு மேல தெலுங்கு பில்லாவைப் பார்க்குற சக்தி இல்லாததால இதோட முடிச்சுக்குறேன்.

இதையெல்லாம் மறக்கடிச்சுட்டு வெளியான படம்தான், பாகுபலி. நிச்சயமாவே அந்த கேரக்டர்க்கு உழைச்சிருந்தார், பிரபாஸ். கம்பீரமான மன்னன்னா அது பாகுபலிதான்னு சொல்ற அளவுக்கு நியாயம் சேர்த்திருப்பார். இந்தியா முழுக்க ஃபேமஸான பிரபாஸ் அடுத்தடுத்தக் கட்டத்துக்குப் போவார்னுதான் எல்லோரும் எதிர்பார்த்தாங்க. அப்படிப்பட்ட எதிர்பார்ப்போடத்தான் சாஹோ ரிலீஸ் ஆச்சு. உள்ள வந்த ரசிகர்கள்லாம் என்னடி இப்படி ஆகிடுச்சுங்குற மோடுலதான் வெளில வந்தங்க. சாகோ படம் லார்கோவின்ச் படத்தோட அப்பட்டமான காப்பி, இந்தப்படத்தைத்தான் நம்ம தளபதியை வைச்சு யோகன் அத்யாயம் ஒன்றுனு ஜி.வி.எம் பண்ணனும்னு இருந்தாரு. ஆனா, அதுல பிரபாஸ் முந்திக்கிட்டார், தளபதி தப்பிச்சுக்கிட்டார். இதுல சோகம் என்னன்னா.. லார்கோ விஞ்ச் இயக்குநர் ஒரு ட்வீட் பண்ணார். அதுல ‘எனக்கும் இந்தியன் சினிமாவுல மவுஸ் இருக்குதுபோல, ஏண்டா காபி அடிச்சுதான் எடுக்குறீங்க, அதையாவது ஒழுங்கா எடுங்கடா’ங்குற மாதிரி ட்விட்டர்ல வார்த்தையை போட்டுட்டார். தட் கரடியே காரி துப்புன மொமெண்ட் அது. ஆனா பயமே எனக்கு லேதுரானு டேகிட் ஈஸியா எடுத்துக்கிட்டு அடுத்தப்படமான ராதே ஸ்யாம் பக்கம் போயிட்டார்.
அடுத்ததா ராதே ஷ்யாம்.. மொத்தப்படமும் ஸ்னாப்சாட் ஃபில்டர்ல எடுத்து சாதனை பண்ணியிருப்பாங்க. இதுக்கும் 350 கோடிதான் பட்ஜெட். ஒருவேளை அதனாலதான் ஒத்துக்கிட்டிருப்பார் போல.. இந்திரா காந்தி முதல் உலகத்துல இருக்கிற எல்லோருக்கும் ஜோசியம் பார்க்கிற நபரா க்ரிஞ்சு சீன்களை நிறைய பண்ணியிருப்பார். செல்வராகவன் ஒரு பேட்டியில சொல்லியிருப்பாப்ல, ஒரு புல்லட் பாயுறதுக்கு ஏண்டா ஒரு கோடி செலவு பண்றீங்க. அதை முதல் படம் பண்ணப்போற இயக்குநர்கள்கிட்ட கொடுத்தா ஒரு படமே எடுத்துக் கொடுத்துருவானேனு ஆதங்கப்பட்டிருப்பார். அப்படி கணக்குப் பார்த்தா ராதே ஸ்யாம் பட்ஜெட்ல 350 புதுப்படங்கள் எடுத்திருக்கலாம்.

ரெண்டுமுறை மிஸ்ஸாகிடுச்சு, இந்தமுறை நான் அடிக்கிற அடி மரண அடியாத்தான் இருக்கும்ங்குற மோட்ல ஆதிபுருஷ் அறிவிப்பை வெளியிட்டார். ரசிகர்கள்லாம் ரொம்ப எதிர்பார்த்தாங்க. டிரெய்லர் வெளியாச்சு. அப்போதான் அந்த மரண அடி யாருக்குங்குறது புரிஞ்சது. நம்பிக்கைலாம் சுக்குநூறா உடைஞ்சது. ஆதிபுருஷ் டிரெய்லரோட முதல் ப்ரேம்லயே சுக்குநூறா உடைச்சிருப்பாங்க. கிரீன்மேட்டை வைச்சு யூட்யூப்லயே நல்ல வீடியோக்களை எடுக்குற காலக்கட்டத்துல என்னடா பண்ணி வச்சிருக்கீங்க இப்படி ஒரு படமானு ட்ரோல்ஸ் பிச்சுக்கிச்சு. பொம்மை படம்பா இதுனு கில்லி டெம்ப்ளேட்டையும், இன்னுமாடா எங்களை நம்பிட்டிருக்கீங்கனு ரெண்டு படத்தோட டெம்ப்ளேட்டை தூக்கிட்டு வந்தாங்க. ஒரு கட்டத்துல ட்ரோல்ஸ்லாம் பார்த்து கடுப்பான பிரபாஸ் ஓம் கம் டூ மை ரூம்னு கூப்பிட்ட வீடியோ வைரலும் ஆச்சு. உள்ள என்ன நடந்ததுனு அவங்க ரெண்டுபேருக்கு மட்டுமே வெளிச்சம். படம் ரிலீஸ் அறிவிப்பு வந்தது. அதுல ஆஞ்சநேயருக்கு ஒரு சீட் ஒதுக்குறோம்னு அலப்பறைகள்லாம் நடந்தது. அதுவும் ட்ரோல்ஸ் வந்தது. படம் ரிலீஸ் ஆச்சு, ரிவ்யூலாம் நிறைய பேர் யூட்யூப்கள்ல ஷேர் பண்ணாங்க. அதுல நல்லா இருந்துச்சுனு சொல்றதுக்கு எதுவுமே தேறலை, அது ஏதோ ட்ரோல் பண்ண மாதிரித்தான் இருந்துச்சு. ஹாலிவுட் படங்கள்ல இருந்த கேரக்டர்ஸோட இன்ஸ்பிரேஷனோட பண்ணின மாதிரி இருந்தது. நல்லவேளை வால்மீகி உயிரோட இல்லை. இருந்தா கோர்ட்ல வழக்கே போட்டிருப்பாப்லனு சொல்ற அளவுக்கான படம் இது. கடந்த மூணு படத்தோட பட்ஜெட்டை மூணும் சேர்த்து ராஜமெளலிகிட்ட கொடுத்திருந்தா, இன்னும் உச்சத்துல பிரபாஸ் போற மாதிரி படமா எடுத்துக் கொடுத்திருப்பார், ராஜமெளலி.
Also Read – குஜராத் மாடல்.. இந்தியாவுக்கே ரோல் மாடல்.. உண்மையா? – ரோஸ்ட்!
பாகுபலிக்குப் பின்னால வந்த மூணு படங்களை பார்க்குறப்போ, அதுல பிரபாஸ்தான் நடிச்சிருக்காரோனு அவருக்கே டவுட் வர்ற அளவுக்கு முகத்துல டயலாக் மட்டும்தான் பேசும். உடல் நடிச்சிருக்காது. பான் இந்தியா ஸ்டார் அப்படிங்குறதை எப்படி வேணாலும் யூஸ் பண்ணியிருக்கலாம்.. ஆனா எப்படியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாதுங்குறதுக்கு பிரபாஸ் படங்கள்தான் சமீபத்தி உதாரணம். தன்னோட ஆடியன்ஸ்க்கெல்லாம் நல்ல படங்கள் கொடுக்கிற ஹீரோக்களை மட்டும்தான் பார்த்திருக்கோம். ஆனா, அண்ணன் மொக்கப் படம் குடுக்குறதுலதான் ஸ்பெஷலிஸ்டேனுதான் இன்னைக்கு மக்கள் பேசிக்கிறாங்க.
அடுத்த படமான சலார் மிகப்பெரிய எதிர்பார்ப்போட இருக்கு. அதுக்குக் காரணம் பிரபாஸ்னு நினைச்சா அது ரொம்ப தப்பு. அதுக்குக் காரணம் அதன் இயக்குநர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப்ல ரெண்டு பாகங்கள் ஹிட் கொடுத்து பரபரப்பைக் கிளப்பினவர். அதனால பிரபாஸோட படமா அடுத்த பேன் இந்தியா படமா இருக்கும்னும் நம்பலாம். இந்த வீடியோவை இப்படி முடிக்கிறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். ‘நடந்து வரும்போது தீப்பொறி வந்துச்சுன்னா அது மாஸ் ஹீரோ, அதே ஹீரோ நடந்து வரும்போது உடம்புல தீப்பொறியோட நடந்து வந்தா அவன்தான் மக்களுக்கான ஹீரோ, அப்படிப்பட்ட மக்களுக்கான ஹீரோதான் பிரபாஸ்’



Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.