2022 பிப்ரவரி 10-ம் தேதி. அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பிஜேபி தலைமை அலுவலகமான கமலாலயத்துக்குள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகிறது. நல்வாய்ப்பாக அந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு பிஜேபியினர் ஆட்டம் கண்டனர். யார் இந்த குண்டுகளை வீசியது என்று போலீஸார் விசாரித்ததில், கமலாலயத்துக்குள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியது சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி, அதாவது தொடர் குற்றசெயல்களில் ஈடுபடும் ஹிஸ்டரி ஷீட்டர் என்று போலீஸ் பாஷையில் அழைக்கப்படும் 38 வயதான கருக்கா வினோத். பிஜேபி அலுவலகத்திலேயே குண்டு வீசப்பட்டிருக்குனு அப்போ அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு பண்ணாங்க. புகாருக்குப் பிறகு அவரைக் கைது பண்ண போலீஸ், கருக்கா வினோத்தை சென்னை புழல் சிறையில் அடைச்சாங்க. இதுதான் கருக்கா வினோத்தோட முதல் சம்பவமானு கேட்டா… இல்லை; அதுக்கு முன்னாடியே பல சம்பவங்கள்ல கைதாகியிருக்கார். கருக்கா வினோத் என்பவர் யார்… அவர் மேல இருக்க கேஸ்கள் என்னென்னுதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
கமலாலயம் குண்டுவீச்சுக்குப் பிறகுதான் கருக்கா வினோத் பற்றி மீடியாக்களில் அதிகம் செய்திகள் வரத் தொடங்குகின்றன. விசாரணையில் அவர் மேல தேனாம்பேட்டை, தி.நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல்நிலையங்களில் அவர் மீது 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மூன்று முறை வெடிகுண்டு தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. ஏற்கனவே 2015 தி.நகரில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்னையில் அந்த கடைக்குத் தீவைத்ததாக இவர் மீது புகார் இருக்கிறது. அந்தப் புகாரில் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அப்போது இவர், நீட் தேர்வுக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவே குண்டுவீசினேன்னு வாக்குமூலம் கொடுத்ததா போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுச்சு. அதன்பிறகு, போலீஸார் அடிக்கடி தொல்லை கொடுக்குறாங்கனு சொல்லி 2017 தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார். இந்த கேஸிலும் கைது செய்யப்பட்ட அவர் புழல் ஜெயில்ல சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
இப்படியான சூழ்நிலைலதான் ஜெயில்ல இருந்து ஜாமீன்ல ரிலீஸாகி சில நாட்கள்ல மறுபடி ஒரு வெடிகுண்டு வீச்சு சம்பவத்துல இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜ்பவன்ல வெடிகுண்டு வீச முயற்சித்ததாவும் கும்பலா வந்தவர்கள் தப்பிப் போனதாவும் முதல்ல சொன்ன ஆளுநர் மாளிகை, பின்னர், குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டு முறையாக விசாரிக்கப்படவில்லைனு சொல்லிருக்காங்க. இதுல முக்கியமான விஷயமே… ஆளுநர் மாளிகை சொல்றதுக்கும் போலீஸ் சொல்றதுக்கும் உள்ள முரண்பாடுதான். ஆளுநர் மாளிகை துணைச் செயலாளர் கொடுத்திருக்கும் புகாரில் ஆளுநர் மாளிகை நோக்கி வீசப்பட்ட குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதுனு சொல்லிருக்கார். ஆனால், போலீஸார் சொல்லியிருக்கும் விளக்கத்தில் வெடிகுண்டு வீசவில்லை. வெடிகுண்டு வீச முயற்சி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் போலீஸ் விளக்கத்தில் கிண்டி ராஜ்பவன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கிண்டி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் வீச முயற்சித்தார் என போலீஸ் விளக்கம் சொல்லிருக்காங்க. ஏற்கனவே கமலாலயம் குண்டுவீச்சு சம்பவத்துல இவரை பெயில்ல எடுத்ததே திருவாரூர் மாவட்ட பிஜேபி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்தமிழ் செல்வக்குமார்தான்னு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
Also Read – குஜராத் மாடல்.. இந்தியாவுக்கே ரோல் மாடல்.. உண்மையா? – ரோஸ்ட்!
ஆனால், தான் பிஜேபியில் இல்லை என வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், அவரின் ஜூனியர்களான திமுகவைச் சேர்ந்த இரண்டு பேர்தான் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்திருக்கிறார்கள் என பிஜேபி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை தரப்புல சொல்லப்படுற குற்றச்சாடுகளை எல்லாம் மறுத்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ். இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலும் சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோரும் பேசியபோது, தேனாம்பேட்டையில் இருந்து தனியாக ஒரு பையை எடுத்துக்கொண்டு கருக்கா வினோத் வருவது போன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்காங்க. அதேபோல், பெட்ரோல் குண்டு வீச்சுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படும் போட்டோக்களையும் போலீஸ் வெளியிட்டிருக்காங்க.
உண்மையில் போலீஸ் கருக்கா வினோத்தை எந்த லிஸ்ட்ல வைச்சிருக்காங்க?!
ஹிஸ்டரி ஷீட் எனப்படும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை போலீஸ்காரர்கள் அவர்கள் செய்யும் குற்றங்கள் அடிப்படையில் வகைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் வைப்பதுண்டு. அந்த வரிசையில் கொடூர குற்ற வழக்குகள் அதிகம் கொண்டிருக்கும் ரவுடிகளை A+, A, B, C ரவுடிகள் என்ற வரிசை உண்டு. இதில் B வகை ரவுடிகள் என்பவர்கள் முக்கியமான ரவுடி கேங்கின் மெம்பராக இருப்பவர்கள். A என வகைப்படுத்தப்பட்டிருக்கும் ரவுடிகள் குறிப்பிட்ட முக்கியமான ரவுடி கேங்கின் தலைவராக இருப்பவர். அதேநேரம், A+ கேட்டகிரி ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் இருப்பவர்கள். இவர்கள் சம்பவ இடத்துக்குப் பெரும்பாலும் வரவே மாட்டார்கள். எதாவது ஒரு இடத்தில் இருந்துகொண்டு சம்பவத்துக்காக ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பவர்கள். இவர்கள்தான் அந்த குற்ற சம்பவத்தின் மூளையாக இருப்பார்கள். இதில் கடைசியில் இருக்கும் கேட்டகிரிதான் C. இந்த கேட்டகிரியில் இருக்கும் ரவுடிகள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் அவர்களாவே சென்று குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள். அதாவது சிங்கிள் ரவுடி. இன்னும் சொல்லப்போனால் பெட்டி ரவுடி. கடையில் சிகரெட் வாங்கிவிட்டு காசு கொடுக்க முடியாது என விதண்டாவாதம் பேசும் ரவுடித்தனம் செய்பவர்கள். இந்த லிஸ்டில்தான் கருக்கா வினோத்தை தமிழ்நாடு போலீஸ் வைத்திருக்கிறது. ஆனால், அவர் இப்போது செய்திருக்கும் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கருக்கா வினோத்தோட அம்மா என்ன சொல்றாங்க?
கருக்கா வினோத்தின் அம்மா சாவித்திரிகிட்ட இதைப்பத்தி கேக்குறாங்க. அவங்களுக்கு உண்மையிலேயே இதைப்பத்தி எதுவும் தெரியவில்லை. `போன 21-ம் தேதி (சனிக்கிழமை)தான் பெயில்ல வந்தான். ஏன் என்னை ஜெயில்ல வந்துகூட பார்க்கலைனு சண்டை போட்டான். பாட்டிக்கு உடம்பு சரியில்லாததால பார்க்க முடியலைனு சொன்னேன். ஸ்டேஷனுக்குக் கையெழுத்துப் போடப்போறேன்னு சொல்லி காசு கேட்டான். நான் இல்லைனு சொன்னேன். அப்படியே போய்ட்டான். அவன் என்ன பண்ணான்னு தெரியலை. என் மகனோட போகட்டும்’னு நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
வெடிகுண்டு வீச்சை வைச்சு பண்ற இந்த அரசியல் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்கங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க!