தேனீ, யானை

தேனீக்கள் முதல் யானை வரை… இசையில் மயங்கிய உயிரினங்கள்!

“இசைனா யாருக்குதான் பிடிக்காது. மற்ற உயிரினங்களுக்குக் கூடத்தான் இசைனா ரொம்ப புடிக்கும்.” – இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது பல வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது உண்டு. அந்தவகையில், இசைக்கு அடிமையான சில உயிரினங்களைப் பற்றிய கதைகளைதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

தேனீக்கள்…

தேனீக்கள் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கும் உயிரினமாக இருந்து வருகிறதோ அதே அளவு ஆபத்தானதும்கூட. தேனீக்களால் மக்கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் உலக அளவில் நடந்துள்ளன. இந்த நிலையில், வங்க தேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இசைத் திறமையால் தேனீக்களை கவர்ந்து வரும் சம்பவம் மக்கள் பலரையும் ஈர்த்துள்ளது. மனிதர்களின் இசைக்கு உயிரினங்கள் அடிமையாகும் சம்பவங்களை அவ்வப்போது நடந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது இந்த சம்பவமும் நடந்துள்ளது.

வீடியோவில், வங்க தேசத்தைச் சேர்ந்த மஹதாப் மொரல் என்பவர் மேல் ஆடையின்றி நின்றுகொண்டு புல்லாங்குழல் வாசிக்கிறார். அப்போது அவர்மீது நூற்றுக்கணக்கான தேனீக்கள் மொய்க்கின்றன. இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியாக்குவதுடன் இசைக்கும் மயங்கும் தேனீக்கள் மீது ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. மஹதாப் மொரல் கடந்த இருபது ஆண்டுகளாக தேன் எடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். அதனுடன் தேனீக்களை கவரும் வித்தையையும் கற்று வைத்துள்ளார்.

யானை…

இசையினுடைய மகத்துவத்தைப் பற்றி இளையராஜா ஒருமுறை பேசும்போது யானை ஒன்று இசைக்கு அடிமையான நிகழ்வைக் கூறினார். அந்த சம்பவத்தைப் பற்றி இளையராஜா, “கேரளாவை ஒட்டி மலையடிவாரத்தில் காடுகளுக்கு அருகே இருக்கக்கூடிய பகுதியில் டூரிங் தியேட்டர் ஒன்று உள்ளது. அங்கு சினிமா ஓடிக்கிட்டு இருக்கு. காட்டுல இருக்கும் யானைக் கூட்டங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு கீழே வந்து எந்தப் பயிர்களையும் நாசம் செய்யாமல் திரைப்படத்தில் வருகின்ற குறிப்பிட்ட பாடலை மட்டும் கேட்டுவிட்டு திரும்பி எந்தப் பயிர்களையும் நாசம் செய்யாமல் செல்கின்றன. இந்த சம்பவம் 1986-ல் நடந்தது என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக யானைகள் வந்து இந்த பாடலை கேட்பது வழக்கமாக இருந்தது. அது எந்தப்பாடல் என்றால்.. `ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ – இந்தப் பாடலை யானைக்கூட்டம் வந்து கேட்டு செல்கிறது என்றால் அதனை என்னவென்று சொல்வது. யானைகளுக்காகவா நான் கம்போஸ் பண்ணேன். இல்லையே” என்று கூறினார்.

நாய்…

துருக்கியில் இஸ்மீர் மாகாணத்தில் சிம்ஃபொனி இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, அப்போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று மேடையில் வந்து அமர்ந்து இசையில் லயிக்கத் தொடங்கியது. இந்த வீடியோவும் உலக அளவில் வைரல் ஆனது. வீடியோவில், இசைக்கலைஞர்கள் இசையை வாசித்துக் கொண்டிருந்தனர். நாய் கூலாக மேடையில் வந்தமர்ந்து இசையைக் கேட்கிறது.

அதேபோல, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய் ஒன்று பாடலைப் பாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ஒருவர் தனது கிட்டாரில் இசையை வாசிக்க குட்டி நாயானது பாடலைப் பாடுகிறது. சாம் இந்த வீடியோவை #Coronasong என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து கேப்ஷனில், “இது என்னுடைய நாய் அல்ல. இந்த கியூட் வீடியோவைப் பார்த்தேன். இதைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்” என்று தெரிவித்திருந்தார்.

Also Read : ஊரையே எதிர்த்து ஒற்றை ஆளாக நின்ற பெண் பூசாரி – பின்னியக்காளின் 12 ஆண்டு போராட்டம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top