கோபிநாத்

அறந்தாங்கி டு அமெரிக்கா… ‘நீயா நானா’ கோபிநாத்தின் இன்ஸ்பைரிங் ஸ்டோரி!

சமூகத்துல இருக்குற பிரச்னைகள், ஜாலியான விஷயங்கள் எல்லாத்தைப் பத்தியும் நீயா? நானா? நிகழ்ச்சில விவாதம் பண்ணியிருக்காங்க.  நிகழ்ச்சி தொடங்கி 15 வருஷம் ஆச்சு. இன்னைக்கும் பரபரப்பா அதைப் பத்தி சமூக வலைதளங்கள்ல பேசுறாங்க, எபிசோடுகளோட கிளிப்ஸ்லாம் சோஷியல் மீடியால செமயா வைரல் ஆகுது. நிறைய செலிபிரிட்டிகளைப் பத்தி விவாதம் பண்ணியிருக்காங்க. அதுல சும்மா போய் பேசினவங்க செலிபிரிட்டி ஆகியிருக்காங்க. நிறைய செலிபிரிட்டிகள் அந்த நிகழ்ச்சில போய் பேசியிருக்காங்க. இவ்வளவு பெரிய சக்ஸஸ்க்கு அந்த நிகழ்ச்சியோட தொகுப்பாளர் கோபிநாத்தும் அதிமுக்கியமான காரணம். அவரோட லைஃப் ஜர்னி ரொம்பவே இண்ட்ரஸ்டிங்கானது. நிறைய பேர் பண்ணாத சில விஷயங்களை கோபிநாத் பண்ணியிருக்காரு. அதைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

புதுக்கோட்டை, அறந்தாங்கில இருந்து கிளம்பி வந்தவங்கள்ல இன்னைக்கு ரெண்டு பேர் மிகப்பெரிய செலிபிரிட்டியா இருக்காங்க. முதல் ஆளு, நீயா நானா கோபிநாத். ரெண்டாவது, அறந்தாங்கி நிஷா. ரெண்டு பேரும் விஜய் டி.வி வழியாதான் ஃபேமஸ். கோபிநாத் தன்னோட ஸ்கூல் டேஸ்ல அவ்வளவு கஷ்டம்லாம் படல. அவங்க வீட்டுல கஷ்டங்கள் இருந்துருக்கலாம். ஆனால், அதையெல்லாம் இவருக்கு சொல்லாமல் நல்ல ஸ்கூல்ல சேர்த்து அவங்கப்பா படிக்க வைச்சிருக்காரு. ஸ்கூல் டைம்லயே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டினு கோபிநாத் கலக்கக்கூடியவர். அதனால, மீடியாக்குள்ள வரணும்னு ரொம்பவே அவருக்கு ஆசை. ஆனால், அவங்க வீட்டுல உள்ளவங்க, மீடியா வேலைன்றது நிரந்தரம் இல்லாதது. ஜெயிப்போமா… தோற்ப்போமா… அப்டிலாம் தெரியாது. அதனால நல்லா படி அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்காங்க.

கோபிநாத்தோட அப்பாக்கு, அண்ணனுக்கு அவரை நல்லா படிக்க வைச்சு ஃபாரீனுக்குலாம் அனுப்பி பெரிய கம்பெனில வேலைக்கு போக வைக்கணும்னுதான் ஆசை. ஏன்னா, கோபிநாத் ஸ்கூல்ல பிரில்லியண்ட் ஸ்டுடண்ட். “அவன் அப்படி ஆகுறதுதான் சரி”னு நினைச்சிருக்காரு. அவங்க அண்ணன் பிரபு. பிரபல சீரியல்ல எல்லாம் நடிச்சிருக்காரு. அவருக்கு சினிமாக்குள்ள வரணும்னு ஆசை. அதனால, ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிக்க வீட்டுல உள்ளவங்க பஸ் ஏத்தி அனுப்பி விட்ருக்காங்க. அவர் படிச்சு டெலிவிஷன்ல திரைக்கு முன்னாடியும், திரைக்கு பின்னாடியும் நிறைய வேலைகள் பண்ணி இன்னைக்கு சக்ஸஸா இருக்காரு. கோபிநாத்தோட அண்ணன், அவரை மீடியாக்குள்ள ஆரம்பத்துல விடவே இல்லை. அப்போ கோபிநாத் நிறைய வேலைகள் பார்த்துருக்காரு. எந்த வேலையும் திருப்தியா இல்லை. இதை தெரிஞ்சதும் அவரோட அண்ணன் கோபிநாத்கிட்ட, “சரி, நீ ட்ரை பண்ணு. அதுவரைக்கும் எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்”னு சொல்லியிருக்காரு.

முதல் முதல்ல கோபிநாத் ஆல் இந்தியா ரேடியோலதான் ஆர்.ஜே-வா ஜாயின் பண்ணாரு. அதுல நிறைய விஷயங்களை கத்துக்கிட்டாரு. அதுக்கப்புறம் நியூஸ் சேனல்களில் ரிப்போர்ட்டரா சேர்ந்து வேலை பார்த்தாரு. கோபிநாத்துக்கு ஃபீல்டு ரிப்போர்ட்டிங்னா ரொம்பவே புடிக்கும். அதுதான் பின்னால நியா? நானா? நிகழ்ச்சில அவர் பல விஷயங்களைப் பத்தி பேசுறதுக்கு உதவியா இருந்துச்சுனு சொல்லுவாரு. கோபிநாத்துக்கு மனிதர்களோட உரையாடுறது சின்ன வயசுல இருந்தே ரொம்ப புடிக்கும். அதேமாதிரி என்ன விஷயமா இருந்தாலும் அதை உடனே கேட்டரும்னு நினைப்பாரு. அதுக்கு ஆரம்பப்புள்ளி இருந்தது ஒரு குட்டி சம்பவம். ஊர்ல இருந்து சென்னைக்கு பஸ்ல வந்துருக்காரு. சீட் லிவர் எங்க இருக்குனு தெரியாமல் உட்கார்ந்தே வந்துருக்காரு. ரொம்ப தூரம் வந்தபிறகு பக்கத்துல இருந்தவரு லிவர் யூஸ் பண்றதைப் பார்த்துட்டு சீட்டை சாச்சி படுத்துருக்காரு. அன்னைக்கு முடிவு பண்ணியிருக்காரு, “எதுவாக இருந்தாலும் கேட்டுறணும், கேட்காமல் இருக்குறதைவிட, கேட்டு கிடைக்காமல் போனால் பரவாயில்லை” அப்டினு.

மக்கள்கூட உரையாடுறதுல அவர் எந்த அளவுக்கு பெஸ்ட் அப்படினா, மீடியாவுக்கு வர்றதுக்கு முன்னாடி துணி விக்கிற வேலைதான் கோபிநாத் பார்த்துட்டு இருந்தாரு. ஒருநாளைக்கு 13 கிலோ துணி கொடுப்பாங்களாம். அவ்வளவு துணியையும் வித்துட்டு போய்டுவாரு. அதுக்கு அவர் புடிச்சது சின்ன ஐடியா. ஒரு அப்பார்ட்மெண்டுக்கு போவாரு, அங்க ஒருக்குற ஒரு லேடியைக் கூப்பிட்டு துணியெல்லாம் காமிப்பாரு. அவங்க பக்கத்து வீட்டுல இருக்குறவங்களைக் கூப்பிடுவாங்க. இப்படி கூப்பிட்டு கூப்பிட்டு மொத்த அப்பார்மெண்டும் அங்ககூடி அவங்களுக்கு புடிச்சதை வாங்கிட்டு போவாங்க. அப்போ, அவங்ககூட நிறைய பேசுவாராம். கோபிநாத் அக்கறையா பேசுறது, உங்க ஹஸ்பண்டுக்கு இந்த கலர் செட் ஆகும்னு சொல்றது இப்படி பண்றதாலயே அவரை புடிச்சுப்போகும். காபி, சாப்பாடு எல்லா அவருக்கு அங்கயே கிடைக்கும். இந்த ஐடியா பார்க்க சிம்பிளா தெரியலாம். ஆனால், அதனாலதான் இன்னைக்கு சகஜமா முகம் தெரியாத மனுஷங்கக்கிட்ட உரிமையா நிகழ்ச்சிகள்ல பேசுறாரு. எல்லாமே மீடியாவை மைண்ட்ல வைச்சுட்டு கோபிநாத் பண்ண விஷயங்கள்தான்.

நீயா? நானா? நிகழ்ச்சி கோபிநாத்துக்கு அவர் மீடியா துறைக்குள்ள வந்து 11 வருஷம் கழிச்சுதான் கிடைச்சுது. அந்த நிகழ்ச்சில அவர் பண்ண சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ‘மைக்கை அவர் கிட்ட கொடுங்க, அருமையா சொன்னீங்க, வேற வேற’ – இப்படிலாம் மீம் டெம்ப்ளேட்டா மனுஷன் மாறிட்டாரு. ஒருத்தர் மீம் டெம்ப்ளேட்டா மாறிட்டா ஜெயிச்சிட்டாருனுதான் அர்த்தம். ஆனால், அதுக்கு முன்னாடியும் பல சம்பவங்களை அவர் பண்னியிருக்காரு. இனிமேல் சாத்தியமாகாத, சாத்தியம் ஆகுமானு தெரியாத பல பெஸ்ட் இன்வர்வியூக்களை கோபிநாத் பண்ணியிருக்காரு. தமிழ்ல மிகப்பெரிய அளவில் இலக்கிய வாசகர்கள் கொண்ட ஜெயகாந்தன், சுஜாதாவை இண்டர்வியூ பண்ணியிருக்காரு. அரசியல்னு வந்துட்டா கலைஞரை இன்டர்வியூ பண்ணியிருக்காரு. சினிமானு எடுத்துக்கிட்டா இன்னைக்கு முன்னணி நடிகர்களா இருக்க்கூடிய விஜய், அஜித்தை இண்டர்வியூ பண்ணியிருக்காரு. இதெல்லாம் இனி சாத்தியம் ஆகாத விஷயங்கள்தான? “நான் இன்டர்வியூ கொடுத்தா மாத்தி மாத்தி புரிஞ்சுக்குறாங்க”னு சொல்லிதான் அஜித் இண்டர்வியூவே கொடுக்குறதில்லையாம். அதை கோபிநாத்கிட்ட அஜித் சொல்லியிருக்காரு. இந்த மாதிரி நிறைய அரிய விஷயங்களை தன்னோட இண்டர்வியூ மூலமா கோபிநாத் வெளிய கொண்டு வந்துருக்காரு.

நிறைய எபிசோடுகள் பண்ணாலும் இன்னைக்கும் கோபிநாத் ஷோக்குள்ள போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பதற்றமாதான் இருப்பாராம். அந்த பதற்றம் வேணும்னு அவர் நினைக்கிறாரு. ஷோக்கு முன்னாடி 5 நிமிஷம் கதவை சாத்திட்டு அமைதியா ஒரு இடத்துல உட்காருவாராம். அதேமாதிரி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி அந்த ஷோ டைரக்டர்கூட சின்ன உரையாடல் ஒண்ணு வைச்சிப்பாராம். இப்படிதான் நிகழ்ச்சிக்கு கோபிநாத் தயார் ஆவாராம். கோட் கோபிநாத்னு எல்லாரும் அவரை கலாய்ப்பாங்க. ஜீவாக்கூட ஒரு இண்டர்வியூல எப்போ, இந்த கோட்டை கழட்டுவீங்கனு கேள்வி கேப்பாரு. அதுக்கு கோபிநாத் சொல்ற பதில் ரொம்பவே எதார்த்தமானதா இருக்கும். “மைக், ஹெட்ஃபோன் வொயர் இதெல்லாம் சட்டைல மாட்டியிருப்பாங்க. அது அசிங்கமா தொங்கிட்டு இருக்கும். அதை மறைக்கத்தான் இந்த கோட்”னு ஜாலியா சொல்லுவாரு. ஒரு முக்கியமான விஷயம் என்னனா, அவர் கல்யாணத்துக்கு அவர் கோட் போடலையாம்.

ஆர்.ஜே, வி.ஜே, பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்னு பன்முக திறமை கொண்டவர், கோபிநாத். அவருக்கு எழுத்து ரொம்ப புடிக்கும். அவர் எழுதுன பல புத்தகங்கள் நிறைய பேருக்கு இன்ஸ்பைரிங்கா இருந்துருக்காம்.  தீவிர இலக்கியவாதிகளோட புக்ஸ்கூட ஆயிரக்கணக்குலதான் விக்கும். ஆனால், கோபிநாத் எழுதின, “ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்காதீங்க” புத்தகம் 1 மில்லியன் காப்பிகள் மேல வித்துருக்கு. அதேமாதிரி இவர் புத்தகங்களுக்கு வைக்கிற டைட்டில்கள் எல்லாம் அவ்வளவு இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். நேர் நேர் தேமா, நீயும் நானும், மண்ட பத்திரம் இப்படிதான் புத்தகங்களோட டைட்டில்கள் இருக்கும். கோபிநாத் ஷோல நிறைய வடிவேலு ரெஃபரன்ஸ் யூஸ் பண்ணுவாரு. அவர் வெறித்தனமா வடிவேலு ரசிகர்னு சொல்லலாம். 2004-ல அரசியல் பற்றி விவாதிக்கிற 40 நாடுகளைச் சேர்ந்த இளம் செய்தியாளர்களை அமெரிக்க அரசாங்கம் கூப்பிட்டு ஒரு வொர்க்‌ஷாப் நடத்துனாங்க. அதுல இந்தியா சார்பா கோபிநாத் கலந்துகிட்டாரு.

இன்னைக்கு இருக்குற நிறைய இளைஞர்களுக்கு கோபிநாத் இன்ஸ்பிரேஷனா இருக்காரு. அவர் பேசுற விஷயங்கள் இன்ஸ்பிரேஷனா இருக்கு. குறிப்பா கல்வியின் அவசியம் பத்தி பேசுனது, தோனி பத்தி பேசுனதுலாம் இப்பவும் சோஷியல் மீடியால நாம பார்க்க முடியும். டாக்‌ஷாப் அகாடமினு ஒண்ணு வைச்சிருக்காரு. மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை இதன் வழியா கொடுத்துட்டு வருவாரு. அப்புறம் இன்னைக்கு, யூடியூப் சேனலும் வச்சிருக்காரு. அதுல சமீபத்துல தூய்மைப் பாணியாளர்கள் சம்பந்தமா போட்ட வீடியோ செம வைரலா போச்சு. டீ குடிக்கக்கூட காசு இல்லாமல் இருந்த காலங்களும் கோபிநாத்துக்கு உண்டு. இன்னைகு பி.எம்.டபிள்யூவே வாங்கிட்டாரு. ரொம்பவே பாஸிட்டிவான மனுஷன். கடந்து வந்த பாதைகளை வலியா பார்க்கவே மாட்டாரு. அதுதான் கோபிநாத்கிட்ட புடிச்ச விஷயமே.

நீயா நானா கோபிநாத்தை உங்களுக்கு ஏன் புடிக்கும்னு ஒரு காரணத்தை கமெண்ட்ல சொல்லுங்க!  

1 thought on “அறந்தாங்கி டு அமெரிக்கா… ‘நீயா நானா’ கோபிநாத்தின் இன்ஸ்பைரிங் ஸ்டோரி!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top