ஒன்லைன்
கோவில் உற்சவம்னா சாமி முதல்ல இவர் வீட்டுக்குத்தான் வரும்ன்ற அளவுக்கு இருக்குற நாராயணன் பிள்ளையோட பையன் சேகர். அதே ஊர்ல பஷீர் அகமதுவுக்கு முதல் முதல்ல மெக்கா போயிட்டு வந்தப்பறம் பிறந்த பொண்ணு சைலா பாணு. இவங்க ரெண்டு பேருக்கும் காதல். இவங்க காதலுக்கு மதம் பிரச்னையா வரும்போது எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க.. பின்னாடி நாட்டுக்கே மதம் பிரச்னையா வரும்போது எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க. இதுதான் பம்பாய் படத்தோட ஒன்லைன். இவ்வளவு நேரடியா ஒரு கதையச் சொல்றப்போ நிறைய சர்ச்சைகள் வந்திருக்கணுமே… ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்தது அதை கடைசில பார்க்கலாம்.
மணிரத்னம் டச்
கேரக்டர் எல்லாருமே ரகசியம் பேசுற மாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறதுல தொடங்கி ரசனையான குட்டி குட்டி வசனங்கள் வரைக்கும் படம் முழுக்கவே மணிரத்னம் டச்தான். இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் லவ் பண்றாங்கன்ற இந்த முரணை வச்சிக்கிட்டு நிறைய சீன்ஸ் வச்சிருப்பாங்க. குறிப்பா ஹீரோயினுக்கு குழந்தை பிறக்கப்போறப்போ ‘எப்படி பார்த்துக்கப்போறோம்’னு ஹீரோ கேட்பான். உடனே ஹீரோயின் ‘அதுக்குதான் அல்லா இருக்காரே’னு சொல்ல வந்து நாக்கைக் கடிச்சுட்டு ‘அதுக்குதான் ரெண்டு கடவுள் இருக்காங்களே… பாத்துக்குவாங்க’கனு சொல்வாங்க. ஒரு சீன்ல அவன் என் பிள்ளையே இல்லை அவன் மகளே இல்லைனு சண்டைபோட்டுக்குவாங்க. அடுத்த செகண்டே பொறக்கப் போற குழந்தைக்கு அஞ்சு வேளை தொழுகுறதுக்கு சொல்லிக் கொடுக்கிறதா ஆத்துல குளிக்கவச்சி திருவாசகம் சொல்லிக்கொடுக்கிறதானு அடிச்சுக்குவாங்க.
ரஹ்மான்
படத்துல ஹீரோவே ரஹ்மான்தான் சொல்ற அளவுக்கு இசையாலயே உயிர் கொடுத்திருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். எப்பவுமே மழை பேஞ்சு நனைஞ்ச மாதிரியே இருக்குற கிராமத்தோட ஜில்லிப்பை இசையிலேயே கடத்தியிருப்பார் ரஹ்மான். அப்படியே கதை பம்பாய் போறப்போ ஒரு கலவரத்தோட தீவிரத்தையும் இசையிலயே புரிய வச்சி ஆச்சர்யப்படுத்தியிருப்பார். படத்தோட ஓபனிங்ல வர்ற BGM காதலுக்கான தேசியகீதம்னா க்ளைமேக்ஸ்ல வர்ற பி.ஜி.எம் சமாதானத்துக்கான தேசியகீதம். பாடல்களாவும் கண்ணாளனே, உயிரே, குச்சி குச்சி ராக்கம்மா, அரபிக்கடலோரம்னு ஒவ்வொண்ணும் 90s கிட்ஸோட ஆல்டைம் ஃபேவரிட் தான். ஹலமத்தி ஹபிபூவுக்கு ரொம்ப வருசம் முன்னாடியே ஹல்லா புல்லானு அரபிக்குத்துப் போட்டது தலைவன்தான். இந்த ஆல்பத்துல தி பெஸ்ட் சாங்னா இந்தப் பாட்டுதான். அப்படியெல்லாம் இல்லையே என்பவர்கள் தாராளமா கமெண்ட்ல சண்டைக்கு வரலாம்.
அரசியல் சர்ச்சைகள்
அட்மாஸ்பியர்ல இருந்த ஒரு காலண்டர் குறியீடுக்கே மாசக்கணக்குல பஞ்சாயத்து நடந்துச்சு. அப்படி இருக்குறப்போ இதுல குறியீடுலாம் இல்லை. எல்லாமே டைரக்ட் அட்டாக்தான். அப்போ எவ்வளவு பிரச்னை வந்திருக்கும். படத்துல ரதயாத்திரை, பாபர் மசூதி இடிச்சது, மதக்கலவரம் இது எல்லாமே குறியீடுலாம் இல்லாம நேரடியாவே காட்டியிருப்பாங்க. சிவசேனாவை சக்தி சேனானு சொல்லியிருப்பாங்க. அதோட தலைவரா வர்றவரு பால் தாக்கரே மாதிரியே இருப்பாரு. அவரை படத்துல தவறா சித்தரிச்சிருக்காங்கனு சொல்லி அந்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. மணிரத்னம் வீட்டுல அல்உம்மா அமைப்பை சேர்ந்தவங்க வெடிகுண்டு வீசுன சம்பவங்கள்லாம் நடந்தது. பல பிரச்னைகளுக்கு அப்பறம் படத்தை பால் தாக்கரேவுக்கு போட்டு காமிச்சு க்கிட்டஅவர் சொன்ன ஒரு சீனை மட்டும் நீக்கிட்டு படத்தை ரிலீஸ் பண்ணாங்க.
இந்தப் படத்துல அரவிந்த்சாமியோட ரெண்டு பசங்களும் கலவரத்துல ஒரு கும்பல்கிட்ட மாட்டி பெட்ரோலை ஊத்தி எரிக்கப் போற அளவுக்குப் போய் உயிர் பிழைச்சு வந்திருப்பாங்க. ஒருநாள் அந்தப் பையன் தூக்கத்துல அலறி அடிச்சு எழுவான். அந்த சம்பவம் கனவுல வந்துட்டே இருக்குனு அப்பாகிட்ட சொல்லி, ‘ஏன் தினம் தினம் நீ இந்துவா முஸ்லீமானு கேக்குறாங்க?’னு பதட்டத்தோட கேட்பான். ‘கேட்டதுலாம் முடிஞ்சி போச்சி இனிமே கேக்க மாட்டாங்க’னு அரவிந்த்சாமி சாமாதானம் சொல்வாரு. அந்தப் பையன் சந்தேகமா ‘நிஜம்மாவா’னு கேட்பான். இந்தப் படம் வந்து 27 வருசம் ஆகுது. இன்னமும் அந்தக் கேள்வி தொடர்ந்துட்டே இருக்குதுங்குறதுதான் நம்மைச் சுற்றி நடக்கிற அரசியல் அவலம்.
Also Read: Cruise Ship-களை விடுங்க; சரக்குக் கப்பல்ல டிராவல் பண்ணிருக்கீங்களா.. டிரெண்டாகும் Freighter Travel!