தமிழ் சினிமால எவ்வளவோ ஹீரியோயின்ஸ் வந்துட்டு போய்ட்டு இருக்காங்க. ஆனால், சில ஹீரோயின்ஸ் மட்டும் எவ்வளவு வயசானாலும் சரி, கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் பெத்து லைஃப்ல செட்டில் ஆனாலும் சரி, அவங்க நம்ம மனசை விட்டு போகாமல் நீங்கா இடம் பிடிச்சிருப்பாங்க. இன்னைக்கும் அவங்களோட படத்தை திரும்ப பார்க்கும்போது, சே… அவங்களுக்கு மட்டும் வயசாகமல் அப்படியே நடிச்சிட்டே இருந்துருக்கலாம்ல அப்டினு தோணும். அப்படியான ஹீரோயின்ஸ் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
அசின்
கோலிவுட் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ற ஒரு ஹீரோயின்ல முதல் இடம் எப்பவுமே அசினுக்குதான். குறிப்பா 2000 கால கட்டத்துல வளர்ந்தவங்க. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் வழியாதான் அசின் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாங்க. திருட்டுத்தனமா பீடி குடிக்கிறது, மலபார் பெயர், மலையாளமும் தமிழும் கலந்து கியூட்டா பேசுறது, எல்லோ சுடிதார், சென்னை செந்தமிழ் பாட்டு இப்படி அந்தப் படத்துல வந்த எல்லா விஷயமும் நம்மள அட்ராக்ட் பண்ணிட்டு. இனி என்ட மதர்டங் மலையாளம், என்ட ஸ்டேட் கேரளா, என்ட நாதம் செண்டை, என்ட நடனம் கதகளினு சொல்ல வைச்சது அசின்தான். அப்புறம் கஜினில கேடித்தனம் பண்ணி… ஃப்ளாஷ்பேக் சீன்ல நம்மள அழ விடுறது, போக்கிரில விரட்டி விரட்டி ஹீரோவ லவ் பண்றது, வேல் படத்துல கிராமத்து குயிலாகவும் நகரத்து மானாகவும் வர்றது, தசாவதாரம்ல பெருமாளேனு டயலாக் பேசுறது, காவலன் ஹீரோவை அலைய விடுறதுனு நடிச்ச எல்லாப் படத்துலயும் நம்ம ஹார்ட்டை எடுத்துக்கிட்டாங்க. விஜய், அஜித், சூர்யா, விக்ரம்னு இன்னைக்கு டாப்ல இருக்குற எல்லா ஹீரோகூடவும் நடிச்சிட்டாங்க. இப்பவும் அதே அழகோடதான் இருக்காங்க. திரும்ப நடிக்க வரலாம்ல..!
ஸ்ரேயா சரண்
குடும்பம், குழந்தைனு ரொம்பவே பிஸியா லைஃப எஞ்சாய் பண்ணிட்டு இருக்காங்க, ஸ்ரேயா சரண். இன்ஸ்டால அடுத்து எப்போ வீடியோ போடுவீங்க ஸ்ரேயானு கேக்குற அளவுக்கு இன்னைக்கு அவங்களுக்கு இன்ஸ்டா ஃபேன்ஸ் அதிகம். ஆனால், ஒரு காலத்துல அதாங்க கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி, அதாவது 2000 காலங்கள்ல ‘தானைத் தலைவி ஸ்ரேயா ரசிகர் மன்றம்’னு ஆரம்பிக்கிற அளவுக்கு சிலர் பேய்த்தனமான ஸ்ரேயா ஃபேனா இருந்தாங்க. சிவாஜி படத்துல தமிழ் செல்வியா வந்து ‘இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ணனும்டா’னு சொல்ல வைச்சாங்க. அப்புறம் அழகிய தமிழ் மகன், குட்டி, தோரணை, ரௌத்திரம் அப்டினு சிலபல படங்கள் நடிச்சாங்க. ஆனால், அவங்க கேரக்டர் சொல்ற மாதிரி எந்தப் படமும் தமிழ்ல அமையலை. இருந்தாலும், அவங்களுக்கு ஃபேன்ஸ்க்கு பஞ்சமில்லை. அதுதான் ஸ்ரேயாவோட மேஜிக். தோழா படத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ்ல வருவாங்க. அதுலயே அவ்வளவு அழகா இருப்பாங்க. தலையை மட்டும் அசைங்க ஸ்ரேயா, ரசிகர் மன்றத்தை ஆரம்பிச்சு அட்டகாசப்படுத்திருவோம்.
ஜெனிலியா
இன்னைக்கு 2’கே ஜெனிலியானுலாம் நிறைய பேர் சுத்துறாங்க. ஆனால், “1000-ம் தான் இருந்தாலும் அண்ணன் சட்டையாகுமா?”ன்ற மாதிரி, “1000-ம் பேர் ஹைப்பர் ஆக்டிவா சுத்துனாலும் அது ஜெனிலியா ஆக முடியுமா?”. இப்படியும் ஹீரோயின் இருக்கலாம்னு ஜெனிலியா வந்தப் பிறகுதான் ஒரு டிரெண்ட் உருவாச்சு. அது ஜெனிலியாவோடயே போச்சு. அதுக்கப்புறம் வந்தவங்க அதேமாதிரிலாம் ட்ரை பண்ணாங்க. ஆனால், அவங்களால அதை சரியா பண்ண முடியலை. பாய்ஸ் படம் வழியா தமிழ்ல இண்ட்ரோ ஆனாங்க. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் அப்டினு சில படங்கள்தான் நடிச்சிருந்தாலும் அந்த கேரக்டருக்கு ரிப்ளேஸ் பண்ண வேற ஹீரோயின்ஸ் இன்னைக்கு வரைக்கும் இல்லை. இந்தி, தெலுங்கு, மராத்திலலாம் படம் நடிக்கிறீங்க. அப்படியே தமிழ்லயும் ஒரு கம்பேக் கொடுத்தா நல்லாருக்கும்ல..!
அனுஷ்கா
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்புனு எல்லா முன்னணி நடிகர்கள்கூடவும் நடிச்சு ஹிட் கொடுத்தவங்க, அனுஷ்கா. பாகுபலி படம் மூலமா Pan இந்தியா ஸ்டார்வும் ஆயிட்டாங்க. அது வரமா? சாபமா? தெரியலை. அதுக்கப்புறம் அவங்களுக்கு கேரக்டர் சொல்லும்படியா பெரிய படங்கள் எதுவும் அமையல. சிங்கம், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால் படம்லாம் அவ்வளவு ஆப்டா அவங்க கேரக்டருக்கு செட் ஆகியிருக்கும். கம்பேரிட்டிவ்லி இவங்களும் தெலுங்கு சினிமாலதான் நிறைய படம் பண்ணியிருக்காங்க. இருந்தாலும் தமிழ்லயும் இவங்களுக்கு ஃபேன்ஸ் அதிகம். கோலிவுட் இண்டஸ்ட்ரிகுள்ளயே நிறைய செலிபிரிட்டீஸ் இவங்களுக்கு ஃபேன்ஸ்னா பார்த்துக்கோங்க. தமிழ் சினிமா உங்களை அதிகமா எதிர்பார்க்குது, அனுஷ்கா. சீக்கிரம் கம்பேக் கொடுங்க. வெயிட்டிங்!
இதேமாதிரி வேற எந்த ஹீரோயின்ஸ நீங்க மிஸ் பண்றீங்க அப்டின்றதை கமெண்ட்ல சொல்லுங்க!