ரஜினியின் கரியரில் முக்கியமான திருப்புமுனை தந்த படம் 1980 டிசம்பர் 20-ல் வெளியான முரட்டுக் காளை திரைப்படம். பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதையை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி 41 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்தப் படம் பற்றிய 7 சுவாரஸ்யங்களைப் பார்க்கலாம்.
- ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் மறைவுக்குப் பின் ஏ.வி.எம் தயாரித்த முதல் படம். தந்தை மறைவுக்குப் பின் தங்கள் நிறுவனம் எடுக்கும் படம் பெரிய அளவில் பெயர் பெற வேண்டும் என்று நினைத்த ஏ.வி.எம் சரவணன், பாலசுப்ரமணியம் சகோதரர்கள் இந்தப் படத்தை எடுத்தனர்.
- தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து மன அழுத்தத்தில் இருந்த ரஜினி, 1970-களின் இறுதியில் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார். ஆனால், அந்த சூழலில் அவர் நடித்த பல படங்கள் பெரிதாக வரவேற்பைப் பெறாத நிலையில், கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், முரட்டுக் காளை படத்துக்குள் ரஜினி வந்தார். படம் மிகப்பெரிய வெற்றியப் பெற்று ஏ.வி.எம் நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ரஜினிக்கு `சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தைக் கொடுத்ததில் முரட்டுக் காளை படத்துக்கு முக்கியப் பங்குண்டு.
- இளையராஜா இசையில் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்த பொதுவாக எம் மனசு தங்கம்’ பாடல் பட்டி தொட்டியெங்கும் மெகா ஹிட்டடித்தது. இன்று வரை ரஜினி ரசிகர்களின் ஆதர்ஸமான பாடலாகவும் இது இருந்து வருகிறது.
- பஞ்சு அருணாச்சலம் கதையை ஓக்கே செய்ததும், தனது தயாரிப்பு நிர்வாகி ஆர்.வீரப்பனை ரஜினியை சந்திக்கலாமா என்று கேட்டுவருவாறு ஏ.வி.எம்.சரவணன் அனுப்பியிருக்கிறார். தன்னைத் தேடி வந்த அவரிடம், `சரவணன் சார் என்னைப் பார்க்க வர வேண்டாம்; நானே வருகிறேன்’ என்று ரஜினி சொல்லியிருக்கிறார். ஆனால்,ஸ்கூட்டரில்தான் வந்திருக்கிறேன். மழை வேறு தூருகிறது’ என்று அவர் சொல்ல, `அதெல்லாம் பிரச்னையில்லை’ என்று கூறி ஸ்கூட்டரிலேயே சென்றிருக்கிறார்.
- படத்துக்கு வில்லனாக ஜெய்சங்கரை முயற்சிக்கலாமே என்று முதல்முதலில் ஐடியா கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம். 165 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருந்த ஜெய்சங்கரை வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக அணுக ஏ.வி.எம் நிறுவனம் முதலில் தயங்கியிருக்கிறது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவலைச் சொன்னதும் தயங்காமால் ஓக்கே சொல்லி, சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
- படத்தில் இடம்பெற்றிருந்த மஞ்சு விரட்டு ஷூட்டிங் சுவாரஸ்யமானது. இதற்காக, காரைக்குடி அருகே பாகனேரி என்ற இடத்தில் நடந்த நிஜமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைத்துச் சென்று அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
- படத்தில் இடம்பெற்றிருந்த ரயில் சண்டைக்காட்சி இன்றளவும் பிரபலமானது. இதற்காகத் திட்டமிட்டபோது, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஐந்து நாட்களில் ஷூட்டிங்குக்கு ஒரு லட்சத்துக்கு எழுபத்தைந்தாயிரம் செலவாகும் என்று தயாரிப்பு தரப்பிடம் சொல்லியிருக்கிறார். செலவு பிரச்னையில்லை; சண்டைக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்று கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. கூட்ஸ் ரயிலை வாடகைக்கு எடுத்து சிறந்த திட்டமிடலால் மூன்றே நாட்களில், சொன்ன தொகையை விட குறைவான செலவில் அதை எடுத்து முடித்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
Also Read – “ராமராஜன், வாடிவாசல் சூர்யாவுக்கே முன்னோடி!” | Ramarajan Unknown Facts
trezor.io/start