வடிவேலு பெயரை சொன்னதும் எக்கச்சக்கமான டயலாக்ஸ் டக்னு நியாபகம் வரும். அப்புறம் பாடி லேங்குவேஜ், மதுரை ஸ்லாங், கெட்டப்ஸ் எல்லாமே கண்ணு முன்னாடி வந்து போகும். அந்த மனுஷனை தவிர்த்துட்டு ஒரு நாள்கூட நம்மளால கடக்க முடியாது. அப்படி நம்ம வாழ்க்கையோட ஒண்ணு மண்ணா கிடக்குறாரு. அவர் அரசியலுக்கு வந்து பல்பு வாங்குன சம்பவங்களை இப்போ நாம பார்க்கல. காமெடி வழியா அட்டுழியம், அதிகாரத்துக்கு எதிரா அவர் பண்ண தரமான சம்பவங்களைதான் பார்க்கப்போறோம்.

வடிவேலு அரசியல் காமெடினு சொன்னதும், புதுமைப்பித்தன் படத்துல வடிவேலுவோட காமெடியெல்லாம் தான் நமக்கு நியாபகம் வரும். அந்தப் படம் முழுக்கவே அரசியல்வாதிகளை அப்படியே கலாய்ச்சு வைச்சிருப்பாரு. பிறந்தநாள் அன்னைக்கு தலைவர்கள் பிரஸ் மீட் வைச்சு பேசுவாங்க. அதை நக்கல் பண்ணிருப்பாரு பாருங்க! ரிப்போர்ட்டர், “சமீப காலமா நம்ம நாட்டுல நிறைய தேர்தல் வருது. பிரதமர்கள் மாறிட்டே வர்றாங்க. ஒரு ஸ்ட்ராங்கான பார்லிமென்ட் அமையணும்னா என்ன செய்யலாம்”னு கேப்பாரு. அதுக்கு வடிவேலு, “சங்கர் சிமெண்ட் வாங்கி கட்டுனா, பார்லிமெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்”ன்னுவாரு. இதுவரைக்கும் பரவால்ல “சங்கர் சிமெண்ட்ல கட்டுனா சங்கர் திட்டமாட்டாரா?”னு கேப்பாங்க. யோவ், வேறலெவல். என்னைப் பத்தி நானே பேசுறதா, என் வாழ்க்கை வரலாற சொல்லுடானு எடுத்துக்கொடுக்குறது, ஃபேக்டரியை மூட விடக்கூடாதுனு பேசுற விஷயம், கலப்படத்துக்கு எதிரா போராட்டம் பண்ற சீன்லாம் அப்படியே சமூகத்துல இருந்து எடுத்த பிரதிபலிப்புதான்.

Who is the blacksheep? என் புத்திய சப்பல்ஸ்ல அடிக்கணு,னுலாம் அட்டகாசம் பண்ணுவாரு. கட்சி விட்டு கட்சி தாவுறதை கிண்டல் பண்றதுக்கு தோற்றம் – மறைவுனு ஃபோட்டோ வைக்கிறது, தமிழ்நாட்டைத் தூக்கி டெல்லி பக்கம் வைச்சா அதிகாரம் வரும்னு சொல்றது, எழுத்தாளர்னா வறுமையா இருப்பானே கலாய்க்கிறது, பெரியவங்களை மரியாதை இல்லாம பேசுவாங்கனு சொல்லுவாங்கள்ல அதுக்கு ஒரு சீன் வைச்சிருப்பாரு. ரீசன்டாகூட அந்த டெம்ப்ளேட் செம டிரெண்ட் ஆச்சு. “அதான் டீய ஊத்திட்டேல்ல கீழ வைடா. நல்லா பஞ்சுமிட்டாய் மாதிரி மீசைல முடி. மண்டைல முடி”னு அவர் அந்தப் படத்துல பண்ண சம்பவங்கள் எக்கச்சக்கம். அன்னைக்கு வடிவேலு கலாய்க்கிறதுக்காக பண்ண விஷயங்கள் மாதிரி இன்னைக்கு சில அரசியல்வாதிகள் பண்றாங்க. இதைவிட ஒரு அரசியல்வாதியை வேற ஒருத்தரும் நக்கல் பண்ணிருக்க முடியாது. இது மேலோட்டமான அரசியல் பகடி. ஆனால், வடிவேலுவோட வேறசில காட்சிகள் அப்படியே மைன்யூட்டான அரசியல் கலாயா இருக்கும்.

ஸ்டாலின் ராஜாங்கம் புனைவில் இயங்கும் தமிழ் சினிமானு ஒரு புத்தகம் எழுதியிருப்பாரு. அதுல வடிவேலு பத்தி ஒரு கட்டுரை வரும். அதுல ஒரு வரி வரும், “வடிவேலுவுக்கு முன்னாடி வரைக்கும் உள்ள காமெடியன்ஸ் அதாவது என்.எஸ்.கே, கவுண்டமணி மாதிரியான ஆள்கள் எல்லாம் சமூக பகடிகளை பேசும்போது அந்த கேரக்டருக்கு வெளிய இருந்து பேசுவாங்க. ஆனால், வடிவேலு அந்த கேரக்டராவே மாறி பகடி பண்ணுவாரு”னு சொல்லுவாரு. அவர் கேரக்டர்களையும் இந்த லைனைவும் யோசுச்சுப் பார்த்தா ஆமானு தோணும். அந்தக் கட்டுரை முழுக்கப் படிச்சுப் பார்த்தா இவ்வளவுநாள் இதை கவனிக்கலையேனு தோணும். ஸ்டாலின் ராஜாங்க, இன்னும் நிறைய விஷயங்களை அந்தக் கட்டுரைல குறிப்பிட்டு சொல்லிருப்பாரு.

பொதுவா தமிழ் சினிமால படம் பார்க்குற எல்லாத்தையும் கடுப்பாக்குற கேரக்டர்னா, மைனர் கேரக்டர் தான். இந்த கேரக்டர்களை வைச்சு செஞ்சது வடிவேலுதான். மைனர் கேரக்டர்கள்னா படத்துல ஹீரோவா இருந்தாலும் வில்லனா இருந்தாலும் எப்படி இருப்பாங்க? பொண்ணுங்கக்கிட்ட வம்பிழுத்துட்டு, ஏழைங்க உழைப்பை சுரண்டி திண்ணுட்டு, ஊதாரித்தனமா சுத்திட்டு இருப்பாங்க. இந்த கேரக்டராவே மாறி அவங்கள வடிவேலு கலாய்ச்சு தள்ளிருப்பாரு. வெளிய வீரமா சுத்துறது, வீட்டுக்குள்ள அடி வாங்குறது. எல்லாமே நான்தான்னு சுத்துறது, உதவினு கேட்டா முழிக்கிறதுனு தலைவன் பண்ண அழிசாட்டியத்துக்கு அளவே இல்லை. இதே ஸ்டைலை சில்லுனு ஒரு காதல் படத்துலயும் பார்க்கலாம். அப்புறம் கோவில் படம். இதுலயும் கப்பு வாங்கிட்டு வந்து ஜெயிச்ச மாதிரி பில்டப் கொடுக்குறதுலாம் செமயா இருக்கும். எல்லாமே மைனர்கள் பண்ற விஷயங்களை பகடி பண்றதுதான். குறிப்பிட்டு சொல்லும்படியான இன்னொரு படம்னா அது வின்னர். கட்டத்துரைனு பேரு வைச்சுட்டு, மீசைய பென்சில்ல வரைஞ்சுட்டு, தள்ளு வண்டி மாதிரி வண்டில சுத்திக்கிட்டு, பில்டப்னாலயே அழிந்து போற ஒரு கேரக்டர். ஊர்ல நாங்கலாம் ஆண்ட பரம்பரைனு சுத்துவாங்கள்ல இந்த வடிவேலுவைப் பார்த்தா அவங்கதான் நியாபகம் வருவாங்க.

போலீஸ் கேரக்டர்களை எப்பவுமே சினிமா வீரமா, கம்பீரமா, கோவமாதான் காமிக்கும். ஆனால், அதை தவிடு பொடியாக்கினது வடிவேலுதான். மருதமலை படத்துல இன்ட்ரோவே செமயா இருக்கும். அந்த 3 பேரா மாறுர சீன், உயர் அதிகாரி வரும்போது சல்யூட் அடிக்க மாட்டியானு கேக்குற சீன் எல்லாமே மாஸா பில்டப் கொடுப்பாங்க. அப்புறம் அதை டம்மி பண்ற மாதிரி சீன் வந்துரும். போலீஸ் பத்தி வெளிய இருக்குற பெரிய பிம்பம் ஒண்ணு இருக்குல, அதை அப்படியே பகடி பண்னியிருப்பாரு. ரௌடிகளை ஹேண்டில் பண்றது, மாமுல் வாங்குறது, அடி வாங்குறது, தாய்ப்பாசத்துல உருகுறதுனு எல்லாமே செமயா இருக்கு. போலீஸ்னா மாஸா டயலாக் பேசணும்ன்றதுதான் உலக வழக்கம். ஆனால், இதுல “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி, கல்நெஞ்சக்காரன், சர்வாதிகாரி”னுலாம் பேசுறது இன்னொரு டைமென்ஷன்ல பகடி பண்றதுல மாஸ்தான். வில்லனாகவும் ஹீரோவாகவும் மட்டுமே காலம் காலமா பார்த்த போலீஸ் கேரக்டர்களை போலீஸாவே மாறி கலாய்ச்சதுலாம் தலைவன் மட்டும்தான்.

ஸ்டாலின் ராஜாங்கம், தமிழ் சினிமால இருக்குற இன்னொரு மேஜரான கேரக்டரா சொல்றது ரௌடி கேரக்டர்தான். அதையும் ரௌடியாவே மாறி தலைவன் தக்லைவ் பண்ணிருப்பாரு. “ரௌடி கெட்டப்ல உங்களை யாரும் தூக்க முடியாது”னுதான் நாய் சேகர் கேரக்டர்ல வடிவேலுக்கு இன்ட்ரோவே கொடுப்பாங்க. சும்மா கத்திய தூக்குனதுக்கு மக்களா சேர்ந்து அவனை ரௌடியாக்கி விட்டதுலாம், மாஸ். ரௌடினு சொன்னாலே “அண்ணன் உன்னை கூப்பிடுறாரு. வெளியவா”னுதான் சீன் வைப்பாங்க. இன்னைக்கும் இந்த சீனை தமிழ் சினிமா மாத்தலை. ஆனால், அதை செமயா வடிவேலு ரிகிரியேட் பண்ணியிருப்பாரு. “பரவால்ல நாம போவோம்”னு போய் கத்தியை திருப்பி புடிச்சு பல்பு வாங்குறதுலாம் ரௌடிகளுக்கு நேர்ந்த பேரவமானமாதான் இருக்கும். ரௌடினு சொன்னதும் குத்துனு சொல்றது, மூட்டையை தூக்க முடியாமல் திணறுரது, ரௌடிகள் அடிக்கும்போது 1,2,3-னு எண்றதுலாம் என்னத்த சொல்ல. நான்பாட்டுக்கு எண்றேன், நீ பாட்டுக்கு அடினு சொல்றதுலாம் மாஸ். குறிப்பா “நானும் பெரிய ரௌடிதான். ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன்”ன்னு பேசுறது ரௌடிக்கு என்ன ஆதாரம்னு போலீஸ் கேக்ற டயலாக்லாம் அல்ட்டிமேட்.

இன்னொரு முக்கியமான படம் 23-ம் புலிகேசி. மன்னர்கள் பண்ண அராஜகங்களை வைச்சு செஞ்ச படம். படத்தை நுண்ணிப்பா கவனிச்சீங்கனா, அவ்வளவு விஷயங்கள் இருக்கும். புகழுக்காக என்னலாம் பண்றாருன்றதை குலோத்துங்கன்ற ஒரு வார்த்தைல சொல்லிருப்பாரு. சுயநலத்துக்காக ஆங்கிலேயர்கள் கூட சேர்ந்து சொந்த மக்கள் உயிரைப் பிழிந்து வேலை வாங்குறது, அந்தப்புறம்ன்ற பேர்ல மன்னர்கள் பண்ண அட்டகாசங்கள், ஜாதிச்சண்டை மைதானம் திறக்குறது இப்படி குட்டி குட்டி விஷயங்கள்லகூட அரசியல் இருக்கும். எல்லாமே தரமான சம்பவங்கள்தான்.
Also Read: பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – சமுத்திரகுமாரி `பூங்குழலி’
ஆண்ட பரம்பரை, மைனர்கள், போலீஸ், ரௌடினு அதிகாரங்களை வைச்சு மக்களை பல ஆண்டுகளா அடக்கிட்டுதான் இருந்துருக்காங்க. அந்த நபர்கள் மேல பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்பவும் “எந்த நேரத்துல என்ன பண்ணுவானோன்னு” ஒரு பயமோ, வலியோ, ஆற்றாமையோ இருக்கும். ஆனா, வடிவேலு இந்த பர்னிச்சர்களை உடைச்சுப்போட்ட பிறகு, அந்த நபர்களைப் பார்க்கும் போது “ஒன்லி டயலாக் தான்…” வெத்துப் பீசுன்ற இமேஜை உருவாக்கி விட்டிருக்காரு. பழங்காலப் பெருமைகளை புடிச்சு தொங்கிட்டிருந்த அத்தனை பல்புகளையும் போற போக்குல உடைச்சுவிட்டுட்டுப் போயிருப்பாரு வடிவேலு. அதை உடைச்சு அவங்களாவே மாறி பகடி பண்றதுலாம் ஒரு நுண் அரசியல்தான். இதை அவர் தெரிஞ்சு பண்றாரோ, தெரியாமல் பண்றாரோ, அதைத்தாண்டி மக்கள் உளவியல்ல இந்த கேரக்டர்கள் எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மாத்திருக்குல. அதுதான் முக்கியம். அங்கதான் வடிவேலு ஒரு கலைஞனா ஜெயிக்கிறாரு.
Crisis cleaning champions, made impossible timeline work. Emergency cleaning perfected. Crisis champions.
Wow, fantastic blog layout! How long have
you been blogging for? you make blogging look easy. The overall look
of your site is fantastic, as well as the content! https://glassi-freespins.blogspot.com/2025/08/how-to-claim-glassi-casino-free-spins.html
Dry Cleaning in New York city by Sparkly Maid NYC
We are looking for partnerships with other businesses for mutual promotion. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com
We pay $10 for a google review and We are looking for partnerships with other businesses for Google Review Exchange. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com
We pay $10 for a google review and We are looking for partnerships with other businesses for Google Review Exchange. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com