அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரைச் சுற்றி முக்கியமாகப் பணியாற்றும் இரண்டு நபர்கள், இரண்டு டீம்கள் பற்றிதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப்போறோம்.
அன்பில் மகேஷ்

உதயநிதி அமைச்சர், எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பிருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்து வருபவர் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்தான் என்பது அனைவரும் அறிந்ததே. உதயநிதி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கி, அதில் முக்கிய பொறுப்பில் இருந்தது இவர்தான். அந்த மன்றங்களை ஒருங்கிணைத்ததும் இவர்தான். அதன்பிறகு, உதயநிதிக்கு இளைஞர் அணி பொறுப்புக் கொடுத்தபிறகு, இளைஞர் அணி பொறுப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவது, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்ற வேலைகளை அப்போதிலிருந்து இப்போது வரை பார்த்து வருகிறார். உதயநிதியின் வலதுகரம்போல் செயல்பட்டு வருகிறார் இவர்.
கார்த்திக்

அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான மோகனின் மகன்தான் இந்த கார்த்திக். உதயநிதியின் மற்ற பிஸினஸ் விஷயங்களை டீல் செய்வது இவர்தான். அதேபோல், அவரின் சினிமா விஷயங்களிலும் குறிப்பிட்ட சில விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இவருக்குத்தான் இருக்கிறது. உதயநிதி மட்டுமல்லாது, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடனும் இவர் நெருக்கமாக இருக்கிறார். அந்தவகையில் உதயநிதியின் இடதுகரமாக செயல்படுபவர் கார்த்திக்தான்.
கருணாநிதி குடும்பத்தினர் இதுவரை ஃபாலோ பண்னாத ஒரு விஷயத்தையும் உதயநிதி பின்தொடரப் போகிறார். அது என்னனு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க..!
அன்பகம் ஐ.டி விங்
இதுதவிர உதயநிதி முக்கியமாகப் பார்ப்பது தி.மு.க இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தில் செயல்படும் ஐ.டி. விங். இவர்களுக்கென தனியாக கேமரா மேன், எடிட்டிங் சூட் என எல்லாமே தனியாக வைத்திருக்கிறார்கள். உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கவர் செய்வது, அவர் பற்றிய தகவல்களை சோசியல் மீடியாக்களில் டிரெண்ட் செய்வது, இவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது எல்லாமே அன்பகம் ஐ.டி.விங்தான். இதுதவிர, கட்சிக்காரர்களுடனான சந்திப்பு, உதயநிதிக்கான நிகழ்ச்சி நிரல்கள், சந்திப்பவர்களுக்கு நேரம் ஒதுக்குவதெல்லாம் அன்பகத்தில் இருக்கும் இந்த ஐ.டி விங்தான்.

ஐ.டி விங் நம்பர் 2
இது தவிர இன்னொரு ஐ.டி விங்கையும் உதயநிதி முக்கியமானதாகப் பார்க்கிறார். இவர்களின் வேலை என்னவென்றால், உதயநிதி மீதான அரசியல் விமர்சனங்கள், அரசியல் சூழல்களைக் கணித்து அதற்கேற்ப அவருக்கு அட்வைஸ் சொல்வதுதான். குறிப்பாக இந்தந்த இடங்களில் நமக்கு பின்னடைவு இருக்கிறது.. இதைச் சரிசெய்ய நாம் இதையெல்லாம் செய்ய வேண்டும், இவங்க நம்மளை புதுசா, கடுமையா எதிர்க்க ஆரம்பிச்சுருக்காங்க என்கிற வகையில் அவருக்கு ரிப்போர்ட் கொடுப்பது இந்த டீம்தான்.
Also Read – சென்னை மேயர் பிரியா.. பாஸா? தமாஸா?
அமைச்சர்கள் குடியிருப்பு
கலைஞர் கருணாநிதி அமைச்சராக இருந்தபோதும் சரி; முதலமைச்சராக இருந்தபோதும் சரி, ஸ்டாலின் அமைச்சர், முதலமைச்சராக இருக்கும்போதும் சரி பொதுவாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் கிரீன்வேஸ் சாலை குடியிருப்புக்குச் சென்றது கிடையாது. சென்னையில்தான் வீடு என்கிற நிலையில், தங்களது வீடுகளிலேயே அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சந்திப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில், இப்போது அமைச்சராகியிருக்கும் உதயநிதியின் வீடு ஈ.சி.ஆரில் நீலாங்கரையில் சிட்டிக்கு வெளியில் இருக்கிறது. இதனால், கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அமைச்சர்கள் குடியிருப்புக்குக் குடிபெயர இருக்கிறார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியிருந்த வீடு ஒன்று உதயநிதிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. தலைமைச் செயலக அறை போலவே, இந்த வீட்டையும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான டீம் ரெடி செய்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த வீட்டுக்கு உதயநிதி குடிபெயர்ந்து விடுவாராம்.
அமைச்சர் உதயநிதி இதை உடனடியாகச் செய்ய வேண்டும்னா எதைச் சொல்வீங்க?





iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp